Wednesday, March 31, 2010

ஸநகாதி சமாராத்யா, சிவக்ஞான ப்ரதாயினி


ஸனகர், ஸனந்தனர், ஸனாதனர், ஸனத்குமாரர் ஆகிய நால்வரும் ப்ரம்மாவின் மானஸ புத்ரர்கள் என்பது நமக்குத் தெரியும். இவர்கள் தக்ஷிணாமூர்த்தியின்சிஷ்யர்கள் என்பதும், தக்ஷிணாமூர்த்தியின் மெளனத்திலேயே ஞானத்தை அடைந்தவர்கள் என்பதும் நமக்குத் தெரியும். ஆனால், இவர்கள் நால்வரும் அம்பாளுடைய பக்தர்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. அம்பிகையின் உபாசனா மார்க்கங்களில் முக்யமான ஸமய மதத்தை தெரிவிக்கும் சுபாகம பஞ்சகம் என்பதை நமக்கு அளித்தவர்கள் இவர்களே!. இவர்களால் இயற்றப்பட்டதான ஸனக சம்ஹிதா, ஸனந்தன ஸம்ஹிதா, ஸனத்குமார ஸம்ஹிதா ஆகிய மூன்றும் இவர்கள் நமக்கு அளித்ததே. இவர்கள் அம்பிகையின் பரம பக்தர்கள் என்பதாக ப்ரம்ஹாண்ட புராணத்திலும் கூறப்பட்டிருக்கிறது. இவர்களால் வழிபடப்படுபவளை "ஸநகாதி சமாராத்யா" என்று வாக்தேவதைகள் கூறுகிறார்கள். இந்த நால்வரும் குரு பரம்பரையிலும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.


சிவனை அறிவதற்கே (அறிந்த பிறகே, உணர்வது, பக்தி பண்ணுவது என்று நீண்டு, அவனில் கலப்பது எல்லாம்) சக்தியின் அருள் வேண்டும். சலனம் என்று ஒன்று இருந்தால்தான் நிச்சலனம் தெரியவரும்?. சலனமற்ற பிரம்மத்தை சலனத்தில் இருக்கும் நாம் அறியவே அம்பிகையின் அருள் வேண்டும். இதையே "சிவக்ஞான ப்ரதாயினி" எனலாம். இன்னொரு விதத்தில் சிந்தித்தால், எப்படி த்ரிமூர்த்திகள் பற்றிய ஞானம் ருத்ரனை அறிவதன் மூலமாக வரும் என்று வராஹ புராணம் சொல்கிறதோ அது போல அம்பிகை பற்றி அறியத்தருபவனே சிவன் என்றும் கூறலாம்.

2 comments:

மதுரையம்பதி said...

நம்பிக்கைக் குழுமத்திற்காக எழுதப்பட்டது.

Jayashree said...

காளிகாம்பாள் படம் நன்னா இருக்கு:)


இந்த ஸனத் குமார மஹரிஷி தான் பின்னால முருகன் என்று ஒரு மஹான் சொல்லிக் கேள்விப்பட்டேன்.

சிவனார் அன்னையை அண்ட வைக்கிறார். அன்னை சிவஞானத்தை தருகிறாள் . SO ரெண்டுபேரும் vice versa போலருக்கு:)) ரெண்டு பேரையுமே ஸ்லோகங்கள் தக்ஷிணாமூர்தியா சொல்லறது இல்லையா?

ஸம்பந்தருக்கு ""எண்ணறிய சிவ ஞானத்து இன்னமுதம் குழைத்தருளி ""