Tuesday, August 3, 2010

க்ஷயவ்ருத்தி வினிர்முக்தா, க்ஷேத்ரபால ஸமர்ச்சிதா



க்ஷேத்ரம் என்பது இறைவன் இருக்கும் ஊருக்கு, கிராமத்திற்குப் பெயர் என்பதை நாம் அறிவோம். காசி-க்ஷேத்ரம், காஞ்சி-க்ஷேத்ரம் என்றெல்லாம் சொல்வதைப் பார்க்கிறோம். தக்ஷப் ப்ரஜாபதியின் யாகத்தை அழித்த பிறகு அன்னையின் சரீரத்தை தனது தோளில் தாங்கி அலைந்ததாகவும், அப்போது பரமசிவனது துக்கத்தை மாற்ற யாருக்கும் ஏதும் தோன்றாது இருக்கையில், ஸதீ தேவியின் சரீரம் இருக்கும் வரையில் பரசிவனது துக்கதை மாற்ற இயலாது என்று உணர்ந்த மஹா-விஷ்ணு,தனது சக்ராயுதத்தால் ஸதீதேவியின் சரீரத்தை துண்டாக்குகிறார். அப்படி துண்டுகளான சரீர பாகங்கள் வீழ்ந்த இடம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு க்ஷேத்ரமாக, அம்பிகையின் பீடங்களாக ஆனது என்பர் பெரியோர். இந்த் க்ஷேத்ரங்களில் ஸ்வரூபமாக இருப்பவள் அம்பிகை என்பதே "க்ஷேத்ர ஸ்வரூபா".

க்ஷேத்ரம் என்பதற்கு ப்ரதிவீ போன்ற முப்பத்தாறு தத்வங்கள் அடங்கிய உடலையும் பொருள் சொல்லலாம். உடலில் இருக்கும் ஜீவனை க்ஷேத்ரக்ஞன் என்றும் புருஷன் என்றும் சொல்வது. இப்படி சகல் ஜீவராசிகளிலும் இருக்கும் பரமாத்மா ஸ்வரூபமே அம்பிகை என்றும் சொல்லலாம் என்கிறார்கள் பெரியோர். இப்படி க்ஷேத்ரக்ஞனாக இருக்கும் பரமாத்மாவின் பத்னீ என்பதால் அம்பிகையை "க்ஷேத்ரேசீ " என்று அடுத்த நாமத்தில் சொல்லிவிடுகிறார்கள். இப்படி க்ஷேத்ரம், க்ஷேத்ரக்ஞன் ஆகிய இருவரையும் காப்பவள் என்பதால் "க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ பாலினீ".

இப்படி க்ஷேத்ரக்ஞனான பரமாத்மாவின் பத்னி எப்படிப்பட்டவளென்றால், அவள், குறை-நிறை ஏதுமில்லாது இருக்கிறாள் என்கிறார்கள் "க்ஷயவ்ருத்தி வினிர்முக்தா" என்னும் நாமத்தில். "க்ஷயம்" என்றால் குறை, "வ்ருத்தி" என்றால் அதிகம். இந்த பாவங்கள் ஏதுமில்லாதவள் அம்பிகை என்பது சிறப்புத்தானே?.

இப்படி நிறை-குறைகளற்ற அம்பிகையை காக்கும் க்ஷேத்ர பாலனால் வணங்கப்படுபவள் என்பதே "க்ஷேத்ரபால ஸமர்ச்சிதா". யாகம் செய்யும் இடத்திற்கும் க்ஷேத்ரம் என்று பெயர். யாகங்களைக் காக்கும் இறைவனை க்ஷேத்ரபாலன் என்பார்கள். அப்படியான க்ஷேத்ரபாலனால் வணங்கப்படுபவள் அம்பிகை என்கிறார்கள். தாருகனை அழித்த தேவி, தனது கோபம் தணியாது இருக்கையில், ஈசன் சிறு பாலகனாக வந்து அவளது ஸ்தனங்கள் மூலமாக பானம் செய்து அவளது கோபத்தைத் தணித்தானாம். இப்படி அம்பிகைகயின் கோபத்தை அடக்கிய ஈசனுக்கு, க்ஷேத்ரபாலன் என்று பெயர். அன்னையினிடத்து தணியாத பக்தியுடையவர்களுக்கு ஏற்படும் இன்னல்களையெல்லாம் தகர்ப்பதால் இந்த க்ஷேத்ரபாலகன் விசேஷம். அப்படியான க்ஷேத்ர பாலனே வணங்கும் தேவி என்பது சிறப்பு.

10 comments:

Jayashree said...

அருமை மௌலி !!
க்ஷயம் என்பது - தேயறது , the one that fades away.
வ்ருத்திங்கறது வளர்வதுனும் அர்த்தப்படலாம், மற்ற ஒன்று, மனத்தின் எண்ன ஓட்டமா எப்படி சொல்லறதுனு தெரியல்ல, thought process, form, chain, imagination எல்லம் சேந்து மனசுலேந்து எழுகிற எண்ணக்கலவை நும் பொருள் படலாம்னு நினைக்கிறேன்
க்ஷய வ்ருத்தி க்கு மனத்திலேந்து எழற எண்ணம் எல்லத்தையும் தேய வைப்பவள் , மனசை கரைய,அழிய வைப்பவள் நும் பொருள் படலாம்.

வினிர்முக்தா no separate self

க்ஷேத்ர(P)பால சமர்ச்சிதா - க்ஷேத்ரபாலர் - பைரவர் (palan kare)
kshethram + palan

இன்னொரு இடத்துல காளியை ஷாந்த படுத்திய ஷிவனாகிய குழந்தை-( க்ஷேத்ர (b)பாலன்.காளியோட maternal instinct ஐ சொல்ல:) உன்னிப்பா கவனிச்சா அது யாரு - கணபதியோ? காமேஸ்வர முகாலோல கல்பித ஸ்ரீ கணேஷ்வரா?சிவனின் முகத்தை நினைந்து உருவான குழந்தை, பாலன்?? க்ஷேத்ர(ஞ) பால ஸமர்சிதா?

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

அருமையான பதிவு.
நடராஜ தீக்ஷிதர்
www.natarajadeekshidhar.blogspot.com

vijayaragavan said...

We can award a Phd., to Jayashree madam :) .

மதுரையம்பதி said...

வாங்க ஜெயஸ்ரீ-மா. மிக அருமையாச் சொல்லியிருக்கீங்க....நல்ல ஒப்பீடு...:)

மதுரையம்பதி said...

வாங்க தீக்ஷதர்...முதல் வருகைக்கு நன்றி....உங்கள் ப்ளாக் பக்கம் வந்திருக்கிறேன், ஆனால் பின்னூட்டியதில்லை.

மதுரையம்பதி said...

வாங்க விஜய், ஜெயஸ்ரீமா மிக சிரத்தையாகப் படித்து பல இடங்களில் அழகான தொடர்புகளைக் கூறுவார்....முந்தைய இடுகைகளைப் பார்த்தீர்களானால் தெரியும்.

Sweatha Sanjana said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

Anonymous said...

சென்னையில் பெசண்ட் நகரில் உள்ள அராளகேசி சமேத ரத்னகிரீஸ்வரர் கோவிலில் சம்பூர்ண சஹஸ்ர சண்டி ஹோமம் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 12 வரை நடைபெறுகிறது.

கிருஷ்ணமூர்த்தி.K

குமரன் (Kumaran) said...

க்ஷேத்ர ஸ்வரூபா என்னும் போது பிரகிருதி உருவாக அன்னை இருப்பதையும், க்ஷேத்ரேசீ என்னும் போது ஜீவனாக அன்னை இருப்பதையும் கூறும் திருநாமங்கள் அடுத்து க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ பாலினீ என்று சொல்லும் போது பிரகிருதிக்கும் ஜீவனுக்கும் நிலையாக அவற்றிற்கு அடிப்படையாக இருக்கிறாள் அன்னை என்ற தத்துவம் சொல்லப்படுவதாக லலிதா சஹஸ்ரநாமம் கேட்கும் போது தோன்றும்.



க்ஷய வ்ருத்தி விநிர்முக்தா என்னும் திருநாமமும் இதனை வலியுறுத்துவதாகத் தோன்றும். கூடுவதும் குறைவதும் பிரகிருதிக்கு உண்டு; பிரளய காலத்தில் சூக்ஷ்ம ரூபத்தில் ஒடுங்குவதும், சிருஷ்டி காலத்தில் ஸ்தூல ரூபத்தில் விரிவதுமாக இருப்பது பிரகிருதி. அளவால் கூடுதல் குறைதல் ஜீவனுக்கு இல்லை என்றாலும், ஞானத்தால் கூடுதல் குறைதல் ஜீவனுக்கு உண்டு; பந்தத்தில் ஞானக் குறையும் விடுதலையில் ஞான விரிதலும் (இயற்கை ஞானம் அடைதலும்) ஜீவனுக்கு உண்டு. இறைவிக்கு இவ்விரண்டும் இல்லை; ரூபத்தாலும் ஞானத்தாலும் கூடுவதும் குறைவதும் இல்லாதது பிரம்ம தத்துவம்.



க்ஷேத்ர பால ஸமர்ச்சிதா என்னும் போது க்ஷேத்ரத்தைப் பாலிப்பவனால் (ஜீவனால்) நன்கு அர்ச்சிக்கப்படுபவள் என்ற பொருள் வரும் என்று நினைக்கிறேன். அங்கே சொல்லப்பட்டது paala; baala இல்லை. ஜெயஸ்ரீ அம்மாவும் சொல்லியிருக்கிறார்கள்.

க. ஹேமலதா பாலசுப்பிரமணியன் said...

NAMASTHE SIR . ANNAIYIN AAYIRAM NAAMANGAL AUNBAVITHU PADIKKA PADIKKA ANAITHUM THARUM PERINBANGAL. vEEDUGAL THORUM SHREE MATHA aMBIGAIYIN ARUL VELLAM PERUGI SEZHIKKATTUM THANGALIN INDA 1000) ANNAYIN NAMA VAIBHAVA MUYARCHIKKU 1000 SABHASHUM 1000 jAI YUM. NANDRI.