ஸுகாராத்யா என்றால் சுகமாக வழிபடத்தக்கவள் என்று பொருள். உபவாசம், ஆவரண பூஜை, ஜபம், நியாஸங்கள், தர்ப்பணம் மற்றும் பல புரச்சரணங்கள் ஏதுமில்லாமல் வழிபட்டாலும் அருளுபவள். உலகிற்கே மாதாவான அவளை, குழந்தைகள் எப்படி அழைத்தாலும் வந்தருள்வாள். பொங்கலிட்டுக் கூழ் வார்த்தாலும் சரி, சஹஸ்ர-சண்டி மஹாயாகம் செய்தாலும் சரி அவள் இரண்டுக்கும் இரங்குவாள். ஸுகமாக சகல ஆபரணங்களையும் அணிந்து அலங்கரித்துக் கொண்டு பூஜிக்கலாம். இவ்வாறு சுலபமாக தன்னை ஆராதிக்கும் வழிகளை தனது பிதாவான ஹிமவானுக்கு அம்பிகையே அருளியதாகச் சொல்லுகிறது கூர்மம்.
நியம நிர்பந்தகள் இல்லாத பிறவியாக இருப்பினும் அம்பிகை அவர்களது ஆராதனையில் மகிழ்ந்து எல்லா சுபங்களையும்/மங்களங்களையும் அருளுவதால் அவளை "சுபகரி" என்று அடுத்த நாமத்திலேயே சொல்லிவிடுகிறார்கள் வாக்தேவதைகள்.
சாமீப்யம், சாரூப்யம், மோக்ஷம் என்றெல்லாம் சொல்லப்படுபவையாகவும் அம்பிகையே இருக்கிறாள், மேலே கூறிய ஸுகாராத்யா என்றபடியாக எளிதில் வழிபடக்கூடியவளாகவும் இருக்கிறாள். மோக்ஷம் போன்றவற்றை சோபனம் என்கிறார்கள் பெரியோர். ஸுலபமாக பூஜிக்கத்தக்கவள், சோபனம் போன்றவற்றை அடையச் செய்பவள் என்பதே "சோபனா ஸுலபா கதி:" கதி என்றால் சென்றைடையக்கூடிய இடம் என்று பொருள். இந்த நாமத்தை மூன்று பதங்களாகப் பிரித்தால், சோபனாயை, ஸுலபாயை கதி என்று வரும். இந்த நாமத்தைச் சொல்லி அர்சிக்கையில் சோபனாயை-ஸுலபாயை கத்யை நம: என்று கூற வேண்டும்.
பிறருக்கு ஒரு செய்தியை கொண்டு சென்று சொல்பவனை தூதன் என்கிறோம். சிவனையே தூதுவனாக அனுப்பியவள் பராம்பிகை. அதனாலேயே அவளுக்கு "சிவதூதீ" என்று பெயர். சும்ப-நிசும்பர்களுடன் போரிடும் முன்பாக சிவனை தூதுவனாக அனுப்பியதாக தேவி பாகவதம் கூறுகிறது. அந்த நிகழ்வை குறிப்பிடுவதுதான் இந்த நாமம். பத்ம புராணத்திலும் இந்த நாமாவை அம்பாளுக்குச் சொல்லியிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
சிவனால் ஆராதிக்கப்படுபவள் "சிவாராத்யா". அன்னையின் முதல் 12 பக்தர்கள் என்று எடுத்துக் கொண்டால் அதில் பரமசிவனே முதலாவதாகச் சொல்லப்படும். காஞ்சி க்ஷேத்திரத்தில் பரமசிவனே காமாக்ஷியை முதலில் பிரதிஷ்ட்டை செய்து, பிற்காலத்தில் துர்வாசராக வந்து அந்த க்ஷேத்திரத்திற்கான பூஜா கல்பத்தையும் அளித்ததாகச் சொல்வர். பரமசிவன் அம்பிகையை ஆராதித்தே அர்த்தநாரீச்வரனாக ஆகியதாக பிரம்மாண்ட புராணத்தில் சொல்லப்படுகிறது.
சிவனுக்கும் அம்பிகைக்குமான பேதத்தை போக்கும் நாமா "சிவமூர்த்தி". அதாவது சிவனாக வணங்கப்படுபவள் என்று பொருள். இதையே சிவம் என்றால் மங்களம் என்னும் பொருளால், இன்னொரு விதத்தில் மங்களமான மூர்த்த்ம் அவள் என்றும் கூறலாம். சிவ என்றால் மோக்ஷம் என்றும் பொருள் சொல்லப்படுகிறது. இதன்படி பார்த்தால் மோக்ஷத்தையே ரூபமாகக் கொண்டவள் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
11 comments:
ஆத்தாடி மாரியம்மா பொங்கல் ஆக்கிவச்சேன் வாடியம்மா
ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேணாம் தின்னுப்புட்டு போடியம்மா
இந்தப் பாட்டு தானே உங்கள் மனத்தில் ஓடியது ஸுகாராத்யா என்ற திருநாமத்திற்குப் பொருள் சொல்லும் போது?! :-)
வியாஸ புத்திரரான சுகப்பிரம்மத்தால் வழிபடப்பட்டவள் ஸுகாராத்யா என்பதும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.
நோகாம நோம்பு கும்பிடவும் வைக்கிறவள்!!ஆடம்பரம் இல்லாத அக வழிபாடு,உள்முக வழிபாட்டால் அறியப்படுபவள் - அந்தர் முக சமாராத்யா
பிரம்மாண்ட புராணத்தில் சொல்லப்படுகிறது.//
பிரம்மாண்ட புராணம் கொஞ்சம் விவரிச்சால் நல்லா இருக்கும். :(
அதாவது சிவனாக வணங்கப்படுபவள் என்று பொருள். //
தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபிணே னு கூட ஒரு நாமாவளி உண்டு போலிருக்கே? ம்ம்ம்ம்ம்??? இல்லை, இதைத் தான் தப்பாய்ப் புரிஞ்சுண்டு சொல்றேனோ?
வாங்க குமரன்...இதை எழுதறப்போ என் பெண்ணுக்கு கதைச் சொல்லிக்கொண்டே எழுதினேன். :)
வாங்க ஜெயஸ்ரீ-மா, எளிதாகச் சொல்லொவிட்டீர்கள்.. :)
வாங்க கீதாம்மா...தக்ஷிணாமூர்த்தி: என்றே இருக்கிறதம்மா...:)
வாங்க கீதாம்மா...தக்ஷிணாமூர்த்தி: என்றே இருக்கிறதம்மா...:)
ரொம்ப நாள் கழித்து இந்த பக்கம் எட்டி பார்க்கிறேன். நிறைய தெரிந்து கொள்கிறேன். நன்றி. :)
வாங்க ராதா...ரொம்பநாள் கழித்து வந்திருக்கிறீர்கள்....நன்றி.
Mouli
Tomorrow is the first adi chevvaima!! adi vellikku pottal kooda paravalla:))))
//Tomorrow is the first adi chevvaima!! adi vellikku pottal kooda paravalla:)))//
அடுத்த பதிவு போட்டாச் ஜெயஸ்ரீ-மா!
Post a Comment