Saturday, August 4, 2007

இவருக்கு மேல இன்னுமொரு நாயகன் இல்லை.....


விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் வேந்தனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து....


- நம்பியாண்டார் நம்பி.



வி-நாயகன் அதாவது தனக்கு மேல் தன்னை நடத்துவிக்கும் நாயகர் இல்லாதவர் என்று அர்த்தம். 'அநீஸ்வராய' என்பதும் இந்த அர்த்தத்தில் வருவதே. இதை ஆதி சங்கரர் தனது கணேச பஞ்சரத்னத்தில், அநாயக ஏக நாயகம் (முதாகரார்த்த மோதகம் என்று ஆரம்பிக்கும்) என்கிறார். ஆதிசங்கரர் கணேச புஜங்கமும் எழுதியவர். பஞ்சரத்தினம் கைலாயத்தில் கணபதியை தரிசித்து அங்கு நடந்தவற்றை எழுதியது பஞ்சரத்தினம் என்பதால் இதை முக்தி கணேச ஸ்தோத்திரம் என்கிறார்கள்.

நாலு வேதங்களிலும் விக்னேஸ்வரரைப் பற்றி பலவாறு சொல்லப்பட்டிருக்கிறது. பஞ்ச உபநிஷதங்கள் இவரை பூஜிக்கும் முறையை விளக்குகிறது, கணேச, முத்கல புராணங்கள் இவரை பற்றி விரிவாக சொல்லியிருக்கிறது.

கணபதியை உபாஸிக்கும் பக்தர்களுடைய மனதில் 'நீர்-நிலம்-விசும்பு-தீ-காற்று என்ற் பஞ்ச ரூபங்களின் அதிபதியாகவும், நிர்க்குண பிரும்மத்தின் வடிவமாக 'ஓம்;கார ஸ்வருபமாக இருப்பதாக காணாபத்தியம் சொல்கிறது.

கணபதியை வணங்குபவர் மற்ற தெய்வங்களை துதித்துப் பின் இவரை துதிப்பதில்லை, ஆனால் மற்ற தெய்வங்களை துதிக்கையில் கணபதியைப் முதலில் பூஜிக்க வேண்டும். இது இவருக்கான தனிச்சிறப்பை உணர்த்துகிறது.


ஓம் என்ற பிரணவ ரூபமான விநாயகரை அவர் பரபிரம்மமாக இருப்பதால் தான் எந்த கர்மாவிற்க்கான சங்கல்பத்திலும், முதலில் ' ஓம் சுக்லாம் பரதரம்'
என்று ஆரம்பிக்கும்படியாக வைத்துள்ளார்கள்.


இவவாறாக பலவிதங்களிலும் இறைவழிபாட்டில் முதலிடம் பெற்ற கணநாதனை வணங்கி இந்த பதிவினை ஆரம்பிக்கிறேன். இங்கு எனக்கு தெரிந்தவற்றை/படித்தவற்றை பகிர்தல் மட்டுமே இலக்கு. நானாக எந்த திரட்டியிலும் சேர்க்கும் எண்ணமும் இல்லை. ஏதேனும் தவறு இருப்பின் சுட்டிக்காட்டி வழிப்படுத்த் அன்பு நண்பர்களை வேண்டிக்கொள்கிறேன்.

6 comments:

வல்லிசிம்ஹன் said...

Mauli, starting with Sri Ganapathi,and proceeding with your Anmikap pathivukaL should grow more and give valuable informations.
I pray that you shd succeed in your endeavour.
You will. we need blogs like this.
Will send my comments in THamizh when I get the opportunity.
all our Blessings come your way.

மெளலி (மதுரையம்பதி) said...

நன்றிகள் பல வல்லியம்மா. உங்களைப் போன்றோரது ஆசிகளும் வழிகாட்டல்களூம் கண்டிப்பாக எங்களை நல்வழிப்படுத்தும்.

குமரன் (Kumaran) said...

மிக நல்ல தொடக்கம் மௌலி ஐயா. இனிய கட்டுரைகள் பலவும் பக்திச் சுவையுடன் படிக்கக் கிடைக்கும் என்று எண்ணுகிறேன்.

கணேசாய நம:

மெளலி (மதுரையம்பதி) said...

நன்றி குமரன். தயவுசெய்து என்னை ஐயா என்றெல்லாம் அழைக்காதீர்கள்...எனக்கும் கிட்டத்தட்ட உங்கள் வயதுதான் இருக்கும். மெளலி என்பதே சரி.

உங்களைப்போல், கே.ஆர்.எஸ் போல எழுத என்னால் முடியாது, ஆனால் சில விஷயங்களைப் பதிவிட வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. பராசக்தி அருளவேண்டும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மெளலி ஐயா...
அழகான துவக்கம்! Will add your blog to google reader.

//அநாயக ஏக நாயகம்//

சரியான எடுத்துக்காட்டு!
கணபதியானில் துவங்கி விட்டீர்கள்...இனி எல்லாம் ஜெயமே!

மெளலி (மதுரையம்பதி) said...

நன்றி கே.ஆர்.எஸ்