Wednesday, March 17, 2010

சம்பக அசோக புன்னாக ஸெளகந்திகா லஸத்கசா


நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரம்மாண்ட மண்டலா

தனது சிவந்த மேனியின் ஒளிவெள்ளத்தால் பிரம்மாண்டத்தை மூழ்கச் செய்பவள் என்பதே இந்த நாமத்தின் பொருள். ஆயிரக்கணக்கான சூரியன்களது உதயக்கிரணங்கள் போன்ற காந்தியுடையவள் சிதக்னியில் இருந்து வெளிவருகையில் அண்ட-பேரண்டங்கள் முழுவதிலும் தனது சிவப்பான ஒளியினை படரச் செய்வாள் தானே?.

நிஜாருண ப்ரபா என்றால் இயற்கையாகவே சிந்த ஒளியுடைய என்று சொல்லலாம். அன்னையின் நிறம் செயற்கை கலவையால் சிவந்த நிறத்தை அடையவில்லை, இயற்கையாகவே சிவந்த ஒளிவீசிடும் நிறத்தை உடையவள் என்று அர்த்தம்.

சூரிய குடும்பம், நக்ஷத்திரங்கள், ஆகாயம் இவை எல்லாம் சேர்ந்தது பிரம்மாண்டம் என்று சொலப்படுகிறது. இவற்றைப் போல பலபிரம்மாண்டங்கள் சேர்ந்தால் அது பிரம்மாண்ட மண்டலம். ஆக ஆயிரக்கணக்கான சூரியன்களது உதயக்கிரணங்கள் போன்ற காந்தியுடையவளது நிறமானது இயற்கையாகவே சிவந்து இருக்கிறது என்பது சொல்கிறார்கள் வாக்தேவதைகள். இந்த நாமத்தைப் போலவே, 'அருணாம் கருணா தரங்கிதாக்ஷிம்' என்றும் ஸிந்துராருண விக்ரஹாம் த்ரிநயனாம்' என்று ஸ்லோகங்கள் சொல்கின்றன.

சிந்தூரமேனியள், சிந்தூரவண்ணத்தினள் என்று அபிராமி பட்டர் அந்தாதியில் அம்பிகையின் வர்ணத்தைப் போற்றுகிறார். ஆதிசங்கரரர் செளந்தர்யலஹரியில் அம்பிகையின் சிவப்பழகைச் சொல்வதை அருணரூப த்யானம் என்றே சொல்லுவார்கள் பெரியோர்.

சம்பகாசோக புன்னாக ஸெளகந்திகா லஸத்கசா

அம்பிகையின் கூந்தலைச் சொல்கையில், சம்பகம், அசோகம், புன்னாகம், ஸெளகந்திகம் ஆகிய மலர்களைச் சூடிய கூந்தலை உடையவள் என்பது நேரடிப் பொருள். பாஸ்கரராயர் இதற்குப் பொருள் சொல்கையில் அம்பிகையின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்று கூறி அவள் சூடியிருக்கும் மலர்களால்
அந்த மணம் இல்லை, ஆனால் அம்மலர்கள் அலங்காரத்திற்கு மட்டுமே என்றும் கூறியிருக்கிறார் என்று கூறியதாகத் தெரிகிறது.

செளந்தர்ய லஹரியில் ஆசார்யார், உன் கூந்தலில் இருக்கும் மலர்களானது கூந்தலில் உள்ள இயற்கையான பரிமள சுகந்தத்தை தாங்களும் அடைய்வதற்காக வந்திருக்கின்றன போலும என்று
சொல்வது பாஸ்கரராயரது விளக்கத்துக்கு வலுச்சேர்ப்பதாகவே இருக்கிறது. அபிராமி பட்டரும் அன்னையின் கூந்தலைச் சொல்கையில் அவள் சூடியிருக்கும் மலரை, 'பிச்சி மொய்த்த கன்னங்கரிய குழலும்' என்று பிச்சிப்பூ சூடியவளாகச் சொல்லுகிறார்.

21 comments:

Jayashree said...

லலிதா நவரத்ன மாலைல
அந்தி மயங்கும் வான விதானம்
அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிர(ற)ம்பவளம் பொழி பாரோர் (நிரம்ப வளம்: நிறம் பவளம்:))
தேம்பொழிலார் (? தேன் பொழிலார் மிது) இது செய்தவளாறோ !!

தக்குடுபாண்டி said...

மாதுளம்பூ நிறத்தாளின் தாளை சரணடைந்தேன்.

மதுரையம்பதி said...

வருகைக்கு நன்றி ஜெயஸ்ரீ மா!

மதுரையம்பதி said...

வாங்க தக்குடுபாண்டியாரே!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//சம்பகம், அசோகம், புன்னாகம், ஸெளகந்திகம்//

சம்பகம் = செண்பகப் பூ
அசோகம் = ??, அசோக மரத்துல பூ பூக்குமா? எப்படி இருக்கும்-ன்னு கூடத் தெரியாதே!
புன்னாகம் = ??, புன்னாக வராளி-ன்னு தெரியும்! அது என்ன புன்னாகப் பூ அண்ணா?
ஸெளகந்திகம் = ??

இந்தப் பூக்கள் பற்றிக் கொஞ்சம் அறியத் தாருங்களேன்!
படமும் குடுத்தா உங்களைப் பூத்தூவி வாழ்த்துவோம்! :)

Jayashree said...

உடம்பு முடியல்லைனு இன்னிக்கு சுட்டி. பெரியவரின் தெய்வத்தின் குரல் படித்துக்கொண்டிருந்தேன்.
"பிரம்மமாக செயலற்று இருந்த வஸ்துவுக்கு லோகா அனுக்ரஹம் என்ற பரம் கருணை உதிப்பதைதான் காமாக்ஷி என்று சொல்கிறோம். சுத்த ஸ்படிக ஸங்காஸமாக நிறமில்லமல் இருந்த ப்ரஹ்மம் அப்போது சிகப்பு நிறம் அடைகிறது. அன்பு கருணை இவற்றைச் சிவப்பாகவே சொல்வது வழக்கம். ராகம்(அன்பு) அனுராகம் என்பதிலிருந்தே ரக்தம் என்ற பதம் வந்தது.தமிழிலும் மனச்செம்மை, செவ்வியல் உள்ளம் என்றெல்லாம் சொல்கிறோம். இதுவே காமாக்ஷியின் சிவப்பு;கருணையின் வர்ணம். "
பரமாச்சாரியாரின் தெய்வத்தின் குரல்முதல் பகுதி பக்கம் 795.
இன்னும் பல நிறங்களாகவும் எத்தனை அழகா சொல்லியிருக்கிறார். எதை விட எதை சொல்லனு தெரியாம ப்ரமிப்பாக ஆக்குகிறது அந்த அன்பின் ப்ரவாஹம்! நான் அவரை பாத்ததே இல்லை மௌலி. அது எனக்கு ரொம்ப வருத்தம்.

Jayashree said...

சம்பகா புஷ்பம் - மனோரஞ்சிதம்- மனத்தின் பிடியிலிருந்து ஆத்மாவை உயர்விப்பது ??
2)- அசோகம் அ சோகம் = துயரங்களிலிருந்து விடுபடச் செய்வது ????
3)புன்னாகம் புன்னகை? அன்பு? factor binding with love?? அன்பென்னும் கொடி?
நேயப்பட்டவாளை உச்சி முகர்ந்து அன்பை வெளிப்படுத்தறது இல்லையா அந்த நேய பாவமா?
"ஒளிமயமே ஆக்குற மெய் உண்ர்ச்சி அருளாயோ!" - அருட்ப்ரஹாச வள்ளலார். அந்த ஒளி பெற இந்த அன்பெனும் உணர்ச்சி வேண்டும் இல்லையா.அவள் கூந்தலின் சுகந்தத்தை த்யானம் செய்யறச்சே இந்த அன்பெனும் உண்ர்வுகளை நம்முள் உண்டக்குகிறதுன்னும் பொருள் படுமோப்பா ?

தக்குடுபாண்டி said...

பொதுவா யாருக்காவது கல்யாணம் தள்ளிப்போய்க் கொண்டே இருந்ததுன்னா, 'சுயம்வரா பார்வதி' பூஜை & ஜபம் பண்ணுவது பொதுவா உள்ள வழக்கம், மலையாள சம்ப்ருதாயத்ல அசோக புஷ்பம் வச்சு அம்பாளை ஆராதனை பண்ணினாலும் நல்ல பலன் கிட்டும்.

Jayashree said...

கண்டுகொண்டேன்: கண்டுகொண்டேன்!!!
thanks to Mr Thakkudu!!
அசோக புஷ்பம் நம்ப EXZORAA!!இட்லி பூ !! சிவனுக்கு ப்ரீதீனு எங்க family பெரியவர்கள் சொல்லி கேள்வி.அது வாசனையாவா இருக்கும் ?? கூகிளினா இதான் வரது:)))outdoors.webshots.com பாருங்கோ!!
சரி அடுத்தது புன்னாக புஷ்பம் தேடணும்!

தக்குடுபாண்டி said...

//thanks to Mr Thakkudu!!// Mr எல்லாம் வேண்டாம் மேடம், தக்குடுனே கூப்டலாம்...;)

மதுரையம்பதி said...

வாங்க கே.ஆர்.எஸ், இதோ ஜெயஸ்ரீ மேடம் சொல்றாங்க நீங்க கேட்ட கேள்விகளுக்கு பதிலை...ஒவ்வொன்றா சொல்லுவங்க..

மதுரையம்பதி said...

வாங்க ஜெயஸ்ரீ மேடம்....ஒவ்வொரு பூவுக்கும் சுட்டி குடுங்கள்...

தக்குடுபாண்டி said...

அசோக புஷ்ப்பம் பொதுவா பேச்சு வழக்கத்துல 'தெத்திப்பூ'னு சொல்லுவா!(பறிக்கும்போதே சில சமயம் அதோட காம்புலேந்து தேன் சிந்தும்,அதனால் 'தித்திப்பூ'தான் 'தெத்திப்பூ' ஆச்சுன்னு பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டதுண்டு) ஷ்ரிஹரியோட பூஜையில் எப்படி துளசி ரொம்ப விசேஷமோ அது போல் தேவி பூஜையில் இந்த புஷ்பம் ஒன்னாவது சேர்த்தாதான் அந்த 'பகவதிசேவை'பூர்த்தியாகும் என்பது சம்ப்ருதாயம்.

Jayashree said...

http://www.flowersofindia.net/mythology.html
புன்னாகம், சம்பகம் கிடைத்தது!! சம்பகம் கொடில சின்னசின்ன பூவாவும் சிலபேர் ஷண்பகம் நு காமிச்சிருக்கா. நான் மனோரஞ்சிதம் நு நினைச்சேன். இங்க மக்னொலியானு போட்டுருக்கு!!
இப்ப சௌகந்திகா புஷ்பத்துக்கு என்ன செய்ய? பீமனத்தான் அனுப்பணும். நாம பேசாம Mr KRS ஐ பீமனை தேடி அனுப்பிடலாமா?:))))))))))

தக்குடுபாண்டி said...

தாந்த்ரீக பிரயோகத்தில் 'ரக்த புஷ்பாஞ்சலி'னு ஒரு ஆராதனை பெளர்ணமிகளில் ரொம்ப விசேஷமா உண்டு, அந்த ஆராதனையிலும் இந்த புஷ்பமே ஆரம்பத்திலும்,முடிவிலும் அம்பாளுக்கு சமர்ப்பிக்கப்படும்.
விஷேஷமான இந்த 'வசந்த நவராத்ரி' சமயத்தில் மதுரையம்பதி அண்ணா,ஜெய்ஷ்ரீ மேடம் மற்றும் KRS அண்ணா மூலமாக தேவீ சம்பந்தமா நிறைய சிந்திக்க பாக்கியம் கிட்டியது.

மதுரையம்பதி said...

வாங்க தக்குடு...ஏதேது தாந்திரீகத்தில் மிக ஆர்வமோ? :)...இவ்வளவு கவனித்திருக்கிறீர்களே என்று கேட்டேன்.

ரக்தவர்ண புஷ்பாஞ்சலியில் எந்த புஷ்பம் உபயோகமாகிறது?...தெச்சிப்பூ?..அதுதான் சிவப்பு நிறம் இல்லையா?

தக்குடுபாண்டி said...

//ஏதேது தாந்திரீகத்தில் மிக ஆர்வமோ? :)...இவ்வளவு கவனித்திருக்கிறீர்களே என்று கேட்டேன்//

அம்பாள் சம்பந்தமா நல்ல ஆராதனை பிரயோகம் எங்க இருந்தாலும் சந்தோஷமா அதை ஸ்வீகரணம் பண்ணிக்கலாம்...:) கேரளாவில் ஒரு தந்த்ரியோட பாராயணம் பண்ணும்போது இந்த விவரம் தெரிந்தது அவ்ளோதான்...:)

மதுரையம்பதி said...

//அம்பாள் சம்பந்தமா நல்ல ஆராதனை பிரயோகம் எங்க இருந்தாலும் சந்தோஷமா அதை ஸ்வீகரணம் பண்ணிக்கலாம்// தெரிந்து கொள்வது என்பது வரையில் சரிதான்.... :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஆகா...முருகனருள்-150ல கொஞ்சம் வேலையா இருந்துட்டேன்! இப்போ தான் இதை மீண்டும் பார்த்தேன்! பூக்களாப் பொழிஞ்சி தள்ளிட்டாங்க ஜெயஸ்ரீ மேடம்! நன்றி-ம்மா!

Mr. தக்குடு வேற ரெட்டை நாயனக் கச்சேரி பண்ணி இருக்காரு! Thank you Mr. தக்குடு! :)

//சௌகந்திகா புஷ்பத்துக்கு என்ன செய்ய? பீமனத்தான் அனுப்பணும். நாம பேசாம Mr KRS ஐ பீமனை தேடி அனுப்பிடலாமா?:))))))))))//

அடடா! என் மேல ஜெயஸ்ரீ-ம்மாவுக்கு என்ன பாசம், என்ன பாசம்! :))
சௌகந்திகா புஷ்பத்தைத் தேடிப் போனா, மனத்துக்கு இனிய ஆஞ்சநேயனைச் சந்திக்கலாமே! அதுக்காகவே இப்பவே போறேன்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//'வசந்த நவராத்ரி' சமயத்தில் மதுரையம்பதி அண்ணா,ஜெய்ஷ்ரீ மேடம் மற்றும் KRS அண்ணா மூலமாக தேவீ சம்பந்தமா நிறைய சிந்திக்க பாக்கியம் கிட்டியது//

ஏம்ப்பா...பதிவைப் போட்டது மெளலி அண்ணா!
flowersofindia தளத்தில் பூக்கள் எடுத்துக் கொடுத்தது ஜெயஸ்ரீ மேடம்!
அது வரை சரி...
இதுல என்னைய வேற இழுத்து, தேவீ சம்பந்தமா நிறைய சிந்திக்க பாக்கியம் கிட்டியது-ன்னு சொல்றியே-கிண்டலா? :))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

செளகந்திகா புஷ்பம் என்பது தாமரையைப் போலத் தான் இருக்கும்! ஆனா ஒரு வித Ruby நிறம்! குளம், ஒடைகளில் பூப்பது...

பீமனும் அனுமன் வழிகாட்ட, ஓடையில் இருந்தே பறிப்பான்!

கல்யாண செளகந்திகா, ரத்த செளகந்திகா என்று நிறத்துக்கு ஏற்றாற் போல் இந்தப் புஷ்பங்கள் அமையும்! இராமாயணத்திலும் செளகந்திகா வனம் உண்டு!

இப்படி,
* தொலைவில் இருந்து கண்ட மாத்திரத்திலேயே போகம் வழங்குவதும்
* அருகில் கொண்டு வந்து முகர்ந்த மாத்திரத்தில் போகம் வழங்குவதும்...

அண்மை/சேய்மை ஆகிய இரு போகங்களையும் ஒருசேர வழங்க வல்லவை மலர்கள்!

பாலைப் பார்த்தா போகம் இல்லை! குடிச்சாத் தான் போகம்!
மயில் துத்த நிறங்களைக் குடிச்சா போகம் இல்லை! விஷம்! பார்த்தால் தான் போகம்!

ஆனால் மலர்கள் தான் பார்க்கவும் பருகவும், அண்மைச் சேய்மை இன்பங்களைத் தர வல்லது!
அதனால் தான் அந்த "காமிகா பூர்வமான போகத்தை" எம்பெருமானுக்குச் சமர்ப்பித்து மகிழ வேண்டும் என்று பூக்கள் மட்டும் "பூ"ஜையில் பிரதான இடம் பெறுகின்றன!

பூக்களால் அர்ச்சிப்பது மட்டும் அன்றி
பூக்களைப் பற்றி பேசுவதும்,
அதை மானசீகமாகவே அவனுக்கு அனுபவிப்பதும் கூட...பூசை தான்!
அதான் "சிந்து பூ" என்பார்கள்!

சிந்துபூ மகிழும் திருவேங் கடத்து அந்தமில் புகழ்க் காரெழில் அண்ணலே!

குணங்களையும் புஷ்பமாக்கி அர்ச்சிப்பது வழக்கம்!

அகிம்சா ப்ரதமம் புஷ்பம்!
புஷ்பம் இந்திரிய நிக்ரகஹ!
சர்வ பூதா தயா புஷ்பம்!
க்ஷமா புஷ்பம் விசேஷத!
சாந்தி புஷ்பம்! தபா புஷ்பம்!
தியான புஷ்பம்! ததைவச
சத்யம் ச அஷ்டவிதம் புஷ்பம்
விஷ்ணூ ப்ரீதி கரம் மகாத்!