Wednesday, August 15, 2007

கோதைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

பூர்வம் வாரிநிதொள வராஹ லபுஷா மக்னாம் ஸமுத்ருத்ய
மாம் அங்கே நாத நிதாய ஸர்வ ஸீகர :
முக்தே ரூபாயஸ்த்வயா, மாலா கேய சமர்ப்பணம்
மம முநேத் துக்தம் தமே வாதுனா ஜாதாஹம்
புவி தர்சயாமி க்ருபயா த்வம் தேஹ்யனுக்ஞாமிதி.


பூமாதேவி ஆண்டாளாக அவதரித்ததை சொல்லுகிறது மேற்கண்ட சுலோகம். பூமாதேவி பொறுமையுடன் அளவில்லா கருணையும் கொண்டவள். அவள் ஒரு சமயம் தன் பதியான ஸ்ரீமன் நாராணனிடம் "உலகில் ஏன் சிலரைக் கஷ்டப்படச் செய்கிறீர்கள்?,சிலரை ஏன் சுகப்படச் செய்கிறீர்கள்" என்று கேட்டாள்.


"எனக்கு எல்லோரும் ஒன்றுதான், அவரவர் பாவ-புண்ணியத்தின்படி கஷ்டமோ-சுகமோஅனுபவிக்கிறார்கள்" என்றார் நாராயணன்.


"அது எப்படி?"


"நேர்வழியில் போனால் சுகமாக, சுலபமாக போய்ச் சேரலாம். குறுக்கு வழியில் போய் கல்லும்,முள்ளும் குத்தி அவஸ்தையய் வரவேற்றால் அதற்கு யார் பொறுப்பு?" "அவர்கள் நேர்வழி செல்லும்படி எப்படிச் செய்வது?"


"என்னை நினைத்தாலே போதும். என்னை நினைத்து ஒரு பூவைப் போட்டாலும் போதும். என் மீதுஒரு பாமாலை பாடினாலும் போதும். அதைக்கூட பலர் செய்யாமல் இருக்கிறார்களே !" என்றவாறு பூமாதேவிக்கும், ஸ்ரீமந்நாராயணுக்குமான சம்பாஷணை தொடர்கிறது.


இப்போது தாயார்,"நீங்கள் உங்களுக்குப் பிடித்தமான ஒரு பக்தனை சொல்லுங்களேன், கலியில் ஹரி பக்தியின் சிறப்பைபார்க்கலாம்" என்றாள்.


இதற்கு பதிலாக பெருமாள் பின்வரும் லின்க்கினை பூமாதேவிக்குக் கொடுத்து படிக்கச் சொன்னார். http://madhavipanthal.blogspot.com/2006/11/blog-post_30.html


அந்தப் பதிவினைப் படித்த பூமாதேவி, "புரிந்தது ஸ்வாமி, பாசுரத்தைப் பாடியவனும், அதனை ஒருதடவைகேட்ட பிரம்மராக்ஷஸும் நற்கதி அடைந்ததுதானே இதன் சாரம்" என்றாள்.


"ஆமாம்; நான் ஜீவராசிகளுக்கு இதைவிட சுலபமான வழி என்ன காட்ட முடியும். இதைப் போலவே ஒருபுஷ்பத்தை எடுத்து எனக்கு அர்ப்பணம் செய்தாலும் நான் திருப்தி அடைந்து நற்கதி அளிப்பேன். அதைக்கூட செய்யாமலிருந்தால் நான் என்ன செய்ய?"


பூமாதேவி ஏதோ யோசிக்கத் தொடங்கினாள்


பகவான் அவளைப் பார்த்து, "என்ன தீவிர யோசனை?", என்க,
"ஒன்றுமில்லை ஸ்வாமி, எனக்கொரு ஆசை. அதை நிறைவேற்ற அருள் புரிய வேண்டும்"


"என்னம்மா அந்த ஆசை"


"ஸ்வாமி, நான் ஒரு தடவை பூமியில் பிறந்து பாமாலையினாலும், பூமாலையினாலும் தங்களை அர்ச்சித்து, உலகிற்கு வழிகாட்டியாகத் திகழ வேண்டுமென்பதே எனது ஆசை" என்று கூறினாள் பூமாதேவி.


பகவானும் "அப்படியே ஆகட்டும், நான் ஸ்ரீவில்லிப்புத்தூரில் வடபத்ர சாயியாக அர்ச்சையிலிருப்பேன்.அப்போது கருடாழ்வார் விஷ்ணுசித்தராக அவதரித்து திருத்துழாய் கைங்கர்யம் செய்வார். அவரது திருக்குமாரியாக அவரது திருத்துழாய் தோட்டத்தில் நீ தோன்றி பாமாலையும், பூமாலையும் சூட்டலாம்" என்று கூறினார்.


அதன்படி ஆடிமாதம், சுக்லபக்ஷ சதுர்த்தியும், பூர நக்ஷத்திரமும் கூடிய செவ்வாய்க் கிழமையன்று, பெரியாழ்வார்திருத்துழாய் பறிக்கும் நந்தவனத்தில் ஸ்ரீ ஆண்டாள் அவதரித்தாள்.


இன்று ஆடிப்பூரம். அன்னை பூமாதேவி, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாக அவதரித்த தினம்.

13 comments:

கீதா சாம்பசிவம் said...

பெரியாழ்வார் பெற்றெடுத்த குலக்கொடியே வாழியே வாழியவே!

மதுரையம்பதி said...

இதுதான் படிக்காமல் பின்னூட்டமிடுவதென்பதா கீதாம்மா?

குமரன் (Kumaran) said...

நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் மௌலி. பாமாலையுடன் பூமாலை சூடித்தர ஏன் விருப்பம் கொண்டால் என்பதை இப்போது புரிந்து கொண்டேன். நன்றி.

மதுரையம்பதி said...

கோதை பற்றி உங்களுக்குத் தெரியாததா குமரன்......

நீங்க இங்க வந்து படித்ததே பெரிய விஷயம், அதிலும் இப்படி ஒரு பின்னூட்டம், தன்யனானேன்...

தி. ரா. ச.(T.R.C.) said...

periyazvar avar pennai patri pathivu pottal periyavarkal pinnoottam ituvarkaLa? good article. you have projevted it in different view.

கீதா சாம்பசிவம் said...

படிக்கலைன்னு யார் சொன்னா? நான் எழுதின வரிகள் நினைவிலேயெ ஓடிக் கொண்டிருந்தது. அதையே பின்னூட்டமாய்ப் போட்டேன். :D

மதுரையம்பதி said...

கீதா மேடம், புரிந்தது....

மதுரையம்பதி said...
This comment has been removed by the author.
மதுரையம்பதி said...

நன்றி தி.ரா.ச சார். நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்....

வல்லிசிம்ஹன் said...

மௌலி,அழகான அமைதியான வார்த்தைகள்.
ஆண்டாள் என்று பெயரும் வைத்துவிட்டுப் பூ வச்சுக்க்காம இரூக்கக் கூடாது என்று எங்க அப்பா
தினம் நூறு பிச்சிப்பூவாவது வாங்கி வரூவார்.

அம்மாவும் அதைத் தொடுத்து வைத்து அழகு பார்ப்பார்.
இப்படி வில்லிபுத்தூர் இருந்த பெண்களுக்குத் தனி அருமை கிடைக்கூம்..
அப்புறம் கோதையைப் பற்றிக் கேட்பானேன்.
அவள் மானிடத் தெய்வம்..
அணுக முடிந்த தேவதை.
அரங்கனீன் அழகு மணவாட்டி. செல்லப் பெண்டாட்டி.
அவளைத் தனி சன்னிதியில் பார்க்கும்ப்போது எனக்கு ஏம்மா இங்க்க தனியா நிக்கறனு கேட்கணும்னு தோணும்.:(

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

மெளலி சார்...பதிவை அப்போதே படித்தேன். பின்னூட்ட பயமாக இருந்தது!

பின்ன...என்ன இது?
//இதற்கு பதிலாக பெருமாள் பின்வரும் லின்க்கினை பூமாதேவிக்குக் கொடுத்து படிக்கச் சொன்னார். http://madhavipanthal.blogspot.com/2006/11/blog-post_30.html//

அடியேனை இவ்வளவு பலமாக அடிக்கலாமா? :-)
பூமிப் பிராட்டியே, மெளலி சொன்னது உயர்வு நவிற்சி தான் என்றாலும், பிராட்டியே அடியேன் பதிவுக்கு வந்தால்!!!! என்ன புண்ணியம் செய்தேனோ!

இன்னொன்றும் மெளலி சார்.
பெருமாள் தன்னை பற்றுமாறு தானே சொல்லிக் கொண்டான் வேதம் கீதை எல்லாவற்றிலும்! குழந்தைகள் அம்மா சொல்வதை இன்னும் ஒரு படி மேலாகக் கேட்கும் அல்லவா? அதான் பிராட்டி கிளம்பி விட்டாள்!

மதுரையம்பதி said...

//பிராட்டியே அடியேன் பதிவுக்கு வந்தால்!!!! என்ன புண்ணியம் செய்தேனோ!//

ராமனிருக்குமிடம் அயோத்தி என்பர், அதுபோல அனுதினமும் பெருமாளையும், அவருக்குகந்த ஆழ்வார்களையும் நீங்க எழுதும் போது, கண்டிப்பாக ஸ்ரீதேவியும், பூதேவியும் உங்களிடம்தான் வருவார்கள்..

நன்றி கண்ணபிரான்.

கவிநயா said...

//இதற்கு பதிலாக பெருமாள் பின்வரும் லின்க்கினை பூமாதேவிக்குக் கொடுத்து படிக்கச் சொன்னார். http://madhavipanthal.blogspot.com/2006/11/blog-post_30.html//

ஹாஹா. எப்படிங்க இப்படியெல்லாம்? :)) உங்க புண்ணியத்துல கண்ணன் பதிவையும் படிச்சேன். ஆண்டாள் பற்றி படிக்க திகட்டுவதே இல்லை. நன்றி மௌலி.