Monday, April 12, 2010

ப்ராம்ஹி, ப்ராம்ஹணீ, ப்ரம்ஹாநந்தா, பாஷாரூபா


அஷ்டமூர்த்தி, வாகதீஸ்வரி, ப்ராம்ஹி, ப்ராம்ஹணீ, ப்ரம்ஹாநந்தா, பாஷாரூபா
சிவபெருமானுக்கு, பவன், சர்வன், ஈசானன், பசுபதி, ருத்ரன், உக்ரன், பீமன், மஹான் என்று எட்டு நாமங்கள் உண்டு. இந்த எட்டு நாமங்களில் சொல்லப்படும் ஈசனுடைய பத்னியாக அம்பிகையையும் சொல்வது வழக்கம். அதாவது, பவாய தேவாய நம: என்று ஈசனை வணங்கினால், அம்பிகைக்கு பவஸ்ய தேவஸ்ய பத்னியை நம: என்பதாகச் சொல்லப்படும். ஆக ஈஸ்வரனுக்கு மட்டும் 'அஷ்ட மூர்த்தி' என்று பெயர் இல்லை, அம்பிகைக்கும் அந்த நாமம் இருக்கிறது. அஷ்ட லக்ஷ்மிகள், அஷ்ட மாதாக்கள், அஷ்ட வாக்தேவிகள் ஆகியோரெல்லாம் அம்பிகையின் ரூபங்கள் என்பதாலும் அவளை 'அஷ்ட மூர்த்தி' என்று கூறுகிறார்கள் வசின் தேவதைகள். இதே போல 8 ரூபங்களில் இருக்கும் வாக்தேவிகள் அம்பிகையின் ஸ்வரூபமே என்பதை 'வாகதீஸ்வரி' என்னும் நாமாவின் மூலமாகவும் தெளியலாம். வாகதீஸ்வரி என்றால் சொல்லாற்றலில் தலைசிறந்தவள் என்றும் பொருள் கொள்ளலாம். இதன் தொடர்புடைய இன்னொரு நாமா 'ப்ராம்ஹீ'. ப்ரம்ஹபத்னியான ஸரஸ்வதீ ரூபமாக இருப்பவள். இந்த நாமத்தையே, ப்ரம்ம வித்தையில் இருந்து வேறுபட்ட ரூபம் இல்லாதவள், அவளே ப்ரம்மவித்தையாக, ப்ராம்ஹியாக இருக்கிறாள் என்றும் கூறுவார் எனது குரு.

'பராம்ஹணீ''' என்று ஒரு நாமம், இங்கே பரமசிவனது பத்னீ என்று இந்த நாமத்துக்குப் பொருள் சொல்லியிருக்கிறார்கள். சகல உலகங்களிலும் உத்தம ப்ராம்ஹணனாக சிவத்தைச் சொல்லி அவனுடைய பத்னியை ப்ராம்ஹணீ என்று கூறுகிறார்கள். சாந்தோக்ய உபநிஷதத்திலும், ஆதித்ய, கூர்ம, வாஸிஷ்ட்ட, லிங்க புராணங்களிலும் பரமசிவனே உத்தம ப்ராம்ஹணனாக, அதாவது ப்ரம்ஹத்தை அறிந்தவனாக, பிரம்மமே இருப்பதாகச் சொல்லியிருப்பதாகவும், அதனால் அவனது பத்னிக்கு ப்ராம்ஹணீ என்ற நாமம் என்பதாகக் கூறியிருக்கிறார் பாஸ்கர ராயர்.

'ப்ரம்ஹாநந்தா' என்னும் நாமத்தில் ஸகுணமாக இருக்கும்போது அம்பிகை பிரம்மத்தையே ஆனந்தமாகக் கொண்டிருப்பவள் என்பதான நாமம்.இவளையே பாவம், அபாவம் இல்லாதவளாக 'பாவா-அபாவ விவர்ஜிதா' என்றும் கூறுகிறார்கள். அதாவது,உற்பத்தி, விநாசம் ஆகிய இரண்டும் இல்லாதவளாம் அம்பிக்கை.

இன்னொரு நாமம் 'பாஷாரூபா'. அதாவது பாஷைகள்/மொழிகள் எல்லாம் அம்பிகையின் ரூபமாகச் சொல்லபடுகிறது. பலவகை மொழிகளிலும் வர்ணனை, ஸ்தோத்ரம் செய்யப்படுபவள் என்றும் சொல்லலாம். இதனால்தானோ என்னமோ, மொழிகளை எல்லாம் பெண்பாலில், தமிழன்னை என்பது போல சொல்லப்படுகிறது வழக்கமாகியிருக்கிறது.


[இந்த இடுகையில் 6 நாமங்கள் வந்திருக்கின்றது]

4 comments:

vijay said...

"""
ஆக ஈஸ்வரனுக்கு மட்டும் 'அஷ்ட மூர்த்தி' என்று பெயர் இல்லை,
"""

அஷ்ட மூர்த்தி இருந்தால் அஷ்ட மாதாவும் இருக்கத்தானே
செய்யணும் :)
என்னென்றால், from http://sowndharyalahari.blogspot.com/2007/10/1-2.html
ஸ்பந்திதும் - அசைவதற்கு; அபி - கூட;
ந கலு குசல: - திராணியில்லாமை; விரிஞ்சாதி - பிரும்மா;

தேவி பாகவதத்தில் "சிவோபிசவதாம் யாதி குண்டலின்யா' என்று ஒரு வரி வரும்.அதாவது குண்டலினி சக்தியிழந்த சிவனும் சவமாகிறான் என்பதாக
அர்த்தம்.

vijay said...

"""
சாந்தோக்ய உபநிஷதத்திலும், ஆதித்ய, கூர்ம, வாஸிஷ்ட்ட, லிங்க புராணங்களிலும் பரமசிவனே உத்தம ப்ராம்ஹணனாக, அதாவது ப்ரம்ஹத்தை அறிந்தவனாக, பிரம்மமே இருப்பதாகச் சொல்லியிருப்பதாகவும்,
"""

Clever :)

மதுரையம்பதி said...

வாங்க விஜய். முதல் முறையா வருகையை வெளியில் தெரியும்படி பின்னூட்டியதற்கு நன்றி.. :-)

clever-ஆ, நானா இல்லை அம்பிகையைச் சொல்றீங்களா? :-)

Jayashree said...

மன்ஸ்த்வம் வ்யோம த்வம் மருத்ஸி ம்ருத்-ஸாரதி ரஸி

த்வ-மாபஸ்த்வம் பூமிஸ்-த்வயி பரிணயதாம் ந ஹி பரம்

த்வமேவ ஸ்வாத்னமானம் பரிணமயிதும் விஷ்வவபுஷா

சிதனந்தாகாரம் சிவயுவதிபாவேன பிப்ருஷே.......சௌ.லஹரி 35

இந்த ஸ்லோகத்திலேயும் அம்மாவோட அஷ்ட மூர்தித்வம் சொல்லபடறது இல்லையா?