திருவாரூரில் பிறந்தால் முக்தி, திருச்சிற்றம்பலத்தை தரிசித்தால் முக்தி, மதுரை வீதிகளில் நடந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது ஆன்றோர் வாக்கு. இதுபோலவே தாம்ரபர்ணி நதியை தரிசித்தாலோ, நினைத்தாலோ, அதில் ஸ்நானம் செய்தாலோ, அதன் நீரைப் பருகினாலோ எல்லா பாபங்களும் அகலும் என்கிறது தாம்பரணி மஹாத்மீயம். சரி, நவகைலாயம் பற்றி எழுத என்று ஆரம்பித்து இந்த நதி மஹாத்மீயம் எதற்கு என்றால், நவகைலாய க்ஷேத்திரங்கள் பலவற்றிற்கும் தாம்ரவர்ணிக்கும் இருக்கும் தொடர்புதான். இந்நதியின் கரையில் இருக்கும் கோவில்களில் இந்த நவகைலாச தலங்களும் வந்துவிடுகிறது. அது மட்டுமன்றி, மற்ற தலங்களையும் பற்றி அங்காங்கே தொட்டுச் செல்ல எண்ணம். நமது திருநெல்வேலிச் சீமையின் மைந்தர்கள் பலர் இங்கே வருகிறார்கள், அவர்களும் பின்னூட்டத்தில் தமக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
சரி நவகைலாசங்கள் என்பது எந்தெந்த ஸ்தலங்கள் என பார்க்கலாம். பாபநாசம் / பாப விநாசம் சேரன்மாதேவி கோடகநல்லூர் குன்னத்தூர் முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேந்த மங்கலம் - சேர்ந்த பூ மங்கலம்.
சரி, எப்படி இந்த ஊர்களை மட்டும் நவகைலாசங்கள் என்று கூறுகிறார்கள் இது ஏதும் ஏட்டிக்குப் போட்டியாக வந்த ஸ்தலங்களா? என்பதைமுதலில் பார்த்துவிடலாம்.
ரோமச முனிவர் அப்படின்னு ஒருத்தர். மஹா தபஸ்வி, அகஸ்தியரின் சிஷ்யர். அகஸ்தியரும்-லோபா முத்திரையும் ஹிமவான் மகள் திருமணத்தின் போது வடகோடு உயர்ந்த சமயத்தில் தெற்கே வந்து சமன் செய்த காலத்தில் ரோமச முனிவர் அகஸ்தியரை வணங்கி அவரிடம் உபதேசம் பெறுகிறார். ரோமசரும் தபஸ் பலகாலம் செய்கிறார். ஆனாலும் ஈசனது தரிசனம் கிட்டவில்லை. அப்போது தனது குரு அகஸ்தியரிடமே முறையிட்டு ஈசனின் தரிசனத்துக்கும், முக்திக்குமான வழியை கேட்கிறார். அகஸ்திய முனிவர் சற்றே சிந்தனை வயப்பட்டு பின்னர் ரோமசரிடம், தாமிரபரணி உற்பத்தியாகும் இடத்திற்கு சென்று ஈசனை வழிபட்டு நவகிரஹங்களையும் வழிபடச் சொல்கிறார். அவ்வாறு சொல்லி பின்னர் ஆற்றில் 9 மலர்களை இட்டு, அவை முறையே கரை ஒதுங்கும் இடங்களில் ஈசனது லிங்கங்களை நிறுவி நவகிரஹ வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.
இவ்வாறாக அகஸ்தியரால் நீரில் விடப்பட்ட ஒன்பது மலர்கள் கரை ஒதுங்கிய இடங்களே மேலே சொல்லப்பட்ட 9 சிவ-க்ஷேத்திரங்கள். இவ்விடங்களில் எல்லாம் உமாபதியை வணங்கி தரிசனம் பெற்று முக்தியடைந்தாராம் ரோமசர். மேலே கூறப்பட்டஇந்த க்ஷேத்திரங்கள் முறையே,சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி, புதன், கேது மற்றும் சுக்கிரன் ஆகியவை. இவற்றை பார்க்கையில் தஞ்சையை ஒட்டிய நவக்கிரஹ க்ஷேத்திரங்கள் நம் மனதில் நிழலாடுகிறது. மேலே குறிப்பிடப்பட்ட சிவ ஸ்தலங்களை மேலக்கைலாயங்கள் (முதல் மூன்று), நடுக்கைலாயங்கள் (4,5,6) மற்றும் கீழக்கைலாயங்கள் என்று கூறுகிறார்கள்.
அடுத்து, தாம்ரபரணி நதியின் கதையை பார்க்கலாமா?, இல்லை பாபநாசத்தில் ஆரம்பித்து நவக்கிரஹ க்ஷேத்திரங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாமா என்பதை பின்னூட்டிச் சொல்லுங்கள், அதன்படி செய்யலாம்.
31 comments:
//தாம்ரபர்ணி நதியை தரிசித்தாலோ, நினைத்தாலோ, அதில் ஸ்நானம் செய்தாலோ, அதன் நீரைப் பருகினாலோ எல்லா பாபங்களும் அகலும் என்கிறது தாம்பரணி மஹாத்மீயம். //
அடடா! அடடா! ஆரம்பமே களை கட்டுதே! இது மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மை. :))
மனித குலத்தின் வரலாறும் கலைகளும் நதி சார்ந்து தான் இருக்கும்! என 'எங்கள் இதய தெய்வம்' திருமதி உமா மேடம் (தி.ரா.ச சாரின் பாஸ்) ஜெயா டிவியில் சொல்லி இருக்காங்க என்பதை இங்கு பதிந்து விடுகிறேன். :))
நதி வரலாறும், நவகைலாச வரலாறும் ஊடு நூல், பாவு நூல் போல இணைந்தே நெய்யபடட்டுமே! :)
படமெல்லாம் கொஞ்சம் பெரிசாவே போடுங்க, வேணும்னா கேளுங்க, எப்பவுமே வற்றாத எங்கள் நதி போட்டோவை ஆள் அனுப்பியாவது எடுத்து வர செய்கிறோம். :)
அதற்கான செலவை இலவசகொத்தனார் ஏத்துக்கறதா சொல்லி இருக்கார். :p
//அன்புச் சகோதரர்கள் அம்பி-தம்பி வழங்கிய தாமிரவருணி மஹாத்மீயமும் எனது//
வழங்கினது யாருக்கு??? அக்கிரமம், அராஜகம், இதை ஏத்துக்கவே முடியாது, அம்பி, ஒரு கூரியர் செலவை ஏத்துக்கொண்டு அந்தப் புத்தகத்தை எனக்கு அனுப்பாமல் இப்படியா சதி செய்யறது??? கொஞ்சம் கூட நியாயமே இல்லை!!!!!!
நவ கைலாசம் பற்றி எனக்கும் தெரியாது. அட, வேற என்னதான் தெரியும்னு கேட்டா அது வேற விஷயம் :)
//நதி வரலாறும், நவகைலாச வரலாறும் ஊடு நூல், பாவு நூல் போல இணைந்தே நெய்யபடட்டுமே! :)//
அப்படித்தான் நானும் நினைக்கிறேன். அப்படியே தனித் தனியா எழுதணும்னா நதியுடைய கதையை முதலில் கேட்கவே ஆவல். நன்றி மௌலி!
அட நம்ம ஊரைப் பத்தி எழுதப் போறீங்களா!! உமக்கு முக்தி நிச்சயம்!! இங்க இருக்கும் சிலருக்கு திருநெல்வேலின்னாலே எரியுமே!! அதனால சொன்னேன்.
அது என்ன தாம்ரபர்ணி அப்படின்னு எழுதறீங்க? தாமிரபரணின்னு சொல்லக்கூடாதோ?
மௌலி இன்னிக்கு காலை படிச்சாச்சு. (பி இல்லை ப)
துலா மஹாத்மியம் யாருக்கான வேணுமா?
ஆ, சுவையா இருக்கும் போல, எதிர்பார்ப்புகளுடன்...!
;-)
//தாம்ரபர்ணி நதியை தரிசித்தாலோ, நினைத்தாலோ, அதில் ஸ்நானம் செய்தாலோ, அதன் நீரைப் பருகினாலோ எல்லா பாபங்களும் அகலும் என்கிறது தாம்பரணி மஹாத்மீயம். //
Ambi, Kettukko pa!
Did u do anyone of the above? :)
//அதற்கான செலவை இலவசகொத்தனார் ஏத்துக்கறதா சொல்லி இருக்கார். :p//
ippo puriyuthu avar perula irukkura elavasam avarukku illa, namakku-nu! :))
//திருவாரூரில் பிறந்தால் முக்தி, திருச்சிற்றம்பலத்தை தரிசித்தால் முக்தி, மதுரை வீதிகளில் நடந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது ஆன்றோர் வாக்கு//
madurai-la entha entha veethi-nu chollunga mouli anna! :)
//இவை தவிர நவ திருப்பதி என்று 9 தலங்களைச் சிறப்பாகச் சொல்லுவர்//
appadiyaa? enna enna thalangal anna?
//நவகைலாசங்கள் என்பது எந்தெந்த ஸ்தலங்கள் என பார்க்கலாம். பாபநாசம் / பாப விநாசம் சேரன்மாதேவி கோடகநல்லூர் குன்னத்தூர் முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேந்த மங்கலம் - சேர்ந்த பூ மங்கலம்//
arumai! arumai!
//ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை//
list la ivai irandum
nava tirupati + nava kailasama??
kathaiyil neenga chollum romasa rishi aana, penna?
maitreyi, gargi, viswavara, romasa-nnu pen rishigal irunthaanga thaane?
வணக்கம் கே.ஆர்.எஸ்
//maitreyi, gargi, viswavara, romasa-nnu pen rishigal irunthaanga thaane?//
நான் சொல்பவர் ஆண் தான்னு தோணுது...சரியான குறிப்பு இல்லிங்கண்ணா.. :)
////ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை//
list la ivai irandum
nava tirupati + nava kailasama??//
இந்த 2 ஸ்தலங்களும் திருப்பதி-கைலாசம் இணைந்த ஸ்ரீபுரம் :-)
//madurai-la entha entha veethi-nu chollunga mouli anna! :)//
மதுரையின் வீதிகள் (கோவிலும், அதைச் சார்ந்த வீதிகளும்), மத்தியில் கோவில் என்பது சக்ர ரூபமாக இருப்பதாகச் சொல்வர். எந்த வீதி அப்படின்னா, பழைய வீதிகளான, ஆடி, சித்திரை, ஆவணி, மாசி, வெளி வீதிகள் + உள்ளே இருக்கும் பிராகாரங்கள். இது பற்றி தனியாகவே பதியலாம்.. :)
//ஆ, சுவையா இருக்கும் போல, எதிர்பார்ப்புகளுடன்...!//
வாங்க ஜீவா, உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு எழுத முயற்சிக்கிறேன். :)
//மௌலி இன்னிக்கு காலை படிச்சாச்சு. (பி இல்லை ப)
துலா மஹாத்மியம் யாருக்கான வேணுமா?//
திவாண்ணா, வந்து படிச்சதுக்கு நன்றி...:))
ஏற்கனவே தனி மெயில்ல சொன்னபடி எனக்கு வேண்டும், அதுவும் கீதாம்மாவிற்கு குடுக்கும் முன் எனக்கு வேண்டும் :)
வாங்க இ.கொ.
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... :-)
உங்களை இந்தப் பக்கம் வர வைக்க என்னல்லாம் பண்ணவேண்டியிருக்கு சாமி...:)
//அட நம்ம ஊரைப் பத்தி எழுதப் போறீங்களா!! உமக்கு முக்தி நிச்சயம்!! இங்க இருக்கும் சிலருக்கு திருநெல்வேலின்னாலே எரியுமே!! அதனால சொன்னேன். //
ஆஹா, கர்க மஹரிஷியே முக்திக்கு ஆசிவழங்கியமைக்கு நன்றி.. :)
அப்படிங்களா?, எரியுமா, பார்த்து பார்த்து தண்ணி ஊத்தி அணைச்சுடலாம், கவலைய விடுங்க... :)
//அது என்ன தாம்ரபர்ணி அப்படின்னு எழுதறீங்க? தாமிரபரணின்னு சொல்லக்கூடாதோ?//
ரெண்டு மாதிரியும் தான் எழுதியிருக்கேன் அண்ணாச்சி...நீங்கதான் இப்போ எதையோ கொளுத்திப் போடுற மாதிரி இருக்கு :)
வாங்க கவிக்கா...எனக்கு தனியா நதியை பற்றி ஒரு பதிவு போடவே எண்ணம்....ஆனா இன்னும் எழுதல்ல... பார்க்கலாம் எது முதலில் தோணுதோ அது.. :)
வாங்க கீதாம்மா..
//வழங்கினது யாருக்கு??? அக்கிரமம், அராஜகம், இதை ஏத்துக்கவே முடியாது, அம்பி, ஒரு கூரியர் செலவை ஏத்துக்கொண்டு அந்தப் புத்தகத்தை எனக்கு அனுப்பாமல் இப்படியா சதி செய்யறது??? கொஞ்சம் கூட நியாயமே இல்லை//
ஹிஹிஹி...உங்க கிட்ட குடுக்கச் சொல்லி என்னிடம் தரல்லை...உங்களுக்கு வேணுமான்னு கேட்டாங்க, ஆமாம் அப்படின்னேன்...கிடைத்தது.. :)
அது புத்தகம் இல்லை, 4-5 பக்கங்கள் உடைய சிறிய குறிப்பு அஷ்டே!!
வாங்க அம்பி....உங்க ஊர் பத்தின பதிவுன்னா உடனே ஆஜராகிறீர்கள்?. :)
அதென்ன ஊடு-பாவு நூல் உதாரணம் எல்லாம் மடைதிறந்த வெள்ளம் போல வருது?...ஊர்ஸ் பாசம்?. :)
சரி தம்பிக்கு தகவல் கொடுத்தாச்சா?...எங்க அவர் அட்டெண்டன்ஸ் மார்க் பண்ண ஆளே காணோம்?. :)
//Ambi, Kettukko pa!
Did u do anyone of the above?//
@KRS, அடுத்த தடவ வரும் போது உங்களை எங்க ஊருக்கு கூட்டி போய் குளிபாட்டி விடறேன். :p
//உங்க கிட்ட குடுக்கச் சொல்லி என்னிடம் தரல்லை...உங்களுக்கு வேணுமான்னு கேட்டாங்க, ஆமாம் அப்படின்னேன்...கிடைத்தது.. //
@M'pathi, ஹிஹி, நீங்க பிள்ளையார் மாதிரி, அதான் பழம் உங்களுக்கு கிடைத்தது. :))
//ஏற்கனவே தனி மெயில்ல சொன்னபடி எனக்கு வேண்டும், அதுவும் கீதாம்மாவிற்கு குடுக்கும் முன் எனக்கு வேண்டும்//
அடடா! அடடா! கேக்கவே எவ்ளோ சந்தோசமா இருக்கு. :)))
//எது முதலில் தோணுதோ அது.. :) //
அப்புறம் எதுக்கு பின்னூட்டி சொல்லுங்கன்னு சாய்ஸ் குடுக்கணும்?? :-|
//ambi said...
@KRS, அடுத்த தடவ வரும் போது உங்களை எங்க ஊருக்கு கூட்டி போய் குளிபாட்டி விடறேன். :p//
மொதல்ல ஊருக்கு அழைத்ததுக்கு நன்றி!
ஆமா, என்னைக் குளிப்பாட்டி விடுங்க!
அடியேனைக் குளிப்பாட்டினால், அடியேனுக்குள் இருக்கும் மற்ற ஜீவராசிகளையும் குளிப்பாட்டியது ஆகும்! அவர்களின் (நீங்க உட்பட) எல்லாப் பாபங்களும் அகலும்! :)
//தாம்ரபர்ணி நதியை தரிசித்தாலோ, நினைத்தாலோ, அதில் ஸ்நானம் செய்தாலோ, அதன் நீரைப் பருகினாலோ எல்லா பாபங்களும் அகலும் என்கிறது தாம்பரணி மஹாத்மீயம். //
ஆகா! மறுக்க முடியாத உண்மை..:) உங்களுடைய அழகான இயல்பான நடையில் படிக்க ஆர்வமாக இருக்கிறேன்.
1) காசிக்கு ஈடாக இங்கு செய்யப்படும் பித்ரு கார்யம் பலனை தரவல்லது.
2) இதன் நீரை அருந்தினால் உடலுக்கு தாமிரத்தின் பலம் உண்டாகும்.
3) தர்பம் நிறைந்த நதியாதலால் ஜபங்கள் சித்தி விரைவாகும்.
தம்பி
//உமக்கு முக்தி நிச்சயம்!! இங்க இருக்கும் சிலருக்கு திருநெல்வேலின்னாலே எரியுமே!! அதனால சொன்னேன்//
எரிஞ்சா முக்தியா? சூப்பரு! மும்மலம் எரிஞ்சா முக்தி! அதான் இப்படி வெளக்கமா கொத்தாழ்வார் கொத்து கொத்ஸா சொல்றாரு! :)
Birthday Boy Koths,
திருநெல்வேலின்னா எரியற ஸ்ரீதர் அண்ணாச்சி, இங்கிட்டு எல்லாம் வர மாட்டாரு போல! :)
@M'pathi
//இந்த 2 ஸ்தலங்களும் திருப்பதி-கைலாசம் இணைந்த ஸ்ரீபுரம் :-)//
ஸ்ரீ=திரு
புரம்=பதி
ஸ்ரீபுரம்-ன்னாலே அது திருப்பதி தானுங்கோ! ஹா ஹா ஹா :)))
//எந்த வீதி அப்படின்னா, பழைய வீதிகளான, ஆடி, சித்திரை, ஆவணி, மாசி, வெளி வீதிகள் + உள்ளே இருக்கும் பிராகாரங்கள். இது பற்றி தனியாகவே பதியலாம்.. :)//
மதுரையம்-பதி தான் பதியணும்!
மதுரையம் பதிங்கோ, சீக்கிரம் பதிங்கோ! :)
//நான் சொல்பவர் ஆண் தான்னு தோணுது...சரியான குறிப்பு இல்லிங்கண்ணா.. :)//
சரியான குறிப்பு இல்லாம எப்படி பதிவு எழுதலாம்! அதுவும் அம்பத்தூர் ஆடிட் இருக்கும் போதே இப்படின்னா...OMG! :)
//@M'pathi, ஹிஹி, நீங்க பிள்ளையார் மாதிரி, அதான் பழம் உங்களுக்கு கிடைத்தது. :))//
அடப்பாவிங்களா
எங்க முருகனுக்கு கடைசி வரை பழம் குடுக்காம, இதச் சொல்லிச் சொல்லியே அல்வா குடுக்கறாங்களே!
யூ டு அம்பி? :((
முருகா! முருகா!!
உண்மை தான். எனக்கு நவதிருப்பதி என்று இருப்பது தெரியும்; நவ கைலாசங்கள் இது வரை தெரியாது. எங்குமே செல்லும் பாக்கியம் இன்னும் கிட்டவில்லை.
ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே வாருங்கள் மௌலி.
வாங்க குமரன்...எனக்கும் எங்க வீட்டுக்கருகில் இருக்கும் பாட்டி சொல்லித்தான் தெரியும்..ஆனா 2 கோவில்களுக்கு மட்டும் இது தெரியாமலேயே போயிருக்கேன் :)
Post a Comment