நான் இந்த வலைப்பூவில் பதிவுகள் போட ஆரம்பித்த போது விநாயகரை பற்றி 3 இடுகைகள் இட்டேன். பிறகு கணேச ருணஹர ஸ்தோத்திரப் பொருளை போன வருட விநாயக சதுர்த்தியன்று பதிந்தேன். இந்த வருட பிள்ளையார் சதுர்த்தி சிறப்பாக ஒரு இடுகை இட தோன்றியது. அதன் விளைவே இந்த இடுகை. இது விநாயகர் சம்பந்தமான சில செய்திகள் தொகுப்பாக இருக்கும்.
கணபதி, விநாயகர், என்றெல்லாம் அழைக்கப்படுபவர் ஏன் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார்? பொதுவாக கிராமங்களிலும், சிற்றூர்களிலும் ஊரின் பெரிய குடும்பத்து/செல்வாக்கான குடும்பத்து தலைவரை, ஐயா, எஜமான் என்று குறிப்பிடுவதும், அவரது குடும்பத்து பிள்ளையை பெரியவீட்டுப் பிள்ளை, சின்ன எஜமான் என்றெல்லாம் குறிப்பிடுவது வழக்கம். [இன்றும் கிராமத்துக் கதையைக் கொண்ட சினிமாக்களில் இந்த முறைகளைப் பார்க்க முடிகிறது] இந்த முறையிலேயே அகில-உலகங்களுக்கும் தாய்-தந்தையான பார்வதி-பரமேஸ்வரனின் புத்திரனான கணபதியும் 'பிள்ளை' என்று அழைக்கப்பட்டு, அந்த பிள்ளைக்கு மரியாதை தரும் விதமாக ('அவர்' என்பது போல) 'யார்' சேர்த்து 'பிள்ளையார்' என்று வழங்கப்படுகிறார் என்று பரமாச்சார்யார் சொன்னதாக படித்த நினைவு. வேறு ஏதேனும் காரணங்களும் இருக்கலாம். தெரிந்தவர் பகிர்ந்தால் நலம்.
பிள்ளையாரை எல்லோருக்கும் பிடிக்கும். பார்த்த மாத்திரத்தில் மனதில் ஒரு நிம்மதியும் மகிழ்ச்சியும் பரவும். இதற்கு காரணம் அவருடைய யானை முகம். சாதாரணமாகவே நமக்கு யானை, கடல், சந்திரன் போன்றவற்றை எத்துணை முறை பார்த்தாலும் அலுப்பே தோன்றாது. பிள்ளையார் நன்கு வளர்ந்த குழந்தை, அதுவும் பரமாச்சார்யார் சொன்னது போல, பெரிய வீட்டுப் பிள்ளைக்கு ஊரிலிருக்கும் எல்லோரும் சக்தியான உண்பண்டங்களை கொடுத்து இன்புற, அவரும் அவற்றை எல்லாம் செரித்து கொழு-கொழுவென பெருத்த சரீரத்துடன், மந்தகாச புன்னகை வீசிக் கொண்டிருப்பது நமக்கும் மகிழ்ச்சியை தருகிறது என்றால் அது சரிதானே?
இந்த திருமேனியானது தியானிப்போரைப் பரவசத்தில் ஆழ்த்தக் கூடியது, தத்வார்த்தமானது. யானை முகமானது விநாயகர் பிரணவ ஸ்வரூபி என்பதை குறிப்பது. ஐங்கரங்கள் பஞ்சகிருத்தியங்களின் உள்ளடக்கத்தையும், மூன்று கண்கள் [இன்று நாம் வாங்கும் விநாயகர் சிலைகளில் மூன்றாம் கண்ணை பார்க்க இயலாது] சோம, சூர்ய, அக்னியையும், விசாலமான இரு காதுகள் ஆன்மாக்களை வினை என்னும் வெப்பத்தால் தாக்காது காக்கவும், உண்மையின் விளக்கமாகவும், அண்ட-சராசரங்களின் அடக்கமாகவும் பெரு-வயிறும் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. காணாபத்திய முறையில் உபாசிக்கும் அடியவர்கள் கணநாயகனின் உருவில் எல்லா தெய்வங்களையும் வணங்கிடுவதாகச் சொல்லப்படும். அது எப்படியென்றால்,
"அவ்யாக்ருத ப்ரும்மணோ கணேசஸ்ய சரீரே,
நாபிர்-பிரும்மா, முகம் விஷ்ணு; நேத்ரம் ருத்ர:
வாமபார்ச்வம் சக்தி; தக்ஷிணம் சூர்ய: ஆத்மா ஸ்மிதா மய:
அதாவது, கணபதியின் நாபி பிரும்மாவாகவும், முகம் விஷ்ணுவாகவும், கண்கள் ருத்திரனாகவும், இடதுபாகம் சக்தியாகவும், வலது பாகம் சூர்யனாகவும் இருப்பதாக மேலே இருக்கும் ஸ்துதி கூறுகிறது. இது காணாபத்தியத்திய வழிபாட்டில் வரும் ஒரு முக்கிய தியான ஸ்லோகம். எல்லா தெய்வங்களும் கணபதியை ஏதோ ஒரு சமயத்தில், ஏதேனும் ஒரு காரணத்திற்காக வணங்கியதாக புராணங்களில் படித்திருக்கலாம். உதாரணத்திற்கு லலிதையின் பண்டாசுர வதத்தில் ஒருநாள் அன்னையின் சக்தி சேனை தோல்வியை சந்திக்கும் நிலை, அம்பாள் அந்த நிலை ஏற்படக் காரணம் என்ன என்று ஆராய்ந்ததில், பண்டாசுரனது சைன்யத்தில் இருந்த விசுக்ரன் என்பவன் யுத்தகளத்தில் அமைத்த விக்ன யந்தரம் என்று அறிந்து, கணபதியை தொழுது அதை தகர்த்ததாக தெரிகிறது. லலிதா ஸஹஸ்ர நாமத்தில், "மஹா-கணேச நிர்ப்பின்ன விக்னயந்திர பிரஹர்ஷிதா" என்பது இதைக் குறிக்கும் நாமாவளி. இதே போல் திரிபுர சம்ஹாரத்தின் முன்பாக பரமசிவன் விநாயகரைத் தொழுததாக கணேச புராணத்தில் இருக்கிறது.
விநாயகர் பிரம்மச்சாரி என்பது எல்லோரும் அறிந்தாலும், சில ஆலயங்களில் அவர் ஒரு மனைவியுடனோ அல்லது இரண்டு மனைவியருடனோ காக்ஷி அளிப்பதைப் பார்த்திருக்கலாம். அப்படியானால் அவர் எப்படி பிரம்மச்சாரி என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். சித்தி-புத்தி விநாயகர் என்ற பெயரில் இரு தேவிகளாக இருப்பது இச்சா சக்தியும், க்ரியா சக்தியும் ஆகும், விநாயகரோ பிரம்ம ஸ்வரூபம். ஆக இச்சையும், கிரியையும் வைத்து ஞானத்தால் சிருஷ்டி பரிபாலனம் செய்வதாகச் சொல்லப்படுகிறது. பிரபஞ்சம் ஒடுங்கும் போது இந்த இரு சக்திகளையும் தன்னுள்ளேயே லயப்படுத்திக் கொண்டு ஞானமயமாகிறார்.
உலகில் முதலில் எழுத்துருவை ஏற்படுத்தியவர் விநாயகர்.
மஹாபாரத்தை தனது தந்தம் கொண்டு எழுதியவர். அதனால்தான் இன்றும் பெரியோர் எழுத ஆரம்பிக்கும் முன் பிள்ளையார் சுழியினை போடுகிறார்கள். தற்போதைய குழந்தைகளுக்கு இவை சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை என்றே நினைக்கிறேன். மஹாபாரத்தை எழுத தனது ஒரு தந்தத்தை இழந்ததால் ஏக தந்தர் என்ற பெயர் பெற்றார்.
மஹாபாரத்தை தனது தந்தம் கொண்டு எழுதியவர். அதனால்தான் இன்றும் பெரியோர் எழுத ஆரம்பிக்கும் முன் பிள்ளையார் சுழியினை போடுகிறார்கள். தற்போதைய குழந்தைகளுக்கு இவை சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை என்றே நினைக்கிறேன். மஹாபாரத்தை எழுத தனது ஒரு தந்தத்தை இழந்ததால் ஏக தந்தர் என்ற பெயர் பெற்றார்.
முடிந்தால் இன்னும் சிலவற்றை நாளை பதிவிடுகிறேன்...
39 comments:
அட தொடர்ந்து ரெண்டு பதிவு புரியற லெவலில்!! :))
உங்களுக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்!!
நம்ம ஊரைப் பத்தி எழுத ஆரம்பிச்சுட்டு இப்படிப் பாதியில் இங்க வந்துட்டீங்களே!?
அருமையான, ரத்னச் சுருக்கமான உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற இடுகை. :)
//எல்லா தெய்வங்களும் கணபதியை ஏதோ ஒரு சமயத்தில், ஏதேனும் ஒரு காரணத்திற்காக வணங்கியதாக புராணங்களில் படித்திருக்கலாம்.//
நாரயணர் என்ற விஷ்ணு கூடவா? :p
வாங்க கொத்ஸ்...ஆச்சர்யம் ஆனால் உண்மை...முதல் பின்னூட்டமே உங்களிடம்...
என்னாது புரியற லெவலில் இருக்கா?..அப்படின்னா ஏதோ தப்பு நடந்துடுச்சுன்னு அர்த்தம்....:))
வாழ்த்துக்கு நன்றி கொத்ஸ்...
உங்க ஊர் பற்றி எழுதறது ஐந்தாண்டுத் திட்டம் மாதிரி, ஆனா அப்பப்போ இந்த மாதிரி போஸ்ட் நடுவில் வரும். :))
//அருமையான, ரத்னச் சுருக்கமான உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற இடுகை.//
நன்றி அம்பி..
//நாரயணர் என்ற விஷ்ணு கூடவா?//
ஆரம்பிச்சாச்சா?...நல்லா தூக்கம் வருமே இன்னைக்கு?. :)
நான் காண்ட்ரவர்சி வேண்டாமுன்னுதான் லலிதை வணங்கினதையும், சிவன் வணங்கினதையும் மட்டும் சொல்லிட்டு விட்டுட்டேன்... :)
//அட தொடர்ந்து ரெண்டு பதிவு புரியற லெவலில்!! :))//
:-))
கீ அ பி ஊ க பு?
///நாரயணர் என்ற விஷ்ணு கூடவா?//
ம்ம்ம்ம் அவர் தோப்புகரணமே போட்டாராமே!
//லலிதை வணங்கினதையும், சிவன் வணங்கினதையும் மட்டும் சொல்லிட்டு விட்டுட்டேன்... //
ஹிஹி, நாங்க விட மாட்டோம் இல்ல. :p
//நம்ம ஊரைப் பத்தி எழுத ஆரம்பிச்சுட்டு இப்படிப் பாதியில் இங்க வந்துட்டீங்களே!?
//
@கொத்ஸ், நல்லா கேளுங்க, இதுல மதுரைகாரங்களின் நுண்ணரசியலோ?னு சந்தேகமா இருக்கு எனக்கு. :D
நான் நினைச்சதை இ.கோ. சொல்லிட்டார்; அம்பி கேட்டுட்டார் :)
அருமையான பதிவு. பிள்ளையார் படம் சூப்பர்! அவரை பார்த்தாலே சந்தோஷம் என்பது உண்மைதான். நன்றி மௌலி.
இதுலே என்ன கான்ட்ரவர்ஸி இருக்கு ?
ஏகவிம்சதி (21) பத்ர பூஜை . பிள்ளையார் சதுர்த்தி அன்று
பல்வேறு இலைகளினால் ( பத்ரங்களினால்) பிள்ளையாரை
சேவிப்பது பூஜிப்பது விசேஷம்.
இந்த ஏக விம்சதி பூஜையில் 11 வது நாமாவாக,
விஷ்ணுஸ்துதாய நமஹ என்று சொல்லி
விஷ்ணுக்ராந்த பத்ரம் ஸமர்ப்பயாமி என்று
விஷ்ணு க்ராந்தி பத்ரம் அதாவது நெல்லி இலையை
பிள்ளையாருக்கு அர்ப்பிக்கவேண்டும்.
இதிலிருந்து விஷ்ணுவும் வினாயகனை வந்திக்கிறார் எனத்தெரியவருகிறது.
இன்னொரு விசேஷம் என்னவெனில்
இந்த நாமம் 11வது நாமம். ஏகாதசி 11 வது நாள்.
இந்த நாள் நாராயணனை ஜபிக்கும் நாள்.
நாராயணனை ஜபிக்கும்போது துவக்கத்தில் விஷ்வக்சேனரை ஆராதித்துவிட்டுச்
செல்வது சம்பிரதாயம்.
ஏகவிம்சதி புஷ்ப பூஜையில்
ஓம் விஷ்வக்ஸேன கணபதயே நமஹ வகுள் (மகிழம்பூ) புஷ்பம் சமர்ப்பயாமி
என்ற மந்திரத்தைக் காண்க.
பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள் அண்ணா!
//நாரயணர் என்ற விஷ்ணு கூடவா?//
பிள்ளையார் பிறந்த நாள் அதுவுமா என்ன இப்படி ஒரு கும்மி?
பிரணவ சொரூபம் என்பது அனைவரும் துதிக்க வேண்டிய ஒன்று!
அவர் பிரப்பரம்மமே ஆகட்டும், இல்லை தேவாசுர முனிவர்கள் ஆகட்டும்...
வணங்குதல் யார்க்கும் பொது!
வணங்குவதாலேயே தாழ்ச்சி என்றோ, வணங்கப்படுவதாலேயே உயர்ச்சி என்றோ ஒன்றில்லை!
வணக்கம் வணக்கம் தான்!
பணியுமாம் என்றும் பெருமை! சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து! :))
சுக்லாம் பரதரம் **விஷ்ணும்**
சசி வர்ணம் சதுர் புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத்
சர்வ விக்னோப சாந்தயே!
//நான் காண்ட்ரவர்சி வேண்டாமுன்னுதான் லலிதை வணங்கினதையும், சிவன் வணங்கினதையும் மட்டும் சொல்லிட்டு விட்டுட்டேன்... :)//
அண்ணா
இதில் என்னா காண்ட்ரவர்சி?
ஏன் தயக்கம்?
விநாயகப் பெருமான் பீஜாஷர மந்திரங்களும், அஷ்டாட்சரமும் எப்படி ஒத்து விளங்குகின்றன என்பதை நீங்க சொல்றீங்களா? இல்லை அடியேன் பதிவாப் போடட்டுமா?
நல்லதொரு தொகுப்பு மௌலி. அடுத்த இடுகையையும் எதிர்நோக்குகிறேன்.
இனிய வி.தின வாழ்த்துக்கள் திரு.மௌலி!
வாங்க கவிக்கா..நன்றி.
@ அம்பி, நல்லாயிருங்கய்யா...:)
வாங்க திவாண்ணா,
//ம்ம்ம்ம் அவர் தோப்புகரணமே போட்டாராமே!//
அப்படியா தெரியாதே :)
//வணங்குவதாலேயே தாழ்ச்சி என்றோ, வணங்கப்படுவதாலேயே உயர்ச்சி என்றோ ஒன்றில்லை!
வணக்கம் வணக்கம் தான்!
பணியுமாம் என்றும் பெருமை! சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து! :))//
இதைக்குறித்து தத்வார்த்தமாக ஒண்ணு கேள்வி பட்டு இருக்கேன். - லௌகீக மட்டத்தில்-
இருவர் சந்திக்கும்போது இருவரின் ஆன்ம சக்தியும் மேலெழுகிறதாம். வணங்குபவருக்கு வணங்கப்பட்டவர் இடமிருந்து கொஞ்சம் சக்தி போய் சேருகிறது. ஏழு காயத்ரீ பலன் என்று கணக்கு கூட சொல்கிறார்கள்.
அதனாலதான் பெரியவங்களை பாத்தா வணங்கு என்று சொல்கிறோம். விவரம் புரியாதவர் ஆஹா நமக்கு இவ்வளவு பேர் வணக்கம் செலுத்துகிறார்கள் என்று தற்பெருமை கொள்வர். புரிந்தவர் நினைவில் கொண்டு தகுந்த அளவு ஜபத்தை கூட்டிக்கொள்வர்.
ஐயா அனானி,
இணையத்துக்கு புதுசா நீங்க?..
நீங்க யார், அப்படின்னும் சொல்லிட்டுப் போனீங்கன்னா நல்லாயிருக்குமே?. இல்லைன்னா என்பதிவுல நானே அனானியா கமெண்ட் போடறதாச் சொல்லுவாங்க. :)
வாங்க கே.ஆர்.எஸ்,
மீண்டும் ஒரு முறை உங்களுக்கு விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்...
//விநாயகப் பெருமான் பீஜாஷர மந்திரங்களும், அஷ்டாட்சரமும் எப்படி ஒத்து விளங்குகின்றன என்பதை நீங்க சொல்றீங்களா? இல்லை அடியேன் பதிவாப் போடட்டுமா?//
நீங்களே போடுங்க கே.ஆர்.எஸ்.
வாங்க குமரன்.
விநாயகர் பூவுலகில் மனிதனாக பிறந்து அரசாண்ட கதையை எழுதலாம் என்று இருந்தேன். முடியுமான்னு தெரியல்ல. பார்க்கறேன். :)
வணக்கம் ஜீவா...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.
//?. இல்லைன்னா என்பதிவுல நானே அனானியா கமெண்ட் போடறதாச் சொல்லுவாங்க. :)//
அவ்ளோதான் சொல்லுவாங்களா?
மௌலி அனானியா காமென்ட் போட்டுட்டு அப்புறம் அதுக்கு விளக்கம் கேட்டு அவரே காமென்ட் போடுவார்ன்னு கூட சொல்லலாம்....தானே?
:-))))))))
கீ அ பி ஊ க பு?
முருகப்பெருமானும் அண்ணன் நீ எனப்பாடியதால்
வினாயகன் அனானி ஆகிவிட்டாரோ !
அனானிமஸ்ஸும் கமென்ட் போடலாம் என்பதால் தானே
நானே வந்தேன்.
கே ஆர் எஸ் பீஜாக்ஷர மந்திரங்களைப் பற்றி
விரிவாக எழுதுவாரா !அவரோட ப்ளாக் பேர் என்ன ?
வினாயக சதுர்த்தி அன்னிக்கு நல்ல விஷயங்களைப் பத்தி
எழுதற் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும்
அந்த கஜமுகன் கருணை உள்ளத்துடன்
ரக்ஷிப்பார்.
சர்வே ஜனாஹ சுகினோ பவந்து.
//அவ்ளோதான் சொல்லுவாங்களா?
மௌலி அனானியா காமென்ட் போட்டுட்டு அப்புறம் அதுக்கு விளக்கம் கேட்டு அவரே காமென்ட் போடுவார்ன்னு கூட சொல்லலாம்....தானே?//
ஆஹா!, திவாண்ணா!!!
நீங்க ஒருத்தர் போதும் போல :-)
//அனானிமஸ்ஸும் கமென்ட் போடலாம் என்பதால் தானே
நானே வந்தேன். //
ஆஹா..
//கே ஆர் எஸ் பீஜாக்ஷர மந்திரங்களைப் பற்றி
விரிவாக எழுதுவாரா !அவரோட ப்ளாக் பேர் என்ன ?//
என்ன இப்படி கேட்டுட்டீங்க...கே.ஆர்.எஸ் பீஜாக்ஷரங்கள் பத்தி எழுதூவாரா?.
அவர் எல்லாவற்றை பற்றியும் எழுதுவார். சமயம், அறிவியல், சினிமான்னு அவர் எழுதாத சப்ஜெக்ட் இல்ல...அவரது ப்ரொபைல்ல கிளிக்கி பாருங்க...அவர் பதிவிடும் பதிவுகளின் லிஸ்ட் வரும். அவரது மெயின் பதிவு லின்க் கீழே http://madhavipanthal.blogspot.com
தவராமல் போய் அவரையும் ஆசிர்வதியுங்கள்.
//வினாயக சதுர்த்தி அன்னிக்கு நல்ல விஷயங்களைப் பத்தி
எழுதற் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும்
அந்த கஜமுகன் கருணை உள்ளத்துடன்
ரக்ஷிப்பார்.//
நன்றிங்க....
//ம்ம்ம்ம் அவர் தோப்புகரணமே போட்டாராமே!//
//அப்படியா தெரியாதே :)//
நம் வீட்டுக் குழந்தை கரண்டி ஒன்றை எடுத்துக் கொண்டு, குத்திடுவேன்-ன்னு சொன்னா...நாம திருப்பிக் குத்துவோமா என்ன?
அச்ச்சோ, பயமா இருக்கே-ன்னு பாவ்லா பண்ணறது இல்லையா? :)
சக்கரத்தை விநாயகக் குழந்தை முழுங்கிடுச்சின்னா, விளையாட்டு காட்டி மீண்டும் பெற்றார் என்பது தோர்பி-கரணம், தோப்புக்கரணக் கதை!
கதையைக் கதைக்கு பயன்படுத்தலாம்; உதைக்கு அல்ல! :)
//பிள்ளையார் பிறந்த நாள் அதுவுமா என்ன இப்படி ஒரு கும்மி?//
மெளலி அண்ணா
கேட்க மறந்து போனேனே!
இது பிள்ளையார் பிறந்த/தோன்றிய நாள் தானே?
இல்லை சதுர்த்தி என்பது சந்திர சாபம் போல ஏதாவது லீலைகளுடன் தொடர்புடைய நாளா?
//புரிந்தவர் நினைவில் கொண்டு தகுந்த அளவு ஜபத்தை கூட்டிக்கொள்வர்//
திவா சார்
அருமை! அடியேன் தங்களை வணங்கிக் கொள்கிறேன்! :)
//மௌலி அனானியா காமென்ட் போட்டுட்டு அப்புறம் அதுக்கு விளக்கம் கேட்டு அவரே காமென்ட் போடுவார்ன்னு கூட சொல்லலாம்....தானே//
விளக்கம் கேட்டதுக்கு அப்புறம் அவரே அதை விளக்கியும் கொமென்ட் போடுவாரு என்று கூடச் சொல்லலாம்! :))
மௌளி சார் நமாஸ்காரம். வாழ்த்துக்கள்
நமஸ்காரம் திராச சார், உடம்பு இப்போ தேவலாமா?
//இதைக்குறித்து தத்வார்த்தமாக ஒண்ணு கேள்வி பட்டு இருக்கேன். - லௌகீக மட்டத்தில்-
இருவர் சந்திக்கும்போது இருவரின் ஆன்ம சக்தியும் மேலெழுகிறதாம். வணங்குபவருக்கு வணங்கப்பட்டவர் இடமிருந்து கொஞ்சம் சக்தி போய் சேருகிறது. ஏழு காயத்ரீ பலன் என்று கணக்கு கூட சொல்கிறார்கள்.
அதனாலதான் பெரியவங்களை பாத்தா வணங்கு என்று சொல்கிறோம்//
திவாண்ணாவுக்கும்,மதுரையம்பதி அண்ணாவுக்கும் அடியேனுடைய அனந்த கோடி நமஸ்காரங்கள்...:)
தம்பி
தம்பி, நீ பாட்டுக்கு அனந்த கோடி பண்ணா என்கிட்டேந்து அங்கே வர ஆன்ம சக்தி இல்லை. :-))
ஏழு அனந்த கோடி காயத்ரீ ஜபம் எங்கே பண்ணறது? ;-)))))))))
எனிவே ஆசீர்வாதம். சாதனை நல்லபடியா நடக்கட்டும்.
மேலும் ஸ்ரீவைஷ்ணவர்களை கவனிச்சு இருக்கீங்களா? பெரியவங்க போதும் போதும்ன்னு சொல்கிறவரை நமஸ்காரம் பண்ணிகிட்டே இருப்பாங்க.
வாங்க தம்பியாரே!!!..இப்படி கயமை செய்தெல்லாம் ஆன்ம சக்தியை அதிகரிக்க முடியாது...:)
ஆமாம் திவாண்ணா, ஸ்ரீ வைஷ்ணவர்களை பார்த்திருக்கிறேன். மினிமமாக 3 நமஸ்காரம் பண்ணுவாங்க...
நாம 2 பண்றதில்லையா, அபிவாதயே சொல்லும் முன்னாடி ஒன்றும், சொன்ன பிறகு ஒன்றும், அந்த மாதிரி ஏதோன்னு நினைச்சேன் :)
//கீ அ பி ஊ க பு?//
க்ர்ர்ர்ர்ர்ர்ர் :P:P:P
என்ன அர்த்தம் இதுக்கு?? அதையும் சொல்லிட்டுப் போயிருக்கலாம். எல்லா இடத்திலேயும் இதையே காபி, பேஸ்ட் பண்ணிட்டு! :P
//விநாயகர் பூவுலகில் மனிதனாக பிறந்து அரசாண்ட கதையை எழுதலாம் என்று இருந்தேன். முடியுமான்னு தெரியல்ல. பார்க்கறேன். :)//
எழுதுங்க, பார்க்கலாம்.
என்ன சவால் கீதாம்மா?, இதுக்கெல்லாம் நான் வரல்ல..
Post a Comment