Sunday, February 22, 2009

மஹா சிவராத்ரி...2009

ப்ருஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித சோபித லிங்கம்
ஜன்மஜ து:க்க விநாசக லிங்கம்
தத்-பிரணமாமி ஸதாசிவ லிங்கம்

[பிரம்ம தேவனாலும், முரன் என்னும் அசுரனைக் கொன்றவனாலும், முப்பத்து முக்கோடி தேவர்களாலும் நன்கு பூஜிக்கப்பட்டதும், அழுக்கற்றதாக ஒளிர்வதும், மனிதப் பிறவியால் ஏற்படும் பலவித துன்பங்களை போக்கி முக்தியை தருவதுமான ஸ்ரீஸதாசிவத்தின் வடிவான சிவலிங்கத்தை நமஸ்காரம் செய்கிறேன்]

நாளை மஹா சிவராத்திரி. ஆதி-அந்தம் இல்லாத ஜோதி வடிவான லிங்கத்தில் இருந்து பரமேஸ்வரன் காக்ஷி தந்த தினம். வராஹ வடிவில் ஸ்ரீவிஷ்ணுவும், அன்ன வடிவில் பிரம்மாவும் பரம்பொருளை, லிங்கோத்பவ மூர்த்தியின் அடி-முடி தேடிய நாள். இன்று பகலில் சுத்த உபவாசமிருத்தல் மிகச் சிறப்பு. இரவு நான்கு ஜாமங்களிலும் சிவ பூஜை செய்து, பஜனைகள் செய்து, சிவகாதைகள் கேட்டு இரவைக் கழித்து மறுநாள் நித்ய கர்மாக்களை முடித்து தம்பதி பூஜை போன்றவை செய்து விரதத்தை முடித்தல் நலம். போன வருடம் சிவராத்திரி சிறப்பாக 3 பதிவுகள் இட்டேன். அவற்றின் லிங்க் இதோ!.

ஸ்ரீ ஆசார்யார் அருளிய சிவானந்த லஹரி, சிவபுஜங்கம் மற்றும் சிவ-பஞ்சாக்ஷர ஸ்தோத்திரங்களை இந்நாளில் படித்து சர்வேசனை, ஸதாசிவனை பூஜித்தல் சிறப்பு. சிவநாமத்தை மனதில் நினைத்தாலேயே எல்லா பாபங்களும் நீங்கி நன்மை உண்டாகும் என்று பகவத்பாதர் கூறுகிறார். இந்த வருட சிவராத்ரி சிறப்புப் பதிவாக ஸ்ரீ ஆசார்யார் அருளிய சிவ-பஞ்சாக்ஷர ஸ்தோத்திரத்தைப் பார்க்கலாம்.


நாகேந்ர ஹாராய த்ரிலோசனாய பஸ்மாங்க ராகாய மஹேஸ்வராய

நித்யாய சுத்தாய திகம்பராய தஸ்மை-ந-காராய நம: சிவாய


சிறந்த சர்பங்களை மாலையாக அணிந்தவரும், மூன்று கண்களை உடையவரும், உடல் முழுவதும் விபூதி பூசியவரும், மஹேஸ்வரரும், அழிவற்றவரும், தூய்மையானவரும், திசைகளை ஆடையாகக் கொண்டவரும் பஞ்சாக்ஷரத்தில் உள்ள முதல் எழுத்தான ந-கார வடிவானவரும், மங்களம் அருளுபவருமான சிவனுக்கு நமஸ்காரம்.


மந்தாகினீ ஸலிலசந்தன சர்சிதாய நந்தீஸ்வர ப்ரமதநாத மஹேஸ்வராய

மந்தாரபுஷ்ப பஹுபுஷ்ப ஸுபுஜிதாய தஸ்மை-ம-காராய நம: சிவாய


கங்கா ஜலத்தால் குழைக்கப்பட்ட சந்தனத்தை உடலில் பூசியவரும் நந்திகேஸ்வரர் முதலான பூதகணங்களுக்குத் தலைவரும், மஹேஸ்வரரும், மந்தார புஷ்பம் போன்ற பலவிதனமா புஷ்பங்களால் நன்கு பூஜிக்கப்பட்டவரும், பஞ்சாக்ஷர மந்திரத்தில் இரண்டாவது எழுத்தான ம-கார வடிவானவரும், மங்களம் அருளுபவருமான சிவனுக்கு நமஸ்காரம்.



சிவாய கெளரிவதனாய அப்ஜப்ருந்த ஸூர்யாய தக்ஷாத்வர நாஸகாய
ஸ்ரீ நீலகண்டாய வ்ருஷத்வஜாய தஸ்மை-சி-காராய நம: சிவாய


மங்களமானவரும், பார்வதியின் முகமென்னும் தாமரைக் கூட்டத்தை மலரச் செய்யும் ஸுர்யன் போன்றவரும், தக்ஷன் இறுமாப்புடன் செய்த யாகத்தை நாசம் செய்தவரும், ஆலகால விஷத்தை சாப்பிட்டதால் நீல வர்ணமான கழுத்தை உடையவரும், தர்ம வடிவான வ்ருஷபத்தை கொடியாகக் கொண்டிருப்பவரும், பஞ்சாக்ஷர மந்திரத்தில் மூன்றாவது எழுத்தான-சி-கார வடிவானவரும், மங்களம் அருளுபவருமான சிவனுக்கு நமஸ்காரம்.


வஸிஷ்ட கும்போத்பவ கொளதமார்ய முநீந்த்ர தேவார்ச்சித சேகராய

சந்த்ரார்க்க வைஸ்வாநர லோசனாய தஸ்மை-வ-காராய நம:சிவாய


வஸிஷ்டர், அகஸ்தியர், கெளதமர் முதலிய சிறந்த முனிவர்களாலும், அனைத்து தேவர்களாம் பூஜிக்கப்பட்ட சிரஸ்ஸை உடையவரும், சந்திரன், ஸுர்யன், அக்னி ஆகியவர்களை மூன்று கண்களாக உடையவரும், பஞ்சாக்ஷர மந்திரத்தில் நான்காவது எழுத்தான வ-கார வடிவானவரும் மங்களத்தை தருபவருமான சிவனுக்கு நமஸ்கராம்.




யக்ஷ ஸ்வரூபாய ஜடாதராய பிநாக ஹஸ்தாய ஸநாதனாய

திவ்யாய தேவாய திகம்பராய தஸ்மை-ய-காராய நம: சிவாய


யக்ஷனான குபேர வடிவத்தில் இருப்பவரும், ஜடைகளைத் தாங்கிக் கொண்டிருப்பவரும், பிநாகம் என்னும் வில்லை கையில் வைத்திருப்பவரும், மிக பழமையானவரும், திவ்ய மங்கள வடிவானவரும், தேவருக்கெல்லாம் தேவரும், திசைகளையே ஆடையாகக் கொண்டவரும், பஞ்சாக்ஷர மந்திரத்தில் ஐந்தாவது எழுத்தான ய-கார வடிவானவரும், மங்களத்தைத் தருபவருமான சிவனுக்கு நமஸ்காரம்.

பஞ்சாக்ஷர மிதம் புண்யம் ய:படேத் சிவஸன்னிதெள

சிவலோக மவாப்னோதி சிவேன ஸஹ மோததே


இந்த புண்யமான பஞ்சாக்ஷர ஸ்தோத்ரத்தை சிவ ஸன்னிதியில் படிப்பவர்கள், இவ்வுலகில் ஸகல போகங்களையும் அனுபவித்து, பிறகு கைலாஸத்தை அடைந்து ஸ்ரீபரமேஸ்வரருடன் ஆனந்தத்தை அனுபவிப்பார்கள்.


சகலருக்கும் சாம்ப பரமேஸ்வரன் நலம் அருளப் பிரார்த்திப்போம்.

27 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

நமபார்வதி பதயே! ஹர ஹர மஹாதேவா! தென்னாடுடைய சிவனே போற்றி1 என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி! ஈசனடி போற்றி எந்தையடி போற்றி! நேயத்தே நின்ற நிமலனடி போற்றீ1 மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி1

Kavinaya said...

நன்றி மௌலி. ஓம் நமசிவாய. சிவாய நம ஓம்.

S.Muruganandam said...

அருமையான படங்களுடனும், ஸ்லோகம் விளக்கத்துடனும் அருமை, குறிப்பாக கௌதமர் பூசித்த கோமளாவல்லி கும்பலிங்கமும், சோமாஸ்கந்தர் ஓவியமும் மிக அருமை.

மஹா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் மதுரையம்பதி ஐயா.

ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய

Anonymous said...

அருமையான ஸ்லோகம், மீண்டும் நியாபகப்படுத்தினதுக்கு நன்றி.

காஞ்சியில் இருந்த காலத்தில் தினமும் சொன்னது ஒரு காலம்.

இப்ப ஓம் நமசிவாயவோட நின்னு போச்சு.

திவாண்ணா said...

நன்னி மௌலி.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க திராச ஐயா...சிங்கை சிவாலயத்தில் ஸ்ரீருத்ரம் சொல்லியாச்சா?

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கவிக்கா. நன்று சொன்னீர்களக்கா.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கைலாஷி ஐயா...நன்றி.
படங்களெல்லாம் கூகுளாண்டவர் தந்தவை.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க அம்பி-சார். இப்போது நினைவுக்கு வருதில்லையா?...திரும்ப ஆரம்பிச்சு சொல்லலாமே? :-)

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி திவாண்ணா. பாடலீஸ்வரர் தரிசனம் ஆச்சா?.

திவாண்ணா said...

இப்போதைக்கு இஷ்டி மட்டும்தான் ஆச்சு!
நம்ம வேலையெல்லாம் ராத்திரிதான் ஆரம்பிக்கும்! இந்த முறை பாடசாலையிலேயே ஏகதச ருத்திர பாராயணம் பூஜை ஏற்பாடு ஆகி இருக்கு.

கபீரன்பன் said...

”சிவபெருமான் கிருபை வேண்டும். வேறென்ன வேண்டும்.”

உங்களுக்கு நிறையவே கிடைக்கும்.

பஞ்சாக்ஷர சுலோகத்தை எம்.எஸ். அம்மாவின் குரலில் கேட்க இங்கே சுட்டவும்.

திருச்சிற்றம்பலம்

jeevagv said...

மகாசிவராத்ரியில் மகேசன் அருள் பெருகட்டும், வாழ்த்துக்கள்!

மெளலி (மதுரையம்பதி) said...

@ திவாண்ணா,

//இந்த முறை பாடசாலையிலேயே ஏகதச ருத்திர பாராயணம் பூஜை ஏற்பாடு ஆகி இருக்கு.//

ஆஹா, அருமை. நல்லபடி நடந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
இங்கும் 4 கால பூஜை நடந்தது...

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கபீரன்பன்.. லின்க் அளித்தமைக்கு நன்றி. :-)

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி ஜீவா சார். :-)

குமரன் (Kumaran) said...

நிறைய படங்கள் போட்டு சிவதரிசனம் அருமையாக அமைய வழி செய்துவிட்டீர்கள் மௌலி. நன்றி.

//முரன் என்னும் அசுரனைக் கொன்றவனாலும்//

யாருங்க இது? :-)

//சந்த்ரார வைஸ்வாநர //

சந்த்ரார்க்க வைஸ்வாநர....

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க குமரன்.

அதானே?, முரனைக் கொன்றவன் யாருங்க?.... :-)

தவற்றினை சுட்டியமைக்கு நன்றி. சற்று நேரத்தில் பதிவிலும் திருத்திடறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

பேசாம பிரும்மாவினாலும் முரன் என்ற அசுரனைக் கொன்ற திருமாலாலும் பூஜிக்கபட்டவன் என்று சொல்லியிருந்தால் என்னை மாதிரி மரமண்டைக்கும் சட்டுன்னு புரிந்திருக்குமில்லே

மெளலி (மதுரையம்பதி) said...

//பேசாம பிரும்மாவினாலும் முரன் என்ற அசுரனைக் கொன்ற திருமாலாலும் பூஜிக்கபட்டவன் என்று சொல்லியிருந்தால்//

வாங்க திரச ஐயா....ஸ்லோகத்தில் முரனைக் கொன்றவனாலும் அப்படின்னு தானே இருக்கு?...பொருள் சொல்லும் போது அப்படியே டிரான்ஸ்லேட் பண்ணினதன் விளைவு...

மேலும்,ஆங்காங்கே சொந்த சரக்கு சேர்க்கறதுல எனக்கு அப்யாசம் இல்லை என்ன பண்ணறது. :-)

குமரன் (Kumaran) said...

//பேசாம பிரும்மாவினாலும் முரன் என்ற அசுரனைக் கொன்ற திருமாலாலும் பூஜிக்கபட்டவன் என்று சொல்லியிருந்தால் என்னை மாதிரி மரமண்டைக்கும் சட்டுன்னு புரிந்திருக்குமில்லே//

பாருங்க தி.ரா.ச. உங்களுக்கு அது திருமால்ன்னு தெரிஞ்சிருக்கு. அதனால சொல்லிட்டீங்க. நீங்களே உங்களை மரமண்டைன்னு சொல்லிகிட்டா தெரியாம அது யாருன்னு கேட்ட என்னை என்னன்னு சொல்றது? :-)

குமரன் (Kumaran) said...

//மேலும்,ஆங்காங்கே சொந்த சரக்கு சேர்க்கறதுல எனக்கு அப்யாசம் இல்லை என்ன பண்ணறது. :-)//

பாட்டுகளுக்கெல்லாம் பொருள் சொல்லும் என் பதிவுகளை இம்புட்டு நாள் படிச்சுமா இந்தப் பயிற்சி இன்னும் வரலை? நம்ப முடியலையே?! :-)

என் பதிவுகளைப் படிச்சும் இந்தப் பயிற்சி வரமாட்டேங்குதுன்னா ஒரே வழி தான் உண்டு. பெரியவங்க பாட்டுக்கு எல்லாம் மத்த பெரியவங்க எழுதுன வியாக்கியானங்களையெல்லாம் படிக்கணும். பெரியவாச்சான் பிள்ளையில இருந்து தொடங்கலாம். :-)

மெளலி (மதுரையம்பதி) said...

//என் பதிவுகளைப் படிச்சும் இந்தப் பயிற்சி வரமாட்டேங்குதுன்னா ஒரே வழி தான் உண்டு.//

அச்சோ, அந்த வரி எழுதும் போது உங்கள் நினைவே எனக்கு வரல்ல குமரன்...உங்களது இடுகைகளப் படிக்கையில் எனக்கு அப்படித் தோன்றினதும் இல்லை..தயவு அப்படி எடுத்துக்காதீங்க.

//பெரியவங்க பாட்டுக்கு எல்லாம் மத்த பெரியவங்க எழுதுன வியாக்கியானங்களையெல்லாம் படிக்கணும். பெரியவாச்சான் பிள்ளையில இருந்து தொடங்கலாம். :-)//

ஹிஹிஹி...பெரியவாச்சான் பிள்ளை எல்லாம் பெரிய ஆளா அப்படின்னு சொன்னது நினைவுக்கு வருது.. :-)

பெரியவாச்சான் பிள்ளையவர்களது வியாக்கியானங்கள் அடங்கின ஈ-புக் ஏதும் இருக்கா குமரன்...அப்படி இருப்பின் லிங்க் தாங்களேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

//பாருங்க தி.ரா.ச. உங்களுக்கு அது திருமால்ன்னு தெரிஞ்சிருக்கு. அதனால சொல்லிட்டீங்க. நீங்களே உங்களை மரமண்டைன்னு சொல்லிகிட்டா தெரியாம அது யாருன்னு கேட்ட என்னை என்னன்னு சொல்றது? :-)//

பெரியவங்க ரெண்டு பேரும் ஏதோ பேசிக்கறீங்க...ஆகையால் நான் ஜுட். :-)

குமரன் (Kumaran) said...

//பெரியவாச்சான் பிள்ளை எல்லாம் பெரிய ஆளா அப்படின்னு சொன்னது நினைவுக்கு வருது.//

அப்படி யார் சொன்னதுன்னு எனக்கு நினைவில்லை மௌலி. பெரியவாச்சான் பிள்ளை & மற்றவங்க வியாக்கியானங்களை எல்லாம் இந்தப் பக்கத்துல பாக்கலாம்.

http://www.maransdog.com/document/

மெளலி (மதுரையம்பதி) said...

//அப்படி யார் சொன்னதுன்னு எனக்கு நினைவில்லை மௌலி. //

விடுங்க குமரன்....தெரியாம இருக்கறதே நல்லது.

//பெரியவாச்சான் பிள்ளை & மற்றவங்க வியாக்கியானங்களை எல்லாம் இந்தப் பக்கத்துல பாக்கலாம். //

நன்றிங்க..புக் மார்க் பண்ணி வச்சுக்கறேன்.

Geetha Sambasivam said...

படங்கள் எங்கே சுட்டீங்க?? நல்லாவே சுட்டிருக்கீங்க! பழக்கம் ஆயிடுச்சு போல!