கலியுகத்தில் 400 வருடங்களுக்கும் மேலாக ஜீவசமாதியில் இருந்து தன்னை அண்டியவர்களுக்கு சகலமும் தந்தருளும் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் ஆராதனை இன்று. அவர் அருளுக்கு இறைஞ்சுவோம். இந்தப் பதிவில் நாம் அறிந்திராத ஒரு மிருத்திகை பிருந்தாவனத்தைப் பற்றி அறிவோம்.
---------------------------------------------------------------------------------------------
கரூர்-மதுரை சாலையில் நன்செய் புகளூர் என்று ஒரு ஊர். பழைமையான காவரிக் கரை கிராமம். நெல்-கரும்பு-வாழை என செழிக்கும் பூமி. 250-300 பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் ஸ்மார்த்தர்களும், மாத்வர்கள் வசிக்கும் ஆற்றை ஒட்டிய அழகிய அக்ரஹாரத்தில் இருக்கிறது ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் மிருத்திகா பிருந்தாவனம் சுமார் 100 வருடங்களுக்கும் முன்னால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டது. இங்குள்ள மாத்வ குடுமத்தைச் சார்ந்த பெரியவர்கள் 100 வருடங்களுக்கு முன்னால் நடந்தே மந்திராலயம் அடைந்து, மிருத்திகை கொண்டுவந்து பிரதிஷ்ட்டை செய்யப்பட்ட இடம். அக்ரஹாரத்தில் ஸ்மார்த்த இல்லங்களின் முடிவாக குரு ராகவேந்திரர் கோவில், வெளியே இருந்து பார்க்கும் போது பழையகால ஓடு வேயப்பட்ட ஒரு இல்லம் போன்ற தோற்றம். உள்ளே நுழைந்து இடதுபுறமாக பிரதக்ஷிணமாகச் சென்றால் முதலில் வருவது அனுமன் ஸன்னதி. அனுமனுக்கு வலது புரத்தில், காவிரியை நோக்கியவாறு சுமார் 3 அடி உயரத்தில் காவிரியை நோக்கிய ஒரு அர்த்த மண்டபம் போன்ற ஒரு நீண்ட அமைப்பின் முடிவில் லக்ஷ்மி-நாராயணர் சன்னிதி. அருகில் சிறிய, பிருந்தாவனத்தில் மூல பிருந்தாவனத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மிருத்திகையில் குருராயர் பிரதிஷ்ட்டை, எதிரில் அனுமார் உற்சவ மூர்த்தியாகவும் அருள் பாலிக்கிறார். கோவிலின் உள்ளேயே அழகிய பழங்காலத்து கிணறு. இந்த வளாகம் தாண்டியவுடன், காவிரி நோக்கிச் செல்ல ஒரு சிறு சந்து. அதில் சென்று ஆற்றில் குளித்துவிட்டு நீர் கொண்டுவந்து பெருமாள், அனுமான் மற்றும் குருராயருக்கு பூஜை.
சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்னால் அலுவலகத்தில் பலவித குழப்பங்களில் தத்தளித்த நேரம், மதுரை சென்று உபாகர்மா பண்ணியாச்சு. மறுநாள் காயத்ரி ஜபம் பண்ணிட்டு பெங்களூர் செல்லவேண்டும். மதுரை-பெங்களூர் மார்க்கத்தில் தனியார் பேருந்துகளில் டிக்கெட் இல்லை, பல பேருந்துகள் மாறி-மாறி பெங்களூரை அடைய வேண்டும் என்பதே மனதில் ஒருவிதமான அயற்சியை கொடுத்தது. ஏதோ ஒரு நினைவில் கரூரில் இருக்கும் நண்பனுக்கு போன் செய்து, கரூர்-பெங்களூர் ஏதேனும் தனியார் பேருந்து கிடைக்குமா என்று கேட்கும் போது அவன் குரு ராயர் ஆராதனை பற்றிச் சொல்லி பெங்களூர் செல்லும் வழியில் கரூர் வந்து அங்கே அவனது இல்லத்து கோவிலான குருராயர் பிருந்தாவனத்தில் ஆராதனை பூஜையில் கலந்து கொண்டு பின்னர் இருவருமாக பெங்களூர் செல்லலாம் என்று கூறினான்.
எனக்கும் ஒரு மாறுதல் தேவையான நேரம். காயத்ரி ஜபத்தை காவிரிக் கரையில் பண்ணலாம் என்று அப்போதே கிளம்பினேன். ஊரினுள் நுழைந்த உடன், எனக்கு ஏதோ மிகப் பழகிய இடம் போன்ற உணர்வு. அன்பான வரவேற்பும் அவர்கள் இல்லத்து பிள்ளையை கண்ட பூரிப்புடனும் ஆண்-பெண் எல்லோரும் மகிழ்வுடன் வரவேற்றனர். அந்த இடத்துடன் ஒர் பூர்வஜன்ம உறவு போன்ற உணர்வு. இரவு அங்கு சென்ற சமயத்தில் ஒரு வீட்டின் முன்னே சிறுவர்கள் பாடிக் கொண்டும், விளையாடிக்கொண்டும் இருக்க, பெரியவர்கள் சிறுவர்களது கலை நிகழ்ச்சிகளை ரசித்துச் சிரித்துப் பேசியவாறு இருந்தனர். காலை நிகழ்ச்சிகள் பற்றிப் பேசி பின்னர் பயணக்களைப்புத் தீர நல்ல ஓய்வுக்கு வழி செய்து தந்தனர். காலையில் முதலில் குளித்து அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு பின்னர் 9 மணியளவில் அந்த குடும்பத்தைச் சார்ந்தவர்களுடன் கோவில் சென்று அங்கிருந்து காவிரியில் (நீர் வரத்து இருந்த நேரம்) மீண்டும் நீராடி ராயர் பூஜைக்கு நீர் எடுத்துக் கொண்டு வந்து கோவிலுள் நுழைந்தோம். அந்தோ என்ன ஒரு உணர்வு. இன்றும் எனக்கு உடம்பில் ஒரு சிலிர்ப்பு ஏற்படும் விதமான ஒர் உணர்வு. மனதில் இருந்த குழப்பங்கள், கவலைகள் எல்லாம் ஞாயிறைக் கண்ட பனிபோல் விலகிய ஒர் உணர்வு. நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்கி சூக்தாதிகள் சொல்லி அபிஷேக ஆராதனைகளைக் கண்ணாரக் கண்டேன். நண்பனது தந்தை அந்த வருட கட்டளை. அவர் என்னை வைத்து என் குடும்பத்தார் பெயரில் அர்ச்சனைகள் செய்வித்து மந்திராக்ஷதை வழங்கினர்.
திரு-வளாகத்தின் ஒரு பகுதியில் சமையல் நடந்து வந்தது. இன்றைய திருமணங்கள் போன்ற பெரிய விழாக்களில் கூட செய்யப்படாத அபூர்வமான பதார்த்தங்கள் எல்லாம் செய்யப்பட்டு, 11 பண்டிதர்கள், வேத விற்ப்பனர்களை சன்னதி முன் அமர்த்தி ராயர் குரு பரம்பரையினராக வரித்து அவர்களுக்கு உணவிட்டு ஜல பாத்திரம், அர்க்கியம் போன்றவை அளிக்கப்பட்டன. அவர்கள் உண்டு எழுந்தபின் அந்த இலைகளில் அங்கிருக்கும் மாத்வ குடும்பத்தவர்கள் மட்டுமல்லாது மற்றவர்களுமாக 100க்கும் மேற்பட்டவர்கள் அங்கப்பிரதக்ஷணம். பின்னர் குளித்து வந்த எல்லோருக்கும் (60-70 உள்ளூர் குடும்பங்கள்) உள்ளீட்ட 300-400 பேருக்கு அறுசுவை உணவு. மீண்டும் பெங்களூர் செல்ல வேண்டும் என்ற போது மனதில் எந்த கவலைகளும், வேலை பளூவும் தோன்றவில்லை. தெளிந்த நீரோடை போன்ற மனது என்பதை அப்போது உணர்ந்தேன். வந்து ஒரு வாரத்தில் அமெரிக்க பயணம். அதுவரை மற்ற தேசங்களில் எல்லாம் கோபால் பல்பொடி விற்ற நான் அமெரிக்காவிலும் விற்க்கத் துவங்கினேன்.
மதுரை, பெங்களூர் என்று பல இடங்களில் ஆராதனையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தாலும் குரு ராயரின் சான்னித்தியத்தை மந்திராலயத்திற்கு அடுத்தபடியாக இந்த பூகளூரில் தவிர வேறு எங்கும் உணரவில்லை என்பது உண்மை. இவ்வாறாக 3 நாட்கள் ஆராதனை நடைபெறுகிறது. அந்த மஹான் நித்ய வாசம் செய்யும் மந்திராலயத்தில், மட்டுமல்லாது எல்லா மிருத்திகா பிருந்தாவனங்களிலும் சிறப்பான ஆராதனைகள் நடைபெறும். குரு-ராயர் எல்லோருக்கும் அருளட்டும்.
39 comments:
மந்திராலயத்திற்கு அடுத்தபடியாக இந்த பூகளூரில் தவிர வேறு எங்கும் உணரவில்லை என்பது உண்மை. இவ்வாறாக 3 நாட்கள் ஆராதனை நடைபெறுகிறது. அந்த மஹான் நித்ய வாசம் செய்யும் மந்திராலயத்தில், மட்டுமல்லாது எல்லா மிருத்திகா பிருந்தாவனங்களிலும் சிறப்பான ஆராதனைகள் நடைபெறும். குரு-ராயர் எல்லோருக்கும் அருளட்டும்.
>>>>>>>>>>>>
ராகவேந்திரர் பதிவு என்றதும் நானு பேக பந்தே!
நடமாடும் தெய்வமாயிற்றே...அழைத்ததும் மனசுக்குள் ப்ரசன்னமாகிவிடுவாரே! மௌலி ! பதிவுபடித்ததும் உடனே புகளூர் போகவேண்டும் போல இருக்கிறது அடுத்த தடவை திருவரங்கம் போகும்போது
கரூரில் இறங்கி காவிரி(அங்கு அமராவதி அதற்குபெயர்) யில்குளித்து புகளூர் சென்று குருராயரை தரிசிக்கவேன்டும்.மிக்க நன்றி சிறந்த தகவலுக்கும் உங்களின் சிலிர்ப்பான அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதற்கும்
ஷைலஜா
விவரித்த விதம் மிக அருமை, நாங்களும் உங்களுடன் கூடவே வந்த மாதிரி ஒரு உணர்வு.
வைக்கத்தில் உள்ள கோவிலில் அஷ்டமியின் போது இதே மாதிரி தம் வியாதி நீங்க உருளுவார்கள் என கேள்விபட்டேன். இங்கு அதே மாதிரி செய்வதின் நோக்கம் என்னனு தெரிஞ்சுக்கலாமா?
நஞ்சை புகலூரா?
நான் புஞ்சை புகலூருக்கு போயிருக்கேன். பரவாயில்லை பையர் அந்த பக்கம் போன பின்பு போய் வந்தா போச்சு!
வாங்க திவாண்ணா....நஞ்சை புகலூர் என்பதே சரி...நான் பதிவிலும் திருத்திடறேன்.
இங்க 2-3 முறை போகும் போதுதான் எனக்கு நெரூர் போக வாய்ப்பு கிடைத்தது.
வாய்யா அம்பி...:)
நன்றி..
வைக்கத்து அஷ்டமின்னு சொல்வது கார்த்திகை மாத கிருஷ்ண-பக்ஷ அஷ்டமியன்று நீங்க சொல்வது. அது வைக்கம் மட்டுமல்லாது மதுரையிலும் சில இடங்களில் கொண்டாடப்படும். எனக்கு தெரிந்து மதுரையில் ஒரு குடும்பத்தில், அவர்கள் இல்லத்தில் இந்த நாளில் மிகப் பெரிய ஹோமம், அன்னதானம் எல்லாம் உண்டு.
இப்படி அங்கப்பிரதக்ஷணம் செய்வது என்பது அந்த இலைகளில் உணவருந்தியவர்களில் ஒருவர் ஈஸ்வரனோ/ராகவேந்திரரோ இருக்கும் என்ற நம்பிக்கைதான்
வாங்க ஷைல்ஸக்கா...நன்றி.
நீவு பேக பர்தீரென்த்த கொத்து..:))
ஆமாம், நேரம் கிடைக்கையில் சென்று வாருங்கள்...
இது போன்ற அங்கப்ரதட்சினம் புதுகையில் நடக்கும் நரசிம்ம ஜெயந்தியிலும் உண்டு.
பகவான் வந்தருளியிருப்பார் என்றே
நம்பிக்கை.
உங்கள் பதிவு மிக நன்றாக இருந்தது.
//காயத்ரி ஜபத்தை காவிரிக் கரையில் பண்ணலாம் என்று அப்போதே கிளம்பினேன்//
அருமை! அருமை!
ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மனோ கர
ராஜ கம்பீர நாடாளும் நாயக வயலூரா!
மிகவும் இயற்கையான, இயல்பான, பயணக் குறிப்பு போல வர்ணனை!
நன்றாக இருந்தது மெளலி அண்ணா!
அடுத்த முறை வந்தால் புகளூர் + மதுரை மெளலி அண்ணா அழைத்துப் போகணும்னு, குருராயரிடம் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்! :)
//நீராட்டி ராயர் பூஜைக்கு நீர் எடுத்துக் கொண்டு வந்து கோவிலுள் நுழைந்தோம். அந்தோ என்ன ஒரு உணர்வு. இன்றும் எனக்கு உடம்பில் ஒரு சிலிர்ப்பு ஏற்படும் விதமான ஒர் உணர்வு. மனதில் இருந்த குழப்பங்கள், கவலைகள் எல்லாம் ஞாயிறைக் கண்ட பனிபோல் விலகிய ஒர் உணர்வு//
தீர்த்த கைங்கர்யத்தின் மகத்துவம் அது தான்!
மூர்த்தி-தலம்-தீர்த்தம் அல்லவா?
காஞ்சி வரதனுக்குத் தீர்த்த கைங்கர்யம் மட்டுமே செய்து கொண்டிருந்த உடையவரின் மேல் அல்லவா ஆளவந்தாரின் குருபார்வை விழுந்தது!
தீர்த்த கைங்கர்யம் அல்லவா உடையவர் குழப்பம் எல்லாம் நீக்கி, மகோன்னத நிலைக்குக் கொண்டு சென்றது!
//வந்து ஒரு வாரத்தில் அமெரிக்க பயணம். அதுவரை மற்ற தேசங்களில் எல்லாம் கோபால் பல்பொடி விற்ற நான் அமெரிக்காவிலும் விற்க்கத் துவங்கினேன்//
அடுத்த வாரம் புகளூர் போய் வாருங்களேன்! அப்படியாச்சும் அதற்கடுத்த வாரம் இங்கு வருவீர்கள் அல்லவா? குருராயரே, சீக்கிரம் அண்ணாவைக் கடவுச் சீட்டு புதுப்பிக்கச் சொல்லுங்கள்! :)
//அந்த இலைகளில் அங்கிருக்கும் மாத்வ குடும்பத்தவர்கள் மட்டுமல்லாது மற்றவர்களுமாக 100க்கும் மேற்பட்டவர்கள் அங்கப்பிரதக்ஷணம்//
இது பற்றித் தனியாக இன்னொரு பதிவில் விளக்குங்கள்!
திருப்பாவாடையிலும் இது உண்டு! அம்பி சொன்னது போல நோய் நிவர்த்திக்கும் செய்யப்படும்!
மகாபாரதத்திலே தருமபுத்திரர் செய்யும் வேள்வியில் உருளும் பொன்னிற உடும்பின் கதை தான் நினைவுக்கு வந்தது!
கிராமத்திலும் இந்த வழக்கம் உண்டு! பச்சையம்மன் கிட்ட இலைச்சோறு உருளறேன்னு வேண்டிக்குவாங்க!
குருராயர் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் ஆராதனையில், குருநாதரை ஆராதித்து வணங்குகிறேன்!
பூஜ்யாய ராகவேந்த்ராய
சத்ய தர்ம ரதாயச
பஜதாம் கல்ப விருட்சாய
நமதாம் காம தேனவே!
சத்யம், தர்மம் என்னும் ரதத்திலே ஏற்றி, நம்மை வீட்டிலே சேர்க்கும் ராகவேந்திர மாமுனிகளைப் பூசிக்கிறேன்!
அடியார்க்கு அருள் பாலூட்டும் காமதேனுவாகவும், நல்லதை நல்கும் கற்பக மரமாகவும் திகழும் ராகவேந்திர மாமுனிகளைப் போற்றிப் பாடுகிறேன்! வணங்குகிறேன்!
அரிதான அனுபவத்தை சிறப்பாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி மௌலி.
வாங்க கவிக்கா...வருகைக்கு நன்றிக்கா... :)
வாங்க புதுவையக்கா
//இது போன்ற அங்கப்ரதட்சினம் புதுகையில் நடக்கும் நரசிம்ம ஜெயந்தியிலும் உண்டு.//
ஆம், பார்த்திருக்கிறேன்...நினைவு படுத்தியதற்கு நன்றி. :)
வாங்க கே.ஆர்.எஸ்..எங்கெங்கு காணினும் கே.ஆர்.எஸ் அப்படிங்கலாம் போல..:) எல்லா பதிவுகளிலும் பின்னூட்ட மழையா இருக்கு...:))..ஏதோ மிகவும் மகிழ்ச்சியா இருக்கீங்க போல...நல்லது..தொடரட்டும் :))
//மிகவும் இயற்கையான, இயல்பான, பயணக் குறிப்பு போல வர்ணனை!
நன்றாக இருந்தது மெளலி அண்ணா!//
நன்றி :))
//அடுத்த முறை வந்தால் புகளூர் + மதுரை மெளலி அண்ணா அழைத்துப் போகணும்னு, குருராயரிடம் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்!//
பண்ணிடலாம் :)
//தீர்த்த கைங்கர்யத்தின் மகத்துவம் அது தான்!
மூர்த்தி-தலம்-தீர்த்தம் அல்லவா?//
உண்மை..
//காஞ்சி வரதனுக்குத் தீர்த்த கைங்கர்யம் மட்டுமே செய்து கொண்டிருந்த உடையவரின் மேல் அல்லவா ஆளவந்தாரின் குருபார்வை விழுந்தது! //
படித்திருக்கிறேன். :)
//அடுத்த வாரம் புகளூர் போய் வாருங்களேன்! அப்படியாச்சும் அதற்கடுத்த வாரம் இங்கு வருவீர்கள் அல்லவா?//
ரசித்தேன்... :)
///இது பற்றித் தனியாக இன்னொரு பதிவில் விளக்குங்கள்!
திருப்பாவாடையிலும் இது உண்டு! அம்பி சொன்னது போல நோய் நிவர்த்திக்கும் செய்யப்படும்! //
எழுதலாமே!!!.. ஆமாம் திருப்பாவாடை என்றதும் நீங்க திருப்பாவடை பற்றி எழுதி ஆனால் போடாமல் வைத்திருக்கும் போஸ்ட் நினைவுக்கு வருது....எப்போ போடறீங்க?... :)
ஆஹா!! நானும் பின்னூட்டம் போடற மாதிரியான பதிவு! நன்றி அண்ணா!
அனுபவம் புதுமை! அதைச் சொன்ன விதமோ அருமை!
கே.ஆர்.எஸ் அண்ணா சொன்ன மாதிரி அடுத்த வாரம் ஒரு முறை இங்க போயிட்டு வந்திடுங்க! :))
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
அருமை! அருமை!
அடுத்த முறை வந்தால் புகளூர் + மதுரை மெளலி அண்ணா அழைத்துப் போகணும்னு, குருராயரிடம் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்! :)>>>
எப்போது போனாலும் செல்லத்தம்பிகளுடன் நானும் புகளூர் வருவேன்.மேலக்கோட்டைக்கு என்னை நைசா விட்டுட்டுப்போனமாதிரி போயிடக்கூடாது....ஆமா?:):)
ஆஹா, கொத்ஸண்ணா வாங்க, வாங்க...
நீங்க இந்தப்பக்கமா வந்ததே பெரிய விஷயம்.....அதிலும் பின்னூட்டம் வேற..:-)
நன்றிங்கண்ணா...:-)
//எப்போது போனாலும் செல்லத்தம்பிகளுடன் நானும் புகளூர் வருவேன்.மேலக்கோட்டைக்கு என்னை நைசா விட்டுட்டுப்போனமாதிரி போயிடக்கூடாது....ஆமா?:):)//
செல்லத்தம்பிகளா?...செல்ல-வெல்ல தம்பிகளா?...கரெக்ட்டா சொல்லுங்க.
ஹா! கொத்ஸ் இங்கேயா! மௌலி நெசந்தானா? வருக, வாழ்க!
நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்கி சூக்தாதிகள் சொல்லி அபிஷேக ஆராதனைகளைக் கண்ணாரக் கண்டேன்.
ஏற்கனவே மனதாலும் வாக்கினாலும் கண்டு களித்த காட்சியை கண்ணாரக் கண்டீர்கள்.அஹோ பாக்யம் . அஹோ பாக்யம்.
எப்போது போனாலும் செல்லத்தம்பிகளுடன் நானும் புகளூர் வருவேன்.மேலக்கோட்டைக்கு என்னை நைசா விட்டுட்டுப்போனமாதிரி போயிடக்கூடாது....ஆமா?:):)
ஆமாமென்னையும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்க ஷைலாஜா.இவங்க கூட்டனியே சரியில்லையே
ஆற்றை ஒட்டிய அழகிய அக்ரஹாரத்தில் இருக்கிறது ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் மிருத்திகா பிருந்தாவனம் சுமார் 100 வருடங்களுக்கும் முன்னால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டது.
இதே மாதிரி அனுபவம் எஅனக்கும் உண்டு. 20 வருடங்களுக்கு முன் காசி சென்று இருந்தபோது வியாழக்கிழமை குரு தரிசனம் செய்யலாம் என்ற நினத்தபோது எங்கு உள்ளது என்று தெரியாமல் சங்கர மடத்துக்காவது போய்வரலாம் என்று கிளம்பினேன். வீட்டை விட்டு வெளியில் வந்ததும் சில நிமிடங்களில் சரியான மழை. சரி பக்கத்தில் இருந்த ஒரு பழைய வீட்டில் ஒதுங்கினேன்.அந்த வீடு வீதியிலிருந்து 5 அடி ஆழத்தில் இருந்தது. சரிவீட்டில் என்ன இருக்கும் என்று எட்டிப்பார்த்தால் கீழே குரு ராகவேந்திரரின் பிருந்தாவனம்.குருவின் கருணையே கருணை.இருக்கும் இடத்தை எனக்கு அறிவித்து தரிசனம் வழங்கியதி மறக்க முடியுமா? ஏற்கனவே என்னை மும்பையிலிருந்து அதோனி வர வழைத்து தரிசனம் அளித்ததை மற்றொரு பதிவில் விளக்கியிருந்தேன்
மதுரையில் ஒரு குடும்பத்தில், அவர்கள் இல்லத்தில் இந்த நாளில் மிகப் பெரிய ஹோமம், அன்னதானம் எல்லாம் உண்டு
யாரு ஆடிட்டர் C V ஸ் மணியன் சார் வீட்டில்தானே. நான்கூட போயிருக்கேன்
வாங்க திரச சார்..
ஆடிட்டருக்கு ஆடிட்டர் இல்ல விசேஷம் தெரியாது போகுமா?. :)
/இருக்கும் இடத்தை எனக்கு அறிவித்து தரிசனம் வழங்கியதி மறக்க முடியுமா? ஏற்கனவே என்னை மும்பையிலிருந்து அதோனி வர வழைத்து தரிசனம் அளித்ததை மற்றொரு பதிவில் விளக்கியிருந்தேன்//
அதோனி நிகழ்ச்சி படித்த நினைவிருக்கு. காசியிலுமா...அடாடா...குருராயர் உங்கள் பக்கம் இருக்கிறார். :)
// காட்சியை கண்ணாரக் கண்டீர்கள்.அஹோ பாக்யம் //
ஆமாம் ஐயா, அது எனக்கு மஹா பாக்கியம் தான்.
ஆமாம் திவாண்ணா....கொத்ஸ் தான்...வாராது வந்த மாமணின்னு சொல்லிடுங்க...நான் சாட்ல சொல்லிட்டேன். :)
//ஆமாமென்னையும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்க ஷைலாஜா.இவங்க கூட்டனியே சரியில்லையே//
ஆஹா!!!இதென்ன புதுசா கூட்டணி அது இதுன்னு எல்லாம் பேசலாமா?...கே.ஆர்.எஸ் எங்கே நானெங்கே...இந்த கூட்டணிக்கெல்லாம் அப்பாற்பட்டவர் அவர்...
தி. ரா. ச.(T.R.C.) said...
?:):)
ஆமாமென்னையும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்க ஷைலாஜா.இவங்க கூட்டனியே சரியில்லையே///
ஆமா தி ரா ச....இந்தக்கூட்டணில
நம்ம அம்பி இல்ல அம்பி அவரோட தம்பியும் இருக்காரு! அடுத்த தடவை ஆன்மீக உலா இவங்கபோறப்போ வால் மாதிரி நாமும் போயிடலாம் வாங்க...நான் உங்களுக்கு கரெக்டா இவங்க எங்கபோறாங்க என்ன ஏது சேதின்னு சொல்லிட்றேன் ஒண்ணும் கவலைப்படாதீங்க!
அதானே! கரக்ட்டா தீர்த்தம் குடுக்க வந்துட்டாரு எங்க கேஆரெஸ் அண்ணன். :p
@கொத்ஸ், நிஜமாலுமே வந்தது கொத்ஸ் தானா? இருங்க பக்கத்துல இருக்கற ஆளை கிள்ளி பாத்துக்கறேன். :))
மதுரையம்பதி said...
//
ஆஹா!!!இதென்ன புதுசா கூட்டணி அது இதுன்னு எல்லாம் பேசலாமா?...கே.ஆர்.எஸ் எங்கே நானெங்கே...இந்த கூட்டணிக்கெல்லாம் அப்பாற்பட்டவர் அவர்...//
அப்படீன்னு சொல்லிண்டே கூட்டணி போட்டுப்பாங்க திராச..நம்பாதீங்க...:):) ஆனாலும்
அடுத்தவாட்டி கே ஆர் எஸ் வர்ரப்போ பெரிய டூரா எல்லாருமா சேர்ந்துபோக திட்டம் போட ஒரு திட்டம் இருக்கு! ரைட்டா மதுர(யம்பதி)?:)
மதுரையம்பதி said...
//செல்லத்தம்பிகளா?...செல்ல-வெல்ல தம்பிகளா?...கரெக்ட்டா சொல்லுங்க.//
அடட்டா கண்டுபிடிச்சாச்சா?:0 நீனச்சேன் மதுர ஒரு பிடி பிடிக்கும்னு:):)
செல்லம் ஒன்று
வெல்லம் மற்றொன்று!:):):)
கொத்தாயித்தா ரீ?:)
//அதானே! கரக்ட்டா தீர்த்தம் குடுக்க வந்துட்டாரு எங்க கேஆரெஸ் அண்ணன். :p//
இப்படி ஏதாச்சும் சொல்லி அவரை உசுப்பிவிட்டுட்டு எனக்கென்னன்னு வேடிக்கை பாக்கறதே வழக்கமாயிடுச்சு உங்களுக்கு.... :)
அண்ணன் கே.ஆர்.எஸின் நினைவாற்றல் உங்களுக்கு தெரியல்ல...இதெல்லாம் நினைவுல வச்சுக்கிட்டு எப்போவாச்சும், ஏதாச்சும் ஒரு பதிவுல மறைமுகமா பதில் சொல்வார் பாருங்க.. :)
//@கொத்ஸ், நிஜமாலுமே வந்தது கொத்ஸ் தானா? இருங்க பக்கத்துல இருக்கற ஆளை கிள்ளி பாத்துக்கறேன். :))//
கிள்ளிப்பாக்க கூடாது அம்பி, (அவர் பெயர் மீது) கிளிக்கிப் பாக்கணும்...:)
//அப்படீன்னு சொல்லிண்டே கூட்டணி போட்டுப்பாங்க திராச..நம்பாதீங்க...:):) //
ஆஹா!!! ஏன்?, ஏனிந்த கொலை வெறி?.. :)
இப்படிச் சொல்லிக்கிட்டே நீங்களும் திரசவும் போடும் கூட்டணியை கவனித்துக் கொண்டிருக்கேன் அப்படின்னு சொல்லிக்கறேன்... :)
//ஆனாலும்
அடுத்தவாட்டி கே ஆர் எஸ் வர்ரப்போ பெரிய டூரா எல்லாருமா சேர்ந்துபோக திட்டம் போட ஒரு திட்டம் இருக்கு! ரைட்டா மதுர(யம்பதி)?:)//
அப்படியா?, எனக்கு தெரியாதே?. அண்ணன் கேயாரெஸ் சொன்னா செய்வதை தவிர வேரொன்றும் அறியேன் ஷைல்ஸக்காவே!! :)
//மதுர ஒரு பிடி பிடிக்கும்னு:):)
செல்லம் ஒன்று
வெல்லம் மற்றொன்று!:):):) //
கள்ளமில்லாத செல்ல-வெல்ல தம்பிகளிடம் விளையாடல்லன்னா உங்களுக்கு பொழுது போகாதே? இல்லையா ஷைல்ஸக்கா? :))
//இப்படி ஏதாச்சும் சொல்லி அவரை உசுப்பிவிட்டுட்டு//
no way! no usuppi!
u carry on ambi! :)
//அண்ணன் கே.ஆர்.எஸின் நினைவாற்றல் உங்களுக்கு தெரியல்ல...இதெல்லாம் நினைவுல வச்சுக்கிட்டு எப்போவாச்சும், ஏதாச்சும் ஒரு பதிவுல மறைமுகமா பதில் சொல்வார் பாருங்க.. :)//
no pathils
no "marai" mugam!
only "veda" mugam :))
guru rajar pathivula guru-vai pathi pesunga na, enna vachi katcheri panni kittu irukeenga? konja neram star post-kku poyittu varathukulla, enna nadakkuthu inge?
மௌலி வெகு நாள் கழித்து மீண்டும் ஸ்ரீராகவேந்திரர் தரிசனம் கிடைத்ததுதூங்கள் பதிவைப் பார்த்த புண்ணியத்தால்.
எத்தனை முறை அவருடைய நாம ஸ்மரணை எனக்குப் பாதுகாத்திருக்கிறது என்று எனக்கும் அவருக்கும் மட்டுமே தெரியும்.
ஸ்ரீ.ஏ.எம் ராஜகோபாலன் கரூர் மிருத்திகா பிருந்தாவனத்தைப் பற்றி எழுதி இருந்தார். அந்தப் பத்திரிகையோடு ஊருக்குக் கிளம்பினேன்.
இங்கே ஒரு கோவிலிலும் அவர் முகத்தைத் தரிசனம் செய்ய முடியவில்லையே என்று மிக வருத்தமாக இருந்தது.
அது உங்கள் பதிவைப் பார்த்ததும் கொஞ்சம் சாந்தி கிடைத்தது. மிகவும் நன்றி.
அடியேன். குருராஜர் திருவடிகளே சரணம்.
நல்லதொரு அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் மௌலி.
வாங்க குமரன்...நீங்க விட்டுப்போன பதிவுகளை எல்லாம் படிச்சுட்டிருக்கீங்க போல...சரி, சரி...நடத்துங்க :)
Post a Comment