Wednesday, October 17, 2007

ஸ்ரீ மூகபஞ்ச சதீ அருளிய மூக சங்கரர்....

காளிதாஸர், தண்டி, பவபூதி, வரருசி, மற்றும் 5 புலவர்கள் சேர்ந்து "நவரத்தினங்கள்" என்னும் புகழுடன் போஜராஜன் அரண்மனையில் போற்றப்பட்டனர். ஒரு சமயம் இருப்பவர்களில் யார் மிகச் சிறந்த கவி என்ற கேள்வி வருகையில், அன்னை பராசக்தியானவள் தண்டியையும், பவபூதியும் சிறந்த புலவர்கள் என்று கூறுகிறாள். இதனைக் கேட்ட காளிதாஸர் கோபத்துடன் அவசரமாக 'அப்படியென்றால் நான் யாரடி?' என்று அம்பாளிடமே ஏகவசனத்தில் கேட்கிறார். அன்னையும் நிதானமாக 'நீயே நான் தான்' என்றவாறு தத்வமஸி என்கிற மஹா வாக்கியத்தை உணர்த்துகிறாள். ஆனாலும் காளிதாஸர் அவசரப்பட்டு அன்னையை அவதூறாக பேசியதற்கு தண்டனையாக மறுபிறவியில் ஊமையாக பிறக்கும்படி சபிக்கிறாள். காளிதாஸர் மனம் வருந்தி மன்னிக்கும்படி வேண்ட, தேவியும் மனமிரங்கி காளிதாஸர் ஊமையாக பிறந்தாலும் மீண்டும் பேசும்திறனும், கவிபாடும் திறனும் அருளுவதாக வாக்களிக்கிறாள் அந்த வாகிஸ்வரி.


சக்திபீடங்களில் முதன்மையான ஸ்ரீகாஞ்சீ க்ஷேத்திரத்தில் ஓர் அந்தண குடும்பத்தில் ஊமையாக பிறந்தார் காளிதாஸர். மூகர் என்ற பெயருடன் பால்யத்திலிருந்தே ஸ்ரீகாமாக்ஷி சன்னதியில் எப்போதும் அமர்ந்திருப்பார். பக்கத்திலேயே ஒருஸ்ரீவித்யா உபாஸகரும் வாக்ஸித்தியை வேண்டி வழிபட்டு வந்தார். ஓரு நாள் அந்த உபாஸகரைக் கடாஷிக்கும் பொருட்டுஅன்னை அவர் முன் பாலையாக தோன்றுகிறாள். அம்பிகையின் ஸெளந்தர்யத்தைக் கண்ட மூகர், தான் முன் ஜென்மாவில்செய்த சியாமளா தண்டகம் போன்ற கவிதைகளின் நினைவால் உந்தப்பட்டு, தேவியைப் பாட வாய் திறந்து 'பே,பே' என்றுசப்தமிடுகிறார். ஊமைச் சிறுவனின் உளறல் சப்தம் கேட்டு கண்விழித்த உபாஸகர், ஊமையின் அலறலுக்கு இந்த சிறுமியே காரணமென்று அவளை அந்த இடத்தைவிட்டு அகலுமாறு கத்துகிறார்.

"சுத்த வித்யாங்குராகார த்விஜபங்க்த்தி த்வயோஜ்வலா" என்பதான சுத்த வித்தையே போன்ற பல்வரிசைகளில் ஊறி வந்ததாம்பூல ரஸத்தை தேவி மூகரின் வாயில் சேர்த்துவிடுகிறாள். உடனடியாக மூகருக்கும் வந்தது யார் என்பது முதலாக தனதுபூர்வ ஜென்ம தொடர்புகளெல்லாம் புரிகிறது. மேலும் அவர் பேசும் சக்தி மட்டுமல்லாது பாடல்களும் புனையக் கூடிய கவிதாவிலாஸம் சித்தியாகிறது. இவர் ஸ்ரீகாமாக்ஷி மீது பாடிய 500 ஸ்லோகங்களே மூக பஞ்சசதி என்று போற்றப்படுகிறது. இந்த ஸ்லோகங்களானது ஸ்ரீவித்யா மந்திரமே மாற்று உருக்கொண்டதாக சொல்லும்படியான விசேஷ அமைப்புடன் விளங்குகிறது. இந்த மூகரே பிற்காலத்தில் (கி.பி 398) காஞ்சி காமகோடி பீடத்தின் 20ஆவது ஆச்சாரியராக பட்டமேற்று 39 ஆண்டுகள் கழித்து கி.பி 437 ஆம் வருடம் ஸித்தி அடைந்தார்.

அன்னை காஞ்சி ஸ்ரீகாமாக்ஷியை கிருத யுகத்தில் 2000 ஸ்லோகங்களால் துர்வாச முனிவரும், திரேதாயுகத்தில் 1500 ஸ்லோகங்களால் பரசுராமரும், த்வாபர யுகத்தில் 1000 ஸ்லோகங்களால் தெளம்ய மகரிஷியும், கலியுகத்தில் மூக சங்கரர்500 ஸ்லோகங்களாலும் போற்றியுள்ளனர்.

11 comments:

குமரன் (Kumaran) said...

மூகரின் கதையை முன்பு கேட்டிருக்கிறேன் மௌலி. இன்று தான் அவர் காளிதாசரின் மறுபிறவி என்பதை அறிந்தேன். அடுத்து மூகபஞ்சசதியைப் பற்றி எழுதப் போகிறீர்களா?

jeevagv said...

மூக சங்கரர் பற்றி தெரிந்து கொண்டேன், மிக்க நன்றி!

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி ஜீவா. கிழே உள்ள லிங்க்கையும் பாருங்கள்..

http://sowndharyalahari.blogspot.com/

மெளலி (மதுரையம்பதி) said...

குமரன்,

தெரிந்து கொண்டுதான் எழுதப் பணித்தீர்களா?.... :)

இப்படி பளூ ஏற்றுகிறீர்களே....
எனக்குத் தெரிந்த செளந்தர்ய லஹரியினை எழுதவே நேரம் கிடைக்கவில்லை....அதனை முடித்துவிட்டு எழுதுகிறேன்.

(செளந்தர்ய லஹரி 4 ஸ்லோகங்கள் எழுதியுள்ளேன் பார்த்தீர்களா?....)

Geetha Sambasivam said...

மூகர் கதை ஏற்கெனவே படித்தாலும் மீண்டும் படிக்கும்போது நன்றாகவே உள்ளது. ரொம்பவே நன்றி மெளலி. வாழ்த்துக்கள். நிதானமாய்ச் செல்லுகிறீர்கள். அதற்கும் வாழ்த்துக்கள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

காமப்பரிபந்தி காமினி கமேஸ்வரி
காமபீட மத்யகதே
காமதுகா பவகமலே காமகலே
காமகோடி காமக்ஷி
இப்பேர்ப்பட்ட வார்த்தை ஜாலங்கள் மூகவியைத் தவிர யாருக்கு வரும் மௌளி சார் நன்றி

மெளலி (மதுரையம்பதி) said...

//காமப்பரிபந்தி காமினி கமேஸ்வரி
காமபீட மத்யகதே
காமதுகா பவகமலே காமகலே
காமகோடி காமக்ஷி
இப்பேர்ப்பட்ட வார்த்தை ஜாலங்கள் மூகவியைத் தவிர யாருக்கு வரும் மௌளி சார் நன்றி /

சரியாகச் சொன்னீர்கள் தி.ரா.ச சார்

மெளலி (மதுரையம்பதி) said...

//நிதானமாய்ச் செல்லுகிறீர்கள்//

புரியல்லையே....என்ன சொல்லுறீங்க கீதாமேடம்?.

ambi said...

மூக சங்கரர் பற்றி தெரிந்து கொண்டேன், மிக்க நன்றி!

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, நிஜமாவே புரியலையா? என்னை மாதிரி (அடுத்து அடுத்துப் பதிவுகள் போட்டு) அவசரப் படாமல் மெதுவாயும் அதே சமயம் அழகாயும், தேவைப் பட்ட விஷயங்கள் மட்டுமே எழுதிப் பதிவு போட்டு அசத்துகிறீர்கள். அதைத் தான் குறிப்பால் உணர்த்தினேன். :)))))))))))))

Kavinaya said...

நல்லா எழுதறீங்க. நீங்க எழுதற எல்லாமே எனக்கு புதுசுதான். நன்றி மௌலி.