Wednesday, March 10, 2010

ஸ்ரீமத் ஸிம்ஹாசனேச்வரி



மிருகங்களில் சிங்கம் பிரதானமாகச் சொல்லப்படுகிறது. அரசர்கள் சபையில் உட்காரும் ஆஸனமானது சிங்கத்தின் உருவங்கள் பொறிக்கப்பட்டு இருப்பதையும் அதனை ஸிம்ஹாசனம் என்பதையும் நாமெல்லாம் அறிவோம். அம்பிகை இந்த பிரபஞ்சத்துக்கே அரசி என்பதால் அவளது ஆசனம் ஸிம்ஹாசனமாகத்தானே இருக்க முடியும். அதுமட்டுமா, முந்தைய நாமத்தில் மஹாராக்ஞி என்று சொல்லிவிட்டு அடுத்து அவளது ஆசனத்தை எப்படிச் சொல்லாது இருக்க முடியும்?.

'பச்யகன்', 'வசி' என்ற பதங்கள் எப்படி 'கச்யபன், சிவ' என்று மாற்றிச் சொல்லப்படுகிறதோ அது போல, 'ஸிம்ஹ' என்னும் பதத்தை மாற்றி 'ஹிம்ஸ' என்றாக்கினால் ஹிம்ஸாசனேஸ்வரி என்று வரும். ஜகத்தை எல்லாம் ஸம்ஹாரம் பண்ணும்படியான சக்தியவள் என்று பெரியவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். [இந்த வசி-சிவ/ஹம்ஸ-ஸிம்ஹ-ஹம்ஸ போன்றவை எனது குறிப்பில் இருந்தே சொல்லியிருக்கிறேன், மேலதிக தகவல்கள் இல்லை]. இதை சொல்லும்போது இன்னொன்றையும் சொல்வார்கள், அதாவது முதலில் படைத்தல் தொழிலை (ஸ்ரீமாதா) சொல்லி, பின்னர் காக்கும் தொழிலை (மஹாராக்ஞி) சொல்லி அடுத்ததாக சம்ஹாரத்தைச் சொல்லியிருக்கிறார்கள் வசின் தேவதைகள் என்பார்கள். லலிதையின் ஆயிரம் நாமங்களில் முதல் மூன்று மட்டுமே முத்தொழிலை குறிப்பிடுவது, மற்ற எல்லா நாமங்களும் திரோதானத்தையும், அனுக்ரஹத்தையுமே சொல்லக் கூடியதாக இருக்கிறது.

மந்திரார்த்தமாக இந்த நாமாவிற்கு வேறு பொருள் சொல்லப்படுகிறது. ஸ்ரீவித்யா க்ரமத்தில் ஞானார்ணவ தந்திரம் என்று ஒரு நூல், அதில் 8 வித பைரவி மந்திரங்கள் (சைதன்ய பைரவியில் ஆரம்பித்து, ஸம்பத் ப்ரதா வரையில்) உண்டு. அங்கு இந்த பைரவிகளை ஸிம்ஹாசனத்தின் திசைகளுக்கு ஒன்றாகச் சொல்லி,அந்த சிம்ஹாஸனங்களுக்கெல்லாம் ஈஸ்வரியாக அம்பிகை ஸ்ரீலலிதையை சொல்வதுண்டு. பின்னர் ஒருமுறை இந்த தந்திரங்களைப் பற்றி தனியாக ஒரு அறிமுகத்தைப் பார்க்கலாம்.இந்த வகையான வழிபாட்டு முறைகள் தகுந்த குருவிடத்து விரிவாகத் தெரிந்து கொள்ளத்தக்கது. இவை அவரவர் குலாசாரம், குருவின் வழிகாட்டல் போன்றவற்றைப் பொருத்து மாறுபடும். எந்த ஒரு வழியில் சென்றாலும் செல்லும் இடத்திற்க்கான மற்ற வழிகளை அறிந்து கொள்வது போல, மற்றவற்றை அறிந்து கொள்ளுதல் நலமே.

இதுவும் நம்பிக்கை குழுமத்திற்காக எழுதப்பட்டது

4 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி பாட்டு தான் தெரியும்!
கேட்கும் போதே அது என்ன சிம்மாசனேஸ்வரி?-ன்னு நினைச்சிக்குவேன்!

பல தெய்வங்களும் அமர்ந்த கோலத்தில் சிங்காசனத்தின் மேல் தானே காட்டப் படுகிறார்கள்?
அன்னைக்கு மட்டும் சிம்மாசனேஸ்வரி என்ற பெயர் எப்படி பிரத்யேகமாக வந்தது-ன்னு தோனும்...

உங்க பதிவு பாத்தப்பறம் ஏதோ லேசா புரியற மாதிரி இருக்கு! :)
அந்த ஸிம்ஹ -> ஹிம்ஸ

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஈசன் = பத்மாசனம்
அன்னை = சிம்மாசனம்
முருகன் = ஹ்ருதயாசனம்! :)

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கும் உங்களது கருத்துக்களுக்கும் நன்றி கே.ஆர்.எஸ்

Jayashree said...

M.. Interesting!! நான் சிம்ஹ ஆசினி என்று தான் இதுவரை நினைத்திருந்தேன். மாதாதீ சிங்கத்துக்கு மேல தானே!! ஷேரொன்வாலி ஜய் மாதா தீ !! அப்படீனு புரிஞ்சுண்டிருந்தேன்:)))