யோகத்தின் ஸ்வரூபமாக இருப்பவள் யோகினி. யோகத்தைக் கொடுப்பவள் யோகதா. யோகத்தால் அறியப்படுபவள் யோக்யா என்பதே இந்த மூன்று நாமங்களின் பொருள். யோகம் என்பதே ஐக்ய பாவனைதான், அந்த பாவனையாக அம்பிகை இருந்து, தனது பக்தர்களுக்கு யோகத்தை அளித்து, அவர்களுக்கு தனது ஸ்வரூபத்தை உணர்த்துபவள்.
மந்திர சாஸ்திரத்தில் டாகினீ முதலான பல யோகினிகளைச் சொல்வார்கள். அந்த யோகினிகள் அனைவரது ரூபமாகவும் அம்பாளே இருப்பதால் அவளை யோகினி/மஹாயோகினி என்று சொல்வது வழக்கம். தனது பக்தர்களுக்கு லெளகீக வாழ்கைக்குத் தேவையான செல்வம் போன்றவற்றையும், ஆன்மீக வாழ்வுக்கு அதாரமான பக்தி, கர்மா, ஞான சாதனங்களையும் அருளுவதால் அவள் யோகதா என்றும் கூறலாம். தக்ஷிணாமூர்த்தியே தனது யோகத்தின் மூலமாக அம்பிகையைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது, அவ்வாறாக யோகத்தின் மூலமாக இருப்பவள் யோக்யா என்கிறார்கள் வசின் தேவதைகள். யோகிகளுக்கு யோக பலனான பேரானந்தம் பராம்பிகையின் திருவருளே, ஆகவேதான் அவள் யோகாநந்தா எனப்படுகிறாள்.
மாயை என்பது பரப்பிரம்மத்தின் இயக்க சக்தியே என்று முன்னர் பார்த்தோம். இந்த சக்தியில் இருந்தே ஸத்வ-ரஜஸ் மற்றும் தமோ குணங்கள் உருவாகிறது. இந்த குணங்கள் ஒன்றை ஒன்று அடக்கி ஆளும் ஸ்வபாவமுடையவை. ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய இரண்டும் அடங்கி சத்வமே மேலிட்டு இருக்கும் சக்தியை யோகதா என்றும், ரஜஸ் அதிகமாகவும் தமஸ் மற்றும் ஸத்வ குணங்கள் குறைவாக/அடங்கியும் இருக்கும் சக்தியை யோகினியாகவும், ஸத்வ மற்றும் ரஜஸ் குணங்கள் குறைவாகவும் தமஸ் அதிகம் கொண்ட சக்தி ஸ்வரூபத்தை யோக்யா என்றும் பெரியவர்கள் கூறியிருக்கின்றனர்.
4 comments:
இது வரை தெரியாத பல விஷயங்கள் தெரிஞ்சது மௌலி, நன்னி!
She is incomprehensible இல்லையா? ஒன்றே பலவாக..
அவளே யோகத்தின் அதிபதி. அவளை சுற்றியே சூக்ஷும தேவதைகளாக யோகினி டாகினி சாகினி, ஹாகினி மோஹினி தேவதைகள், "மஹாஸதுஸ் ஷஷ்டி கோடி யோகினி கண சேவிதா" யோகமும் யோகியும், யோகத்தின் பொருளும் யோக கனலுமாய் நிற்பவள்.
சின்ன வயசில் யோகினினா பெரியவாள்ளாம் அவாள்லாம் யக்ஷிணினு சொல்லி நான் நம்ப தானை தலைவி போன பதிவுல பாடினாங்களே அப்படி அர்த்த்ம் பண்ணிண்டு இருந்தேன்:)) எனக்கு இருட்டுல எங்கேயாவது வெள்ளையா கற்பகம் K R விஜயா மாதிரி எங்கேயாவது யோகினி வந்துடாம இருக்கணுமேன்னு முருகா முருகானு சொல்லிண்டு கண்னை மூடிண்டு ஓடிடுவேன்:)) முருகனுக்கு மூச்சு முட்டியிருக்கும் பாவம்:((
ஏன் எல்லாரும் நன்னி நன்னினு சொல்லறா? அதுதான் சரியான தமிழா?
"நன்றி" - இல்லையா அப்போ?
Namasthe jee. i thank You very much for both Soundaryalaheri and Annaiyin Aayiram Naamangal. i like both and all your posts of Deivathin kural. I am happy to note that people around us serving for the common welfare and also to strengthern our scriptures for our generation to come. Nandri
Post a Comment