Thursday, September 6, 2007

கனவுகளே,கனவுகளே காலமெல்லாம் வாரீரோ?...

மதிப்பிற்குறிய பதிவர் திருமதி வல்லி அவர்கள் கேட்டுக் கொண்டதற்காக இந்த பதிவு.



கல்லூரி காலங்களில் நண்பர்கள் பலரும் கதை போல தங்களது கனவுகளை பகிர்ந்து கொள்வோம். ஆனால் இன்று ஏதும் நினைவில் இல்லை. ஒரு சிலவற்றைத் தவிர.

எனக்கு ஏதேனும் உடல் உபாதை உள்ள காலங்களில் எப்போதும் ஒரே கனவு ரிப்பீட்டாகிறது. அதாவது நான் ஒரு மலை உச்சியில் தனியாக இருப்பது போலவும், எப்படி இறங்குவது என்பதற்கு வழிகாட்ட யாரும் வருவார்களா என்று நான் எதிர்பார்ப்பதாகவும் இருப்பதுதான் அந்த கனவு. இதனை கண்ட உடன் முழிப்புத் தட்டி, உறக்கத்திலிருந்து எழுந்து விடுவேன். சமிப காலங்களில் சில பல வியாதிகள் வந்தாலும் இந்தக் கனவு ஏனோ மிஸ்ஸிங். :-)


2000-ல் நவராத்திர்யில் கண்ட கனவு ஒன்றில் எனது தந்தை நவராத்திரியில் மாலை பூஜை முடித்து வருகிறார், அவர் என்னை அழைத்து ஒரு அர்த்த மேருவினை என் கையில் கொடுத்து அதனை விளக்குவதாக. கனவைப் பற்றி தந்தையிடம் கூறினேன். அப்போது அவர் சிரித்துக் கொண்டே விஜயதசமியன்று விளக்குவதாக கூறினார். அதுவரை எனக்கு ஸ்ரீ சக்ர வழிபாட்டினை பற்றிய விஷயங்கள் அவ்வளவாக தெரியாது. இல்லத்திலும் ஸ்ரீசக்ரம் உண்டே தவிர மேரு கிடையாது. அந்த ஸ்ரீசக்ரத்திற்கான பூஜை தந்தை மட்டுமே செய்வார், மற்ற சிலா ரூபங்களுக்கு தாம் எனது சகோதரர்களோ இல்லை நானோ பூஜை செய்வோம். இந்தக் கனவே எனக்கு ஸ்ரீவித்யை என்கிற மகா பொக்கிஷத்தை பற்றி அறிய தந்தது.


இன்னொரு கனவு 2002-ல் கண்டது.....இதில் நான் ஏதோ ஒரு ரயில்வே ஸ்டேஷன் படிகளில் ஏறும் சமயத்தில் வழுக்கி விழுகிறேன். கால் முட்டியில் சிறு பிராக்சர் ஆகிறது. பெற்றோருக்குத் தெரிவிக்காது பெங்களுரிலேயே வயித்தியம் பார்த்துக் கொள்வதாக கனவு. சரியாக 3 மாதங்களில் இந்த கனவு நினைவாகியது. ஆம்!, நண்பன் ஒருவனது நிச்சயதாம்பூலத்திற்காக கருர் சென்று திரும்புகையில் சேலத்தில் டிரெயினைப் பிடிக்கச் செல்கையில் கீழே விழுந்தேன். கனவில் கண்ட அதே நிகழ்ச்சி.


மற்றபடி எனக்கு பெரிய எதிர்பார்ப்புக்கள்/கனவுகள் ஏதும் இதுவரை இருக்கவில்லை. எனது கர்மாவினை தர்மத்திற்கு விரோதமின்றிச் செய்தலே சிறப்பென்று வளர்க்கப்பட்டேன். இந்த வளர்ப்பினால் இன்றுவரை எந்த ஏமாற்றத்தையும் நான் காணவில்லை. கடந்த சில வருடங்களாக கனவுகளே வருவதில்லை. என்னமோ தெரியவில்லை, ஆழ்ந்த உறக்கமே இருப்பதில்லை என்று அர்த்தமா, இல்லை ரொம்பவே திக் ஸ்கின்னா மாறிவிட்டேனா?. ஒன்றும் புரியவில்லை.

11 comments:

Geetha Sambasivam said...

இந்தக் கனவுகளா எழுதணும்? சரியாப் போச்சு போங்க! நான் வேறே மாதிரி இல்லை நினைச்சேன்? ம்ம்ம்ம்ம்ம்ம்., தூக்கத்தில் காணும் கனவுகள் எனக்கு அப்படி ஒண்ணும் நினைப்பில் இருக்கிறதில்லை!
நல்ல அர்த்தமுள்ள கனவுகளே கண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

மீ பர்ஷ்டு?????

மெளலி (மதுரையம்பதி) said...

//இந்தக் கனவுகளா எழுதணும்? சரியாப் போச்சு போங்க! நான் வேறே மாதிரி இல்லை நினைச்சேன்? //

நீங்க நினைத்தது சரிதான் கீதாமேடம். நீங்க நினைச்ச மாதிரித்தான் நினைத்து வல்லியம்மாவும் கேட்டிருக்கிறார்க்ள்...ஆனா என்ன செய்ய எனக்கு அவர் சொல்லுகிற படியான எதிர்பார்பு/கோல் செட்டிங் எல்லாம் கிடையாது.....(என்னோட பதிவின் கடைசிப் பாராவில் அதைத்தான் சொல்லி இருக்கிறேன்).

மெளலி (மதுரையம்பதி) said...

//மீ பர்ஷ்டு????? //

ஆமா, ஆமா...நீங்களே....

Anonymous said...

நல்ல கனவுகள்.
அடடா சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!னு சும்மாவா சொல்லி இருக்காங்க? (சங்கை எதுக்கு சுடனும்?னு கேக்கபடாது.)

மீ டெக்னிகலி செகண்டு. :))

வல்லிசிம்ஹன் said...

Mouli,
Enna oru aRputhamaana kanavu.

Naan ethaip paRRiyum kuRipaakac solla villai.
eveyone has a different dream illaiyaa.

Inimel vizhuvathu pola soppanam vara veNdam enRu piraarththikkiREn.

Iththanai arumaiyaana pathivu koduththathaRku mikavum nanRi.

uNmaiyaakave romba santhoshamaaka irukku.

Azhntha thookkamum soppanamum oNNu illai.
Nalla thookkaththil manam vizhiththu iraathu..
enRu ninaikkiREn..
Many Many thanks Mouli.
Pl mail me whenever you post a new article.

மெளலி (மதுரையம்பதி) said...

//மீ டெக்னிகலி செகண்டு. :)) //

அதெப்படி அம்பி, கீதாம்மாவை நிழலாய் தொடர்ந்து வருகிறீர்கள் :-)

மெளலி (மதுரையம்பதி) said...

//uNmaiyaakave romba santhoshamaaka irukku//

இதுவே எனக்கும் சந்தோஷம் வல்லியம்மா....

//Pl mail me whenever you post a new article//

இன்று மெயில் அனுப்பியிருந்தேனே?, வந்ததல்லவா?. நான் திரட்டிகளில் சேரவில்லை.....எனவே நண்பர்களுக்கு மெயில் கண்டிப்பாக வரும்.

//Many Many thanks Mouli.//
எதற்காக இதெல்லாம்.....
என்ன எழுதுவதென்றே தெரியாதிருக்கும் எனக்கு ஒரு தலைப்பினை தந்த நான் தான் நன்றி சொல்லணும்.

தி. ரா. ச.(T.R.C.) said...

Mowli saar yatharthamaana kanavukaL unkaLukku. athai ullapati uraithiirkal nanri.

kanavukal sila samayam varuvathi unarthum.
@geetha madam namakku nijame ninaippil illay ithilee kanavu enkee gyapakam varapokuthu.

Geetha Sambasivam said...

க்ர்ர்ர்ர்ர்ர்., சார், என்ன இன்னிக்கு சிஷ்யன் சும்மா இருந்தாச்சேனு நீங்க உ.கு. வச்சுப் பேசறீங்க? :P

மெளலி (மதுரையம்பதி) said...

தி.ரா.ச சார், தயவுபண்ணி நீங்க என்னை சார்ன்னு கூப்பீடாதீங்க....நான் உங்களைவிட மிகச் சிறியவன்.....

Kavinaya said...

கனவுகள் வந்த போது நல்லதாகத்தான் வந்திருக்கு உங்களுக்கு. எனக்கும் கனவுகள் வருவதில்லை. வந்தாலும் ஒண்ணுமே நினைவிருக்காது. ஏதோ கனவு கண்டோம்கிற உணர்வு மட்டுமே இருக்கும்.

//மற்றபடி எனக்கு பெரிய எதிர்பார்ப்புக்கள்/கனவுகள் ஏதும் இதுவரை இருக்கவில்லை.//

ரொம்ப நல்ல விஷயம். அப்ப ஏன் இப்படி தலைப்பு வச்சீங்க :P