Friday, September 14, 2007

வினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

எல்லோருக்கும் வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

கீழே உள்ளது கணேச ருணஹர ஸ்துதி. யார் இயற்றியது என்பது தெரியவில்லை. சிறிய வயதில் எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது.

ஸிந்தூர வர்ணம் த்விபுஜம் கணேசம் லம்போதரம் பத்மதளே நிவிஷ்டம் ப்ரஹ்மாதிதேவை: பரிஸேவ்யமானம் ஸித்தைர்யுதம் தம் ப்ரணமாமி தேவம்.

ஸிந்தூர நிறத்தில் இரண்டு கைகளுடனும், சரிந்த வயிற்றுடனும், ப்ரம்மா, முதலிய தேவர்களாலும் ஸித்தர்களாலும் சூழப்பட்டு தாமரை இதழ்களில் அமர்ந்துள்ள கணேச தேவரை நமஸ்கரிக்கின்றேன்.


ஸ்ருஷ்ட்யாதெள ப்ரஹ்மணா ஸம்யக் பூஜித: பல ஸித்தயே
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (1)


பிரும்மாவால் உலக ஸ்ருஷ்டிக்கு முன்னால் கார்யசித்திக்காக நன்கு பூஜிக்கப்பட்டபார்வதீ குமாரன் கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துக் கடன்களையும் போக்கஅனுக்ரஹிக்கட்டும்.


த்ரிபுரஸ்ய வதாத் பூர்வம் சம்புனா ஸம்யகர்சித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (2)


திரிபுர சம்ஹாரத்திற்குப் போகும் முன்பு பரமேஸ்வரனால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதீகுமாரன் கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.


ஹிரண்ய கசிப்வாதீநாம் வதார்த்தே விஷ்ணுநா அர்ச்சித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (3)


ஹிரண்யகசிபு போன்ற அரக்கர்களை வதிக்கும் முன்பு மஹாவிஷ்ணுவால் பூஜிக்கப்பட்ட பார்வதீகுமாரன் கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.


மஹிஷஸ்ய வதே தேவ்யா கணநாத: ப்ரபூஜித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (4)


மகிஷாசுரனை ஸம்ஹரிக்கும் முன் பார்வதீ தேவியால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.

தாரகஸ்ய வதாத் பூர்வம் குமாரேண ப்ரபூஜித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (5)

தாரகாஸீரனை வதைக்கும் முன், ஸ்ரீ சுப்ரமண்யரால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.

பாஸ்கரேண கணேசோ ஹி பூஜிதஸ்ய ஸ்வஸித்தயே
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (6)

சூரிய தேவனால் தனது கார்ய ஸித்திகாக நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.


சசிநா காந்தி விருத்யர்த்தம் பூஜிதோ கணநாயக:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (7)


தனது அழகு நன்கு வளர்வதற்காக சந்திரனால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.


பாலநாய ச தபஸாம் விஸ்வாமித்ரேண பூஜித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (8)


தனது தபஸ்ஸைக் காப்பாற்றிக்கொள்ள விஸ்வாமித்த்ர மஹர்ஷியால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன்கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.


இதம் த்வ்ருணஹரம் ஸ்தோத்ரம் தீவ்ர தாரித்ர்ய நாசனம்ஏகவாரம் படேந் நித்யம் வர்ஷ மேகம் ஸமாஹித:தாரித்ர்யம் தாருணம் த்யக்த்வா குபேர ஸமதாம் வ்ரஜேத்.

இந்த ஸ்தோத்திரம் கடுமையான ஏழ்மையைப் போக்க வல்லது.

14 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

விபூதிப் பிள்ளையார்!
திருவிளையாடல் படத்தில் தருமி முதலில் மறந்து
பின்னர் உடனே பின்னால் வந்து குட்டிக் கொள்ளும் பொற்றாமரைக் குளக்கரை விநாயகர் தானே மெளலி சார்!

முக்குறுணி விநாயகர் சூப்பர்! முக்குறுணி அரிசியில் செஞ்ச கொழுக்கட்டை எங்கே? எனக்கும் கொஞ்சம் கொடுங்க! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கணேச ருணஹர ஸ்துதி//

ருண விமோசன ஸ்தோத்ரம் என்பது வேறா மெளலி சார்?

குமரன் (Kumaran) said...

ஸதைவ பார்வதீ புத்ர ருணநாசன் கரோது மே.

மௌலி. இதுவரை படிக்காத ஆனால் மிக எளிமையான இந்த துதியை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி. உங்கள் விளக்கமும் இந்தத் துதியை மிக எளிமையாகக் காட்டுகிறது என்று எண்ணுகிறேன்.

இதோ கணேசனை வணங்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் இந்தத் துதியைச் சொன்னது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

மதுரையம்பதி said...

//திருவிளையாடல் படத்தில் தருமி முதலில் மறந்து
பின்னர் உடனே பின்னால் வந்து குட்டிக் கொள்ளும் பொற்றாமரைக் குளக்கரை விநாயகர் தானே மெளலி சார்!//

அதே கேஆர்ஸ், தயவு செய்து இந்த சார் எல்லாம் விட்டுடுங்களேன்.

கொழுக்கட்டை பார்சல் வரும்...ஹிஹி

நாந்தான் ஸ்துதின்னு போட்டுட்டேன்....ஸ்தோத்ரம் தான்.

மதுரையம்பதி said...

//மௌலி. இதுவரை படிக்காத ஆனால் மிக எளிமையான இந்த துதி//

ஆம் குமரன்...எளிமையான அதே சமயத்தில் சிறப்பானது.....நன்றி..

வக்ரதுண்டன் உங்கள் குடும்பத்திற்கு எல்லா நலன்களையும் அருளட்டும்...

மதுரையம்பதி said...

ஈமெயிலில் வல்லியம்மா சொன்னது:

//பின்னூடம் இட முடியவில்லை.
இந்த ஸ்தோத்திரம் கடுமையான ஏழ்மையைப் போக்க வைக்கும் என்றால்
எல்லோருக்கும்மெடுத்துச் சொன்ன உங்களூக்கும்

எல்லா வளங்களும் பொங்க
அந்தக் கணநாதன் அருள வேண்டும்.

வல்லிசிம்ஹன்.//

நன்றி வல்லியம்மா, கணநாதன்/தும்பிக்கை ஆழ்வார் எல்லோருக்கும் எல்லா நலன்களையும் அருள பிரார்த்திப்போம்.

குமரன் (Kumaran) said...

மௌலி.

கணநாதனும் தும்பிக்கை ஆழ்வாரும் வெவ்வேறானவர்கள். கணநாதன் சிவகணநாதன். ஒற்றைக்கொம்பன். தும்பிக்கையாழ்வார் விஷ்ணுகணங்களில் ஒருவர். இரட்டைக்கொம்பர் (இரண்டு தந்தங்களும் உண்டு). விஷ்ணுகணநாதராகிய விஷ்வக்சேனரின் (சேனைமுதலியாரின்) தளபதிகளில் முக்கியமானவர். யஸ்ய த்விரத வக்த்ராத்யா என்று தொடங்கும் ஸ்லோகத்தில் வரும் த்விரத வக்த்ரன் இவர் தான். :-)

கீதா சாம்பசிவம் said...

படிச்சேன், அட்டென்டன்ஸ் மட்டும் இப்போ, அப்புறமா வரேன்.

இரண்டாம் சாணக்கியன் said...

முக்குறுணி விநாயகர் மதுரை மீனாட்சிக்கு ஈக்குவலாக மதுரை மக்களிடைய புகழ் பெற்றவர். நான் மதுரைக்குச் செல்லும்போதெல்லாம் அவரையும் தரிசப்பதுண்டு..

மதுரையம்பதி said...

//தும்பிக்கையாழ்வார் விஷ்ணுகணங்களில் ஒருவர். இரட்டைக்கொம்பர் (இரண்டு தந்தங்களும் உண்டு). விஷ்ணுகணநாதராகிய விஷ்வக்சேனரின் (சேனைமுதலியாரின்) தளபதிகளில் முக்கியமானவர்.//

நன்றி குமரன்....எனக்கு வைஷ்ணவத்தில் அவ்வளவாக விஷய ஞானம் கிடையாது....சாதாரணமாக கணபதி தான் வைஷ்ணவத்தில் தும்பிக்கை ஆழ்வார் என்று சொல்ல கேட்டிருக்கிறேன்...மேலும் ஏதேனும் தகவல்/சுட்டி தாருங்கள், தெரிந்து கொள்கிறேன்.

மதுரையம்பதி said...

வருகைக்கு நன்றி இரண்டாம் சாணக்கியன்......மதுரை கோவிலுக்குள் நுழைந்தால் இவரைப் பார்க்காமல் அன்னை-அப்பரை தரிசிக்க இயலாது, அப்படி ஒரு இடத்தில் இருக்கிறார்.

கீதா சாம்பசிவம் said...

உங்களோட முக்கியமான கேள்விக்கு விடை சொல்லத் தான் தாமதிச்சேன். ஆனால் எனக்கு இன்று வரை விடை கிடைக்கவில்லை. காஞ்சீபுரத்திலேயே இருக்கும் நண்பரிடம் கேட்டும் அவருக்கும் தெரியலை, ஏகாம்பரநாதர் கோவிலில் குருக்களிடம் கேட்டுச் சொல்வதாய்ச் சொல்லி இருக்கிறார். இன்னும் பதில் வரலை. உங்களுக்குத் தெரிஞ்சால் நீங்களே பதிவாக இடலாமே? எனக்கு என்ன தொடர்பு, காஞ்சிக்கும், பிள்ளையாருக்கும்னு இன்னும் தெரியலை! :((

ஸ்லோகமும் சரி, விளக்கமும் சரி நல்லா இருக்கு. நல்ல நேரத்தில் அனைவருடனும் பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி.

மதுரையம்பதி said...

வினாயகரே காஞ்சியில் பிறந்து அரசனாக வீற்றிருந்ததாக காஞ்சீ மகாத்மீயம் கூறுகிறது....நேரம் கிடைக்கையில் எழுதுகிறேன் தனிப் பதிவாக...

மதுரையம்பதி said...

வினாயகரே காஞ்சியில் பிறந்து அரசனாக வீற்றிருந்ததாக காஞ்சீ மகாத்மீயம் கூறுகிறது....நேரம் கிடைக்கையில் எழுதுகிறேன் தனிப் பதிவாக...