Thursday, July 8, 2010

நடேச்வரீ, நந்திவித்யா, முக்திரூபிணீ




ஈசனின் நடராஜ ஸ்வரூபத்தை நாம் நன்கறிவோம். அந்த நடராஜரின் அருகில் இருக்கும் அம்பிகையை சிவகாமி என்பதையும் அறிவோம், அவள் கையில் ஒரு மலரை வைத்தபடி ஈசனது நடனத்தில் ஆழ்ந்திருப்பாள். இந்த சிவகாமியை நினைவுபடுத்தும் ஒரு நாமமே "நடேச்வரீ", அதாவது நடேச்வரரின் பத்னீ. மதுரை போன்ற சில இடங்களில் அம்பிகையும், ஈசனுடன் நடனமாடும் சிலா ரூபங்களைக் காண்கிறோம். ஆக ஈசனுடன் நடமாடுவதாலும் அவள் நடேச்வரீ. இவளது உபாசகர்களில் சிறப்பான பன்னிருவரில் நந்திகேச்வரும் ஒருவர். நந்திகேச்வரரால் உபாசிக்கப்பட்ட முறைக்கு நந்தி வித்யை என்று பெயர். அப்படியான நந்திவித்யை மூலம் அடையப்படுபவள் "நந்தி வித்யா" என்று கூறுகிறார்கள் வாக்தேவதைகள்.

தன்னை உபாசிப்பவர்களுக்கு முக்தியைத் தருவதால் அவளை "முக்திதா" என்கிறார்கள்.கூர்ம புராணத்தில் "தஸ்மாத் விமுக்திமன்விச்சன் பார்வதீம் பரமேச்வரீம், ஆச்ரயேத் ஸர்வபூதானாம் ஆத்மபூதாம் சிவாத்மிகாம்" என்று கூறியிருக்கிறது. அதாவது சிவாத்மிகையான பார்வதீ முக்தியைத் தருகிறாள் என்பதான பொருள். அவித்யையிலிருந்து விடுபட்டு ஆத்மஸ்வரூபத்தில் அம்பாளிருப்பதைச் சொல்வதே "முக்திரூபிணீ" என்கிறார்கள். அதாவது முக்தி என்பதே அம்பிகையின் ரூபம் என்பது பொருள். இவள் ரம்பை முதலான அப்ஸர ஸ்த்ரீகளால் வணங்கப்பட்டவள் என்பதைக் குறிக்கும் நாமாவே "ரம்பாதி வந்திதா".

ஸம்ஸாரத்தில் உழலும் என்னை அம்பிகை கைவிட்டுவிடுவாளோ?, என்று பல நேரங்களில் பயம் வருகிறது. இப்படியான நேரங்களில் நான் மனதில் நினைத்துக் கொள்ளும் நாமம், "பவதாவ ஸுதாவ்ருஷ்டி:" என்பது. அதாவது ஸம்ஸாரமாகிற காட்டுத்தீக்கு அம்ருதவர்ஷமாக இருப்பவள் என்பது பொருள். அதாவது காட்டுத்தீ எப்படி பரவினாலும், அவற்றை மழை எப்படி அணைக்கிறதோ, அது போல ஸம்ஸாரமான காட்டுத்தீயை அணைப்பதற்கான அம்ருத மழை போன்றவளாக அம்பிகை இருக்கிறாளாம். இந்த நாமத்தை மூன்று பதங்ககளாக, அதாவது, பவதா, வஸுதா, வ்ருஷ்டி: என்று பிரித்துச் சொல்வதும் உண்டு. பவ என்றால் சிவன், வஸு என்பது ரத்னம், ஐச்வர்யம். தனது பக்தர்களுக்கு சிவ சாயுஜ்யத்தையும், ஐஸ்வர்யத்தையும் வர்ஷிப்பவள் என்பதாகவும் பொருள் சொல்வார்கள் பெரியோர்.

15 comments:

குமரன் (Kumaran) said...

பவதாவ ஸுதாவ்ருஷ்டி, பவதா, வஸுதா, வ்ருஷ்டி - எப்படிப் பார்த்தாலும் பொருத்தமான திருப்பெயர்கள்.

Geetha Sambasivam said...

பவதா, வஸுதா, வ்ருஷ்டி தான் கேட்ட நினைவு, உங்களோட விளக்கம் கொஞ்சம் வித்தியாசமா சம்சாரத்தையும், அதன் துக்கங்களைப் போக்கும் காரணியையும் குறித்து வந்திருக்கு. இப்படியும் அர்த்தம் உண்டுனு இப்போத் தான் தெரியும்.

Geetha Sambasivam said...

ப்ளாகர் அடத்தாலே படிச்சாலும் பின்னூட்டம் கொடுக்க முடியலை! :D

மதுரையம்பதி said...

ம்முதல் வருகைக்கு நன்றிகள் குமரன்.

மதுரையம்பதி said...

வாங்க கீதாம்மா....ஏதேது இந்தப் பக்கம் ஆச்சர்யமா கீது?. :).. நீங்க முடிவு பண்ணுனா, ப்ளாகர் அடமாவது ஒண்ணாவது?, உங்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி அப்படின்னு யாரோ உங்க வீட்டுல சொன்னாங்க. :)

Jayashree said...

ஸம்சாரம் என்னும் காட்டுதீயை அணைக்கும் அமிர்த வர்ஷினி.இதில deeper meaning ம் இருக்கு.

Jayashree said...

சரஸ்வதி எத்தனை அழகு. எந்த ஊர் ஸ்வாமியோ?

குமரன் (Kumaran) said...

முதல் வருகையா? என்ன சொல்றீங்கன்னு புரியலையே மௌலி?!

மதுரையம்பதி said...

இந்த இடுகைக்கு முதலாவதாக வந்ததைச் சொன்னேன் குமர்ன். :)

மதுரையம்பதி said...

வாங்க ஜெயஸ்ரீ-மா!.....டீப்பர் மீனிங் என்னன்னு சொல்லுங்க ப்ளீஸ். காஞ்சி உற்சவ காமாக்ஷியே சரஸ்வதி அலங்காரத்தில் இருப்பது. நண்பர் முத்துச்சாமி மெயிலில் அனுப்பினார்...இங்கு இட்டுவிட்டேன்..:)

குமரன் (Kumaran) said...

இதுக்குப் பேர் தான் மதுரை குசும்பா? :-)

ஒவ்வொரு இடுகைக்கும் எத்தனை தடவை வரணும்ன்னு சொல்லிடுங்க. அதே மாதிரி வந்துட்டுப் போறேன். (ஆனா பின்னூட்டம் போடமாட்டேன்.) :-)

மதுரையம்பதி said...

அச்சோ குமரன், நமக்கு (மதுரைக்காரவுகளுக்கு) குசும்புன்னா என்னான்னே தெரியாதே!...இப்படிச் சொல்லலாமா?, அதுவும் நீங்களே இப்படிச் சொல்லலாமா? :)

மதுரையம்பதி said...

குமரன், எப்ப்போதும் கொஞ்சம் லேட்டா வருவீங்க, இன்னைக்கு முதல் ஆளா வந்துட்டீங்கன்னு சொன்னேன்...வேறொன்றும் இல்லைங்கண்ணா..:)

தக்குடு said...

//ஸம்ஸாரமாகிற காட்டுத்தீக்கு அம்ருதவர்ஷமாக இருப்பவள் என்பது பொருள். அதாவது காட்டுத்தீ எப்படி பரவினாலும், அவற்றை மழை எப்படி அணைக்கிறதோ, அது போல ஸம்ஸாரமான காட்டுத்தீயை அணைப்பதற்கான அம்ருத மழை போன்றவளாக அம்பிகை இருக்கிறாளாம்//

அருமையான வரிகள். படமும் ப்ரமாதம் அண்ணா! சாரதாவை பாத்த மாதிரி இருக்கு...:)

தக்குடு said...

//அச்சோ குமரன், நமக்கு (மதுரைக்காரவுகளுக்கு) குசும்புன்னா என்னான்னே தெரியாதே!...இப்படிச் சொல்லலாமா?, அதுவும் நீங்களே இப்படிச் சொல்லலாமா? :)//

குசும்போட மொத்த ரூபமே மதுரைதான்னு குமரன் அண்ணா சொல்ல சொன்னார்...;P