Friday, July 30, 2010

சிரஸ்த்திதா, ஹ்ருதயஸ்த்தா, ரவிப்ரக்யா


பரப்ரம்ஹத்தை சிவசக்தி ஐக்ய ஸ்வரூபமாகச் சொல்வது வழக்கம். அதாவது அம்பிகை வேறு, பரமசிவன் வேறு அல்ல, இருவரும் ஒன்றே என்றே சொல்லுகிறது சாக்தம். இந்தப் பொருளைச் சொல்வதே "காமகோடிகா", அதாவது பரசிவனுடன் இணைந்தவள் என்பது பொருள். இவளைச் சூழ்ந்திருக்கும் பல கோடிக்கணக்கிலான லக்ஷ்மிதேவிகளால் சேவிக்கப்படுகிறாள் என்று சொல்லுவது "கடாக்ஷ கிங்கரீபூத கமலாகோடி ஸேவிதா" என்னும் அடுத்த நாமம்.

(கிம் கரோதி) என்ன செய்ய வேண்டும் என்று எஜமானனுடைய கட்டளையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஸேவகனுக்கு கிங்கரன் என்று பெயர். அம்பிகையின் கடாக்ஷத்தால் அனுக்ரஹம் பெற்ற பக்தனை, கோடிக்கணக்கான ஸ்ரீதேவிகள் ஸேவிக்கக் காத்திருக்கிறார்கள் என்றும் பொருள் சொல்லுவதுண்டு. இந்த கோடிக்கணக்கான தேவிகள் அம்பிகையை வணங்கி, அவளது அருளாணைக்குக் காத்திருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.

இப்படி சேவிக்கப்படும் அம்பிகை எங்கு, எப்படி இருக்கிறாளாம்?, அம்பிகையைச் சிரஸில் இருப்பவளாக "சிரஸ்த்திதா" என்று சொல்லுகிறார்கள் வாக்தேவிகள். தந்திர மார்க்கத்தில் குருவை சிரஸில் வைத்து த்யானிப்பது வழக்கம். சிரஸ்த்திதா என்பதன் மூலமாக அங்கே அவளே குருவாக இருக்கிறாள் என்று சொல்லாமல் சொல்லுகிறார்கள். அங்கு அவள் சந்திரனைப் போன்ற காந்தி/ஒளியுடன் இருக்கிறாளாம், இப்படிச் சொல்லுவது "சந்த்ர நிபா" என்னும் நாமம். அதாவது சஹஸ்ராரத்தில் அம்ருதத்தை வர்ஷிக்கும் சந்திரனது காந்தியாக அம்பிகையைச் சொல்லப்படுகிறது.

'ப்ரோவோர் மத்யே சஹஸ்ராக்ஷி' என்று சொல்வதை, அதாவது புருவ மத்தியில் சஹஸ்ர கலைகளுடன் இருப்பவள் என்னும் வாக்யத்தை நினைவுபடுத்தும் விதமாக நெற்றியில் இருப்பவள் என்னும் பொருளில் "பாலஸ்த்தா" என்கிறார்கள் அடுத்த நாமத்தில். இந்த இடத்தில் அம்பிகை எப்படி இருக்கிறாளென்பதாக அடுத்த நாமத்தில், "இந்த்ர-தனுஷ் ப்ரபா" என்கிறார்கள். அதாவது இந்திரனது தனுஷ் போன்று வளைந்த ப்ரபைகளுடன் இருக்கிறாளாம். அதாவது அவள் அர்த்த சந்திர ரூபத்தில் இருக்கிறாள் என்கிறார்கள்.

இறைவனை நாம் மனத்திலிருத்தி தியானம் செய்ய வேண்டும் என்பது பெரியோர் வாக்கு. அவ்வாறு த்யானம் செய்யப்படுபவள் என்பதே "ஹ்ருதயஸ்த்தா". உபநிஷதங்களை, ப்ரமேஸ்வர ஹ்ருதயம் என்பார்கள். அந்த பரமேஸ்வரனுடன் இரண்டறக் கலந்தவளாயிற்றே அம்பிகை, ஆகவே உபநிஷதங்களில் அந்தர்யாமியாக இருப்பவளை, ஹ்ருதயத்திலிருப்பவள் என்னும் நாமம் சொல்வதாகவும் கொள்ளலாம். ஹ்ருதயத்தில் ஸுர்யமண்டலம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அங்கு அம்பிகை இருப்பதை "ரவிப்ரக்யா" என்று கூறுகிறார்கள் அடுத்த நாமத்திலேயே!. இதன் பொருள், ஸுர்யனது ஒளி பொருந்தியவள் என்பதாகச் சொல்லப்படுகிறது.

மூலாதாரத்தில் அக்னியும், ஹ்ருதயத்தில் ஸுர்யனும், ப்ரம்ஹரந்திரம் என்னும் நெற்றியில் சந்திரனும் இருப்பதாக தந்திர சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. இந்த மூன்றையும் ஸ்ரீவித்யையின் மூன்று கண்டங்களாகச் சொல்லி, அவற்றின் நடுவில் தீபமாக ஜ்வலிப்பவள் என்று சொல்வதே "த்ரிகோணாந்தர தீபிகா" என்னும் நாமம். இதையே இன்னொரு விதத்தில், மூலாதாரத்தில் இருக்கும் அக்னியின் சக்ரமான த்ரிகோணத்தின் நடுவில் இருப்பவள் என்றும் சொல்லுகிறார்கள்.

சிரஸ், நெற்றி, குண்டலினீ என்று யோக முத்ரைகளை நினைவுபடுத்தும் விதமாக இருக்கும் நாமங்களில் சிலவற்றை இன்று பார்க்கலாம். அம்பிகையை தந்திர சாஸ்திர விதிகளின் மூலமாக வழிபடுவது சாக்தர்கள் வழக்கம். இன்று கூறப்படும் நாமங்கள், அவற்றின் பொருள் எல்லாம் மேலோட்டமாகச் சொல்லியிருக்கிறேன். தகுந்த குருவிடத்து கற்கவேண்டியவை இவை. இவை தந்திர ராஜம் என்னும் நூலில் கூறப்பட்டிருப்பதாகச் சொல்லுவார் எனது குரு.

11 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஹ்ருதயத்தில் ஸுர்யமண்டலம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அங்கு அம்பிகை இருப்பதை "ரவிப்ரக்யா" என்று கூறுகிறார்கள்//

ரவிப்ரக்யா
ரவிப்ரக்யா
ரவிப்ரக்யா
ரவிப்ரக்யா
ரவிப்ரக்யா
என் பேரை அம்பாளுக்குச் சொல்லிப் பார்த்தேன்! ரொம்ப இதமா இருக்கு! :))

Jayashree said...

இந்த்ர தனுஷ் ப்ரபா- வானவில்லின் வர்ணஜாலங்களைப் ஒத்த ஒளியினள்.

ரவிப்ரக்ஞா - கண்ணனாருக்கு சங்கரர் இருக்கறது பத்தாம !! தோ பாரும்மா !! சந்தோஷத்த!!
மௌலி!! நம்ப Mr தக்குடு குண்டலம் பிடிக்கும்னு "INDICATE "பண்ணினாப்ல இவருமோப்பா? :)))))))))))))happy bells on the horizan ? May be ?? யாரோ அவர்(ள்) யாரோ !

மதுரையம்பதி said...

வருகைக்கு நன்றி கே.ஆர்.எஸ்

மதுரையம்பதி said...

வாங்க ஜெயஸ்ரீ-மா......கருத்துக்கு நன்றி....:-)

தக்குடு said...

@ ஜெய்ஷ்ரீமா - //மௌலி!! நம்ப Mr தக்குடு குண்டலம் பிடிக்கும்னு "INDICATE "பண்ணினாப்ல //
ஹலோ! என்ன இது? நீங்களும் எதாவது அழகா ஒரு அர்த்தம் வர மாதிரி ஒரு அம்பாள் ஸ்லோகம் சொல்லுவேள்னு பாக்கர்துக்கு ஓடி வந்தா, தக்குடுவோட தலையை உருட்டிண்டு இருக்கேள்?..:))

Jayashree said...

அப்படியா Mr தக்குடு!! சரி அப்ப இந்த குண்டல அழகை இப்படி த்யானம் பண்ணுங்கோ!!:))தினம் 108 தடவை!!

ஸரஸ்வத்யா: ஸூக்தி-ரம்ருதலஹரீ கௌஷலஹரீ:
பிபந்த்யா: சர்வாணி ச்ரவண-சுலுகாப்யா-மவிரலம்
சமத்கார-ச்லாகாசலித-சிரஸ: குண்டலகணோ
ஜணத்காரைஸ்தாரை: ப்ரதிவசன-மாசஷ்ட இவ தே

மௌலியையே அர்த்தம் கேளுங்கோ சந்தேகம் இருந்தா!
சமத்து பசங்க 2 பேர் சின்ன வயசில நிறையவே தெரிஞ்சு வெச்சுண்டு இருக்கேளே!! அந்த அம்மா அவளைப்போலவே அழகிலும் குணத்திலும் படிப்பிலும் சிறந்த பொண்ணை உங்கள் இருவருக்கும் தரட்டும்:))

தக்குடு said...

@ ஜெய்ஷ்ரீமா - உங்களோட ஆசிர்வாதத்துக்கு ரொம்ப சந்தோஷம் அம்மா!..:) குண்டல ஸ்லோகமும் பிரமாதம், பாத்தேளா? இதனாலதான் தக்குடுவுக்கு குண்டலம் பிடிக்கும்..:)

//சிறந்த பொண்ணை உங்கள் இருவருக்கும் தரட்டும்:))// KRS அண்ணாவுக்கு கல்யாணம் ஆகி shravan ங்கர பேர்ல சமத்தா ஒரு பிள்ளக்கொழந்தையும் இருக்கு, அவாத்து மாமி இதை பாக்காம இருக்கனும்..:))

vijayaragavan said...

/* தந்திர மார்க்கத்தில் குருவை சிரஸில் வைத்து த்யானிப்பது வழக்கம். */

எல்லோரும் தலையை நினைத்துக் கொண்டு தியானம் பண்ண போறாங்க !!

மதுரையம்பதி said...

வாங்க விஜய்...ஏதேது ரொம்ப குறும்பு ஜாஸ்தியாகறது?, உங்க பையன் போட்ட கமெண்டோ? :)

மதுரையம்பதி said...

வாங்க குண்டல தாரி!...:)

vijayaragavan said...

ரொம்ப சீரியஸ் ஆ போற இந்த போஸ்டிங் ல ஒரு காமெடி பீஸ் இருக்கட்டுமேனு .....
தப்பா இருந்த பண்ணலை இனிமேல். அது சரி நீங்க என் ப்ளாக் படிகிறதே இல்லையா?
http://sowvee.blogspot.com/