Monday, July 5, 2010

சிந்தனை செய் மனமே....ச்ரத்தை

காதில் கேள்விப்படும் கோவில்களுக்கெல்லாம் செல்கிறேன். தினமும் இத்தனை முறை மந்திர ஜபம் செய்கிறேன்,வருஷத்தில் ஒரு முறை பெரிய ரித்விக்குகளைக் கூப்பிட்டு சாஸ்திரத்தில் சொல்லிய விதவிதமான ஹோமங்களைச் செய்யவிக்கிறேன். தினமும் 2 மணிநேரம் பூஜை செய்கிறேன், ஆனாலும் இறைவன் எனது இன்னல்களைப் போக்கவில்லை, எனக்கு தரிசனம் தரவில்லை. இவ்வாறான சிந்தனை இன்று நம்மிடையே பலருக்கும் இருக்கிறது.

பல நேரங்களில் நமது வழிபாடுகள், உடல் வலிமைக்காகவும், செல்வச் செழிப்புக்காகவும் என்றே இருந்தாலும், சில நேரங்களில் பிறரை வருத்தவும் கூட இறையருளை நாடுவதும் நடக்கத்தான் செய்கிறது. இறையனுபூதியை விடுத்து வேறு சில காம்யார்த்தமான பலன்களை நோக்கிச் செய்யும் கர்மாக்களை தவறு என்கிறார்கள். கர்மாக்களைச் செய்ய மட்டுமே நமக்கு அதிகாரம், அதன் பலா-பலன்களை இறையிடத்தில் விட்டுவிடவேண்டும். நமக்கு எதைக் கொடுப்பது, எப்படிக் கொடுப்பது, எப்போது கொடுப்பது என்பதை அவனறிவான் என்கிற எண்ணத்தை மனதில் வேரூன்றச் செய்ய வேண்டும்.

சாஸ்திரங்கள் நமக்குச் சொல்லியிருப்பதைச் செய்கிறோம் என்பதிருக்கட்டும், அவ்வாறு செய்வது எதற்காக?, எப்படிச் செய்வது? என்பதில் கவனம் இருப்பதில்லை. இதன் காரணமாகவே இவ்வளவு செய்தும் இறையருளைப் பெறுவதில்லை என்றால் மிகையல்ல. அவரவர் செய்த கர்மாக்களுக்கு ஏற்ற பலன் இல்லை என்றால் சாஸ்திரத்தில் சொல்லப்படுவது பொய்யாகாது. பல்லாயிரக்கணக்கான வருஷங்களாக நமது பெரியவர்கள், செயல்படுத்தி, பலன்களை அனுபவித்து அதனையே தர்ம-சாஸ்திரமாக நமக்கு அளித்திருக்கிறார்கள். ஆகவே தர்ம சாஸ்திரம் பொய்க்காது. இங்குதான் கீதையில் பகவான் சொல்லியதை நினைவில் கொண்டு வரவேண்டும்.

அச்ரத்தையா ஹுதம் தத்தம் தபஸ்தப்தம் க்ருதம்ச யத்
அஸதித்யுச்யதே பார்த்த ந ச தத்ப்ரேத்ய நோ இஹ

இதன் பொருள், சிரத்தையில்லாமல் செய்யும் கர்மா, பலன் தராது என்பதுதான். ஆக சாஸ்திரம் என்றும் பொய்க்காது, நாம் செய்யும் கர்மாக்களை ச்ரத்தையில்லாது, மற்றவர்களது பாராட்டுக்காகவும், சமூகத்தில் நமது பெருமையை பறைச்சாற்றுவதற்காகவும் மட்டுமே பூஜை-புனஸ்காரங்களை, நாம பாராயணத்தை, கர்மாக்களைச் செய்வது என்று இருப்பதால்தான் பலன் ஏதும் கிடைப்பதில்லை. இதை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். தக்ஷ-பிரஜாபதி மிகப் பெரிய யாகத்தைத்தான் செய்தான், ஆனால் அவனது அச்ரத்தை, அஹங்காரம் போன்றவை அவன் செய்த யாகத்தை முற்றிலும் தகர்த்ததை நாம் அறிவோம்.

பகவத்பாத சங்கரர், சாஸ்த்ரஸ்ய குருவாக்யஸ்ய ஸத்யபுத்யாவதாரணா, ஸா ஸ்ரத்தா கதிதா ஸத்பிஹி: என்று கூறுகிறார். அதாவது, சாஸ்திரத்திலும், குருவின் வாக்யத்திலும் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் சிரத்தையுடன் செய்யும் காரியங்களே பலனைத்தரும் என்பது தான் அவர் சொல்லியிருப்பது. இதையேதான் கீதையிலும், "ஸ்ரத்தாவான் லபதே ஞானம்" என்கிறார் பரமாத்மா. அதாவது ச்ரத்தையுள்ளவனே ஞானம் பெறுகிறான் என்று பொருள். அதாவது குருவினிடத்தில் சிரத்தையுடன் உபதேசம் பெறுபவனே ஞானம் அடைவான் என்பது மறைபொருள்.

கைவல்ய உபநிஷத் என்னும் க்ருஷ்ண யஜுர் வேதத்தில் "ச்ரத்தா-பக்தி-த்யான-யோகாதவைஹி" என்று சொல்லியிருப்பதாகச் சொல்வர் பெரியோர். அடிப்படையாக ச்ரத்தையையும், அத்துடன் கூட பக்தி மற்றும் த்யானம் ஆகிய இரண்டையும் கலந்து பண்ணுவதே - த்யான யோகத்திலேயே பக்தி பாவத்தையும் கரைத்துப் பண்ணுவதே - முமுக்ஷுவாக இருப்பவன் முக்தியைப் பெறுவதற்கான ஹேது/உபாயம் என்று கூறியிருக்கிறார்கள். இதில் முக்யமாக நாம் பார்க்க வேண்டியது பக்தி, த்யானம் என்பதற்கெல்லாம் முதலாகச் சொல்லியிருக்கும் அடிப்படை விஷயமான 'ச்ரத்தை' என்பதே.

ஆக, நாம் பயணம் செய்வது கர்ம, பக்தி, ஞான யோகங்களில் எந்த வழியிலாக இருந்தாலும் அதற்கு அவசியமானது ச்ரத்தை. இப்படியான மிக அவசியமான விஷயத்தை மனதில் கொள்வோம், நாம் செய்யும் எல்லாவற்றையும் ச்ரத்தையுடன் செய்வோம், இறையருள் வேண்டுவோம்.

28 comments:

திவாண்ணா said...

மௌலி அருமையான பதிவு! மேலும் இது போல பலதும் வரட்டும்!

மதுரையம்பதி said...

முதல் வருகைக்கு நன்றிண்ணா. ரொம்ப நாட்கள் கழித்து இப்பக்கம் வந்தமைக்கு நன்றி. :-)

Jayashree said...

"ஸ்ரத்தா பக்தி சமன்விதஹ:"

"நிஷ்டா, சபுரி" என்று சத்சரித்ராவில் சொல்லியிருப்பதுபோல.....

நம்பிக்கை, பக்தியுடனும் சேர்ந்த மரியாதையுடனும், forbearance ஓடவும்

சிரத்தையோட செய்யும்போது த்யானமாக செய்ய வந்துவிடும்.த்யானம்னா கவனம், CONCENTRATION தானே.

நல்ல ஒரு விஷயத்தை அருமையாகவும் இதமாகவும் சொல்லியிருக்கிறீர்கள் மௌலி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தினமும் இத்தனை முறை மந்திர ஜபம் செய்கிறேன்,வருஷத்தில் ஒரு முறை பெரிய ரித்விக்குகளைக் கூப்பிட்டு சாஸ்திரத்தில் சொல்லிய விதவிதமான ஹோமங்களைச் செய்யவிக்கிறேன். தினமும் 2 மணிநேரம் பூஜை செய்கிறேன்//

ஹா ஹா ஹா
பயந்தே போயிட்டேன்! இது என்ன மெளலி அண்ணா தான் எழுதினாரா இல்லை அடியேன் மதுரையம்பதியில் எப்படி எழுத முடியும்-ன்னு! :)))

//அவரவர் செய்த கர்மாக்களுக்கு ஏற்ற பலன் இல்லை என்றால் சாஸ்திரத்தில் சொல்லப்படுவது பொய்யாகாது//

Awesome! 100% true!

//தக்ஷ-பிரஜாபதி மிகப் பெரிய யாகத்தைத்தான் செய்தான், ஆனால் அவனது அச்ரத்தை, அஹங்காரம் போன்றவை அவன் செய்த யாகத்தை முற்றிலும் தகர்த்ததை நாம் அறிவோம்//

Jooperu! Mouli Anna kalakkings! I like it!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சிரத்தையில்லாமல் செய்யும் கர்மா, பலன் தராது என்பதுதான்//

அண்ணா, சூப்பரான பதிவு!
பல அந்த நாள் நினைவு மின்னல்கள் என் மனத்தில்! :)

ஒரே ஒரு ஐயம்-ண்ணா...
சிரத்தை என்றால் என்ன?

ஏன் கேட்கிறேன்-ன்னா, பலரும் அவரவர் விருப்பங்களின் மேல் ஏதோவொரு சிரத்தை வைத்துத் தான், ஏதோவொரு கர்மங்கள் செய்கிறார்கள்! அப்படி இருக்க...

1. "சிரத்தையில்லாமல் செய்யும் கர்மா" என்றால் என்ன?
2. "சிரத்தை என்றால் என்ன?
3. "சிரத்தை" எதன் மேல் கொள்ள வேண்டும்? - கர்ம பலன்களின் மீதா? கர்ம வழிமுறைகள் மீதா? இல்லை அந்தக் கர்மங்கள் மீதேவா? இல்லை வேறு ஏதாச்சும் ஒன்றிலா?

விளக்க வேணுமாறு வேண்டுகிறேன்!

மதுரையம்பதி said...

அனுபவித்துப் படித்தமைக்கு நன்றிகள் ஜெயஸ்ரீ-மா!

மதுரையம்பதி said...

வருகைக்கு நன்றி கே.ஆர்.எஸ். நீங்க கேட்ட கேள்விக்குப் பதிவிலேயே பதிலிருக்கிறதே...ஆதிசங்கரர் சொல்லியிருக்கிறதாகச் சொன்னது "சாஸ்த்ரஸ்ய குருவாக்யஸ்ய ஸத்யபுத்யாவதாரணா, ஸா ஸ்ரத்தா கதிதா ஸத்பிஹி:"

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வருகைக்கு நன்றி கே.ஆர்.எஸ். நீங்க கேட்ட கேள்விக்குப் பதிவிலேயே பதிலிருக்கிறதே...//

இல்லீயே-ண்ணா!

//ஆதிசங்கரர் சொல்லியிருக்கிறதாகச் சொன்னது "சாஸ்த்ரஸ்ய குருவாக்யஸ்ய ஸத்யபுத்யாவதாரணா, ஸா ஸ்ரத்தா கதிதா ஸத்பிஹி:"//

இப்படிச் சொன்னா எங்கள போல மக்கு பாய்ஸ்-க்கு எப்படி புரியறதாம்? :)

//சாஸ்திரத்திலும், குருவின் வாக்யத்திலும் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் சிரத்தையுடன் செய்யும் காரியங்களே பலனைத்தரும் என்பது தான் அவர் சொல்லியிருப்பது//

இது தான் சுலோகத்தின் பொருள்-ன்னு பதிவில் சொல்லி இருக்கீக! இதில், சாஸ்திரம்/குருவின் வாக்கியத்தில் சிரத்தை வேணும்-ன்னு இருக்கே தவிர, சிரத்தை-ன்னா என்ன-ன்னு அடியேன் கேள்விக்கு இதில் விடை இல்லீயே!

கேள்வியை இன்னும் கொஞ்சம் புரியறா மாதிரி மாற்றி அமைக்கட்டுமா?

1. "சிரத்தை என்றால் என்ன?

சிரத்தையோடு செய்-ன்னு சொல்றோமே! கவனமாச் செய்-என்பது பொதுவான பொருள்! எல்லாரும் "கவனமாய்"த் தானே செய்யறாங்க! உதாரணத்துக்கு ஆயுஷ் ஹோமம் என்றால் செய்பவர்களுக்கு ஆயுள் மேல் கவனம்/சிரத்தை இருக்கு தானே!

மேலும் ஹோமத்திற்கு உண்டான திரவியங்கள் முதற்கொண்டு எல்லாம் கவனமாத் தானே திரட்டித் தருகிறார்கள்! தக்க வாத்தியார் வைத்துத் தானே செய்கிறார்கள்! ஆயுஷ் ஹோமம் செய்தால் ஆயுள் விருத்தி என்ற சாத்திர வாக்கியத்தில் நம்பிக்கை/சிரத்தை வைத்துத் தானே செய்கிறார்கள்?

அப்படி இருக்க, "சிரத்தையில்லாமல் செய்யும் கர்மா" என்றால் என்ன?
சிரத்தை என்பது வேறு ஏதாச்ச்சும் ஒன்றா? அல்லது ஆயுஷ் ஹோமத்தில் எதில் சிரத்தை குறைகிறது??

குமரன் (Kumaran) said...

நீங்க ச்ரத்தையோட எழுதுனதை நானும் ச்ரத்தையோட படிச்சேன் மௌலி. :-)

Jayashree said...

śraddhayāghnihi samidhyate śraddhaya huyate havihi |
śraddhā bhaghasya mūrdhani vacasā vedayamasi ||
priya śraddhe dhadhathaha priya śraddthe didāsataha |
priyambhojeu yajvasvida ma udita kdhi ||
yathā deva asureṣu śraddhāmughreu cakrire |
evambhojeu yajvasvasmākamudita kdhi ||
śraddhā devā yajamānā vāyughopā upāsate |
śraddhā hrudayyayākūtyā śraddhayā vindate vasu ||
v śraddhā prātai havāmahe śraddhā madhyandina pari |
śraddhā sūryasya nimruci śraddhe śrad dhāpayeha namh ||


Rig Veda Book 10 Hymn 151 Faith.


1. By Faith is Agni kindled, through Faith is oblation offered up.
We celebrate with praises Faith upon the height of happiness.
2 Bless thou the man who gives, O Faith; Faith, bless the man who fain would give.
Bless thou the liberal worshippers: bless thou the word that I have said.
3 Even as the Deities maintained Faith in the mighty Asuras,
So make this uttered wish of mine true for the liberal worshippers.
4 Guarded by Vayu, Gods and men who sacrifice draw near to Faith.
Man winneth Faith by yearnings of the heart, and opulence by Faith.
5 Faith in the early morning, Faith at noonday will we invocate,
Faith at the setting of the Sun. O Faith, endow us with belief

This is for Mr kanna piran !!I have a question cum request for him too Re; Pakaikadithal . Shall send it to his post.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஜெயஸ்ரீ மேடம்
தங்கள் பின்னூட்டம் கண்டேன்! பகை கடிதல் அருளிச் செயலை, எளிய பொருட்சுவையோடு, முருகனருளில் விரைவில் இடுகிறேன்! ஆறுமோ ஆவல்? - Guess What? :)

சிரத்தை பற்றிய சிரத்தையான வேதக் குறிப்புகளுக்கு நன்றி!
ஆனால் அடியேனுக்கு இன்னும் புரியவில்லை! :(

நீங்கள் காட்டியுள்ளபடி, //śraddhā hrudayyayākūtyā śraddhayā vindate vasu//
இதயப் பூர்வமான Faith = சிரத்தை என்றால்...

மெளலி அண்ணா பதிவில் சொல்லியுள்ள படி, கர்மங்களில் சிரத்தை வேண்டும் = இதயப் பூர்வமாகச் செய்ய வேண்டும் என்று பொருளாகிறது!

அடியேன் கேள்வி என்னன்னா, ஆயுஷ் ஹோமம் முதலான காம்யார்த்த கர்மாக்களை, மக்கள் நம்பிக்கை/Faith-உடன் தானே செய்கிறார்கள்? ஆயுள் விருத்தி வேண்டி, அப்படிச் செய்தால் பயன் தரும் என்று நம்பித் தானே செய்கிறார்கள்? அப்படி இருக்க...
1. "சிரத்தையில்லாமல் செய்யும் கர்மா" என்றால் என்ன?
2. எங்கே சிரத்தை குறைகிறது?

மேலும், இன்று பலர் கர்மாக்களைத் தாங்களே செய்வதில்லை! தங்களுக்குப் பிரதிநிதியாக (அஸ்ய யஜமானஸ்ய), தேர்ந்த வேத விற்பன்னர்கள் (அ) ஹோமம் செய்பவர்களை வைத்துத் தானே செய்கிறார்கள்? சிரத்தையில்லாமல் செய்யும் கர்மா பலன் தாராது என்றால், "சிரத்தை" யாரிடம் குறைகிறது? - விற்பன்னர்களிடத்தா? இல்லை மக்களிடத்தா?

மதுரையம்பதி said...

மற்றவர்களது புகழ்ச்சிக்காக, குடும்பத்தில் இருப்பவர்களது மகிழ்ச்சி/வற்புறுத்தலுக்காகச் செய்வதெல்லாம் ச்ரத்தையுடன் சேர்த்தியாகாது. அடிமனதில் பெரியவர்களது வாக்குப் பொய்க்காது, பலகாலமாக முன்னோர்கள் செய்தது தவறாகாது, அவை நமக்கு நல்லவற்றைத் தரும் என்கிற நம்பிக்கையுடன் செய்ய வேண்டும், அது தான் ச்ரத்தை.

இன்றைக்கு காம்யார்த்த கர்மாக்களைச் செய்பவர்களுக்குக் கூட முழு நம்பிக்கை இருப்பதில்லை. பல நேரங்களி 'எத்தைத் தின்றால் பித்தம் தீரும்' என்ற் நிலை வந்த பிறகு, யாரேனும் ஒரு ஜோசியர் அல்லது பெரியவர்கள் சொல்லியதை, இதுவாவது பலன் தருகிறதா என்று பார்க்கலாம் என்ற அரைகுறை நம்பிக்கையில் செய்பவர்கள் தான் அதிகம்.

இதற்கு மேலே இன்னொன்று செய்து வைப்பவர்கள், அவர்களது அவசரம், அறியாமை மற்றும் இன்னபிற காரணங்களால் சிரத்தை குறைகிறது.

ஆக கர்மாவைப் பண்ணுபவனுக்கும் சிரத்தை வேண்டும், பண்ணி வைப்பவனுக்கும் சிரத்தை வேண்டும்.

பண்ணி வைப்பவன் சரியாகத்தான் செய்து வைக்கிறானா என்பதை கவனிக்கும் அளவிற்காவது தானும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு தெரிந்து கொள்ளாவிடில் கூட, செய்யும் கர்மாவால் இறைவன் தனக்கு நன்மை தருவான் என்கிற ஆழ்ந்த நம்பிக்கை இருப்பின் போதுமானது. ஆனால் செய்து வைப்பவன் ஏதோ வயிற்றுப் பிழைப்புக்காக, செய்பவனுக்குத் தெரியாத காரணத்தால் ஏமாற்றி, அசிரத்தையாகச் செய்தால் பூரண பலன் எஜமானனுக்கும் கிடைக்காது, செய்து வைப்பவனும் பாபியாகிறான்.

vijayaragavan said...

எனக்கு ஒரே ஆச்சர்யம் அண்ணா எப்படி நீங்க இவ்வளவு பொறுமையா பதிவிடுரீங்கனு.

திரு கே.ர.ச வுக்கு கீழே ....

shraddha:
Shraddha is usually rendered as “faith”, “trust”, or “confidence”. It is derived from the combination of the word shrad- (a derivative of hrid, “heart”) with the verbal root dha-, “to put, place”. The combination thus literally means “putting your heart into it”, i.e., having a heart-felt belief that something is true.

Hrid is traced back to the Indo-European kerd-, both meaning “heart” which is itself a cognate. Other related English words include “cardiac and “cardio-” (from the Greek kardia) and “cordial”, “courage”, and “accord” (from the Latin cord-). More English terms come to us through the Latin cognate credere, “to believe”: “credence”, “credible”, “credo”, “credit”, and “credulous”.

ஒருவர் (guru ?!) என்னை தினமும் சந்தியா வந்தனம் செய்ய சொல்லுறார்,நானும் செய்கிறேன். மற்றொருவர் என்னை ஏன் செய்கிறாய் எனக் கேட்கிறார். நான் அதில் பிராணாயாமம் வரும் அது நல்லது எனச் சொல்லுகிறேன். எனக்குள்ளும் சொல்லிகொள்ளுகிறேன். அர்க்யம் விடும் போது எனக்கு யோசனை வருகிறது , இப்போ விடுறதால பாவம் போகுதா? ... சில நாட்கள் கழிகிறது ... "என்ன இப்போ எல்லாம் சந்தியே பண்றது இல்லை? " என ஆத்துக்காரி கேட்கிறாள்...."நாளைலேர்ந்து செய்றேன்"

இது श्रेधा இல்லை.

ஒருவர் என்னை தினமும் சந்தியா வந்தனம் செய்ய சொல்லுறார்,நானும் செய்கிறேன். மற்றொருவர் என்னை ஏன் செய்கிறாய் எனக் கேட்கிறார். எனக்குத் தெரியாது இதை செய்ய வேண்டியது ஏன் கர்மாக்களில் ஒன்று. அதில் சந்தேகம் இன்றி செய்கிறேன்.

இது श्रेधा.

எனக்கு தெரிந்து கேள்வி கேட்பதால் (mattum) श्रेधा வராது...

இது நமக்குள்ளே பேசி தெரிந்து கொள்ளவேண்டியது.

vijayaragavan said...

எனக்கு ஒரே ஆச்சர்யம் அண்ணா எப்படி நீங்க இவ்வளவு பொறுமையா பதிவிடுரீங்கனு.
திரு கே.ர.ச வுக்கு கீழே ....
Shraddha is usually rendered as “faith”, “trust”, or “confidence”. It is derived from the combination of the word shrad- (a derivative of hrid, “heart”) with the verbal root dha-, “to put, place”. The combination thus literally means “putting your heart into it”, i.e., having a heart-felt belief that something is true.
ஒருவர் (guru ?!) என்னை தினமும் சந்தியா வந்தனம் செய்ய சொல்லுறார்,நானும் செய்கிறேன். மற்றொருவர் என்னை ஏன் செய்கிறாய் எனக் கேட்கிறார். நான் அதில் பிராணாயாமம் வரும் அது நல்லது எனச் சொல்லுகிறேன். எனக்குள்ளும் சொல்லிகொள்ளுகிறேன். அர்க்யம் விடும் போது எனக்கு யோசனை வருகிறது , இப்போ விடுறதால பாவம் போகுதா? ... சில நாட்கள் கழிகிறது ... "என்ன இப்போ எல்லாம் சந்தியே பண்றது இல்லை? " என ஆத்துக்காரி கேட்கிறாள்...."நாளைலேர்ந்து செய்றேன்"

இது श्रेधा இல்லை.

ஒருவர் என்னை தினமும் சந்தியா வந்தனம் செய்ய சொல்லுறார்,நானும் செய்கிறேன். மற்றொருவர் என்னை ஏன் செய்கிறாய் எனக் கேட்கிறார். எனக்குத் தெரியாது இதை செய்ய வேண்டியது ஏன் கர்மாக்களில் ஒன்று. அதில் சந்தேகம் இன்றி செய்கிறேன்.

இது श्रेधा.

எனக்கு தெரிந்து கேள்வி கேட்பதால் (mattum) श्रेधा வராது...

இது நமக்குள்ளே பேசி தெரிந்து கொள்ளவேண்டியது.

Karthik K Rajaraman said...

Thanks..

-Karthik

மதுரையம்பதி said...

வாங்க கார்த்திக். முதல் வருகைக்கு நன்றி.

மதுரையம்பதி said...

விஜய், ஏது ரொம்ப விலா வாரியா பின்னூட்டறீங்க?, ஆச்சர்யமாயிருக்கே? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மேல் விளக்கங்களுக்கும் சிரத்தையுடன் பதிலுரைத்தமைக்கும் நன்றி-ண்ணா!

//இன்றைக்கு காம்யார்த்த கர்மாக்களைச் செய்பவர்களுக்குக் கூட முழு நம்பிக்கை இருப்பதில்லை. பல நேரங்களி 'எத்தைத் தின்றால் பித்தம் தீரும்' என்ற் நிலை வந்த பிறகு..//

:))

//இதற்கு மேலே இன்னொன்று செய்து வைப்பவர்கள், அவர்களது அவசரம், அறியாமை மற்றும் இன்னபிற காரணங்களால் சிரத்தை குறைகிறது//

:))

@விஜய்

//அர்க்யம் விடும் போது எனக்கு யோசனை வருகிறது , இப்போ விடுறதால பாவம் போகுதா? ... சில நாட்கள் கழிகிறது ... "என்ன இப்போ எல்லாம் சந்தியே பண்றது இல்லை? " என ஆத்துக்காரி கேட்கிறாள்...."நாளைலேர்ந்து செய்றேன்"

இது श्रेधा இல்லை//

அருமை! எது சிரத்தை இல்லை என்பதை நடைமுறைப் பூர்வமாக விளக்கி இருக்கீங்க! நன்றி விஜய்!

//ஒருவர் என்னை தினமும் சந்தியா வந்தனம் செய்ய சொல்லுறார்,நானும் செய்கிறேன். மற்றொருவர் என்னை ஏன் செய்கிறாய் எனக் கேட்கிறார். எனக்குத் தெரியாது இதை செய்ய வேண்டியது ஏன் கர்மாக்களில் ஒன்று. அதில் சந்தேகம் இன்றி செய்கிறேன்.

இது श्रेधा
//

எனக்குத் தெரியாது!
ஆனால் இதைச் செய்வது "எனக்காக" அல்ல!
"எனக்கு" விதிக்கப்பட்டிருக்கே என்பதற்காக அல்ல!

இது இறைவனுக்காக என்று நம்புகிறேன்!
அவன் உள்ள உகப்புக்காக என்று நம்புகிறேன்!
அதனால் செய்கிறேன்!
சத சவித்ரு மண்டல மத்யவர்த்தே நாராயணஹ...
அதனால் செய்கிறேன்!

இது சிரத்தை!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நித்ய கர்மா = சந்தியா வந்தனம்!
அதைத் தட்டாது செய்ய வேணும்! மறு பேச்சிற்கே இடமில்லை!

நித்ய கர்மாக்களைச் செய்தால் தனியாகப் புண்ணியம் என்ற ஒன்றும் இல்லை!
ஆனால் செய்யாது விடுத்தால் பாபம் என்று சாத்திரங்கள் மொழிகின்றன!

அதனால் புண்ணியம் கிடைக்குமோ என்றோ,
வேண்டாம், பாவம் வராமல் இருக்கும் பொருட்டு செய்கிறேன்! விதி! விதிக்கப்பட்டுள்ளது! அதனால் விதியே-ன்னு செய்கிறேன் - என்றால் அதில் சிரத்தை இல்லை!

நித்ய கர்மங்களில்...சந்தியில்...சத சவித்ரு மண்டல மத்யவர்த்தே நாராயணஹ என்பதால் செய்கிறேன்!

அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம: என்பதால் அர்க்கியம் விடுகிறேன் - என்றால் அது சிரத்தை!

ஆக, கர்மா என்னவோ ஒன்று தான்! சகலரும் செய்கிறார்கள்! ஆனால் வெவ்வேறு நோக்கங்களுக்காக! எனவே அதன் சிரத்தை எங்கே வைக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து, "சிரத்தை" சிரத்தையாகிறது!

* அது கிடைக்கும், இது கிடைக்கும் என்று "கர்ம பலன்களின்" மீது சிரத்தை வைத்துச் செய்தால் = சிரத்தை இல்லை!

* இத்தனை படி அரிசி, இத்தனை புஷ்பாஞ்சலி என்று "கர்ம வழிமுறைகள்" மீது மட்டுமே சிரத்தை வைத்துச் செய்தால் = சிரத்தை இல்லை!

* விதிக்கப்பட்டிருக்கே என்று விதியே என்று செய்தாலும் = சிரத்தை இல்லை!

* இதைச் செய்தால் அவன் உள்ளம் மகிழும் என்ற பகவத் ப்ரீதியே = சிரத்தை!

பகவானை அர்ச்சிக்க புஷ்பங்களில் எவை கூடும்? எவை கூடாது? என்றால், எல்லாம் பகவானுக்கு உகந்தவையே, என்றாலும்....
"ந கண்ட காரிகா புஷ்பம் தேவாய விநிவேதயேத்' என்று சாஸ்திரத்தில் சொல்லி இருப்பதால்...

இவை எம்பெருமானுக்குத் தகாதவை என்று சொல்வதற்காக அல்ல! இவற்றிலுள்ள முட்கள், எம்பெருமான் திருமேனிக்குத் தீங்காகிடுமோ என்று அந்தப் பூவினை விலக்கும் போது அது சிரத்தை!

எந்தப் புஷ்பத்தைக் கண்டாலும் பகவானுக்குச் சூட்டி மகிழவேண்டும் என்ற அந்தக் கஜேந்திரனின் எண்ணம் = சிரத்தை

பகவத் ப்ரீதியே (உள்ள உகப்பு) = சிரத்தை!
அவன் பால் சிரத்தையே சிரத்தை!
அன்பால் சிரத்தையே சிரத்தை!

Kannabiran, Ravi Shankar (KRS) said...
This comment has been removed by the author.
Kannabiran, Ravi Shankar (KRS) said...
This comment has been removed by the author.
மதுரையம்பதி said...

'விதிக்கப்பட்டிருக்கிறது' என்றால் 'தலையெழுத்தே'ன்னு செய்யறதாக அர்த்தம் இல்லை....

இதைச் செய்யும் முன்னர் இதைச் செய்யவேண்டும் என்று வழியைச் சொல்லியிருக்கிறார்கள் அல்லது விதித்திருக்கிறார்கள் பெரியோர். இந்த ரூல்ஸ் தான் விதி என்று சொல்லப்படுகிறதே தவிர தலைவிதி என்று சொல்வதாக அர்த்தமல்ல. மூலத்தை அறிந்த பெரியவர்கள் சொல்வதன்படி நடப்பது என்பதே விதி.


குடும்ப வாழ்வில் ச்ரத்தையுடன் வாழ முயலும் யாரும் இவற்றைத் தலைவிதியே என்று செய்பவர்கள் இல்லை. சிறுவயதில் பெரியவர்கள் சொல்லும் போது வேண்டுமானால் அவற்றை தலைவிதியே என்று எடுத்துக் கொள்ளும் சிறார்கள் இருக்கலாம், அவர்களை இதில் பழக்கிவிட்டால், பிற்காலத்தில் அவர்களாக இதன் காரணங்களை, நன்மைகளை புரிந்து கொண்ட பின்னர் முழு மனதுடன் செய்யத் தலைப்படுவார்கள்.

ஆயிரம் பூஜைகள், அலங்காரங்கள் செய்யும் அர்ச்சகர்களாகட்டும், சன்யாசம் மேற்கொண்டவர்களாகட்டும் அவரவருக்களுக்கு உள்ள விதிகள்/ரூல்ஸ்படித்தான் செய்யவேண்டும் என்பதே சாஸ்திரம் சொல்லுவது. அந்த ரூல்ஸ் எல்லாம் இறைவனது மகிழ்ச்சிக்கும், தனிமனித ஒழுக்கம், பித்ரு/தேவர்களுக்கான வழிபாடு, உலக நன்மை போன்ற பல நல்லனவற்றை நித்யமாக ஆக்குவது.
இந்த ரூல்ஸ்தான் விதி என்று புழங்கப்படுகிறது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சிறுவயதில் பெரியவர்கள் சொல்லும் போது வேண்டுமானால் அவற்றை தலைவிதியே என்று எடுத்துக் கொள்ளும் சிறார்கள் இருக்கலாம்//

:))

//அவர்களை இதில் பழக்கிவிட்டால், பிற்காலத்தில் அவர்களாக இதன் காரணங்களை, நன்மைகளை புரிந்து கொண்ட பின்னர் முழு மனதுடன் செய்யத் தலைப்படுவார்கள்//

விளக்கத்துக்கு நன்றி அண்ணா!

தக்குடு said...

நீங்க சொன்ன அழகான கருத்தை ச்ரத்தையோட படிச்சேன் அண்ணா!

ச்ரத்தைங்கர்து கர்த்தா பண்ணக்கூடிய எல்லா பாகத்துலையும் இருக்கனும். சாதாரண ஜலத்துலேந்து ஆரம்பிச்சு பூர்ணாகுதி வரைக்கும். இதை எல்லாத்தையும் விட பண்ணின்டு இருக்கும் கார்யம் பகவானோட பாதத்துக்கு போகர்துங்கர பாவம் மனசுல இருந்துண்டே இருக்கனும். தான்தோன்றித்தனமா இல்லாம பெரியவர்கள் விஷயம் தெரிந்தவர்கள் ஏற்கனவே சொல்லி வச்சுருக்கும் விதிமுறைகளையும் மீறாமல் இருப்பதும் அவசியம். மனம் வாக்கு கார்யம் எல்லாம் ஒரு நிலைல இருந்து சாஸ்த்ர விதிப்படியையும் அலட்சியம் செய்யாமல் செய்யப்படும் தேவ கார்யமோ/ பித்ரு கார்யமோ பூர்ணம் அடைகிறது. நல்ல பகிர்வுக்கு நன்றி அண்ணா!

தக்குடு said...

ச்ரத்தைக்கு ப்ரதான இடம் தரும் பொருட்டே பித்ரு கார்யம் 'ச்ரார்த்தம்' என்று வழங்கப்படுகிறது.

Radha said...

பல அருமையான விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி. :)

மதுரையம்பதி said...

வாங்க தக்குடு....சிராத்தம் என்பதே சரி என்று முன்னர் ஒருமுறை திவாண்ணா சொன்ன நினைவு...:)

மதுரையம்பதி said...

வாங்க ராதா....ஆமாம், என்ன இது டெம்ளேட் பின்னூட்டம்?...அடிச்சு ஆடுவீங்கன்னு பார்த்தேன் :)