Thursday, August 9, 2007

ஸ்ரீ சரபேஸ்வரர்

திருமதி கீதா அவர்கள் சரபர் பற்றி தனது சிதம்பர மகாத்மீயம் தொடர் பதிவில் எழுதியுள்ளார். அதன் தொடர்ச்சியாக சரபர் பற்றி மேலும் சில தகவல்கள் இங்கே.


அவரது பதிவின் லின்க் கீழே.


http://aanmiga-payanam.blogspot.com/2007/08/blog-post_05.html


ஸ்ரீ லலிதா சகஸ்ர நாம உத்ர பாகத்தில் சரபர் பற்றி பின்வருமாறு சொல்லப்பட்டிருக்கிறது.


எவர் ஒருவர் ஸ்ரீ லலிதாசகஸ்ர நாமத்தை பக்தியோடு பாராயணம் செய்கிறார்களோ அவர்களது சத்ருக்களை சரப மூர்த்தி நாசம் செய்து காப்பார்.

இன்றும் நடக்கும் பில்லி-சூன்யம் போன்றவற்றை நீக்குவதற்கும், நாரசிம்ஹ மந்திரத்தால் கட்டப்பட்ட பிரயோகங்களை நீக்குவதற்கும் சரப சாளுவங்கள் என்ற் பிரயோகம் தந்திர சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. மகா உக்கிரமான நாரசிம்ஹத்தை அடக்கியதிலிருந்து சரப மூர்த்தியே மாரக பிரயோகங்களுக்கு மிக உத்தமமானவர் என்று சொல்லப்படுகிறது. (அப்போ வல்லியம்மா நீங்க சரப உபாசகராகத்தான் இருக்க முடியும், ஏன்னா நீங்களும் ஒரு சிம்ஹத்தை பல வருடங்களாக அடக்கியாள்கிறீர்கள் அல்லவா)



ஹிரண்யகசிபுவைக் கொன்ற நரஸிம்மத்தின் உக்கிரம் அதிகமாக இருந்ததால் அந்த உக்கிரம் உலகத்தை பாதிக்காது தவிற்க்க தேவர்கள், முனிவர்கள் சிவனை பிரார்த்திக்க, சிவபிரானும் வீரபத்ரரை அனுப்புகிறார். ஆனால் வீரபத்ரரையும் கட்டி வைத்து ஆட்டுகிறார் நரஸிம்மர். அப்போது வீரபத்திரர் பிரார்த்தனையால் சிவன் விரபத்திர வடிவிலிருந்து உருமாறி சரப உருக்கொண்டு நரஸிம்மத்துடன் 16 நாட்கள் போர் நடக்கிறது. 17ஆம் நாள் சரபர் நரஸிம்மத்தை தன் கரங்களால் தொட, அந்த ஹஸ்த தீக்ஷையானது நரஸிம்மத்தை தெளியவைக்கிறது. தனது செயலுக்காக வருந்திய நரஸிம்மர் 16 ஸ்லோகங்களால் சிவபெருமானை வழிபட்டார். (இந்த 16 ஸ்லோகங்களிலேயே சரபரின் 108 அஷ்ட்டோத்திர நாமாவாக உள்ளது) சரபர் நரஸிம்மத்துடன் இணைந்து இரண்டறக்கலந்தபின் தேவர்களையும், முனிவர்களையும் பார்த்து 'நீரும், நீரும், பாலும், பாலும் கலந்தால் எப்படி வேறுபடுத்த முடியாதோ, அது போல விஷ்ணுவும் சிவனும் ஒருவரே. எங்களை வேறுபடுத்திப்பார்க்கத்தேவையில்லை. என்று சொல்கிறார்.



சரபதத்துவம் என்னவென்றால், உபாசகன் இந்திரியங்களை அடக்கி அதன் வழியாக கார்யசித்தி அடையத்துவங்கும் காலத்தில் உபாசகனுக்கு கர்வமும் "தான்" என்ற மமதையும் இருக்கும். (இந்திரிய ஒடுக்கமே ஹிரண்ய வதம்) என்னதான் இந்திரியக் கட்டுப்பாடு இருந்தாலும் மனது அடங்காததால் அளவிற்கு மீறிய கோபம். இந்த அகங்காரத்தை ஒடுக்கிய சக்தியே சரபர்.



மான், மழு, சர்பம், தீ போன்றவற்றை ஆயுதமாக கொண்டிருக்கிறார் சரபர். இதில் அகந்தையை ஒழிக்கக் கூடியது மழு. மான் எப்போதும் சஞ்சலப் பார்வையுடையது, அதனை அடக்கி மனதை ஒருமுகப் படுத்தல் வேண்டும். குண்டலினிக்கு சாட்சியாக பாம்பும், தீயானது ஞானாக்னிக்கு சாட்சியாகவும் சொல்லப்படுகிறது. சரப மூர்த்திக்கு ஆதாரம் பல இடங்களில், குறிப்பாக ரிக் வேதம், தைத்ரீகம், ஸ்கந்த புராணம், காளிகா புராணம், பிரும்மாண்ட புராணம், சிவ பராக்ரமம் போன்றவை.



நல்லது செய்வதாகட்டும், அசுர சக்திகளை நாசம் செய்வதாகட்டும் இறைவனுக்கு உதவியாக பல சக்திகள் வந்துள்ளன. இங்கு சரபருக்கு இரு விதமான சக்திகள் உதவியுள்ளனர். ஒன்று மிக உக்ரமான பத்ரகாளி எனப்படும் பிரத்யங்கரா, இன்னொன்று சூலினி எனப்படும் துர்கா. புற சம்பந்தமான பாவங்களையெல்லாம் அழிப்பவள் துர்க்கா. அக சம்பந்தமான பந்தத்திலிருந்து நீக்கி முக்தியளிப்பவள் பிரத்தியங்கரா. சுருக்கமாகச் சொன்னால் இம்மைக்கு சூலினியும், மறுமைக்கு பிரத்யங்கராவும் அவசியம். இந்த இரு சக்திகளும் சரபருக்கு இரு இறக்கைகளாக விளங்குகின்றனர். பிரத்யங்கரா தேவியின் மந்திரங்களை கண்டறிந்து சொன்னவர்கள் அங்கிரஸ், பிரத்யங்கிரஸ் என்பவர்கள். இவளது மந்திரத்தை சாதகம் செய்பவர்களை துவேஷிக்கக் கூடாது. இவள் இறைவனது கோபத்திலிருந்து உதித்ததால்தான் "குரோத சம்பவாய" என்கிற நாமம் அன்னைக்கு ஏற்பட்டது.



சரபர் ஸிம்ஹ ரூபமுள்ளவரை அடக்கியதால் "ஸிம்ஹக்னர்" என்றும் சாலுக்கியர் வழிபட்டதால் "சாலுவேசர்" என்றும் அழைக்கப்படுகிறார். சாலுக்கியரில் இரு பிரிவுகளுண்டு. மேலை சாளுக்கியர், கீழை சாளுக்கியர் என்பதே அவை. இதில் கீழை சாளுக்கியர் சரபேஸ்வரரை குலதெய்வமாகவும் மேலை சாளூக்கியர்கள் நரஸிம்மத்தையும் வழிபட்டு வந்தனர். இவர்களுக்கும் சோழர்களுக்கும் இருந்த உறவின் முறையால் தமிழகத்தில் சரபர் வழிபாடு நிலைபெற்றிருக்கலாம்.



திரிபுவனத்தில் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப்பட்ட ஆலயம் தவிர மதுரை, சிதம்பரம், காரைக்குடி போன்ற சில இடங்களிலும் சரப வழிபாடு உண்டு. சரப வழிபாட்டிற்காக பல ஸ்லோகங்கள், நாமாவளிகள் உண்டு, அவை சரப அஷ்டகம், கவசம், சஹஸ்ர நாமம், அஷ்ட்டோத்திரம் போன்றவை. யாருக்கேனும் தேவையிருப்பின் பின்னூட்டமாக தெரிவியுங்கள், தருகிறேன்.

15 comments:

Geetha Sambasivam said...

நல்ல அருமையான பகிர்வு. இதில் "ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்", "வல்லி சஹஸ்ரநாமம்" :P தவிர மற்றது படிச்சிருக்கேன். சாளுக்கியர்கள் வழிபட்டது பற்றிச் சரித்திர பூர்வமாய் ஏதும் குறிப்புக்கள் இருக்கா? சிதம்பரத்தில் எங்கள் குடும்பத்தின் கட்டளையே பல வருஷங்களாய் சரபருக்குத் தான் செய்து வருகிறோம்.

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆஹா இவ்வளவு விஷயம் இருக்கிறதா சரப வழிபாட்டில். மிக்க நன்றி மௌளி சார். அஷ்ட்டகம் அனுப்பமுடியுமா மெயிலில்

தி. ரா. ச.(T.R.C.) said...

நம்ப முருகன் அருளுக்கு வாங்க அண்ணனோட தம்பியையும் வந்து வணங்குங்க

மெளலி (மதுரையம்பதி) said...

தி,ரா,ச சார், நீங்க என்னை சார் என விளிக்காதீர்கள்...உங்கள் முன் நான் மிகச் சிறியவன்......மெளலி என்றே அழையுங்கள்...ஒரிரு நாட்களில் கண்டிப்பாக அஷ்டகத்தை தட்டெச்சு செய்து அனுப்புகிறேன் சார்.

மெளலி (மதுரையம்பதி) said...

கீதா மேடம், நன்றி...
ஸ்ரீ வித்யாவிலும் பல இடங்களில் ப்ரத்யங்கரா பற்றிய குறிப்புக்கள் உள்ளன.

யாரேனும் ஸ்ரீவித்யா உபாசகனுக்கு எதிராக ஆபிசாரம் செய்தால், அதனை அன்னை பிரத்யங்கராவே தடுத்து ஏவியவருக்கே அந்த பலனைக் கொடுப்பவள்.

மெளலி (மதுரையம்பதி) said...

தி.ரா.ச சார், இதோ நேராக முருகனருளுக்குத்தான் அடுத்த மண்டகப்படி.

குமரன் (Kumaran) said...

மதுரையில் கல்யாண மண்டபத்திற்கு எதிரில் இருக்கும் சரபேஸ்வரரை பல நாட்கள் வணங்கி வந்தது நினைவிற்கு வருகிறது. அண்மைக்காலமாக அந்தப் பக்கம் போகவில்லை. அதனால் என்ன? உங்க இடுகை மூலம் அவரை இங்கிருந்தே வணங்கிவிட்டேன். :-)

Kavinaya said...

அடேயப்பா. எவ்வளவு செய்திகள். சரப தத்துவத்தையும் அருமையாய் விளக்கியிருக்கிறீர்கள். மிக்க நன்றி மௌலி.

gvsivam said...

நமஸ்காரம்,
எனக்கு சரபர் த்யானம்,மூலமந்திரம்,ச்லோகங்கள் தேவை.அனுப்பமுடியுமா?gvsivam@gmail.com

murali said...

I got the ஸரபர் swamy which has history of 500 years. Previously the swamy was with My father and his சித்தப்பா, their grandfather
I'm doing abshekam daily and performing archanai with 108 mantram. While abshekam மூலமந்ரம் சொல்ரேன்.
I'm going for sama class for learning rudhram (சாம வேத).
Please help me with some archanai mandram in Tamil it Sanskrit

murali said...

அனைவரும் தவமிருந்து இறைஞ்சும் சரபேஸ்வரர் இந்த சண்டாளனுக்கும் அருளப்போகிரார்.
தங்கள் ஆசியுடன் அர்ச்சனை மந்திரங்கள் வேண்டும்.

murali said...

அண்ணா சரபேஸ்வரர் அர்ச்சனை மந்திரங்களை இந்த அரிவிலிக்கு அருளவேண்டும்

murali said...

muralihomeloans@gmail.com
MURALI.krishnan1@lnttechservices.com
9035760134

murali said...

சரபேஸ்வரர் அர்ச்சனை மந்திரங்களை அருளவேண்டும்
மூர்தி எங்க இல்ல பூஜைல இருக்கு

Unknown said...

Nandri