Sunday, November 2, 2008

பாலசுப்ரமண்யம் பஜேஹம்.....ஸ்ரீ முத்துஸ்வாமி திக்ஷிதர் பற்றி நாம் எல்லோரும் அறிவோம். அவருக்கு முருகப் பெருமானிடமான பக்தி சிறப்பானது. சுப்ரமண்ய-ஸ்வாமியே தீக்ஷதருக்கு ஷோடசி உபதேசம் செய்து வைத்ததாக கூறுவர். தீக்ஷதரது "ஸ்ரீ சுப்ரம்மண்யாய நமோஸ்துதே" என்னும் க்ருதி நாமறிந்ததே. இந்த வரிசையில் தீக்ஷதர் பண்ணிய இன்னொரு க்ருதி "பாலசுப்ரமண்யம் பஜேஹம்" என்னும் சுருட்டி ராகத்தில் அமைந்த க்ருதியை இன்று பார்க்கலாம். குஹனை தமது குருவாகக் கொண்ட தீக்ஷதர், கமலாம்பா நவாவரண க்ருதிகள் பண்ணும் போது விநாயகரை வணங்கி "மகாகணபதி வரதுமாம்" என்று யானை முகத்தானை வணங்கியபின் தமது குரு வணக்கமாக பாலசுப்ரமண்யம் பஜேஹம் என்று தொடங்கும் இந்த க்ருதியை பண்ணியதாக அறிகிறோம். இந்த வடமொழி க்ருதியையும் அதன் பொருளையும் பார்க்கலாமா?

பாலசுப்ரமண்யம் பஜேஹம் பக்தகல்பபூருஹம்
ஸ்ரீ பால சுப்ரமண்யம் பஜேஹம்

[பால சுப்ரமண்யனை பஜனை செய்கிறேன். பக்தர்களுக்கு கல்பவ்ருக்ஷத்தை போல வேண்டியதெல்லாம் தருபவரான ஸ்ரீ பாலசுப்ரமண்யனை பஜனை செய்கிறேன்]

நீலகண்டஹ்ருதாநந்தகரம் நித்யஸுத்தபுத்த முக்தாம்பரம்
ஸ்ரீபால சுப்ரமண்யம் பஜேஹம்

[நீலகண்டனான பரமசிவனது மனதில் ஆனந்தத்தை உருவாக்குபவரும், நித்யமானதும் (நித்ய), பரிசுத்தமானதும் (ஸுத்த), அறிவுமயமானதும் (புத்த), தளைகளற்றதும் (முக்தம்), ஆகாச வெளியாகவும் (அம்பரம்) விளிக்கப்படும் பரபிரம்மான பாலசுப்ரமண்யனை பஜனை செய்கிறேன்]


வேலாயுததரம் ஸுந்தரம் வேதாந்தார்த போதசதுரம்
பாலாக்ஷகுருகுஹாவதாரம் பராசக்தி ஸுகுமாரம்தீரம்

[வேல் என்னும் ஆயுதத்தை ஏந்தியவரும், வடிவழகரும், வேதங்களின் மூலப்பொருளான ப்ரணவ மஹா-மந்திரத்தை உபதேசிக்கக்கூடிய நிபுணத்துவம் உடையவரும், பரமேஸ்வரனது நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றி குரு குஹனாக அவதாரம் செய்தவரும், அன்னை பராசக்தியின் அழகிய திருக்குமரனும், வீர-தீர பராக்ரமம் கொண்டவரான பாலசுப்ரமண்யனை பஜிக்கிறேன்]

பாலிதகீர்வாணாதி ஸமூஹம் பஞ்சபூதமய மாயாமோஹம்
நீலகண்டவாஹம் ஸுதேஹம் நிரதிசயாநந்த ப்ரவாஹம்


[தேவர்கள் முதலான நல்லோர்களைக் காப்பாற்றுபவரும், பஞ்சபூதங்கள் என்ற மாயையால் ஜீவர்களை மயங்கச் செய்பவரும், மயிலை வாஹனமாகக் கொண்டவரும், அழகிய மேனியுடையவரும். நிகரில்லாத பரமானந்தப் பெருவெள்ளத்தை பெருக்கெடுக்கச் செய்பவருமான சுப்ரமண்யனை பஜிக்கிறேன்]

ராகம் : சுருட்டி : ஆதி தாளம் : பாடியவர் சீதா ராஜன் அவர்கள்.

Get this widget | Track details | eSnips Social DNAசுப்ரம்மண்யோஹம்!
சுப்ரம்மண்யோஹம்!
சுப்ரம்மண்யோஹம்!.

13 comments:

கவிநயா said...

நெற்றிக் கண்ணில் பிறந்த நேசச் செல்வனின் திருவடிகள் சரணம். நன்றி மௌலி.

ஜீவா (Jeeva Venkataraman) said...

பாடலின் பொருளை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் மௌலி சார், மிக்க நன்றி!

ஜீவா (Jeeva Venkataraman) said...

இந்த கிருதி கமலாம்பாள் நவாவர்ண கிருதிகளைப் பாடுவதற்கு முன்பாக, தியான கிருதியாக பாடுவது வழக்கமாம். இந்த பாடலின் வரிகளை மனதில் இருத்தி தியானம் செய்திட தன் மாணவர்களுக்குச் சொல்லுவாராம் தீக்ஷிதர்.

இலவசக்கொத்தனார் said...

என்ன பண்ணச் சொன்னா என்ன செஞ்சு இருக்கீரு? URL குடுத்து இருக்கீங்க. அது வேண்டாம். embed அப்படின்னு இருக்கும் கோட் எடுத்து edit html பகுதிக்குப் போய் போடுங்க. இந்தப் பக்கத்தில் இருந்தே பாட்டைக் கேட்க முடியும். இப்போ மாதிரி வேற பக்கம் போக வேண்டாம்.

ஜீவா (Jeeva Venkataraman) said...

வார்த்தை ஜாலத்தைப் பாரும்:
நித்ய சுத்த புக்த முக்தம்.
- இப்படிப்பட்டவர், பிரம்மமன்றி வேறு யாராக இருக்க முடியும்!
//ஆகாச வெளியாகவும் (அம்பரம்) விளிக்கப்படும் பரபிரம்மான பாலசுப்ரமண்யனை பஜனை செய்கிறேன்//
There you go! அண்டவெளிதனை, அம்பரமாய் உடுத்தியவன், சாட்சாத் பரப்பிரம்மமே!

மதுரையம்பதி said...

வாங்க ஜீவா. பதிவைப் போடுபோதே நினைத்தேன். நீங்க ரொம்ப ரசிப்பீர்கள் என்று. :)

//இந்த கிருதி கமலாம்பாள் நவாவர்ண கிருதிகளைப் பாடுவதற்கு முன்பாக, தியான கிருதியாக பாடுவது வழக்கமாம்//

ஆமாம், நவாரணத்தில் பூஜையில் குருமண்டலத்தை வணங்குவது போல, க்ருதி அமைக்கையில் அவரது குருவான குஹனை வணங்கியிருக்கிறார். சர்வாபீஷ்டங்களையும் அருளும் க்ருதி என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

//வார்த்தை ஜாலத்தைப் பாரும்:
நித்ய சுத்த புக்த முக்தம்.//

உண்மை.

மதுரையம்பதி said...

வாங்க கவிக்கா...வரவுக்கு நன்றி.

மதுரையம்பதி said...

வாங்க கொத்ஸ்...எனக்கு இதான் முதல் முறை...அதான் கொஞ்சம் சொதப்பிட்டேன். இதோ நீங்க சொன்னபடி பண்ணியிருக்கேன்.

லிங்க்கும் இருக்கு. இது ஒர்க் ஆகுதான்னு செக் பண்ண நேரமில்லை, அதான் அதையும் விட்டு வச்சிருக்கேன். அப்பறமா பார்த்துட்டு எடுத்துடறேன் :)

கீதா சாம்பசிவம் said...

மெளலி, காலம்பரலே இருந்து உங்க ப்ளாகும் சொதப்புதே! இதுக்கு முன்னாலே அனுப்பிச்ச பின்னூட்டம் வந்ததானு தெரியலை,

ஆனால் நான் தான் ஒரு கை.நா.னு நினைச்சுட்டு இருந்தேன், நமக்கு மேலேயும் இருக்காங்கனு புரியும்போது வருமே ஒரு அபூர்வ திருப்தி அந்த திருப்தியாலே மனசு நிறைஞ்சிருக்கு, அதனாலே அப்புறமா வந்து பாட்டுக் கேட்டுக்கறேன். கொத்தனார் வேறே திட்டிட்டுப் போயிருக்கார், சொதப்பி இருக்கீங்கனு! எதுக்கு வம்பு??? வர்ட்டாஆஆஆஆஆ

மதுரையம்பதி said...

வாங்க கீதாம்மா.

பாட்டு/விடியோ எல்லாம் போஸ்ட்ல இணைத்ததில்லை. இதான் முதல் முறை. கொத்ஸ் தான் ஆபத்பாந்தவனா வந்து சொல்லிக் கொடுத்தார். :)

// நமக்கு மேலேயும் இருக்காங்கனு புரியும்போது வருமே ஒரு அபூர்வ திருப்தி அந்த திருப்தியாலே மனசு நிறைஞ்சிருக்கு,//

மேல இருக்கும் உங்க கமெண்டைப் படித்தவுடன் தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லைன்னு சொல்றது நினைவு வந்ததை தவிர்க்க முடியல்ல :))

ஒரு பின்னூட்டம் உங்களிடமிருந்து வந்திருக்கு, பப்ளிஷ் பண்ணிட்டேன்..வேற யாருக்கு பின்னூட்டம் போட்டுட்டு எனக்கு போட்டதா நினைக்கிறீங்களோ தெரியல்ல :))

கீதா சாம்பசிவம் said...

//மேல இருக்கும் உங்க கமெண்டைப் படித்தவுடன் தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லைன்னு சொல்றது நினைவு வந்ததை தவிர்க்க முடியல்ல :))//

நறநறநறநறநற

இரண்டு பின்னூட்டம் இங்கேயே இந்தப் பதிவுக்குத் தான் கொடுத்தேன்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் போனால் போகுதுனு என்னைக் கை.நா.னு சொன்னால் இது கூடவாத் தெரியலைனு நினைச்சீங்க?? தேடிப் பாருங்க, சமயத்திலே ஒளிஞ்சுக்கும்!

குமரன் (Kumaran) said...

நீலகண்டம் என்ற பெயர் மயிலுக்கும் பொருந்துகிறதே. அருமை. முதன் முதலில் இப்போது தான் இந்தப் பெயரை மயிலுக்கு அமைந்து படிக்கிறேன். :-)

பாடலின் பொருளை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் மௌலி

மதுரையம்பதி said...

வருகைக்கு நன்றி குமரன்.

//பாடலின் பொருளை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் மௌலி//

அழகா இருக்கா, சரியா இருக்கான்னு தெரியாது...எனக்கு தெரிஞ்சவரையில் பொருள் இது. இன்னும் நல்ல மொழிவளம் இருப்பவர்கள் கண்டிப்பாக் இன்னும் அழகாகச் சொல்ல முடியும் :-)