Friday, August 10, 2007

காமாக்ஷி - கடாக்ஷி - 4ஆவது ஆடிவெள்ளி சிறப்புப் பதிவு

சில மாதங்க்ளுக்கு முன் "காமாக்ஷி" பெயர்க்காரணம் கேட்டிருந்தார் கே.ஆர்.எஸ். எனக்கு தெரிந்ததை தந்துள்ளேன் கீழே.

காமாக்ஷி பற்றி சொல்லப்பட்ட புராணங்கள் பின்வருமாறு.
1. மார்க்கண்டேய புராணத்தில் 'தேவீ மகாத்மீயத்தை அடுத்ததாக வரும் "ஸ்ரீ காமாக்ஷி விலாஸம்".
2.பிரம்மாண்ட புராணத்தில் விரிவாக உள்ள லலிதோபாக்யானம்.
3, ஸ்காந்த புராணத்தில் ஸநத்குமார ஸம்ஹிதையிலுள்ள 'காஞ்சீ மஹாத்மீயம்' மற்றும் அதில் வரும் 'தக்ஷ காண்டத்தில்'.
4. மற்றும் பல வடமொழி, தென்மொழி புராணங்கள், செவிவழிக் கதைகள்.

தேவியின் பல வடிவங்களுள், நாற்கரம் கொண்டு, அவற்றில் கரும்புவில், மலரம்பு, பாச-அங்குசம் தாங்கி அமர்ந்த கோலத்தில் இருப்பவளே காமாக்ஷி மற்றும் ஸ்ரீலலிதா பரமேஸ்வரி, ராஜராஜெஸ்வரி. மந்த்ரங்களில் தலையானதாக உள்ள ஸ்ரீவித்யா மந்த்ரங்களில் விவரிக்கப்பட்ட லக்ஷணப்படி அமைந்த விக்ரஹமே காஞ்சீ காமாக்ஷி விக்ரஹம். ஆக மொத்தமாக மந்த்ரங்களில் சிறந்த ஸ்ரீவித்யாவால் காட்டப்பட்ட ஸ்ரீ மாதாவின் ரூபம் காமாக்ஷீ.

இந்த தேவி எங்கு வாசம் செய்கிறாள்?. பிரளய காலத்தில் எல்லாம் அழிந்தாலும், அழிவில்லாத 'அக்ஷரம்' எனப்படும் ஓங்காரத்தின் ஒலியின் அலைகளான இருபத்துநான்கு சப்த சலனங்களிடையே அவள் வாசம் செய்கிறாள். ஆம்! அந்த இருபத்துநான்கு சப்தங்களை, இருபத்துநான்கு ஸ்தம்பங்களாகக் கொண்ட மண்டபத்தில் அவள் வாசம் செய்கிறாள். அதென்ன 24?, 16 கால், 1000 கால் மண்டபங்கள் எல்லாம் இருக்கும் போது ஏன் 24?. காயத்ரீ மஹாமந்திரம் இருபத்திநாலு அக்ஷரம் கொண்டது, அதன் மஹிமையைத்தான் நமக்கு அவ்வாறு விளக்குகிறாள் ஸ்ரீமாதா.தற்போதும் காஞ்சீயில் காமாக்ஷி கொலுவிருக்கும் மண்டபம் காயத்ரீ மண்டபம் என்றே அழைக்கப்படுகிறது.

சரி, அதென்ன காமாக்ஷி என்ற பெயர்?. இதன் விளக்கம் என்ன?.'க' என்ற பதம் பிரம்மனைக் குறிக்கும்; 'கஸ்மை தேவாய' என்று வேதத்தில் பல இடங்களில் பிரம்மனை குறிப்பிடப்பட்டுள்ளது. 'அ' என்பது சிவனின் பெயர். 'அ'காரத்திலேயே ஆண்பால் நாமங்கள் பெரும்பாலும் முடிகிறது உ.ம்: சிவ, ராம, க்ருஷ்ண என்பதாக.பிரகிருதிக்கு அப்பாற்பட்ட புருஷ ரூபம் சிவம் (லிங்கோத்ப்வ தத்வம்). 'ம' என்பது நாராயணனைக் குறிப்பது. எப்படி? 'மா' என்றால் லக்ஷ்மி, இதெப்படியெனில் அவளின் கணவன் 'ம' என்பதாலேயே, இவள் 'மா' ஆகிறாள். ஆக, 'க' என்ற ப்ரம்மன், 'அ' என்ற சிவன், 'ம' என்ற விஷ்ணு ஆகிய மூவரும் எவளது 'அக்ஷி'யிலிருந்து தோன்றினார்களோ, அவள் காமாக்ஷி. ('அக்ஷி' என்றால் கண்).

"ஸசாமர ரமா வாணீ ஸவ்ய தக்ஷிண ஸேவிதா" என்கிற லலிதையின் நாமா என்ன சொல்கிறதென்றால், வாணியும், ரமாவும் (லக்ஷ்மி), அன்னைக்கு இருபுறங்களிலும் சாமர சேவை செய்வதாக வருகிறது. ஸ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதர் தமது பாடலில் "சாரதா ரமா நயநே' என்று போற்றுவதிலிருந்து காமாக்ஷியின் கண்களாக கலைமகளும், அலைமகளும் இருப்பதாகவும் கொள்ளலாம். இதையே, சிவப்பிரகாச ஸ்வாமிகள், "நின் திருமுக பங்கயத்தில்கண்ணாயினர் உனக்கு அவ்வலைமாதும், கலைமகளும் பெண்ணார் அமுதனையாய்" என்கிறார்.

அடுத்ததாக பரஞ்சோதி முனிவர் தமது திருவிளையாடற்பாடலில், "திருமகள் வலக்கண், வாக்கின் சேயிழை இடக்கண், ஞானப்பெருமகள் நுதற்க்கண்ணாகப்பெற்று வான் செல்வம் கல்வி அருமைவீடளிப்பாள்" என்பதாக கூறுகிறார். பரஞ்சோதி முனிவர் மீனாக்ஷியை அப்படிக் கூறினாலும், அது காமாக்ஷியை மனதிலிருத்தியே என்பது தெரிகிறது.

15 comments:

மதுரையம்பதி said...

காமாக்ஷி பற்றி நிறைய எழுத ஆசையிருக்கிறது....பார்க்கலாம்...

தி. ரா. ச.(T.R.C.) said...

aanmeeka thakaval kalainjiyam athuthaan unka pera Mouli. good work congrats.

தி. ரா. ச.(T.R.C.) said...

aasaikalin kataisi ellai avalthaan athan kamashi entru maha periyavaa solli yirukkiraarkaL

மதுரையம்பதி said...

/aanmeeka thakaval kalainjiyam athuthaan unka pera Mouli. good work congrats./

T.R.C Sir,நீங்க சொல்லியிருக்கறது போல எனக்கு அவ்வளவாக தெரியாது சார்.

அஷி என்றால் கண் என்று பொருள். மன்மத தகனம் ஆனபின் உலகில் அவனது செயலை அன்னையவள் தனது கருணா கடாஷத்தால் நடத்தினாளாம். அதனாலும் அவளுக்கு அந்த பெயர் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

கீதா சாம்பசிவம் said...

words are too small to read even with the spex. Will come again and read. Do something for bold typing. Thank You.

மதுரையம்பதி said...

வயசாயிடுத்தில்லையா கீதா மேடம், அதான்...எனிவே உங்கள் கோரிக்கைக்கு செவிசாய்த்துவிட்டேன்..

கீதா சாம்பசிவம் said...

க்ர்ர்ர்ர், என்ன இது? சந்திலே சிந்து பாட ஆரம்பிச்சுட்டீங்க? ம்ம்ம்ம்ம், இப்போவும் அப்படியே தான் இருக்கு! ஒண்ணும் மாற்றம் இல்லை, ராயலைக் கேட்டுப் பாருங்க, சொல்லுவார், என்ன செய்யறதுன்னு!

தி. ரா. ச.(T.R.C.) said...

காமப் பரிபந்தி காமினி காமேஸ்வரி
காமபீட மத்யகதே
காமதுகா பவகமலே
காமகலே காமகோடி காமாக்ஷி
நன்றி மௌளி

தி. ரா. ச.(T.R.C.) said...

காமப் பரிபந்தி காமினி காமேஸ்வரி
காமபீட மத்யகதே
காமதுகா பவகமலே
காமகலே காமகோடி காமாக்ஷி
நன்றி மௌளி

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//மந்த்ரங்களில் தலையானதாக உள்ள ஸ்ரீவித்யா மந்த்ரங்களில் விவரிக்கப்பட்ட லக்ஷணப்படி அமைந்த விக்ரஹமே காஞ்சீ காமாக்ஷி விக்ரஹம்//

மிக அருமை மெளலி. வித்யா தீர்த்தர் என்று அவள் வழி வந்த ஆசாரியர்கள் கூட "வித்யா" என்றே பெயர் வழங்கப்படுகிறார்கள்!

//காஞ்சீயில் காமாக்ஷி கொலுவிருக்கும் மண்டபம் காயத்ரீ மண்டபம் என்றே அழைக்கப்படுகிறது//

ஓங்காரத்துக்கும் காயத்ரிக்கும் அவ்வளவு பிணைப்பு மெளலி...
திருவரங்கத்திலும் காயத்ரி மண்டபம் தான் கருவறைப் பிரகாரம். 24 தூண்கள். மேலே பிரணவம் - பிரணவாகார விமானம்.

//நின் திருமுக பங்கயத்தில்கண்ணாயினர் உனக்கு அவ்வலைமாதும், கலைமகளும் பெண்ணார் அமுதனையாய்//

தமிழும் சரி, வடமொழியும் சரி...நல்ல மேற்கோள்களைக் காட்டுறீங்க!

மதுரையம்பதி said...

நன்றி கண்ணபிரான்....

ஸ்ரீரங்க கருவறைச் செய்தி எனக்குப் புதிது.....நன்றி.

குமரன் (Kumaran) said...

காமாக்ஷி அம்மனைப் பற்றிய இவ்வளவு விவரங்களை ஒரே இடத்தில் இன்று தான் படித்தேன் மௌலி. மிக்க நன்றி.

மதுரையம்பதி said...

பின்னூட்டத்திற்கு நன்றி குமரன்.

goma said...

புதிதாக வலை ஒன்று பின்னியியிருக்கிறேன் .என் அறிவுக்கு எட்டிய ஆன்மீகம்,அனுபவத்தில் கிட்டிய படிப்பினைகள் என்று பின்னி இருக்கிறேன் பின்னி.வந்து வாசிக்க அழைப்பு விடுக்கிறேன்

கவிநயா said...

அன்னை காமாக்ஷியைப் பற்றி அரிய பதிவு. நன்றி மௌலி.