Thursday, October 25, 2007

கடை விரித்தேன் கொள்வாரில்லை....

ஏதோ சொல்வார்களே "கடைவிரித்தேன் கொள்வாரில்லை" என்று, அந்த கதைதான் நினனவுக்கு வருகிறது. அதிலும் என்னுடைய கடை ரொம்ப ஸ்பெஷலாக, யார் கண்ணிலும் படாமல் வைத்துக் கொண்டிருக்கிறேன். ஆமாம், தமிழ்மணம், தேன்கூடு போன்றவற்றில் இணைக்கவில்லை.


ஏனெனில் நான் எழுத நினைப்பது ஆன்மிகம் மட்டுமே, அதிலும் சாக்தம் அதிகமாக. எனவே என் பதிவுகள் ஆன்மிக நண்பர்களுக்கு மத்தியில் மட்டும் புழங்கினால் போதும் என்றே தோன்றுகிறது. திரட்டிகளில் இணைப்பதால் கிடைக்கும் அர்ச்சனைகள் வேண்டாம் என்று தோன்றுவதாலும் இணைக்கவில்லை. எனது இந்த நிலை சரிதானா என்பதிலும் எனக்கு சிறிது சந்தேகம் இருக்கிறது, இன்னும் சிறிது காலம் செல்லட்டும் தெளிவு பிறக்கிறதா பார்க்கலாம்.


பிளாகர்ஸ்-யூனியன் போன்ற குழுக்களில் இணையலாம் என்று தோன்றுகிறது. அதன் அட்மினிஸ்ட்ரேட்ட்ர்கள் சொன்னபடி மெயில் அனுப்பினேன், ஆனால் அப்போது நான் பதிவுகள் எழுதவில்லை. இப்போது ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். அம்பியும், டிஸைப்பிளும் அருள் புரியவேண்டும். மேலும் வேறு ஏதேனும் குழுக்கள் இருக்கின்றனவா?. இருப்பின் அறிவிக்கவும்.பிளாக் டெம்லேடையும் மாற்ற உத்தேசம் இருக்கிறது, ஆனால் நேரமில்லை. எது பெஸ்ட் டெம்லேட் என்பது பற்றி பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. இதுபற்றி யாரேனும் ஏதேனும் சஜெஸ்ட் பண்ணினால் தன்யனாவேன்.

செளந்தர்ய லஹரி எழுத ஆரம்பித்துள்ளேன், 5 பதிவுகள் ஆயிற்று. எழுதும் போதுதான் புரிந்தது, அன்னையின் ஆயிரம் நாமங்களை இல்லாவிடினும் சில பல முக்கிய நாமங்களையும் எழுதுவது தேவையென்று. எதற்காக இது என்றால், அன்னையின் அழகை வர்ணிக்கும் ஸ்லோகங்கள் எடுத்தாளும் நாமங்கள் பலவற்றை சஹஸ்ர நாமத்தில் காணக் கிடைக்கிறது.

எனவே இந்தப் பதிவில் அன்னையின் ஆயிரம் நாமங்கள் என்ற தொடராக சில நாமங்களை எனது புரிதலின்படி எழுத உள்ளேன். ஆஸ்திக மஹா ஜனங்கள் படித்து எனது புரிதலில் உள்ள சரி-தவற்றினை திருத்த வேண்டுகிறேன்.

14 comments:

ambi said...

//அம்பியும், டிஸைப்பிளும் அருள் புரியவேண்டும்.//

:)
will do the needful.

கீதா சாம்பசிவம் said...

நாங்க எல்லாம் ஆர்வத்தோடு படிச்சுட்டுத் தான் இருக்கோம். இப்போ என்னோட "சிதம்பர ரகசியம்" பதிவுக்குக் கூட பின்னூட்டங்கள் வருவதில்லை. ஆனால் நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டபடி நான் பின்னூட்டங்களை எதிர்பார்ப்பதை விட்டு விட்டேன். நாம் செய்வது இறைத் தொண்டு. இதில் மற்றவர் கவனிக்கிறார்களா என்று எதிர்பார்க்கக் கூடாது என்பது அவர் கருத்து. இது நமக்கு இறைவனால் கொடுக்கப் பட்ட பணி என்பதும் அவர் கருத்து. ஆகவே நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள். ஆதரிக்க நாங்கள் இருக்கிறோம். வாழ்த்துக்களுடனும், ஆசிகளுடனும்

கீதா சாம்பசிவம் said...

டெம்ப்ளேட் மாத்தறீங்களோ இல்லையோ, தெரியாது, ஃபாண்ட் இன்னும் கொஞ்சம் படிக்கிறாப்பலே இருக்கட்டும். :))))))

தி. ரா. ச.(T.R.C.) said...

Write for your satisfaction. entha manamun ventaam. viruthu patti saniyanai velaikku vaangka ventaam. vishaym therinthavarkal patiththaal poothum

ஜீவா (Jeeva Venkataraman) said...

எந்த திரட்டியுடன் இணைக்காமலும் பதிவிட்ட உடனேயே படிக்கிறோம் இல்லையா - கூகிள் ரீடர் தயவில் -
இருந்தாலும் - பதிவை பலர் படிக்க - திரட்டியுடன் இணைத்தல் நலம் என்று நினைக்கிறேன்.

அர்ச்சனைகளைப் பொருத்த வரை - அவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் கொஞ்சம் கொஞ்சமாய் கற்றுக்கொள்ள வேண்டியதுதான்!

'செல்வ' லஹரி யில் அடுத்த பகுதி எப்போதோ?

குமரன் (Kumaran) said...

கடை விரித்தேன் கொள்வாரில்லை என்று தான் தோன்றும் மௌலி. ஆனால் உண்மையில் நேரம் கிடைக்கும் போது வந்து படிப்பவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். நானும் அப்படித் தான். :-)

பேசாமல் படித்துவிட்டுப் போகின்றவர்களும் இருப்பார்கள் அல்லவா?

எல்லோருக்காகவும் தொடர்ந்து எழுதிக் கொண்டு வாருங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம். :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அம்பியும், டிஸைப்பிளும் அருள் புரியவேண்டும்//

ஏம்பா அம்பீ,
யக்கோவ் டிடி
இன்னுமா அருள் புரியாம இருக்கீங்க? சீக்கிரம் வந்து மெளலிக்கு காட்சி கொடுங்கப்ப்பா!

மெளலி
சுயபிரதாபம்-னு Tag போட்டுட்டீங்கள்ளே? சீக்கிரம் திரட்டியில் சேத்துடுவீங்க பாருங்க!
அந்தக் களை வந்துருச்சு :-)

மதுரையம்பதி said...

அம்பி,

நன்றி....ஆமா, அப்படியே தங்க கம்பியை கொஞ்சம் எழுதச் சொல்லறது?

மதுரையம்பதி said...

//நாங்க எல்லாம் ஆர்வத்தோடு படிச்சுட்டுத் தான் இருக்கோம். இப்போ என்னோட "சிதம்பர ரகசியம்" பதிவுக்குக் கூட பின்னூட்டங்கள் வருவதில்லை//

நன்றி கீதாம்மா....நானும் பார்த்தேன் சிதம்பர ரகசியத்தின் கதியினை......
ஆனா நான் அங்கு வந்து நிறைய தெரிந்து கொள்கிறேன்.

வாழ்த்துக்களுடன் ஆசிகளுக்கு மிக்க நன்றி.....

மதுரையம்பதி said...

திராச,

உங்களைப் போல பெரியவர்கள் சொன்னா சரியாத்தான் இருக்கும். நன்றி.

மதுரையம்பதி said...

வருகைக்கு நன்றி ஜீவா.
//
அர்ச்சனைகளைப் பொருத்த வரை - அவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் கொஞ்சம் கொஞ்சமாய் கற்றுக்கொள்ள வேண்டியதுதான்!

'செல்வ' லஹரி யில் அடுத்த பகுதி எப்போதோ?//

எனக்கான அர்ச்சனைகளை ஏற்றுக் கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை. ஆனா அர்ச்சனை நான் எழுதும் பொருளை தவறாக பேசுவதென்பது என்னால்/என் எழுத்தால் வேண்டாமென நினைக்கிறேன்.

அடுத்த பகுதி இன்னும் 2 வாரங்களில் வரும். அதற்கு முன் ஆயிரம் நாமங்களில் முதல் 3-4 நாமங்களை இந்த பதிவில் எழுத எண்ணம்

மதுரையம்பதி said...

// நானும் அப்படித் தான். :-)

பேசாமல் படித்துவிட்டுப் போகின்றவர்களும் இருப்பார்கள் அல்லவா?

எல்லோருக்காகவும் தொடர்ந்து எழுதிக் கொண்டு வாருங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம். :-)//

நன்றி குமரன். எனக்கு தெரிந்ததை எழுதுவதென்று முடிவு எப்போதோ ஆயிற்று. ஆனால் படிப்பவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்தால் எழுத இன்னும் ஆர்வம் அதிகமாகும் என தோன்றியது. இது விஷயத்திலெலாம் நீங்க ரொம்ப சீனியர், நீங்க சொன்னா சரியாயிருக்கும். மனதில் இருத்திக் கொள்கிறேன்.

மதுரையம்பதி said...

//ஏம்பா அம்பீ,
யக்கோவ் டிடி
இன்னுமா அருள் புரியாம இருக்கீங்க? சீக்கிரம் வந்து மெளலிக்கு காட்சி கொடுங்கப்ப்பா!

மெளலி
சுயபிரதாபம்-னு Tag போட்டுட்டீங்கள்ளே? சீக்கிரம் திரட்டியில் சேத்துடுவீங்க பாருங்க!
அந்தக் களை வந்துருச்சு :-)//

நன்றி ரவி. அம்பி அருள்கிறேன் என்றி சொல்லிவிட்டார். பார்க்கலாம்.

ஏங்க சுயபிரதாபமெல்லாம் திரட்டியில் சேரத்தான் எழுத வேண்டுமா?

dubukudisciple said...

ennanga ungaluka aruliyachu.. ippa ok dhaane?? seri aduku oru nanri padivu potutundaga..