Wednesday, May 19, 2010

சங்கர ஜெயந்தி சிறப்புப் பதிவு 3 : சங்கரரும் சாரதையும்

ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர

தெய்வங்கள் மற்றும் மஹான்களின் ஜனன தினத்திற்கு முன்னர், பின்னர் என்று ஏதேனும் ஒரு பத்து நாட்களோ, அல்லது 4 நாட்களோ பெரும் விழாவாகக் கொண்டாடுவது மரபு. இதில் ஜனன-தினத்திற்கு முந்தைய விழாவை கர்போத்ஸவம் என்றும், ஜனனத்திற்குப் பின்வரும் விழா நாட்களை ஜனனோத்ஸவம் என்றும் கூறுகிறார்கள்.

இதைப் போலவே நாமும் சங்கர பகவத் பாதரின் கர்போத்ஸவதையும் ஜனனத்தையும் கொண்டாடிவிட்டோம். அவரது ஜனன தினத்தின் அடுத்த நாளான இன்று இந்தப் பதிவின் மூலமாக அவரது ஜ்னன உத்ஸவத்தையும் கொண்டாடி அவரது அருளை வேண்டிடுவோம்.

மஹான்களது ஜெயந்தியைக் கொண்டாடுவது என்பது அவர்கள் சொல்லிய வழியைப் பின்பற்றி வாழ வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவே!. இன்று நாம் சங்கர பகவத் பாதர் செய்த சாரதா புஜங்கத்தைப் பொருளுடன் பார்த்து, அந்த சாரதையின் அருளுக்குப் பாத்திரமாகி, ஞான வைராக்யத்தை வேண்டுவோம்.




ஸுவக்க்ஷோஜகும்பாம் ஸதா பூர்ணகும்பாம்
ப்ரஸாதாவலம்பாம் ப்ரபுபுண்யவலம்பாம்
ஸதாஸ்யேந்து பிம்பாம் ஸதா நோஷ்ட பிம்பாம்
பஜே சரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம்!

தனது ஸ்தனங்களில் அருளைக் கொண்டவள், அமுத கலசத்தைக் கையில் ஏந்தியவள், கருணையுடன் காத்திடும் அம்பிகை. புண்ணியம் செய்தவர்களால் மட்டுமே அறியமுடிந்தவள், நிலவைப் போன்று ஒளிர்பவள், காருண்யம் தோய்ந்த புன்முறுவலுடைய எனதன்னை சாரதாம்பாளை இடைவிடாது துதிக்கிறேன்.

கடோக்ஷேதயார்த்ராம் கரே ஞானமுத்ராம்
கலாபிர்விநித்ராம் கலாபை: ஸுபத்ராம்
புரஸ்த்ரிம் விநித்ராம் புரஸ்துங்க பத்ராம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம்!

கடைக்கண் பார்வையாலேயே கருணையை அருள்பவள். கரத்தில் ஞான முத்ரையைக் காட்டுபவள். கலைகளின் இருப்பிடம் அவளே!. ஸ்வர்ணமயமான ஆபரணங்களுடன், விழி மூடாது உலகை ரக்ஷிப்பவள். துங்கா நதிக்கரையில் வாசம் செய்யும் எனதன்னை சாரதாம்பாளை வணங்குகிறேன்.

லலாமாங்கபாலாம் லஸத்கானலோலாம்
ஸ்வ்பக்த்தைக பாலாம் யச: ஸ்ரீகபோலாம்
கரே த்வக்ஷமாலாம் கனத் ப்ரத்னலோலாம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம்

ஒளிரும் நெற்றிச் சுட்டியை உடையவள், சங்கீத சேவையால் கவரப்படுபவள். தனது பக்தர்களைக் காப்பதில் கீர்த்தி பெற்றவள். புனிதமான கன்னங்களூடன் கையில் அக்ஷமாலையைக் கொண்டவள். கண்ணைக் கவரும் அணிமணிகளுடன் ஒளிர்பவள். அந்த அன்னை சாரதையை இடைவிடாது வணங்குகிறேன்.

ஸுஸீமந்தவேணீம் த்ருசா நிர்ஜிதைணீம்
ரமத்கீரவாணீம் நமத் வஜ்ரபாணிம்
ஸுதா மந்த்ரஸ்யாம் முதாசிந்த்ய வேணீம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம்

முன்வகிட்டுடன் கூடிய பின்னலில் குஞ்சலங்களை உடையவள். மருண்ட மான் போன்ற விழியினை உடையவள். கிளியுடன் பேசி மகிழ்பவள், இந்திராதியரால் வணங்கப்படுபவள். புன்னகையுடன் கூடிய வசீகர முகலாவண்யம் உடையவள். அலையலையாப் புரளும் கூந்தலுடையவள்.அந்த என் அன்னை சாரதையை வணங்குகிறேன்

ஸுசாந்தாம் ஸுதேஹாம் த்ருகந்தேக சாந்தாம்
லஸத்ஸல்லதாங்கீ மனஸ்தாம சிந்த்யாம்
ஸ்ம்ருதாம் தாபனஸ: ஸர்கபூர்வஸ்திதாம் தாம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம்

காருண்யம் மிக்க பேரழகி, கொடி போன்ற மேனியளாக ஜொலிப்பவள். நிர்மலமான குணமுடைய நித்யகல்யாணி. தவமுனிவர்களும் தொழும் பிரபஞ்சத்தின் முதலானவள். அந்த என் அன்னை சாரதையை வணங்குகிறேன்

குரங்கே துரங்கே ம்ருகேந்த்ரே ககேந்த்ரே
மராலே மதேபே மஹோக்ஷேதி ரூடாம்
மஹத்யாம் நவம்யாம் ஸதாஸாம ரூபாம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம்

மகா-நவமி காலங்களில் மான், அன்னம், சிங்கம், யானை, குதிரை, காளை, கழுகு ஆகிய வாகனங்களில் அழகாக வந்து பக்தர்களுக்கு அருள்பவளும், எப்போதும் அமரிக்கையானவளுமான எனது அன்னை சாரதையை வணங்குகிறேன்.

ஜ்வலத் காந்தி வஹ்னீம் ஜகன் மோஹனாங்கீம்
பஜே மானஸாம்போஜ ஸுப்ராந்த ப்ருங்கீம்
நிஜ ஸ்தோத்ர ஸங்கீத ந்ருத்ய ப்ரபாங்கீம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம்

ஜ்வலிக்கும் அனல் போன்ற ஜோதி ரூபமானவள். அனைத்து உலகையும் தன்வசப்படுத்தியவள். அடியவர்களின் இதயத்தாமரையில் வண்டாக ரீங்கரிப்பவள். இயற்கையான நாதம், நடனம், ஸ்தோத்திரம் போன்றவற்றின் உள்ளொளியானவள். அவ்வாறான எனது சாரதாம்பாளை வணங்குகிறேன்.

பவாம் போஜ நேத்ராப்ஜ ஸம்பூஜ்யமாணாம்
லஸன் மந்தஹாஸ ப்ரபாவக்த்ர சிஹ்நாம்
சலச்சஞ்சலாசாரு தாடங்க கர்ணாம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம்

முக்கண்ணன், மாதவன் போன்றோரால் வணங்கப்படும் பெருமையுடையவள். ஒளிவீசும் புன்-முறுவலுடையவள், அவளது காது குண்டலங்கள் அசைந்து-அசைந்தாடுவது அழகுக்கு அழகு சேர்க்கும். இப்படியான என் அன்னை சாரதையை எப்போதும் முழுமனதுடன் வணங்குகிறேன்.

ஸ்ரீ சங்கரரும், ஸ்ரீ சாரதாம்பிகையும் எல்லோருக்கும் அவரவர் மனோபீஷ்டங்களை நிறைவேற்றி அருளட்டும்.


ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர

8 comments:

தக்குடு said...

//ஒளிவீசும் புன்-முறுவலுடையவள், அவளது காது குண்டலங்கள் அசைந்து-அசைந்தாடுவது அழகுக்கு அழகு சேர்க்கும். இப்படியான என் அன்னை சாரதையை எப்போதும் முழுமனதுடன் வணங்குகிறேன்// சிருங்கேரி போய் பார்த்த மாதிரி இருக்கு அண்ணா! சங்கரஜெயந்தி பிரமாதம்!!!

குமரன் (Kumaran) said...

கர்போத்ஸவம், ஜனனோத்ஸவம் வேறுபாடெல்லாம் இன்று தான் தெரிந்தது மௌலி.

வாக் விலாஸினி, வித்யா தாயினி, வேத மாதா சாரதாம்பாம் பஜே!

திராவிட சிசும் பஜே!

Jayashree said...

ஸ்ரீ சாரதே சாரு ரூபே ரிஷ்ய ஸ்ரீங்காஸ்ய லஷ்யதே பஜே மாதரம் த்வாம் ஸ்ரீ ஷாரதே.
துங்கா நதி புண்ய தீரே தாப சானந்த போரே தபோராதி சோரே நித்யம் வஸந்தீம் ஜ்வலந்தீம் சர்வ வித்யா தாத்ரீம்
விரிஞ்சஸ்ய பந்தீம் ஸ்ரீ சங்கரஸ் ஸ்தாபிதாம் தாம் சாந்தி தன்யாதி வந்த்யாம் சர்வத்ர தாத்ரீம்ம் தேசி கேந்ர ஸ்வருபேண சர்வந்த்ர யாந்தீம் என்கிற ஸ்ரீ அனந்த ராம தீக்ஷிதரோட சாரதா அஷ்டகமும் எனக்கு பிடித்த ஒன்று. அடுத்தது வைகாசி விசாகமா? சைவ, வைஷ்ணவ , புத்த பெருவிழா. :))))

மதுரையம்பதி said...

வாங்க தக்குடு...உங்களுக்குப் பிடித்திருப்பது எனக்கும் சந்தோஷமே! :-)

மதுரையம்பதி said...

வாங்க குமரன்....வேதமாதாவை உங்களுடன் நானும் ஒரு முறை வணங்கிக் கொள்கிறேன். :)

மதுரையம்பதி said...

வாங்கோ ஜெயஸ்ரீ-மா!..

// ஸ்ரீ அனந்த ராம தீக்ஷிதரோட சாரதா அஷ்டகமும் எனக்கு பிடித்த ஒன்று. //

எனக்குத் தெரியாதே?, நேரம் கிடைக்கையில் முழுவதும் தட்டச்சித் தாருங்களேன்?, ப்ளீஸ்.

//அடுத்தது வைகாசி விசாகமா? சைவ, வைஷ்ணவ , புத்த பெருவிழா. :))))//

ஹிஹிஹி....நேரம் கிடைத்தால் பார்க்கலாம்....இதுக்கே ரொம்ப கஷ்டமாகிடுத்து...முருகனருள் இருந்தால் நடக்கும்.

திவாண்ணா said...

மௌலிக்கு அந்த சாரதையும் சம்கரரும் நிறைய அருளட்டும்!

Anonymous said...

//ஸ்ரீ சாரதே சாரு ரூபே ரிஷ்ய ஸ்ரீங்காஸ்ய லஷ்யதே பஜே மாதரம் த்வாம் ஸ்ரீ ஷாரதே.
துங்கா நதி புண்ய தீரே தாப சானந்த போரே தபோராதி சோரே நித்யம் வஸந்தீம் ஜ்வலந்தீம் சர்வ வித்யா தாத்ரீம்
விரிஞ்சஸ்ய பந்தீம் ஸ்ரீ சங்கரஸ் ஸ்தாபிதாம் தாம் சாந்தி தன்யாதி வந்த்யாம் சர்வத்ர தாத்ரீம்ம் தேசி கேந்ர ஸ்வருபேண சர்வந்த்ர யாந்தீம் // excellent jayshreema!! full slokam plessssssssss!

Thakkudu