ருணம் என்றால் கடன். எப்போதும் கடனே இல்லாத மனிதர்கள் என்று யாரும் இல்லை. மிகப் பெரிய கோடிஸ்வரர்கள் கூட தனது வியாபாரத்தை விருத்தி செய்து கொள்ள அரசிடமோ இல்லை வங்கிகளிலோ, கடன் வாங்குவது என்பது சகஜமாக இருக்கிறது. பணம் இருந்தாலும், அதை கையில் வைத்துக் கொண்டு செலவு செய்வது ஆபத்து, என்பதாலும் மக்கள் இந்த கடனட்டை போன்றவற்றை கொண்டு செலவு செய்கிறோம். அதற்கு திரும்ப கட்டும் வரையில் அதுவும் கடன் தானே?. வாங்கிய கடனைக் கட்ட இயலவில்லையெனும் போது இந்த கடன்களால் ஏற்படும் இன்னல்கள் எவ்வளவு? . சமீபத்தில் கூட அரசு வாராக் கடன் பற்றிய தகவல் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்பித்ததை அறிவோம். இதற்கு என்ன என்கிறீர்களா?. இது மாதிரியாக கடன் வாங்கியவர்களது நிலை எப்படியிருக்கும் என்பதை 'கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' அப்படின்னு பெரிவர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். ஆக இந்த கடனானது மனதை வாட்டும், செயலை முடக்கும் என்பதை முன்னோர் அறிந்துள்ளனர்.
கடன் என்றால் அது எந்தவிதமான கடனாகவும் இருக்கலாமே!, நன்றிக் கடன், பணம்/பொருள் தொடர்புடைய கடன், தேவ கடன், ரிஷிகளுக்கான கடன், நீத்தார் கடன் என்று எத்தனை எத்தனை விதங்கள். மனிதனாய் பிறந்த ஓவ்வொருவரும் இதில் சிலவற்றை ஏற்றே ஆக வேண்டியிருக்கிறதே?. இதற்கு ப்ரதிபலனாக நாம் என்ன செய்கிறோம்?. நன்றி கூறுகிறோம், சில சமயம் செயலில் நன்றியை காட்டுகிறோம். சில நேரங்களில் நமது மமதை/ அஹங்காரம் போன்றவற்றால் இந்த நன்றி கூட சொல்வதில்லை. இவ்வாறான கடன்களிலிருந்து நம்மைக் காக்க என்று சான்றோர்கள் சில ஸ்லோகங்களை/மந்த்ரங்களை/செயல்களை பண்ணி, பரிஷித்து, பலன்களை உணர்ந்து அதன்பின் அவற்றை நாமும் செய்ய பணித்துள்ளனர். இவ்வாறாக பெரியவர்களால் சொல்லப்பட்டு, பரிக்ஷித்துணர்ந்து நமக்களிக்க்ப்பட்ட ஒன்றை இன்று பார்க்கலாம். இது நமது வாழ்வில் நாம் எதிர் நோக்கும் மேலே சொன்னபடியான "எல்லாவிதமான கடன்களிலிருந்தும்" நம்மைக் காக்க நரஸிம்ம மூர்த்தியின் மீது சொல்லப்பட்டது தான் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ருண விமோசன ஸ்தோத்ரம்.
சின்னஞ்சிறு குழந்தையான ப்ரஹலாதரை அனுக்ரஹிப்பதற்காக ஸிம்ம முகமும், கழுத்துக்கு கீழே மனித உடலுமாக ஸ்ரீநரஸிம்ம மூர்த்தி வைகாச
சுக்ல சதுர்தசியில் ப்ரதோஷ காலத்தில் ஸ்வாதீ நக்ஷத்திரத்தில் தூணிலிருந்து அவதரித்து ஹிரண்யகசிபுவை ஸம்ஹரித்தார். உக்ர நரஸிம்மரான இவரை அனைவரும் ஸ்தோத்ரம் செய்தும் சாந்தப்படுத்த இயலாத காலத்தில் மஹேஸ்வரன் தனது அம்சமான சரப ரூபத்தில் வந்து சாந்தப்படுத்தினார். இதன் பின் உலகிற்கு அனுக்ரஹிக்கும் பொருட்டு மஹாலக்ஷ்மியை தன்னுடன் இணைத்துக் கொண்டு ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மராக காட்சி தந்தார். யோகநரஸிம்மர், வீர நரஸிம்மர் என்று பல வடிவங்களில் காக்ஷியளிக்கும் இவரை பூஜித்தால் வீரம், செல்வம், போகம், கல்வி, துணிவு, புகழ் போன்ற எல்லாவற்றையும் அடையலாம்.
________________________________________________________________
நாளை 18-05-08 நரஸிம்ம ஜெயந்தி, தூணிலிருந்து வெளிப்பட்ட நாள். உபவாசமிருந்து அந்தி-சந்தி வேளையில் நரஸிம்மரை உபாசனை செய்வோம். ப்ரஹலாத சரிதம் (பாகவதம்), நரஸிம்ம சஹஸ்ரநாமம் போன்றவை பாராயணத்திற்கு சிறந்தது. ப்ரஹலாதரால் செய்யப்பட்ட ஸ்தோத்ரத்தை
பாராயணம் பண்ணுவது மிக விசேஷம். இவரை மனதில் இருக்கும் சத்ருக்களான காமம், க்ரோதம் போன்றவையும், வெளியில் இருக்கும் விரோதிகளும் விரோதத்தை மறந்து நம்மிடம் அன்பு பாராட்ட துவங்குவார்கள். செய்யும் காரியங்களில் வெற்றி, கல்வியில் சிறப்பு போன்றவை நரஸிம்ம உபாசனையால் கிடைக்குமென நாரத புராணம் சொல்கிறது. ஆதிசங்கரர் நரசிம்ம உபாசனை பண்ணியவர். அவரது சிஷ்யர் பத்மபாதர் நரசிம்ம உபாசகர். சிருங்கேரி ஆச்சார்ய பரம்பரையில் நரசிம்ம உபாசனை இன்றும் உண்டு. அஹோபிலத்தில் உள்ள ஜீயர் மடமானது நரசிம்மரையே மூல மூர்த்தியாக கொண்டது.
_________________________________________________________________நாளை 18-05-08 நரஸிம்ம ஜெயந்தி, தூணிலிருந்து வெளிப்பட்ட நாள். உபவாசமிருந்து அந்தி-சந்தி வேளையில் நரஸிம்மரை உபாசனை செய்வோம். ப்ரஹலாத சரிதம் (பாகவதம்), நரஸிம்ம சஹஸ்ரநாமம் போன்றவை பாராயணத்திற்கு சிறந்தது. ப்ரஹலாதரால் செய்யப்பட்ட ஸ்தோத்ரத்தை
பாராயணம் பண்ணுவது மிக விசேஷம். இவரை மனதில் இருக்கும் சத்ருக்களான காமம், க்ரோதம் போன்றவையும், வெளியில் இருக்கும் விரோதிகளும் விரோதத்தை மறந்து நம்மிடம் அன்பு பாராட்ட துவங்குவார்கள். செய்யும் காரியங்களில் வெற்றி, கல்வியில் சிறப்பு போன்றவை நரஸிம்ம உபாசனையால் கிடைக்குமென நாரத புராணம் சொல்கிறது. ஆதிசங்கரர் நரசிம்ம உபாசனை பண்ணியவர். அவரது சிஷ்யர் பத்மபாதர் நரசிம்ம உபாசகர். சிருங்கேரி ஆச்சார்ய பரம்பரையில் நரசிம்ம உபாசனை இன்றும் உண்டு. அஹோபிலத்தில் உள்ள ஜீயர் மடமானது நரசிம்மரையே மூல மூர்த்தியாக கொண்டது.
தேவதா கார்ய ஸித்யர்த்தம் ஸபா ஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை
கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வர தாயகம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
மகாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களைத் தருபவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
ஹிரண்யகசிபுவின் குடலை மாலையாக அணிந்தவரும், சங்கம், சக்ரம், தாமரை, ஆயுதம் இவைகளை கைகளில் தாங்கியவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ஸ்மரணாத் ஸ்ர்வ பாபக்னம் கத்ரூஜ விஷ நாசநம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
நினைத்த உடனேயே அனைத்து பாபங்களையும் போக்கடிப்பவரும், கொடிய விஷத்தை முறியடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ஸிம்ஹாநாதேந மஹதா திக்தந்தி பயநாசனம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
மிக பயங்கரமான சிம்ஹத்தின் கர்ஜனையால் எட்டுத் திசையிலும் உள்ள திக்கஜங்களுக்கும் பயத்தை போக்கடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ப்ரஹ்லாதவரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரணம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
பக்தனான ப்ரஹலாதனுக்கு அனுக்ரஹம் செய்தவரும், மஹாலக்ஷ்மியுடன் கூடியவரும், அரக்கர் தலைவனான ஹிரண்யகசிபுவை சம்ஹரித்த மஹாவீரருமான,ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
உக்ரமும் கோரமும் உடைய கிரஹங்களால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு அபயம் அளிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
வேதங்கள், உபநிஷதங்கள், யாகங்கள் முதலியவைகளுக்கு தலைவரும், ப்ரம்மா, ருத்ரன் முதலியவர்களால் வணங்கப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ய: இதம் படதே நித்யம் ருணமோச ந ஸம்ஜிதம்அந்ருணீ ஜாயதே ஸ்த்யோ தநம் சீக்ரமவாப் நுயாத்
யார் இந்த ருணமோசனம் என்ற பெயருடைய ஸ்லோகத்தை தினம் படிக்கின்றாரோ அவர் விரைவிலேயே கடனிலிருந்து விடுபட்டவனாகி மேலும் சகல செல்வத்தையும் அடைவார்.
பூமி நீளா சமேத ஸ்ரீல்க்ஷ்மி நரஸிம்ம ஸ்வாமினே நம:
23 comments:
பொருளுடன் சுலோகங்களை வழங்கியமைக்கு நன்றிகள் திரு.மௌலி.
என்ன, திடீர்னு பொருளாதாரம் பத்தி எழுதி இருக்காரேன்னு நினைச்சேன், நரசிம்மர் பத்தின ஸ்லோகத்துக்கும், பொருளுக்கும் நன்றி மெளலி.
தன் பக்தன் தன்னை எங்கேயெல்லாம் இருத்திக்காட்டப்போகிறானோ என்று அன்று அவனுக்காக தூண் துரும்பென அனைத்திலும் தன்னைபுகுத்திப்பரப்பிக்கொண்டு ஒன்றாய் அரும்பிப்பலவாய் விரிந்த பகவானின் அற்புத அவதாரம் இது. கோபம் இருகும் இடத்தில் குணமும் இருக்குமாம்..உக்ரமூர்த்தியான நரசிம்மன் நாம் வேண்டியதைக் கொடுப்பான்.அண்ணலைப்பற்றி மிகமிக அருமையான பதிவு அளித்த மதுரையம்பதிக்கும் வேண்டுவன் கிடைத்து அருளோடுவளமோடு வாழ அண்ணல் அருளட்டும்!
மௌலி,
அருமையான பதிவு. நரசிம்மரைப் பற்றிய அவரது ஜெயந்தியன்று - விளக்கத்துடன் கூடிய ஸ்லோகங்கள் - படித்தேன் - கொடுத்து வைத்தவன் - வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு நன்றி
அதென்ன கடன்களிலிருந்து விடுபடுவதற்கு இத்தனை ஸ்லோகங்களா - அக்கால கட்டத்தில் கடன்தாரர்கள் நிறைய இருந்தார்களா ?
ருண விமோசனம் எப்படி வரும்?
பொருள் கொடுத்தா தானே வரும்!
அதை அழகாப் பொருள் கொடுத்து (சுலோகத்துக்குப் பொருள் கொடுத்து) விமோசனம் வழங்கிய மெளலி அண்ணா வாழ்க! வாழ்க!! :-)
வாங்க கே.ஆர்.எஸ், உங்க வாழ்த்தே எனக்கு விமோசனம் தரும் :-)
//அதென்ன கடன்களிலிருந்து விடுபடுவதற்கு இத்தனை ஸ்லோகங்களா - அக்கால கட்டத்தில் கடன்தாரர்கள் நிறைய இருந்தார்களா ?//
இல்லீங்க சீனா சார், ஒவ்வொன்றும் தனித்தனி ஸ்லோகம் போல இருந்தாலும் எல்லா வரிகளும் சேர்ந்ததே இந்த ஸ்லோகம்.
பதிவின் ஆரம்பத்தில் படித்தீர்கள் தானே, மனிதனாக பிறந்த எல்லோரும் கடன்காரர்கள் தான்...அதெல்லாம் தீர்ப்பவன் நரஸிம்மன்....
வாங்க ஷைலஜா....உங்கள் ஆசிகளுக்கு நன்றி.
வாங்க கீதாம்மா...பொருளாதாரமா?..ஹிஹிஹி
வருகைக்கு நன்றி திரு.ஜீவா. :-)
அருமை. விளக்கங்களுடன் சுலோகம் தந்ததற்கு நன்றி.
நரசிம்ம ஜெயந்திக்கும் எங்கள் ஊருக்கும் தொடர்பு இருக்கிறது.
பதிவு போட்டு லிங்க் அனுப்புகிறேன்.
//லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம்//
//மகாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு//
பொதுவாகத் தாயார் வலப்பக்கம் தான் இருப்பாள்!
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு!
ஆனா இங்கே லக்ஷ்மீ நரசிம்ம ரூபத்தில் மட்டும் வாமபாகத்தில் (இடப்பக்கம்) இருக்கிறாள்! சிவ-பார்வதி போல! ஏன்?
//சதுர்தசியில் ப்ரதோஷ காலத்தில் ஸ்வாதீ நக்ஷத்திரத்தில் தூணிலிருந்து அவதரித்து ஹிரண்யகசிபுவை ஸம்ஹரித்தார்//
இப்படி எல்லாமே சிவபெருமானுக்கு உகந்த வேளை!
பிரதோஷ காலம்
சதுர்த்தசி
வாமபாகம்
- ஏன்?
தூணில் இருந்து பெருமாள் வந்ததால் தூண் பெருமாளுக்குத் தாயார் என்றும், அதனால் அந்தத் தூண் பிரம்மாவுக்குப் பாட்டி என்றும் சுவையான சொலவடை உண்டு! :-)
//உக்ர நரஸிம்மரான இவரை அனைவரும் ஸ்தோத்ரம் செய்தும் சாந்தப்படுத்த இயலாத காலத்தில்//
நரசிம்ம மூர்த்தியின் உக்கிரம் கண்டு பயப்படாதது ஒரு குழந்தை தான்! லட்சுமி அருகில் செல்லும் முன்னரே, பிரகலாதன் நரசிம்மத்துக்கு அருகில் சென்று விடுவான்!
சரபேஸ்வரர் குறித்த புராண ஆதாரங்களைச் சில தீவிர வைணவர்கள் மறுப்பார்கள்.
ஆனால் சர்பேஸ்வரர் பெருமாளை அணைத்துச் சாந்தப்படுத்துவது லிங்க புராணத்தில் வரும்.
தவறு புரிந்தால் தானே பயப்படணும்? ஆனால் தேவர்கள் அனைவரும் அஞ்சி நடுங்குவதால் ஈசன் சரப ரூபம் எடுத்துச் சாந்தப்படுத்தலாம்-னு வருவார்.
ஆனால் குழந்தை பிரகலாதன் அஞ்சாமல் உக்ர மூர்த்தியின் அருகில் செல்வதைக் கண்டுத் தாமும் சென்று அணைத்துக் கொள்வார். அவதாரங்கள் நொடிப் பொழுதில் மறைந்து விடும். ஈசனும் தன் பங்குக்கு பிரகலாதனுக்கு வரங்கள் அளித்து அருள் புரிவார்!
//தைத்யேச்வர விதாரணம்//
தைத்யேச்வரன் = இரண்யகசிபு-வா?
அவனுக்கு ஈச்வர பட்டம் இருந்ததா என்ன?
கடன் பட்டார் நெஞ்சம் கலங்குவது அந்தக் காலத்தில் மட்டும் தான் போலும். இந்தக்காலத்தில் கடன் வாங்காவிட்டால் தான் இளித்த வாயன் என்று சொல்லலாம் போலிருக்கிறது.
இந்த ஸ்தோத்திரம் ரொம்ப எளிமையா இருக்கு மௌலி. நீங்க சொன்ன பொருளும் மிக எளிமையா இருக்கு.
லக்ஷ்மீ ந்ருஷிம்ஹ பரப்ரம்ஹனே நம:
யே அப்பா! ரவியின் இடப்பக்க விளக்கம் அருமை புதுமை! தகவல் சுரங்க்மாயிருக்காரே!!
//இந்த ஸ்தோத்திரம் ரொம்ப எளிமையா இருக்கு மௌலி. நீங்க சொன்ன பொருளும் மிக எளிமையா இருக்கு. //
நன்றி குமரன்...
//தைத்யேச்வரன் = இரண்யகசிபு-வா?
அவனுக்கு ஈச்வர பட்டம் இருந்ததா என்ன?//
இரண்யகசிபு தான்...ஏன் லங்கேஸ்வரன் இல்லையா...இன்னும் சில அசுரர்களுக்குக் கூட ஈஸ்வர பட்டம் இருக்கே?
//சரபேஸ்வரர் குறித்த புராண ஆதாரங்களைச் சில தீவிர வைணவர்கள் மறுப்பார்கள்.
ஆனால் சர்பேஸ்வரர் பெருமாளை அணைத்துச் சாந்தப்படுத்துவது லிங்க புராணத்தில் வரும்.//
ஆமாம், ஈஸ்வரனையே ஏற்காதவர்கள், சரப தத்துவத்தை மறுக்கத்தான் செய்வார்கள்..அவர்களுக்கு சிவ/லிங்க புராணம் இவையெல்லாம் கூட வேண்டாததுதான்...விட்டா 18 புராணங்களெல்லாம் புரட்டு அப்படின்னு கூட சொல்வார்கள்..ஒரு கோவிலுக்குள் சென்று ஒரு சன்னதியில் மட்டும் வணங்கிச் செல்பவர்கள் தானே :-)
//தவறு புரிந்தால் தானே பயப்படணும்? ஆனால் தேவர்கள் அனைவரும் அஞ்சி நடுங்குவதால் ஈசன் சரப ரூபம் எடுத்துச் சாந்தப்படுத்தலாம்-னு வருவார்.//
ஓ தேவர்கள் எல்லோரும் தவறு புரிந்தவர்கள் என்பதால் அஞ்சினார்களோ?....
//ஆனால் குழந்தை பிரகலாதன் அஞ்சாமல் உக்ர மூர்த்தியின் அருகில் செல்வதைக் கண்டுத் தாமும் சென்று அணைத்துக் கொள்வார். அவதாரங்கள் நொடிப் பொழுதில் மறைந்து விடும். ஈசனும் தன் பங்குக்கு பிரகலாதனுக்கு வரங்கள் அளித்து அருள் புரிவார்!//
அப்படியா?, பிரகலாதன் அஞ்சாததால் தான் சரபரும் சென்றாரோ?...வேற எந்த காரணமும் இல்லையோ?......
தான் வருவதற்கு முன் வீரபத்ரர் போன்றோரை அனுப்புவார்..
கே.ஆர்.எஸ் அண்ணா, பிரகலாதனின் பூர்வ ஜென்மம் என்ன?, யார் பிரகலாதனாக வந்தது?...
//இப்படி எல்லாமே சிவபெருமானுக்கு உகந்த வேளை!
பிரதோஷ காலம்
சதுர்த்தசி
வாமபாகம்//
கேள்வி கேட்டா போதாது, பதிலும் சொல்லிட்டுங்க...எனக்கு தெரியாது. :)
மதுரையம்பதி said...
//சரபேஸ்வரர் குறித்த புராண ஆதாரங்களைச் சில தீவிர வைணவர்கள் மறுப்பார்கள்.
ஆனால் சர்பேஸ்வரர் பெருமாளை அணைத்துச் சாந்தப்படுத்துவது லிங்க புராணத்தில் வரும்.//
ஆமாம், ஈஸ்வரனையே ஏற்காதவர்கள், சரப தத்துவத்தை மறுக்கத்தான் செய்வார்கள்..அவர்களுக்கு சிவ/லிங்க புராணம் இவையெல்லாம் கூட வேண்டாததுதான்...விட்டா 18 புராணங்களெல்லாம் புரட்டு அப்படின்னு கூட சொல்வார்கள்..ஒரு கோவிலுக்குள் சென்று ஒரு சன்னதியில் மட்டும் வணங்கிச் செல்பவர்கள் தானே //
>>>>>>ஹலோ ஹலோ ஒருபானை சோற்றுக்கு வேணா ஒரு சோறு பதமா இருக்கலாம் ஆனா இதுமாதிரி விஷய்ங்களில் எல்லா வைணவர்களையும் ஒரேமாதிரி எடை போடாதீங்க! என்னைமாதிரி ஹரியும் சிவனும் ஒண்ணு அதை அறியாதவன் வாயில மண்ணு எனும் சிந்தனை உள்ளவர்களை கொஞ்சம் பாதிக்கும் !
//எல்லா வைணவர்களையும் ஒரேமாதிரி எடை போடாதீங்க! என்னைமாதிரி ஹரியும் சிவனும் ஒண்ணு அதை அறியாதவன் //
உங்களை அறிவேன் ஷைலஜா, அது மட்டுமா உங்கள் சகோதரர் எழுதும் சக்தி மயமான எழுத்துக்களையும் அறிவேன்.....நீங்கள் மட்டுமா, கே.ஆர்.எஸ், குமரன் என்று இணையத்தில் நிறையப்பேர் இருக்கிறார்கள்...
நான் சொன்னது 'சில தீவிர வைணவர்கள்' என்றே...இணையத்திலும் அந்த சிலரில் சிலர் இருக்கிறார்கள் :-)
//ஆமாம், ஈஸ்வரனையே ஏற்காதவர்கள், சரப தத்துவத்தை மறுக்கத்தான் செய்வார்கள்..அவர்களுக்கு சிவ/லிங்க புராணம் இவையெல்லாம் கூட வேண்டாததுதான்...விட்டா 18 புராணங்களெல்லாம் புரட்டு அப்படின்னு கூட சொல்வார்கள்..ஒரு கோவிலுக்குள் சென்று ஒரு சன்னதியில் மட்டும் வணங்கிச் செல்பவர்கள் தானே :-)//
எங்கயோ ஆரம்பித்து எங்கயோ கதை போய்விட்டது.
//இலங்கேஸ்வரன்//
ஆம் இலங்கைவேந்தன், அசுரர்களின் ஈஸ்வரன்.
ஸ்லோகங்கள் அருமை.
அது ரிணமா ருண்மானு ரொம்ப நாளா யோசனை எனக்கு.
அந்த நிருசிம்ஹன் எல்லாரையும் எல்லாவிதக் கடன்களிலிருந்தும் காக்கட்டும்.
நஃன்றி மௌலி. சாரி. ரொம்ப லேட்டா வரேன்.
Post a Comment