Thursday, April 1, 2010

சிவதூதீ, சிவாராத்யா, சிவமூர்த்தி



சிவதூதீ

பிறருக்கு ஒரு செய்தியை கொண்டு சென்று சொல்பவனை தூதன் என்கிறோம். சிவனையே தூதுவனாக அனுப்பியவள் பராம்பிகை. அதனாலேயே அவளுக்கு சிவதூதி என்று பெயர். சும்ப-நிசும்பர்களுடன் போரிடும் முன்பாக சிவனை தூதுவனாக அனுப்பியதாக தேவி பாகவதம் கூறுகிறது. அந்த நிகழ்வை குறிப்பிடுவதுதான் இந்த நாமா. பத்ம புராணத்திலும் இந்த நாமாவை அம்பாளுக்குச் சொல்லியிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

சிவாராத்யா

சிவனால் ஆராதிக்கப்படுபவள் சிவாராத்யா. அன்னையின் முதல் 12 பக்தர்கள் என்று எடுத்துக் கொண்டால் அதில் பரமசிவனே முதலாவதாகச் சொல்லப்படும். காஞ்சி க்ஷேத்திரத்தில் பரமசிவனே காமாக்ஷியை முதலில் பிரதிஷ்ட்டை செய்து, பிற்காலத்தில் துர்வாசராக வந்து அந்த க்ஷேத்திரத்திற்கான பூஜா கல்பத்தையும் அளித்ததாகச் சொல்வர். பரமசிவன் அம்பிகையை ஆராதித்தே அர்த்தநாரீச்வரனாக ஆகியதாக பிரம்மாண்ட புராணத்தில் சொல்லப்படுகிறது.

சிவமூர்த்தி

சிவனுக்கும் அம்பிகைக்குமான பேதத்தை போக்கும் நாமா இது. அதாவது சிவனாக வணங்கப்படுபவள் என்று பொருள். இதையே சிவம் என்றால் மங்களம் என்னும் பொருளால், இன்னொரு விதத்தில் மங்களமான மூர்த்த்ம் அவள் என்றும் கூறலாம். சிவ என்றால் மோக்ஷம் என்றும் பொருள் சொல்லப்படுகிறது. இதன்படி பார்த்தால் மோக்ஷத்தையே ரூபமாகக் கொண்டவள் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

7 comments:

மதுரையம்பதி said...

நம்பிக்கைக்காக எழுதியது.

Jayashree said...

சிவாராத்யா!! மனுஷன் முதலான ரூபத்ல இருக்கிற ஜீவனாகிய சிவனால் ஆராதிக்கப்படுகிறவள் ? மாயா மானுஷ வேஷ சிவா....அப்பொ ஒவ்வொரு ஜீவனுக்குள்ளையும் சிவன் தானே? இல்லையா?

அம்மைக்கு அப்பன் முதல் பக்தன்!! அப்பனுக்கு முதல் பக்தன் நந்திதேவர் ! அம்மை 2 வது பக்தை!!!ஆனாலும் அவருக்கு பெருமையை சேர்கிறவள் அவள் ஒருவள் தான் :))அந்த ஐய்யா சும்மா இருப்பாங்க இந்த அம்மாவே எல்லாம் செஞ்சு பெருமை சேத்திடுவாங்க:))))

"" Chitabhasmalepo Garalamashanam Dikpatdharo Jatadhari Kanthe Bhujagapati Hari Paushupatih I
Kapali Bhootesho Bhajati Jagdeeshai Ka Padavin Bhavani Tvatpanigrahan Paripati Phal Midam "" ஆதி சங்கரின் இந்த verses என்னை ரொம்ப ரொம்ப சந்தோஷமாக்கும்!!:)))

தக்குடு said...

ம்ம்ம், நம்பிக்கை குழுமத்தால நமக்கும் நல்ல உபயோகமா இருக்கு...:) வாழ்க நம்பிக்கை குழுமம்.

Anonymous said...

பகிர்வுக்கு நன்றி.

மதுரையம்பதி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெயஸ்ரீ-மா!. :) எல்லா ஆணுக்கும் முதலில் பெருமை சேர்ப்பது தாய், அடுத்து தாரம், மற்றதெல்லாம் பிறகுதானே?...அதே தான் இங்கும் போல :)

மதுரையம்பதி said...

வணக்கம் தக்குடு ஸ்வாமி..வரணும்...:)

மதுரையம்பதி said...

வாங்க் அம்மு மது....முதல் வருகைக்கு நன்றிகள்.