Wednesday, September 24, 2008

நாத ரூபா, நீல சிகுராஸவ்ய-அபஸவ்ய மார்க்கஸ்தா என்று சஹஸ்ரநாமத்தில் அம்பிகைக்கு ஒரு நாமம். இதன் பொருளைப் பார்க்கலாம். ஸவ்யம் -வலது; அபஸவ்யம் - இடது. மார்கஸ்தா - எந்த மார்க்கத்திலும் வழிபடப்படுபவள். தன்னை வழிபடுபவர்களது வலது-இடது புறங்களில் இருந்து வழி நடத்துபவள் என்று பொருள் கொள்ளலாம். வேதவழியில் செய்யும் வழிப்பாட்டிற்கு ஸவ்யம் என்று சொல்வது வழக்கம். அஸவ்யம் என்பது தாந்திரிக வழிபாடு. ஆக, இந்த இரு முறைகளில் வழிபட்டாலும் அன்னையை அடையலாம் என்றும் பொருள் கொள்ளலாம். இன்னும் சொன்னால் பண்டிதர்கள் செய்யும் வழிபாடு ஸவ்யம், என்னைப் போல பாமரர்கள் செய்யும் வழிபாடு அஸவ்யம். ஆக எப்படி வழிபட்டாலும் அருளுபவள் அம்பிகை. இங்கு வழிபாடுதான் முக்கியமாக கொள்ள வேண்டியது. எந்த முறையில் வழிபாடு என்பது முக்கியமல்ல. பாஸ்கர ராயர் என்று ஒரு மஹான், மராட்டிய தேசத்தவர், ஆனால் காவிரிக்கரையில் வாழ்ந்தவர். [இப்போதும் பாஸ்கர ராய புரம் என்ற ஊர் மயிலாடுதுறைக்கு அருகில் இருக்கிறது] பெரிய சக்தி தாசர். அவர் சஹஸ்ர நாமாவுக்கு பாஷ்யம் எழுதுகையில் அம்பிகையே கிளியாக வந்து அவர் தோளில் அமர்ந்து கேட்டு, சரி பார்த்ததாகச் சொல்வர். இவர் செய்த வழிபாடு ஸவ்ய-மார்க்கம் ஆனால் காளிதாசன் அம்பிகையை வழிபட்ட முறையோ அபஸவ்ய மார்க்கத்தில் என்பார்கள். ஆக, எவ்வழியில் சென்றாலும் அன்னையின் அருளுண்டு.

லலிதா சஹஸ்ர நாமங்களை சற்றே உற்று கவனித்தவர்களுக்கு பின்வரும் செய்தி தெரிந்திருக்கும். சஹஸ்ர நாமம் ஆரம்பிக்கையில் அன்னையின் தோற்றம், பதவி, பண்டாசுர வதம், குண்டலினி சக்தி பற்றிச் சொல்லி, பிறகு தேவியின் நிர்குண வர்ணனை வரும். ஆனால், இந்த நிர்குண வர்ணனை வருகிற போதே ஒரு நாமம், நீல சிகுரா என்று. அப்படின்னா என்ன?. கருமையான கூந்தலை உடையவள் என்று அர்த்தம். அன்னையின் முன்பு சஹஸ்ரநாமத்தை அரங்கேற்றும் சமயத்தில் வசிநீ-வாக் தேவதைகள் நிர்குணத்தை போற்றுகையில் அம்பிகையை பார்த்த போது அவளது கருங்கூந்தலில் தமது மனதைப் பறிகொடுத்து சகுணத்தைப் போற்றும்படியாக நீல-சிகுரா என்றனராம்.

திருக்கோலக்கா என்று ஒரு ஊர், தஞ்சாவூர் ஜில்லாவில் (இன்று பல மாவட்டங்கள் பிரிந்ததால் சரியாக தெரியவில்லை)இருக்கிறது. அங்கு அன்னைக்கு "ஓசை கொடுத்த நாயகி" என்று பெயர். அதென்ன இப்படி ஒரு பெயர்?, இங்குதான் திருஞான சம்பந்தருக்கு அம்பாள் தாள-வாத்யம் கொடுத்தாளாம். (கையில் வைத்துக் கொண்டு பாட்டிற்கு தாளம் போடுவது, ஜால்ரா தானா, இல்லை சிப்ளா கட்டையா என்று தெரியல்ல, ஆனா படங்களில் ஜால்ரா தான் அவர் கையில் இருக்கிறது). இந்தக் கதையால் வந்த நாமம் தான் அங்குள்ள அம்பிக்கைக்கு அப்பெயர் வரக் காரணம். இதற்கு இணையான ஒரு நாமம் "நாத ஸ்வரூபா" என்பது. அன்னை நாதமாக, லயத்துடன் கூடிய ஸப்தமாக இருக்கிறாளாம். குண்டலினி யோகம் செய்பவர்களுக்கு ஒவ்வொரு சக்ரத்திலும் ஒவ்வொரு வித நாதம் எழுமாம். அன்னைக்கே குண்டலினீ என்று பெயர் என்பது அறிந்ததே!. பாரதியும் "நாத வடிவானவளே!, நல்லுயிரே கண்ணம்மா" என்று கூறியிருக்கிறார்.

ஆனந்தலஹரியின் கடைசி சில ஸ்லோகங்களில் மஹா-பைரவ, பைரவி ஐக்கியத்தைப் பார்த்தோம். சிவ-சக்தி ஐக்கிய ஸ்வரூபிணி என்பது சஹஸ்ர நாமத்தில் ஒரு நாமம். அதாவது சிவன், சக்தி ஆகியோர் இணைந்த கோலத்தில் இருப்பவள். சக்தியில்லையேல் சிவமில்லை என்பார்களே, அதுதான். அந்த சக்தி-சிவத்துடன் கூடிய ஐக்கிய ஸ்வரூபம். இந்த இணைந்த கோலத்தை திருவெம்பாவையில் மாணிக்க வாசகர் பொய்கை வடிவில் கண்டதாக கூறுகிறார். பராசக்தியிடத்து தோன்றியதுதான் எல்லா சக்திகளும். அது எப்படி என்று நவராத்ரி பதிவில் காண்போம்.

13 comments:

கீதா சாம்பசிவம் said...

//திருக்கோலக்கா என்று ஒரு ஊர், தஞ்சாவூர் ஜில்லாவில் (இன்று பல மாவட்டங்கள் பிரிந்ததால் சரியாக தெரியவில்லை)இருக்கிறது. அங்கு அன்னைக்கு "ஓசை கொடுத்த நாயகி" என்று பெயர். அதென்ன இப்படி ஒரு பெயர்?, இங்குதான் திருஞான சம்பந்தருக்கு அம்பாள் தாள-வாத்யம் கொடுத்தாளாம். (கையில் வைத்துக் கொண்டு பாட்டிற்கு தாளம் போடுவது, ஜால்ரா தானா, இல்லை சிப்ளா கட்டையா என்று தெரியல்ல, ஆனா படங்களில் ஜால்ரா தான் அவர் கையில் இருக்கிறது).//

ஞானசம்மந்தருக்குப் பொற்றாளம் கொடுத்த ஊர், இது பத்திப் பதிவு போட்டேன்னு நினைக்கின்றேன், இந்த ஊரும், அவருக்காக இறைவன் முத்துப்பந்தல் போட்ட ஊரும் அருகருகே இருக்கின்றது, போயிட்டு வந்தேன், ஆனால் பெயர் தான் திருக்கோலக்கா?? சந்தேகமா இருக்கு! ஏதானும் ஒரு ஊர் போனால் நினைவில் வச்சுக்கலாம், பார்க்கிறேன், தேடிப் பார்த்துட்டுத் திரும்ப, இன்னிக்கோ, நாளைக்கோ வரேன்.

நவராத்திரிக்கு இப்போவே ரெடியா?? சுண்டல் உண்டா?? சும்மாத் தான் வந்துட்டுப் போகணுமா?? :P:P:P:P:P:P

இலவசக்கொத்தனார் said...

உள்ளேன் ஐயா!!

எங்க ஊர் தொடரை மறந்தாச்சு போல!

மதுரையம்பதி said...

//முத்துப்பந்தல் போட்ட ஊரும் அருகருகே இருக்கின்றது, போயிட்டு வந்தேன், ஆனால் பெயர் தான் திருக்கோலக்கா?? சந்தேகமா இருக்கு! ஏதானும் ஒரு ஊர் போனால் நினைவில் வச்சுக்கலாம், பார்க்கிறேன், தேடிப் பார்த்துட்டுத் திரும்ப, இன்னிக்கோ, நாளைக்கோ வரேன்//

ஹிஹி...நிதானமா வாங்க...வந்து தப்பாயிருந்தா சொல்லுங்க...திருத்திக்கறேன்...


//நவராத்திரிக்கு இப்போவே ரெடியா?? சுண்டல் உண்டா?? சும்மாத் தான் வந்துட்டுப் போகணுமா?? :P:P:P:P:P:P//

இப்போவேயா?, இன்னிக்கு ஏகாதசி, நினைவில்லையா?

நேராக வந்தாக்கூட இந்தமுறை சுண்டல் கிடையாது. :(

மதுரையம்பதி said...

வாங்க கொத்ஸ்...

//எங்க ஊர் தொடரை மறந்தாச்சு போல!//

மறக்கமுடியுமா உங்க ஊரை/தொடரை...அதுக்கு கொஞ்சம் வேலை அதிகமாகுது...நான் இத் தொடர் பற்றின பதிவுல சொல்லியிருந்த பாட்டியிடம் பேசணும்...சில விஷயங்கள் மறந்துடுச்சு..

ரொம்ப நாளாச்சு போஸ்ட் போட்டு...அப்படி இருக்கலாமா...அதான் டபக்குன்னு இன்னைக்கு தோணின 2-3 நாமங்களை எழுதினேன்.

கவிநயா said...

ஒவ்வொரு பெயரும் வெகு அழகு, அவளைப் போலவே. விளக்கங்களும்தான். படமும்தான். நன்றி மௌலி.

ambi said...

எடுத்த தலைப்புக்கு ஏற்ற வகையில், வரிசையாக தகவல்களை தொகுத்து தந்த விதம் அருமை. :))

//ஏதானும் ஒரு ஊர் போனால் நினைவில் வச்சுக்கலாம், //

அதானே! நீங்க கால் வைக்காத இடம் உண்டா? காப்பி குடிக்காத மலை உண்டா? :p


ஆமாம் கொத்ஸ், இது மதுரைகாரர்களின் திட்டமிட்ட சதி. :D

குமரன் (Kumaran) said...

தாளம் என்றால் ஜால்ரான்னு இப்ப நாம சொல்றது தான் மௌலி. அதில் ஐயம் இல்லை.

சஹஸ்ரநாமங்களில் சில நாமங்களுக்குப் பொருள் சொல்லியிருக்கிறீர்களா மௌலி? நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். நிறைய புதுத் தகவல்கள்.

மதுரையம்பதி said...

வாங்க குமரன். நீங்க இன்னைக்கு இந்த பக்கம் வந்ததே பெரிய ஆறுதல்...

//சஹஸ்ரநாமங்களில் சில நாமங்களுக்குப் பொருள் சொல்லியிருக்கிறீர்களா மௌலி? நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். நிறைய புதுத் தகவல்கள்.//

ஆமாம் குமரன். அன்னையின் ஆயிரம் நாமங்கள் அப்படிங்கற லேபிளில் 3-4 போஸ்ட் போடிருக்கிறேன் முன்னமே, அதன் தொடர்ச்சியே இதுவும்.

மதுரையம்பதி said...

//எடுத்த தலைப்புக்கு ஏற்ற வகையில், வரிசையாக தகவல்களை தொகுத்து தந்த விதம் அருமை. :))//

நன்றி அம்பி.

//ஆமாம் கொத்ஸ், இது மதுரைகாரர்களின் திட்டமிட்ட சதி. //

அடப்பாவமே...மதுரைக்காரர்கள் அப்படின்னெல்லாம் குழுவை/புழுவை நீங்களும் உருவாக்கிவிட்டீர்களா.

மதுரையம்பதி said...

//ஒவ்வொரு பெயரும் வெகு அழகு, அவளைப் போலவே. விளக்கங்களும்தான். படமும்தான்.//

வாங்க கவிக்கா. பெயரெல்லாம் சஹஸ்ர நாமத்தில் வாக் தேவிகள் அன்னை பராசக்தியை பார்த்து வர்ணித்து அருளியது, நன்றாக இல்லாது போகுமா? :) படம் கூகிளாண்டவர் அருளியது. :)

கீதா சாம்பசிவம் said...

திருக்கோலக்கா போயிட்டு வந்தோம், ஆனால் பொற்றாளம் கொடுத்த ஊர் பத்திப் பதிவு போட்டிருந்தேன், கிடைக்கலை! :(((((( காணாமல் போன பதிவுகளிலே அதுவும் ஒண்ணு போல் இருக்கு. பக்கத்தில் உள்ள சத்திமுற்றம் பற்றி எழுதினது மட்டும் கிடைச்சது. சரினு விட்டுட்டேன், இதைக் கண்டு பிடிக்கிறேன், நேரம் கிடைச்சால், எங்கே?? இணையமே வர மாட்டேங்குது! ஆற்காட்டார் சதி! :P:P:P:P

ஜீவா (Jeeva Venkataraman) said...

பொற்றாளம் பற்றி அருணா சாய்ராம் இங்கே சொல்லறாரு:
http://www.youtube.com/watch?v=ALVONBSdMHg
(பாடல் பாடி முடித்த பின்னே)

திவா said...

//திருக்கோலக்கா போயிட்டு வந்தோம், ஆனால் பொற்றாளம் கொடுத்த ஊர் பத்திப் பதிவு போட்டிருந்தேன், கிடைக்கலை! :((((((//

பட்டீஸ்வரம்.