Thursday, September 18, 2008

நீலகண்ட தீக்ஷதர்....

அப்பைய தீக்ஷிதர் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். அவரது தம்பியின் பேரன் நீலகண்ட தீக்ஷிதர். இவர் மதுரையில் நாயக்க அரசுகள் இருந்த காலத்தில் மந்திரியாக இருந்தவர். அப்பைய தீக்ஷதர் 72 வயது வரை வாழ்ந்தவர், அப்போது நீலகண்ட தீக்ஷிதரது வயது 8. அப்பைய தீக்ஷதருக்கு குழந்தை நீலகண்டன் மிது அலாதி ப்ரியம்.அப்போதெல்லாம் ஸம்ஸ்கிருதம் சிறுவயதிலிருந்தே கற்று தரப்பட்டு, அதிலேயே பேசுவது வழக்கமாயிருந்த காலம்.

தீக்ஷதர் தனது கடைசிக் காலத்தில் குழந்தையிடம் விளையாட்டாக "ஆபதி கிம்கரணீயம்" என்று கேட்டாரம். அதற்கு பதிலாக நீலகண்ட குழந்தை, "ஸ்மரணாயாம் சரண யுகளம் அம்பாயா" என்று சொன்னதாம். "ஆபதி கிம்கரணீயம்" என்றால் "ஆபத்து வந்தால் என்ன செய்ய வெண்டும் " என்று அர்த்தம். இதற்கு குழந்தை சொன்ன பதிலின் பொருள் என்னவென்றால், 'பரதேவதையின் பாதாரவிந்தத்தை நினைக்க வேண்டும்' என்பது. இத்துடன் நின்றதா இந்த சம்பாஷணை என்றால் இல்லை. அடுத்ததாக அப்பையர் "தத் ஸ்மரணம் கிம் குருதே" என்று கேட்கிறார், அதாவது 'அப்படி நினைத்தால் என்ன பலன்'. அதற்கு குழந்தை 'ப்ரும்மாதீன பி இங்கரீ குருதே' அதாவது பராம்பிகையின் பாதாரவிந்தத்தை ஸ்மரணித்தவனுக்கு ப்ரும்மாதி தேவர்கள் சேவகர்கள் ஆகிறார்கள்' என்று பொருள். இவ்வாறாக சிறு குழந்தைப் பருவத்திலேயே அம்பிகையருளால் வாக்விலாஸத்தைப் பெற்றவர் நீலகண்ட தீக்ஷதர்.

இவர் ஆனந்த ஸாகரஸ்தவம் என்று மீனாக்ஷியம்மன் மேல் ஒர் ஸ்லோகம் பண்ணியிருக்கார். அதிலே, "த்வத் பாதபக்தி ரஹிதோம் மம மாஸ்து வம்ச: த்வத் சேவயா விரஹிதம் மம மாஸ்து சாயு" என்று சொல்கிறார். இதன் பொருள்,அம்பிகே!, அடுத்ததாக எனக்கு எந்த பிறவி வேண்டுமானாலும் வரலாம், எங்கு வேண்டுமானாலும் பிறக்கலாம், அது என் கையில் இல்லை.ஆனால் ஒரேயொரு வேண்டுகோள் என்று சொல்லி, 'உன்பாதார விந்தத்தில் பக்தியில்லாத வம்சத்தில் எனக்கு அடுத்த பிறவி வேண்டாம்' என்கிறார். இவர் சாக்தர், ஆயினும் பராசக்தியை மட்டுமில்லாது எல்லா தெய்வங்ளையும் போற்றி ஸ்லோகங்கள் செய்திருக்கிறார். ஒரு இடத்தில் அம்பாளை தாயாராக விளித்து, உனக்கும் எனக்கும் தாய்-குழந்தை என்ற சம்பந்தம் இருக்கிறது. நான் என்ன தவறு செய்தாலும், அசட்டுத்தனமாக, அ-விவேகமாக உன்னை நினைக்காதிருந்தாலும் நீ என் காதைப் பிடித்து இழுத்து உன்பக்கதிருத்திக் கொள்ள வேண்டும் என்று உரிமையுடன் சொல்கிறார்.


மதுரையை நாயக்க அரசர்கள் ஆண்ட காலத்தில், மந்திரியாக பணியாற்றிய சமயத்தில் இவரது மேற்பார்வையில் கட்டப்பட்டதுதான் புதுமண்டபம். இங்குள்ள சிற்பங்கள் மிகுந்த வேலைப்பாட்டினை உடையவை. சாதாரணமாக நாயக்க அரசர்கள் தமது சிலைகளையிம் தமது துணைவியார் சிலைகளையும் தாம் நிவந்தமளித்து சிறப்புச் செய்யும் கோவில்களில் நிறுவது வழக்கம். அது போல புது மண்டபத்திற்கு சிற்பங்கள் செதுக்கும் சமயத்தில் வணங்கிய நிலையில் தமது துணைவியாருடன் கூடிய தமது சிலையினையும் வடிக்க உத்தரவிடுகிறார் அரசர். [இன்றும் இச்சிலைகளை அங்கே காணலாம்]. தலைமை சிற்பியே அரசர், மற்றும் ராணிகளது சிலையினை வடிக்கிறார். பட்டத்துராணி சிலை வடிக்கையில் அச்சிலையின் முழங்காலுக்கு மேலாக கல் பெயர்ந்துவிடுகிறது. மிகுந்த கவலையுற்ற சிற்பி வேறு சிலை மீண்டும் செய்ய கல் தேர்ந்தெடுக்க முயல்கிறார். மேற்பார்வை பார்க்க வந்த நீலகண்ட தீக்ஷதர், இதை அறிந்து சிலையினை பார்த்த பின், சிற்பியிடம் அரசிக்கு அங்கு மச்சம் இருப்பது உண்மைதான், எனவே அச்சிலை அவ்வாறே இருக்கட்டும் என்று கூறிச் சென்றுவிடுகிறார். அரசர் சிலையை பார்வையிட வருகையில் இச்செய்தி சொல்லப்பட்டு அரசியின் சிலையாக பின்னப்பட்ட அச்சிலையே இருக்கலாமா என்று கேட்க, அரசியின் அந்தரங்கம் எப்படி தெரிந்தது என அரசர் நீலகண்டர் மீது மிகுந்த கோபம் அடைகிறார். அரசியை தவரான கண்ணோட்டத்தில் பார்த்தமைக்காக அவருக்கு தண்டனை அளிக்க முடிவு செய்து சபா மண்டபத்திற்கு வரவழைக்கிறார்.

சேவகர்கள் நீலகண்டர் இல்லத்துக்கு வந்த சமயத்தில் அவர் நித்ய-பூஜையில் இருக்கிறார். அப்போது அரச சேவகர்கள் தமக்காக காத்திருப்பதை உணர்ந்து, தமது ஆத்ம சக்தியிலேயே அரசனது எண்ணத்தை அறிந்து, அவன் தரும் தண்டனைக்கு சமமாக தாமே தமது பூஜையில் இருக்கும் சுடரொளியால் தமது கண்களை அவித்துக் கொள்கிறார். பின்னர் அரச சேவகர்களுடன் அரசவை வருகிறார். யாரும் ஏதும் சொல்லும் முன்னரே தாமாக அரசனது மனதில் இருப்பதை அறிந்து, அவன் தரும் தண்டனையை தாமே அளித்துக் கொண்ட நீலகண்டரது செயலைக் கண்ட அரசன், அவரது திருஷ்டாந்தத்தையும், தமது தவறை நினைத்து வருந்துகிறான். அப்போது தீஷதர் அன்னை சன்னதிக்குச் சென்று பாடியதுதான் ஆனந்த ஸாகர ஸ்தவம். பாடி முடித்தபின் அன்னை மீனாக்ஷியருளால் தமது பார்வை கிடைக்கப் பெற்றார் தீக்ஷதர்.


வெளியில் அதிகம் தெரியாதவாறு இருப்பினும் இவரது சாக்த குரு பரம்பரை இன்னும் தொடர்கிறது. தமது அமைச்சுப்பதவியை துறந்து, இறுதிக் காலத்தில் திருநெல்வேலி அருகில் வாழ்ந்து இறைவனடி சேர்ந்தார் என்று சொல்கின்றனர்.

1 comment:

மதுரையம்பதி said...

ஆச்சார்ய ஹ்ருதயத்தில் இட்ட இடுகை. அங்கு வந்த பின்னூட்டங்கள் கீழே!

14 comments:
கீதா சாம்பசிவம் said...
தெரிஞ்ச விஷயம் தான் என்றாலும் புதுமண்டபம், மஹால் படமும் போட்டிருக்கலாமோ?????

September 18, 2008 3:14 AM
மதுரையம்பதி said...
அவர் படம் தேடினேன்கிடைக்கல்ல..:(

ஆ.சாகரஸ்தவம் பற்றி இன்னும் கொஞ்சம் எழுதலாம்ன்னு நினைத்தேன்....ஸ்லோகம் பூரா நினைவுக்கு வரல்ல. :(

புதுமண்டபம் போடறது சரி, அதென்ன மஹால்?, அதுவும் அவர் மேற்பார்வையில் கட்டினதா?...தெரியாதே?

September 18, 2008 3:21 AM
கவிநயா said...
//நான் என்ன தவறு செய்தாலும், அசட்டுத்தனமாக, அ-விவேகமாக உன்னை நினைக்காதிருந்தாலும் நீ என் காதைப் பிடித்து இழுத்து உன்பக்கதிருத்திக் கொள்ள வேண்டும்//

அப்படின்னு நானும் கேட்டுக்கறேன் :)

நீலகண்ட தீக்ஷிதர் பற்றி படிக்க அருமையாக இருந்தது. மிக்க நன்றி மௌலி.

September 18, 2008 7:03 AM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//ஆனால் ஒரேயொரு வேண்டுகோள் என்று சொல்லி, 'உன்பாதார விந்தத்தில் பக்தியில்லாத வம்சத்தில் எனக்கு அடுத்த பிறவி வேண்டாம்'//

ததாஸ்து! ததாஸ்து!
அப்படியே அருள்வாமி மீனாட்சியே!

//அரசனது எண்ணத்தை அறிந்து, அவன் தரும் தண்டனைக்கு சமமாக தாமே தமது பூஜையில் இருக்கும் சுடரொளியால் தமது கண்களை அவித்துக் கொள்கிறார்//

மீன அக்ஷியின் திருக்கண்ணொளியே போதும் என்று எண்ணினாரோ?

//அவர் படம் தேடினேன்கிடைக்கல்ல..:(//

படம் இதோ, நம்ம வீட்டிலேயே இருக்கே! :)
http://aacharyahruthayam.blogspot.com/2008/07/blog-post.html

September 18, 2008 12:59 PM
ambi said...
அருமையான கதை,

இதையே கொஞ்சம் உட்டாலங்கடி பண்ணி ஒரு திரைபடத்தில் ராஜேஷ் சிற்பியாகவும், ஷ்ரிதேவி ராணியாகவும், தியாகராஜன் ராஜாவாக எடுத்து இருப்பார்கள். படம் பேர் தெரியலை.

September 19, 2008 4:08 AM
ambi said...
//அதென்ன மஹால்?, அதுவும் அவர் மேற்பார்வையில் கட்டினதா?...தெரியாதே?
//

ராமாயண காலத்துல காவிரி சென்னை - அம்பத்தூர் வழியா ஓடற போது திருமலை நாயக்கர் மஹாலை ஏன் நீலகண்ட தீக்ஷிதர் மேற்பார்வையில் கட்டியிருக்க கூடாது?னு கீதா மேடம் கேக்கறாங்க. :)))

September 19, 2008 4:22 AM
குமரன் (Kumaran) said...
இந்த நிகழ்ச்சியைப் பற்றி படித்திருக்கிறேன். ஆனால் அந்தப் பெரியவரின் திருப்பெயர் நீலகண்ட தீட்சிதர் என்பது நினைவில்லை. :-) அவரது சாக்த குருபரம்பரை இன்னும் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறீர்கள். அதைப் பற்றி மேலும் உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். சரியா? :-)

September 19, 2008 5:35 AM
கீதா சாம்பசிவம் said...
அட, மதுரை பத்திப் பதிவுனா படம் வேண்டாமா? மஹாலைப் படத்திலேயாவது பார்த்திருக்கலாமில்ல?? :P

@ஆப்பு அம்பி, ரொம்ப நாளாச்சு இல்லை, அதான் ரொம்பத் துள்ளறீங்க?? அந்தப் பதிவிலே முகவை மைந்தனும் பின்னூட்டம் கொடுத்திருக்கார் பாருங்க என்னை ஆதரிச்சு, அப்புறம் பேசுங்க! இருக்கு உங்களுக்கு! :P :P :P :P

September 19, 2008 10:52 AM
மதுரையம்பதி said...
வாங்க கவிக்கா, வந்து படித்தமைக்கு நன்றி :)

September 20, 2008 5:20 AM
மதுரையம்பதி said...
வாங்க கே.ஆர்.எஸ்.

நீங்க் அப்பைய தீக்ஷதர் பதிவெழுதினது நினைவுக்கு வந்தது, ஆனால் படம் நினைவில்லை. இப்போது போய் இன்னொரு முறை பார்த்துவிட்டு வந்தேன் :)

September 20, 2008 5:22 AM
மதுரையம்பதி said...
வாங்க அம்பியண்ணா.. :).

கொஞ்சநாளா காணோமேன்னு நினைச்சேன், லேட்டா வந்தாலும், லெட்டஸ்டா வந்திருக்கீங்க :)

September 20, 2008 5:24 AM
மதுரையம்பதி said...
வாங்க குமரன்....ஆச்சார்ய ஹ்ருதய இன்வைட்டை ஏற்றமைக்கு நன்றி.
:-)

//அதைப் பற்றி மேலும் உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்//

ஏதோ கொஞ்சம் தெரியுமுங்க.. :)

September 20, 2008 5:26 AM
ஜீவா (Jeeva Venkataraman) said...
நான் அறியாதவற்றை அறிந்து கொண்டேன், மௌலி சார்!

September 20, 2008 7:30 PM
மதுரையம்பதி said...
வருகைக்கு நன்றி ஜீவாண்ணா :-)

September 21, 2008 3:29 PM