நித்யமானது, சைதன்ய ஸ்வருபமானது என்றெல்லாம் சொல்லப்படுகிற பரப்ரம்ஹம் பலவாறாக பிரிகையில் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகள் உருவாகிறார்கள். இவர்களில் பிரம்மாவுடன் பிறந்தவள் லக்ஷ்மியும், ருத்ரனுடன் பிறந்தவள் சரஸ்வதியும், விஷ்ணுவுடன் பிறந்தவள் கெளரியும் ஆவர். திருவுந்தியில்/நாபியில் தாமரையைக் கொண்டவன் பத்ம நாபன். அவனது சகோதரியாக அம்பிகை பிறந்ததால் பத்மநாப சஹோதரி. இதைத்தான் அபிராமி பட்டர், "அலையாழி அரிதுயலும் மாயனது தங்கை", "செங்கண்மால் திருதங்கச்சி", "முகுந்ததற்கு இளையவள்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
உலகத்தை ஐந்து விதமான பிரிவுகளாகச் சொல்லலாம். அவை ஸத், சித், ஆனந்தம், நாமம், ரூபம் என்பவை. இந்த ஐந்தில் முதல் மூன்றும் பரப்ரம்ஹத்தின் ரூபமாகச் சொல்கிறார்கள். மற்ற இரண்டும் உலகின் ரூபம், அதாவது உலகில் இருக்கும் அனைத்துக்கும் நாமமும், ரூபமும் உண்டு. நாமம், ரூபம் ஆகிய இரண்டும் மாயையால் உருவாவது. ஆகவே இந்த மாயையைக் கடந்தவளை நாமரூப விவர்ஜிதா. அதாவது நாமத்தையும், ரூபத்தையும் கடந்தவள், இவ்விரண்டிலிருந்தும் விடுபட்டவள் என்பதே நாமரூப விவர்ஜிதா.
ராஜீவம் என்றால் தாமரை, மீன்கள், மான் என்று மூன்று பொருள்களைச் சொல்லலாம். தாமரை போன்ற கண்களால் மட்டுமா அவள் ராஜீவலோசநா?, மீனைப் போன்ற கண்களால் அவளை மீனாக்ஷி என்று சொல்கிறோமே, அதுவும் இந்த நாமத்தில் அடக்கம் தான். மான் போன்ற மருண்ட விழிகள் என்று கவிஞர்கள் பெண்களின் கண்களுக்கு உவமை சொல்வதைப் பார்த்திருக்கிறோம்?, பெண்களுக்கெல்லாம் முதன்மையாக ஜகன் மாதாவான அம்பிகையின் கண்ணழகையும் மான் விழிகளுடன் ஒப்புமை கூறினாலும் வியக்க ஒன்றுமில்லை. ஆகவே அம்பிகைக்கு ராஜிவ-லோசநா என்ற நாமம். இதைச் சொல்லும் போது தேதியூரார், ராஜீவ என்பதற்கு அண்டியிருப்பவள் என்றும் பொருள் சொல்லி, ஈசனை/பரபிரம்ஹத்தை அண்டியிருந்து பக்தர்களை வாத்ஸல்யத்துடன் பார்ப்பவள், ஆகவே அவள் ராஜீவ லோசநா என்கிறார்.
14 comments:
//இவர்களில் பிரம்மாவுடன் பிறந்தவள் லக்ஷ்மியும், ருத்ரனுடன் பிறந்தவள் சரஸ்வதியும், விஷ்ணுவுடன் பிறந்தவள் கெளரியும் ஆவர்//
இவ்வாறு சொல்லும் புராணக் குறிப்புகளை அறியத் தாருங்கள் அண்ணா!
கிருஷ்ணனுக்கு உடன் தோன்றி, அந்தரத்தில் மறைந்த அந்தரி-துர்க்கை என்ற அளவில் மட்டுமே தெரியும்!
//அவை ஸத், சித், ஆனந்தம், நாமம், ரூபம் என்பவை. இந்த ஐந்தில் முதல் மூன்றும் பரப்ரம்ஹத்தின் ரூபமாகச் சொல்கிறார்கள்.
மற்ற இரண்டும் உலகின் ரூபம், அதாவது உலகில் இருக்கும் அனைத்துக்கும் நாமமும், ரூபமும் உண்டு//
காற்றுக்கு ரூபம் இல்லையே!
நீருக்கும் ரூபம் இல்லையே!
//நாமம், ரூபம் ஆகிய இரண்டும் மாயையால் உருவாவது. ஆகவே இந்த மாயையைக் கடந்தவளை நாமரூப விவர்ஜிதா.//
//இவ்விரண்டிலிருந்தும் விடுபட்டவள் என்பதே நாமரூப விவர்ஜிதா//
வர்ஜிதா என்றாலே இல்லாதது, விடுபட்டது என்று தானே பொருள்?
வி-வர்ஜிதா என்று ஏன் சொல்ல வேண்டும்?
//அவை ஸத், சித், ஆனந்தம், நாமம், ரூபம் என்பவை.
இந்த ஐந்தில் முதல் மூன்றும் பரப்ரம்ஹத்தின் ரூபமாகச் சொல்கிறார்கள்//
//நாமம், ரூபம் ஆகிய இரண்டும் மாயையால் உருவாவது//
* சத், சித், ஆனந்தம் = பரப்ரம்மத்தின் "ரூபம்" என்றால்..
* நாமம், "ரூபம்" = மாயையால் உருவாவது என்றால்..
சத், சித், ஆனந்தம் என்ற "ரூபமே", மாயை தானோ?
//இவர்களில் பிரம்மாவுடன் பிறந்தவள் லக்ஷ்மியும், ருத்ரனுடன் பிறந்தவள் சரஸ்வதியும், விஷ்ணுவுடன் பிறந்தவள் கெளரியும் ஆவர்//
இது தேவி பாகவதத்தில் வருகிறது.
காற்று/நீர் என்பதற்கு ஒரு விவரிப்புச் செய்ய இயலும்...என்பதே அர்த்தம்.
//காற்று/நீர் என்பதற்கு ஒரு விவரிப்புச் செய்ய இயலும்...என்பதே அர்த்தம்//
விவரிப்பு = நாமம்!
ஆனால் ரூபம் இல்லையே!
அப்படிப் பார்த்தால் உலகப் பொருட்களுக்கு மட்டுமில்லை! பரப்ரமஹத்துக்கு "விவரிப்பு" உண்டே!
சத்யம்,ஞானம்,அனந்தம் பிரம்ம என்ற "விவரிப்பு" வருகிறது அல்லவா?
நாம ரூபங்களான "விவரிப்புகள்" மாயையால் உருவாகிறது என்றால்...
சத் + சித் + ஆனந்தம் என்ற விவரிப்புகள்/நிலைகள் - இவை கூட மாயையால் உருவாவது தானா?
அப்படியென்றால், பரப்ரமஹம் = மாயையா?
மாயை பரப்ரமஹத்தின் ஒரு அங்கமா?
மாயை விலகினால் பரப்ரமஹத்தை அறியலாம் என்னும் போது,
அந்தக் கடைசி கட்டத்தில், மாயை தனி, பரப்ரமஹம் தனியாக நிற்குமா?
நீர்/காற்று எப்படி இருக்கிறது என்று கண்ணால் பார்க்க/உணர முடிகிறது, இவை இரண்டும் இப்படி இருக்கிறதுன்னு விவரிக்க இயலும் என்பதைச் சொன்னேன்.
//மாயை விலகினால் பரப்ரமஹத்தை அறியலாம் என்னும் போது,
அந்தக் கடைசி கட்டத்தில், மாயை தனி, பரப்ரமஹம் தனியாக நிற்குமா?//
பிரம்மத்தில் இருந்து பிறந்ததுதான் மாயை, அது பிரம்மத்தை மறைக்கும் இயல்புடையது என்பது பெரியவர்கள் வாக்கு, அந்த மாயை விலக்குபவளுக்கு திஸ்கரிணி என்று பெயர் சொல்லியிருக்கிறார்கள்.
பொறுமையாகப் பதில் தருவதற்கு நன்றி-ண்ணா!
ஆனா இன்னும் மாயை விலகலை! ஐ மீன் கேள்விகள் இருக்கு! :)
கேட்க அனுமதி உண்டு-ன்னா கேட்டு அறிந்து கொள்கிறேன்!
//பிரம்மத்தில் இருந்து பிறந்ததுதான் மாயை//
அப்படின்னா மாயை என்பது ஜீவாத்மா-வா?
//அது பிரம்மத்தை மறைக்கும் இயல்புடையது என்பது பெரியவர்கள் வாக்கு//
ஜீவாத்மா, மாயை விலகி, பிரம்மத்தோடு சேரும் போது, அந்த மாயையின் நிலை என்ன?
அப்படியே இருக்குமா? மறைந்து விடுமா?
//இவ்விரண்டிலிருந்தும் விடுபட்டவள் என்பதே நாமரூப விவர்ஜிதா//
அப்படீன்னா அன்னையும் மாயையில் ஆட்பட்டு, அப்பறம் விடுபட்டவளா என்ன? :(
வர்ஜிதா-ன்னே சொல்லாம, வி-வர்ஜிதா என்பதே சூட்சுமம்!
அதைக் கொஞ்சம் விளக்குங்களே-ண்ணா!
Naama roopa vivarjitha, dharmadharma vivarjitha,vayovastha vivarjitha!!
The one who is beyond the name and form , the absolute consciousness sudhdha brahma vasthu, the one who is beyond righteousness and unrighteousness, the one who is above all states
INNAVAENRU, ITHUTHAAN ENRU ALAVIDAMUDIYAATHAVAL.DOES THE PREFIX " VI " STANDS FOR INNATHU INNAVAENRU ENRU ARIYAMUDIYAATHATHIN ADAI MOZHIYAAGA?
GEETHA LA PARIPRASHNAKKU"PARI" MATHIRIYOA ? (KELVI KAEKKARATHU PRASHNA, OR PARIPRASHNA RENDUMAE.) PARI ATHANOADU SERNTHA VINAYAM BHAVAM INTEREST ELLATHTHAIYUM SAERTHTHUNNU NAAN ATHULA PURINJUNDU IRUNHTHAE. M......YOASIKKANUM!! YOASITHTHU AKAPPADA KOODIYATHA?:)))
padialakkara vaelayoda project mandakaayarathunnu anganthu anju nimisham fresh airnu inga vandhu marupadiyum manda kaanjuthirumbi poi adayae seyyaraen:((
//padialakkara vaelayoda project mandakaayarathunnu anganthu anju nimisham fresh airnu inga vandhu//
ஹா ஹா ஹா
ஜெயஸ்ரீ-ம்மா...ப்ராஜக்ட்-ல காயற மண்டை...அப்பளம் மாதிரி...அதோட போச்சி!
ஆனால்...அம்பாளிடத்திலும்...ஆன்மீகத்திலும் காயும் மண்டையானது...ஊறு காய் போல!
ஊறிய காய், ஊறிக்கொண்டு இருக்கும் காய், ஊறப் போகும் காய்-ன்னு எப்பவும் ஊறிக்கிட்டே இருக்கும்! :))
கடின விளக்கங்களையும் ஜாலியாவே பேசலாம்! மெல்ல project work முடிச்சிட்டு வாங்க!
நானும் நீங்கள் கேட்ட அந்த பாவை நோன்பு Angles இன்னும் தரலை! Got occupied with mouli anna :))
//......YOASIKKANUM!! YOASITHTHU AKAPPADA KOODIYATHA?:)))//
இல்லை!
யோசித்து அகப்படாது!
சுவாசித்து அகப்படும்!
:))
ஆனா எம்பெருமானை...
சுவாசிச்சிக்கிட்டே யோசிக்கலாம்! தப்பில்லை! :)
//DOES THE PREFIX " VI " STANDS FOR INNATHU INNAVAENRU ENRU ARIYAMUDIYAATHATHIN ADAI MOZHIYAAGA?
GEETHA LA PARIPRASHNAKKU"PARI" MATHIRIYOA ?//
ஜெயஸ்ரீ-ம்மா
இங்கே மெளலி அண்ணா, "இவ்விரண்டிலிருந்தும் விடுபட்டவள் என்பதே நாமரூப விவர்ஜிதா" என்று சொல்லி இருந்தார்!
விடுபட்டவள்- என்றால்...
ஒன்றில் பட்டிருந்தா தானே, "விடு"பட முடியும்?
அப்படின்னா, அன்னையும் ஆட்பட்டு, விடுபட்டாள் என்று ஆகி விடுகிறதே...
அதான் வி-வர்ஜிதா என்றால் என்ன-ன்னு கேட்டேன்!
தர்ம ஸ்தாபனார்த்தாய, சம்பவாமி யுகே யுகே-ன்னு சொல்லிட்டு போயிருக்கலாம்!
அது என்ன தர்ம -"சம்" ஸ்தாபனார்த்தாய?
அப்படி யோசித்தால், வி-வர்ஜிதாவும் எம்பெருமான் திருவருளால் பிடிபடும்-ன்னு நினைக்கிறேன்! :)
ராஜீவ் என்றால் அரசன் என்றும் ஒரு பொருள் உண்டு அல்லவா? அரசனை சார்ந்து இருப்பவளின் கண்கள். சிவன் என்ற அரசனின் ப்ரதான பக்தர்களில் இரண்டாவதாக சொல்லப்படுகிறவர் உமையும் தானே !! ஆமாம் சிவனை அண்டி இருப்பவள் !!!!.வாம தேவி. ஆனா எல்ல நாமங்களும் கடைசியில் எதர்குமே உவமை இல்லாதங்கற மாதிரி superlative thaan. ஒண்ணு புரிஞ்சது. வாக் தேவிகளின் வாக்கு சாதுர்யம் !! எத்தனை அழகு! ஆனாலும் தெய்வம் என்பதை வர்ணிக்க இயலாது. யார் எப்படி நோக்குகிறோமோ அப்படி ! அந்த பாவத்தை உண்டாக்க மனதில் உருவக படுத்திக்க வேண்டி தானே இந்த வர்ணனைகள் !!! "மனமுருகி லயித்து ஒளி பெற" . அவரவர் அனுபவம் போலும். ரொம்ப அழகா எழுதியிருக்கேள் மௌலி நிறைய புரிந்தும் கொள்கிறேன் Thanks.
Post a Comment