Thursday, May 8, 2008

சங்கரரும், ராமானுஜரும்.....



ச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம

நமாமி பகவத்பாத சங்கரம் லோக சங்கரம்.

ச்ருதி எனப்படும் வேதங்களுக்கும், ஸ்ம்ருதி எனப்படும் புராணங்களுக்கும் இருப்பிடமானவரும், கருணா மூர்த்தியும், உலகம் முழுவதற்கும் மங்களத்தை அருளுபவருமான சங்கர பகவத் பாதரை நஸ்கரிக்கிறேன். ஸுமார் 2000 வருடங்களுக்கும் முன்பாக (சுமாராக கி.மு 509) கேரளத்தில் காலடி என்னும் ஊரில், சிவகுரு-ஆர்யாம்பா தம்பதிக்கு நந்தன வருஷம் வைகாச சுக்ல பஞ்சமியில், புனர்வசு நக்ஷத்திரத்தில் பிறந்தவர் ஸ்ரீ சங்கரர். 32 ஆண்டுகளே வாழ்ந்த இவர் காஷ்மீரத்திலிருந்து கன்யாகுமாரி வரையில் அத்வைத சித்தாந்தத்தை பரப்பினார். அத்வைத தத்வத்தை தமிழகத்து அந்தணர்கள் ஒப்புக் கொள்ள மறுத்த சமயத்தில் திருவிடைமருதூர் மகா லிங்கமே அசரீரியாக 'ஸத்யம் அத்வைதம்' என்றதாக தெரிகிறது. இவரது ப்ரம்ம சூத்திர பாஷ்யத்தை வியாசரே நேரில் வந்து அனுக்ரஹித்ததாக சொல்லப்படுகிறது.

_____________________________________________________________
கி.பி 1017ம் ஆண்டு வைகாச சுக்ல பக்ஷ பஞ்சமியில் குருவாரம், திருவாதிரை நக்ஷத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் கேசவ ஸோமயாஜிக்கும்-காந்திமதி
அம்மாளுக்கும் புத்திரராக அவதரித்தவர் ராமானுஜர். இவர் 120 வருடங்கள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. பல முயற்சிகளுக்குப் பின்னர் தனக்கு கிடைத்த திருமந்திர உபதேசத்த மற்றவர்களுக்கு தெரிவித்தால் நரகம் என்றல்லாம் மிரட்டிய போதும் தான் நரகம் சென்றாலும் கேட்ட அனைவரும் நன்மை அடையட்டுமென்று திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் மீது ஏறி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உபதேசித்தவர். இவரே பின்னாளில் மணவாள மாமுனிகளாக அவதரித்ததாக சொல்லப்படுகிறது.

_____________________________________________________________

முதலில் இவர்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமைகளை பார்க்கலாம்.

இருவரும் வைகாச சுக்ல பஞ்சமியில் பிறந்தவர்கள். அடுத்தடுத்த நக்ஷ்த்திரங்கள், ராமானுஜர் - திருவாதிரை, சங்கரர் - புனர்வசு.

இருவரும் ப்ரம்ம சூத்திரத்துக்கு பாஷ்யம் பண்ணினவர்கள். இருவரும் மூல-குருவாக வியாசரையே வைத்துக் கொண்டுள்ளனர், இன்றைய மடாதிபதிகள், சிம்மாசனாதிபதிகள் உள்பட.

ராமனுஜரும் முதலில் படித்தது அத்வைதமே. யாதவப் பிரகாசர் என்பவரிடம் அத்வைதம் பயின்றாராம். பிற்காலத்தில் அவரே பின்னர் ராமானுஜருக்கு சிஷ்யரானதாக சொல்வர். (இந்த யாதவப் பிரகாசரை பற்றி அத்வைத ஆச்சார்ய பரம்பரையில் எங்கும் ஏதும் குறிப்பு கிடையாது)

சங்கரர் வைதிக மதத்தை நிலை நாட்டினார் என்று சொல்லப்படுவது போல, இராமானுஜரும் தனது பாஷ்யங்களில் இவற்றைப் விஸ்தாரமாக சொல்லி வைத்து, மக்களுக்கு உபதேசிக்கும் பொழுது சற்று இளக்கித் தந்ததாக சொல்லத் தெரிகிறது.

ராமானுஜரை ஸ்ரீவைஷ்ணவத்தில் ஆதிசேஷனின் அவதாரம் என்கிறார்கள். ஆதி சங்கரரின் குருவான கோவிந்த பகவத் பாதர் பதஞ்சலியின் அவதாரம். பதஞ்சலியோ ஆதி சேஷனின் அவதாரம். (நாராயணன் பைநாகப்பாயில் படுத்துக் கொண்டு நடராஜ ரூபத்தில் லயித்த சமயத்தில் ஆதிசேஷணுக்கு கனம் அதிகமானதாம். பெருமாளிடம் காரணம் கேட்க, அவரும் நடராஜ ரூபத்தைச் சொன்னதால், ஆசைப்பட்டு ஆதிசேஷன் பதஞ்சலியாக அவதரித்தது புராணம்). ஆகக் கூடி பார்த்தால் ஒருவரே ஆதிசங்கரருக்கு குருவாகி, பின்னர் சுமார் 1000 வருடங்கள் கழித்து ராமானுஜராக அவதரித்தார் போல.

_____________________________________________________________

அங்க-இங்க, தேடிப் பிடித்து 5 ஒற்றுமை வந்திடுச்சு....இப்போ 5 வித்தியாசங்களை பார்க்கலாமா!

சங்கரர் அவதாரத்திற்கு பின் ஏறக்குறைய சுமார் 1000 வருடங்களுக்கு பின்னர் அவதரித்தவர் ராமானுஜர், இவருக்கும் பின் வந்தவர் மத்வர்.

சங்கரர் 72 மதங்களை இணைத்து ப்ராதான்யமாக 6 மதங்களை ஸ்தாபித்து, பஞ்சாயதன முறையும் ஏற்படுத்தினார். இராமானுஜர் ஸ்ரீ வைஷ்ணவத்தை மட்டுமே வைத்து வசிஷ்டாத்வைதத்தை நிறுவிச் சென்றார்.

சங்கரர் மடங்களை ஸ்தாபித்தார், ஆனால் ராமானுஜர் எந்த மடங்களையும் ஸ்தாபிக்கவில்லை. 72 ஸிம்மாசனாதிபதிகள் என்பது சங்கரர் ஸ்தாபித்தது போல ஸந்நியாஸிகளின் தலைமையில் மட ஸ்தாபனம் பண்ணியது அல்ல. இந்த ஸிம்மாசனாதிபதிகள் க்ருஹஸ்த பரம்பரைகளின் வழியே வருபவர்கள். க்ருஹஸ்த மார்க்கத்தில் ஸ்ரீ வைஷ்ணவத்தை வளர்க்கச் செய்த ஏற்பாடு. ஆனால் சங்கர மடத்தை அலங்கரிப்பவர்கள் ப்ரம்மச்சார்யத்திலிருந்து நேரடியாக ஸந்நியாசத்திற்கு வருபவர்கள்.

சங்கராச்சார்ய பரம்பரையில் ஸந்நியாஸிகள் 'தசநாமிகள்' என்னும் 10 விதமான வகைகளில் ஒன்றைச் சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். ஏன் மாத்வாச்சார்யார் கூட இந்த 10 வகையில் ஒன்றான 'தீர்த்தர்'' என்ற பிரிவில் துரீயாச்சரமத்திற்கு வந்தார். ஆனால் ஸ்ரீ வைஷ்ணவத்திலுள்ள 72 ஸிம்மாசனாதிபதிகளாகட்டும், அல்லது 12 ஆச்சார்யர்களாகட்டும் இந்த தசநாமிகளிலிருந்து துரீய நாமத்தை கொள்வதில்லை.

ஆதிசங்கரர் துரீயஸ்ரமத்தில் இருப்பவர்களுக்கு பூணூல், சிகை கிடையாது என்று வைத்துள்ளார். ஆனால் 72 ஸிம்மாசனாதிபதிகள் க்ருஹஸ்தத்திலிருந்து வந்ததால் அவர்களுக்கு இந்த இரண்டும் உண்டு. அத்வைத ஆச்சார்யர்களுக்கு ஏகதண்டம், ஸ்ரீ வைஷ்ணவத்தில் த்ரிதண்டம்.

இவ்வாறாக பலவிதமான வேறுபட்ட வழிகளிலும் முயன்று நம்மைக் கடைத்தேறச் செய்யும் இந்த இரு ஆச்சார்யார்களுக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்.

_____________________________________________________________
அதெப்படி? இவ்வளவு வித்தியாசங்களை வைத்திருக்கும் இந்த இரு ஆச்சார்யார்களை ஒருங்கே வணங்குவது?.

ஸர்வ-வேதாந்த ஸித்தாந்த-கோசரம் தம்-அகோசரம் கோவிந்தம்
பரமாநந்தம் ஸத்குரும் ப்ரணதோஸ்மயஹம்

ஸத்குரும் கோவிந்தம் அஹம் ப்ரணதோஸ்மி - ஸ்த்குருவான கோவிந்தனை நான் நமஸ்காரம் செய்கிறேன். அதாவது ஸ்ரீவைஷ்ணவத்தின் முதாலாவது ஆச்சார்யாரான கோவிந்தன்/மஹா-விஷ்ணுவை நமஸ்காரம் செய்கிறேன் என்றும் சொல்லலாம், அதே போல சங்கரரின் குருவான கோவிந்த பகவத் பாதரை வணங்குகிறேன் என்றும் சொல்லலாம்.

பிகு: சில செய்திகளுக்கு மூலம் தெய்வத்தின் குரல்!!!

25 comments:

cheena (சீனா) said...

வைணவத்தினையும் சைவத்தினையும் இணைத்து சங்கரரையும் இராமானுஜரையும் இணைத்து இரு அருமையான பதிவு. அழகான விளக்கங்கள். நல்வாழ்த்துகள்

jeevagv said...

:-)
நிறைய புள்ளி விவரங்கள் பதிவெங்கும் பிரகாசிக்கின்றன!
:-)

ஷைலஜா said...

இரு பெரும் சமயத்துறவிகளைப் பற்றிய அற்புதப்பதிவு! தெய்வத்தின் குரலை பக்கபலமாக எடுத்துக்கொண்டிருப்பதில் பதிவு நன்றாகவே ஒளி(லி)ர்கிறது! வாழ்த்துகள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆசார்யம் வந்தே ஜகத்குரும்!

அருமையான தகவல் கதம்பங்களைத் தொடுத்து, கட்டுரை மாலையாக்கி, ஆசார்யர்களுக்கு அணிவிச்சி இருக்கீங்க!
வாழ்த்துக்கள் மெளலி அண்ணா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நிறைய புள்ளி விவரங்கள் என்பதால் அங்கொன்று இங்கொன்றுமாய் விடுபடுதல்கள் இருக்கலாம்! முக்கியமானவை மற்றும் சொல்கிறேன்!

ஆதிசங்கரரின் நட்சத்திரமும் திருவாதிரை தான் - ஈஸ்வாராம்சம் அல்லவா? ஈஸ்வர நட்சத்திரம் ஆதிரை தானே!
http://www.kamakoti.org/miscl/adi.html

சங்கரரின் காலம் கி.மு என்பது சிலரின் நம்பிக்கை! வரலாற்று அறிஞர்கள் சிருங்கேரி பீடத் தகவல்களை ஆய்ந்து தருவது 788-820 AD!

//யாதவப் பிரகாசரை பற்றி அத்வைத ஆச்சார்ய பரம்பரையில் எங்கும் ஏதும் குறிப்பு கிடையாது//

யாதவப் பிரகாசர் மடாதிபதி அல்ல! அதனால் அவர் அத்வைத ஆசார்ய பரம்பரையில் வருவதில்லை! அவர் ஒரு ஆசான் மட்டுமே!
முதலில் கருத்து வேற்றுமையால் இராமானுசரைக் கொல்ல நினைத்தாலும், பின்னாளில் மனம் திருந்தி இராமானுசரிடம் சீடராக விழைகிறார்! ஆனால் முன்னாள் ஆசாரியர் என்பதால் அதற்குரிய கெளரவம் குறையாது அவரை கோவிந்த ஜீயர் என்று ஜீயராகவே ஆக்குகிறார் உடையவர்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சேஷன்-பதஞ்சலி-கோவிந்த பாதர் ஒப்புமை நன்றாகச் சொல்லி உள்ளீர்கள்!

அப்படியே இரு ஆசார்யர்கள் அருளிச் செய்த நூல்களையும் சொல்லிடுங்க மெளலி அண்ணா! கட்டுரை சம்பூர்ணம் அடையும்!

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கே.ஆர்.எஸ்..

பதிவிடும்போதே நினைத்தேன், இந்த கேள்விகளை, ஆனாலும் பதிவில் இதை கவர் பண்ண வேண்டாம் பின்னூட்டத்தில் வரும் என்று விட்டுவிட்டேன். :)

//ஆதிசங்கரரின் நட்சத்திரமும் திருவாதிரை தான் - ஈஸ்வாராம்சம் அல்லவா? ஈஸ்வர நட்சத்திரம் ஆதிரை தானே!
http://www.kamakoti.org/miscl/adi.html//

ஈஸ்வராம்ஸம் இல்லை என்று சொல்லவில்லை. காமகோடி மடத்தில் ஆதிரை என்றே சொல்வர்....ஆனால் மற்ற 3 மடங்களில் (பூரி, துவாரகா, பத்ரி) ஆச்சார்யரது ஜென்ம நட்சத்திரமாக கொண்டது புனர்வசு...
மாதவீய சங்கர விஜயம் சொல்வதும் புனர்வசு என்றே...

//சங்கரரின் காலம் கி.மு என்பது சிலரின் நம்பிக்கை! வரலாற்று அறிஞர்கள் சிருங்கேரி பீடத் தகவல்களை ஆய்ந்து தருவது 788-820 AD!//

சிலர் நம்பிக்கை மட்டுமல்ல...சிருங்கேரி தவிர்த்த எல்லா மடங்களிலும் ஆச்சார்ய பரம்பரை கி.முவிலிருந்து இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் பத்ரி-பூரி
போன்ற மடங்களில் இன்றைய ஆச்சார்ய பரம்பரையினர் 115+ ஆவது பட்டம்...இந்த மடங்களில் ஓவ்வொரு ஆச்சார்யரது பீடத்திலிருந்த காலங்கள் தெளிவாக தரப்படுகிறது. காஞ்சியில் முதல் 12 ஆச்சார்யர்கள் கிட்டத்தட 80+ வருடங்கள் பீடத்தில் இருந்தவர்கள்.

இந்த குழப்பத்தை 1927ல் ஆங்கில அரசும் ஆவணப்படுத்தி கி.மு.509 என்பதாக அரசாணை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

சிருங்கேரி மடத்துக் கருத்தானது அபினவ சங்கரர் என்பவரது காலத்தை மூலமாக வைத்து என்பர். அதிலும் இவர்கள் இன்றைய பீடாதிபதி 32/33ஆவதாக வருகிறார். இதை ஊர்ஜிதம் செய்ய, காஞ்சியின் மூல ஆச்சார்யர்கள் 12 பேர் காலத்திலும் 60ஐ கழித்தால் சரியாகுமென்றெல்லாம் ஜெஸ்டிபிகேஷன் போகும். :)

//யாதவப் பிரகாசர் மடாதிபதி அல்ல! அதனால் அவர் அத்வைத ஆசார்ய பரம்பரையில் வருவதில்லை! அவர் ஒரு ஆசான் மட்டுமே!
முதலில் கருத்து வேற்றுமையால் இராமானுசரைக் கொல்ல நினைத்தாலும், பின்னாளில் மனம் திருந்தி இராமானுசரிடம் சீடராக விழைகிறார்! //

நான் சரியான வார்த்தை உபயோகிக்கவில்லை.....நான் சொல்ல வந்தது, ராமானுஜர் பற்றிய தகவல்களில் வருவது தவிர அவர் பற்றிய குறிப்பு எங்கும் இல்லை என்பதே. தவறான சொற் ப்ரயோகத்திற்கு வருந்துகிறேன். :(

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க சீனா, வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க ஜீவா, என்ன அப்படியொரு மகிழ்ச்சி உமக்கு....:)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க ஷைலஜா, மதுரைக்கு அடிக்கடி போகிறீங்கன்னு தெரியும் அதுக்காக ஒலி/ஒளி காட்சி பற்றி எனக்கேவா?...:)

மெளலி (மதுரையம்பதி) said...

வாழ்த்துக்களுக்கு நன்றி கே.ஆர்.எஸ்... :-)

ஏதோ எனக்குத் தெரிந்த ராமானுஜரை எழுதியிருக்கேன்...தவறுகளிருப்பின் அது எனது அறியாமைதான் என்பதை சொல்லி, தவறுகளை திருத்த வேண்டுகிறேன்...:)

//இரு ஆசார்யர்கள் அருளிச் செய்த நூல்களையும் சொல்லிடுங்க //

நானும் நினைத்தேன்...ஆனா எனக்கு முழு லிஸ்ட்டும் தெரியாதே!!! அதனால விட்டுட்டேன். :(

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆலயங்களை ஒழுங்குபடுத்தி அனைத்து மக்களும் ஒருங்கே பயன்பெறச் செய்த பெருமையும் இரு ஆசார்யர்களுக்கும் உண்டு!
சங்கரர் - பத்ரிநாத், சிருங்கேரி போன்ற தலங்களையும், இராமானுசர் - திருவரங்கம் மேலக்கோட்டை போன்ற தலங்களையும் செவ்வித் திருத்தினர்!

திருவேங்கடமுடையான் மீது ஆதிசங்கரர் விஷ்ணு பாதாதி கேசாந்த தோத்திரம் பாடுகிறார்! இராமானுசர் திருமலைக் கோயில் ஒழுகு ஏற்படுத்துகிறார்!

சங்கரருக்கு அம்பாள் மேல் எப்படி ஒரு ப்ரீதியோ, அதே போல் இராமானுசருக்குத் தாயார் மேல்!
அவர் அம்பிகை மேல் செளந்தர்யலஹரி என்றால் இவர் தாயார் பேரில் சரணாகதி கத்யம் பாடுகிறார்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இவ்வளவு வித்தியாசங்களை வைத்திருக்கும் இந்த இரு ஆச்சார்யார்களை ஒருங்கே வணங்குவது?
அதாவது ஸ்ரீவைஷ்ணவத்தின் முதாலாவது ஆச்சார்யாரான கோவிந்தன்/மஹா-விஷ்ணுவை நமஸ்காரம் செய்கிறேன் என்றும் சொல்லலாம், அதே போல சங்கரரின் குருவான கோவிந்த பகவத் பாதரை வணங்குகிறேன் என்றும் சொல்லலாம்//

அருமை!
கோவிந்த நாமத்துக்கு இப்படி ஒரு மகிமை என்றால் ஈஸ்வர நாமத்துக்கும் அப்படி ஒரு மகிமை உள்ளது!

இராமானுசரின் குருவான ஆளவந்தாருக்கு குரு ஈஸ்வர முனி்!
அந்த ஈஸ்வரனை வணங்குகிறேன் என்று சொல்லுமிடத்து சிவபெருமானான ஈஸ்வரனை வணங்குகிறேன் என்றும் கொண்டு, உடையவரின் பரமாச்சாரியர் ஈஸ்வர முனிகளை வணங்குகிறேன் என்றும் கொள்ளலாம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//72 ஸிம்மாசனாதிபதிகள்//

74 ஸிம்மாசனாதிபதிகள் :-)

ambi said...

ஏகப்பட்ட தகவல்கள் சுரங்கம் பதிவு முழுக்க.

சந்தேகத்துக்கு சாம்பார்! என்பது போல, கேஆரெஸ் அண்ணா வேற அள்ளி தந்து இருக்கிறார். மிக்க நன்றி.


//உலகம் முழுவதற்கும் மங்களத்தை அருளுபவருமான சங்கர பகவத் பாதரை நஸ்கரிக்கிறேன்.//

நாங்களும் நஸ்கரிக்கிறோம். :)))

திவாண்ணா said...

சரியான நேரத்தில் சரியான பதிவு! இன்று காலைதான் பதிவுகள் பற்றி நினைத்துக்கொண்டு இருந்தேன். நீங்க போடுட்டீங்க.
திருவிடை மருதூர் சமாசாரம் இது வரை தெரியாது. நன்ஸ்!

குமரன் (Kumaran) said...

நல்லதொரு ஒப்பிடல்/உரையாடல் மௌலி. இரவிசங்கரும் அள்ளித் தந்திருக்கிறார். படிக்கும் போது அடியேனுக்குத் தோன்றிய சில கருத்துகள்/கேள்விகள் கீழே.

திருவிடைமருதூர் மகாலிங்கம் ஸத்யம் அத்வைதம் என்றது ஆதிசங்கரர் காலத்திலா அப்பைய தீட்சிதர் காலத்திலா மௌலி? தீட்சிதர் காலத்தில் என்று படித்தது போல் நினைவு.

ச்ருதி/காதால் கேட்கப்பட்டவை வேதங்கள் சரி. ஸ்மிருதி/சிந்திக்கப்பட்டவை சாஸ்திரங்கள். புராணங்கள் அந்தத் தொடரில் சொல்லப்படும் மூன்றாவது வகை.

அத்வைத மரபும் விசிஷ்டாத்வைத மரபும் வியாசரை (வியாசராயரை இல்லை - வியாசராயர் த்வைத மரபில் வந்த ஒரு ஆசாரியர்) நேரடி குருபரம்பரையில் வைக்கவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் பிரம்மசூத்ர பாஷ்யம் இரு ஆசார்யர்களும் செய்தார்கள். ஆதிசங்கர பாஷ்யத்தைக் கேட்க வியாசரே நேரடியாக வந்தார் என்று சங்கர விஜயமும் இராமானுஜ பாஷ்யத்தைப் புகழ்ந்து காஷ்மீரத்தில் சரஸ்வதி தேவி இராமானுஜரை பாஷ்யக்காரர் என்று அழைத்தார் என்று உடையவர் சரித்திரமும் கூறுகின்றன.

யாதவப்ரகாசரை அத்வைத ஆசார்யர் என்று பொதுவாகச் சொன்னாலும் அவர் ஆதிசங்கரர் மரபில் வந்தவர் இல்லை. அவருடைய அத்வைத பிரிவு 'யாதவப்ரகாசம்' என்றே அழைக்கப்பட்டது. ஆதிசங்கரரிலிருந்து பல கருத்துகளில் மாறுபட்டார் அவர். மற்ற அத்வைத பிரிவுகளாக 'பாஸ்கரம்', 'சிவாத்வைதம்' போன்றவை இருந்திருக்கின்றன. யாதவப்ரகாசர் ஆதிசங்கரரின் வேதாந்த/உபநிடத பாஷ்யத்தைச் சீடர்களுக்குச் சொல்லி வந்த போது இராமானுஜர் அதில் ஒரு கருத்தை மறுத்தார் என்பதால் யாதவப்ரகாசர் சங்கரரின் அத்வைத மரபில் வந்தவர் என்ற தோற்றம் வந்துவிட்டது.

இராமானுஜரே ஒரு துறவி தான். அவருடைய மடத்தில் அவருக்குப் பின் பல ஜீயர்கள் வழி வழியாக வந்து கொண்டே இருக்கிறார்களே. அவர்களும் துறவிகள் தானே. துறவிகளின் தலைமையில் இருக்கும் பல வைணவ மடங்களுக்கும் அதிகமாக இல்லறத்தில் இருப்பவர்களுக்கும் ஆசார்ய பதவி கொடுத்து வைணவத்தைத் தழைக்க வைத்தார் இராமானுஜர் என்று சொல்வது பொருத்தம். மடங்களை நிறுவவில்லை என்பது சரியில்லை. சங்கர மரபில் நீங்கள் சொன்னது போல் பிரம்மசரியத்தில் இருந்து சன்னியாசத்திற்கு சென்றுவிடுவது வழக்கம். வைணவ ஜீயர்களும், ஆண்டவன் சுவாமிகளும், அழகிய சிங்கர் சுவாமிகளும் இல்லறத்திலிருந்து துறவிகளாக வருவார்கள்.

நீங்கள் சொன்னது போல் ஏக தண்டம், த்ரி தண்டம் என்ற பிரிவு ஆதிகாலத்திலிருந்து வருகின்றது போலும். சங்க இலக்கியங்களும் முக்கோல் பகவர்களைப் பற்றி சொல்கிறது. ஏகதண்ட மரபும் தசநாமி மரபும் ஒன்றாக இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. அத்வைதத்தில் ஒரே தத்துவம் - ப்ரம்மம் மட்டுமே உண்டு என்று சொல்லப்படுவதால் ஏக தண்டம் என்றும், விசிஷ்டாத்வைதத்தில் மூன்று தத்துவங்கள் - சித், அசித், ஈஸ்வரன் - இருக்கின்றன என்று சொல்லப்படுவதால் மூன்று தண்டங்களை இணைத்த தண்டம் என்றும் படித்த நினைவு. த்வைத மரபிலும் மற்ற மரபுகளிலும் எப்படி என்று தெரியவில்லை. இணையத்தில் இராகவேந்திரர், மத்வர் இவர்களின் படங்களைப் பார்த்தால் தண்டம் இருப்பது போல் தெரியவில்லை.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க அம்பி. ஆமாம் இப்படி நழுவினா எப்படி... :)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க திவாண்ணா....எல்லா பின்னூட்டங்களையும் படிங்க இன்னும் அதிக தகவல்களை தந்திருக்கிறார்கள் குமரனும் கே.ஆர்.எஸும்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கூடலம்பதி குமரன்.. :)

//திருவிடைமருதூர் மகாலிங்கம் ஸத்யம் அத்வைதம் என்றது ஆதிசங்கரர் காலத்திலா அப்பைய தீட்சிதர் காலத்திலா மௌலி? தீட்சிதர் காலத்தில் என்று படித்தது போல் நினைவு//

பரமாச்சர்யார் சொன்னது ஆச்சார்யாருக்கு நடந்ததாகத்தான். இப்போ எனக்கு தெரிந்த ஒரு சிருங்கேரி மடத்தை சார்ந்தவரிடமும் போனில் கேட்டேன், மாதவீய சங்கர விஜயத்தில் சங்கரருக்குத்தான் இது பற்றி சொல்லிருப்பதாக தெரிகிறது.
நீங்க எதில் படித்தீர்கள் என்று நினைவிருக்கிறதா குமரன்?.

//அத்வைத மரபும் விசிஷ்டாத்வைத மரபும் வியாசரை //

இல்லை குமரன், வியாச பூஜைன்னு ஒண்ணு பண்ணுவாங்க சங்கர-ஜீயர் மடங்களில்...குரு பூர்ணிமா அன்று செய்யும் பூஜை வியாசிரிலிருந்து தொடங்கி எல்லா ஆச்சார்யர்களையும் வரித்து தனக்கு முந்தைய ஆச்சார்யார் வரை செய்யும் ஒரு பூஜை...இதன் பெயரே வியாச பூஜை.

//வியாசராயரை இல்லை - வியாசராயர் த்வைத மரபில் வந்த ஒரு ஆசாரியர்)//

ஆமாம் குமரன், தவறுதான், பதிவில் திருத்திவிடுகிறேன். ஆமாம், வியாசராயருக்குத்தானே ஹயக்ரீவர் தரிசனம் தந்தது?


//அவருடைய அத்வைத பிரிவு 'யாதவப்ரகாசம்' என்றே அழைக்கப்பட்டது. ஆதிசங்கரரிலிருந்து பல கருத்துகளில் மாறுபட்டார் அவர். மற்ற அத்வைத பிரிவுகளாக 'பாஸ்கரம்', 'சிவாத்வைதம்' போன்றவை இருந்திருக்கின்றன. //

ஆகா! இவ்வளவு மேட்டர் எனக்கு தெரியல்லையே!...எதில் இருக்கு குமரன்?, சொல்லுங்க நானும் முழுதாக படித்து தெரிந்து கொள்கிறேன்.

ஏகதண்டம்-த்ரிதண்டம் சூப்பர்...நன்றி குமரன்.


//இராமானுஜரே ஒரு துறவி தான். அவருடைய மடத்தில் அவருக்குப் பின் பல ஜீயர்கள் வழி வழியாக வந்து கொண்டே இருக்கிறார்களே. அவர்களும் துறவிகள் தானே. துறவிகளின் தலைமையில் இருக்கும் பல வைணவ மடங்களுக்கும் அதிகமாக இல்லறத்தில் இருப்பவர்களுக்கும் ஆசார்ய பதவி கொடுத்து வைணவத்தைத் தழைக்க வைத்தார் இராமானுஜர் என்று சொல்வது பொருத்தம். மடங்களை நிறுவவில்லை என்பது சரியில்லை//

அவர்களை துறவிகள் இல்லைன்னு சொல்லவில்லை குமரன்....ப்ரம்மச்சர்யத்திலிருந்து வருவதில்லைன்னு மட்டுந்தான் சொல்லியிருக்கேன்.

கே.ஆர்.எஸுடன் கொஞ்சம் இதப்பற்றி பேசுங்களேன்....ஜீயர் மடங்கள் என்பது ஆச்சார்ய பரம்பரை அல்ல என்று அவர் விளக்குவார்.

ஆண்டவன் ஸ்வாமிகள் மடமோ ஏதோ ஒன்று இராமானுஜருக்கு பின்னால் தோன்றியதாக கூட கேள்விப்பட்டிருக்கிறேன்.

ரசிகன் said...

//அதெப்படி? இவ்வளவு வித்தியாசங்களை வைத்திருக்கும் இந்த இரு ஆச்சார்யார்களை ஒருங்கே வணங்குவது?.

ஸர்வ-வேதாந்த ஸித்தாந்த-கோசரம் தம்-அகோசரம் கோவிந்தம்
பரமாநந்தம் ஸத்குரும் ப்ரணதோஸ்மயஹம்

ஸத்குரும் கோவிந்தம் அஹம் ப்ரணதோஸ்மி - ஸ்த்குருவான கோவிந்தனை நான் நமஸ்காரம் செய்கிறேன். அதாவது ஸ்ரீவைஷ்ணவத்தின் முதாலாவது ஆச்சார்யாரான கோவிந்தன்/மஹா-விஷ்ணுவை நமஸ்காரம் செய்கிறேன் என்றும் சொல்லலாம், அதே போல சங்கரரின் குருவான கோவிந்த பகவத் பாதரை வணங்குகிறேன் என்றும் சொல்லலாம். /

ஓ.. இப்படியும் ஒரு ஐடியா இருக்கா?

தி. ரா. ச.(T.R.C.) said...

நல்ல ஆராய்ந்து அலசி விஷ்யங்களை கோர்வையாக சொல்லிவிட்டீர்கள்.சபாஷ். நமக்குகூட ஒருபதிவாவது இந்தமாதிரி அமைய சங்கரரும் இராமநுஜரும் அருள் புரியவேண்டும்
குமரன் கூற்றில் விஷ்யமுள்ளது.அப்பைய தீக்ஷ்தர் என்றுதான் நினைப்பு.

மெளலி (மதுரையம்பதி) said...

/இந்தமாதிரி அமைய சங்கரரும் இராமநுஜரும் அருள் புரியவேண்டும்
குமரன் கூற்றில் விஷ்யமுள்ளது.அப்பைய தீக்ஷ்தர் என்றுதான் நினைப்பு//

திராச, அதென்ன சொன்னீங்க, 'சிவம் பராபரம்?' அதுதான் அப்பைய தீட்சதர் இல்லயா?...அந்த வாக்கியத்தை முழுசா சொல்லுங்களேன்...மறந்துட்டேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

மௌளி அது சிறந்த சிவ பக்தரான அப்பைய்ய தீக்ஷதர் சிவப்பரம்தெய்வம் நாஸ்தி (சிவனென்ற பரதெய்வமேஇல்லை) என்று கூறவேண்டும் என்பது சம்வாதத்தின்போது போட்ட கண்டிஷன். அப்பைய்ய தீக்ஷ்தர் உடனே யோஜனையே செய்யாமல் சிவப் பரதெய்வம் நாஸ்தி. சிவனை விட வேறு தெய்வமே கிடையாது என்று கூறினார்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//திருவிடைமருதூர் மகாலிங்கம் ஸத்யம் அத்வைதம் என்றது ஆதிசங்கரர் காலத்திலா அப்பைய தீட்சிதர் காலத்திலா மௌலி? தீட்சிதர் காலத்தில் என்று படித்தது போல் நினைவு//

@குமரன், திராச, மெளலி அண்ணா
இது சங்கரரே! அப்பைய தீட்சிதர் அல்ல!

தாழ்வான செயல் புரியும் மனிதர்கள் இருக்கிறார்களே! அப்படி இருக்க எல்லாம் பரம்பொருளுள் ஒன்றாகும் என்பது பொய் அல்லவா என்பதே மத்தியார்ஜூனம் திருவிடைமருதூர் அந்தணர்கள் ஆதிசங்கரர் முன் வைத்த வாதம்!

அதற்கே சத்யம் அத்வைதம் என்று மகாலிங்க சுவாமி மூன்று முறை சொல்லியதோடு மட்டுமன்றி லிங்கத்தில் இருந்து திருக்கையையும் காட்டி அருளினார்! திருவிடைமருதூர் சங்கர மடத்தில் இன்றும் லிங்கம் கை வெளியில் இருப்பது போல வடிவம் இருப்பதாக காஞ்சி காமகோடி பீடத் தகவல்களும் சொல்கின்றன!
http://www.kamakoti.org/miscl/adi.html

//அப்பைய்ய தீக்ஷதர் சிவப்பரம்தெய்வம் நாஸ்தி (சிவனென்ற பரதெய்வமேஇல்லை) என்று கூறவேண்டும் என்பது சம்வாதத்தின்போது போட்ட கண்டிஷன்//

@திராச ஐயா
"சிவாத் பரதரம் நாஸ்தி" என்பதே அந்தச் சரியான வாசகம்!
"சிவப்பரம் தெய்வம் நாஸ்தி / சிவப் பரதெய்வம் நாஸ்தி" என்று சொல்லி இருக்க வாய்ப்பில்லை! தெய்வம் என்பது தமிழ்ச் சொல்!

"சிவாத் பரதரம் நாஸ்தி" = சிவனை விட பரப்பிரம்மம் வேறில்லை என்பதை ஒப்புக் கொண்டு கையொப்பம் இட வேண்டும் என்று சோழ அரசன் சாதிப்பான்.
இது அப்பைய தீட்சிதர் வாதத்தில் சொன்னாரா என்பது ஐயமே!
தீட்சிதேந்திரர் என்று போற்றப்பட்ட அப்பைய தீட்சிதரின் முழு வரலாற்றுக் குறிப்பிலும் இது இடம் பெறவில்லை!
http://www.shaivam.org/adappayya.htm