'சக்ரராஜ ரதோ யத்ர தத்ர கேய ரதோத்தம
யத்ர கேய ரதஸ் தத்ர கிரிசக்ர ரதோத்தம'
யத்ர கேய ரதஸ் தத்ர கிரிசக்ர ரதோத்தம'
என்பதாக அன்னை சக்ரராஜ ரதம் எனப்படும் தேரிலும், அன்னையின் வலப் பக்கத்தில் கேய ரதத்தில் அன்னையின் மந்த்ரிணியும், கிரி சக்ர ரதத்தில் தந்த்ரிணி எனப்படும் தண்டநாதா இடப் பக்கத்திலுமாக....அன்னை பராசக்தி பண்டாசுர வதத்திற்கு சொல்லுவதாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த மூன்று ரதங்களை ரத த்ரயம் என்பர். அன்னையின் சில சக்திகளே மந்த்ரிணி, தந்த்ரிணி என்பதால் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
ஈரேழு புவனங்களையும் ஆளும் அன்னை, தனக்கு மந்திரியாக கொண்ட சக்திக்கு மந்த்ரிணி என்று பெயர். 'மந்த்ரிணியஸ்த ராஜ்யதா' என்று ஒரு நாமம் இருக்கிறது.அதாவது தனது மந்திரியான மந்திரிணியிடம் ராஜ்யத்தை நிர்வாகம் செய்ய கொடுத்து விடுகிறாளாம். இந்த மந்த்ரிணியின் ரூபந்தான் மதுரை மீனாக்ஷி. இந்த மந்த்ரிணியின் ரதத்தின் பெயர் 'கேயசக்ர ரதம். இவள் தனது பரிவாரங்களுடன் அன்னையை பணிகிறாள் என்பது தான் 'கேயசக்ர ரதாரூட மந்த்ரிணி பரிசேவிதா'.
தண்டம் என்றாலே சைன்யம் என்று பெயர். சைன்யங்களின் தலைவர் தண்ட நாதா, அதாவது சேனாபதி. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியை தண்டநாதா என்று கூறுவர். அன்னையின் இந்த வடிவமே வாராஹி என்றும் கூறுவது உண்டு. இவள் கிரிசக்ரம் என்ற ரதத்தை உடையவள். இங்கு கிரி என்பதற்கு மலை என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. கிரி என்பதற்கு குதிரை என்றும் ஒரு பொருளுண்டு. புலன்களையும் கிரி என்பதுண்டு. தண்டநாதா அன்னை கையில் இருக்கும் பஞ்சபாணங்களிலிருந்து உதித்தவள் என்பர். 'கிரிசக்ர ரதாரூட தண்டநாத புரஸ்க்ருதா' என்பது நாமம். அதாவது கிரிசக்ர ரதத்தில் வந்து அன்னையை சேவிப்பதாக சொல்லப்படுகிறது.
சக்ர ராஜம் என்பது என்ன?, அது அன்னை த்ரிபுர சுந்தரி வரும் சக்ரம்?, அது எப்படி இருக்குமாம்?. ஸ்ரீசக்ர ரூபமான ரதமாம். அன்னை இருக்கும் நகரமே ஸ்ரீ நகரம். அந்த நகரத்தின் மத்தியில் சிந்தாமணி க்ருஹத்தில் இருப்பதாக பார்த்திருக்கிறோம். அந்த நகரத்தின் வடிவே ஸ்ரீசக்ரம். இப்போது அவளது ரதமும் ஸ்ரீசக்ர வடிவானது என்று தெரிகிறது. சுதர்சன சக்ரம், கணபதி யந்த்ரம் என்றெல்லாம் சொல்ல கேட்டிருக்கிறோம். இவை எல்லாவற்றிற்கும் தலையானது ஸ்ரீசக்ரம். அதனால்தான் அதற்கு பெயரே சக்ர ராஜம். சக்ரம் என்றாலே அது ஸ்ரீசக்ரத்தையே குறிக்கும் என்பர்.
சரி அன்னையின் சக்தியே மந்த்ரிணி, தண்டநாதா என்று எப்படி சொல்கிறோம்?. அன்னை கையில் இருக்கும் இக்ஷு கோதண்டத்தில் இருந்து தோன்றியவள் மந்த்ரிணி. அன்னையின் இன்னொரு கையில் இருக்கும் பஞ்ச பாணங்களிலிருந்து வந்தவள் தண்டநாதா. மேற்கொண்டு இதுபற்றி அறிய இதை படியுங்கள்.
8 comments:
பதிவுக்கு பொருத்தமான பாடல் : ஸ்ரீசக்ர ராஜ சிம்மாஹசன...
//இந்த மந்த்ரிணியின் ரூபந்தான் மதுரை மீனாக்ஷி. இந்த மந்த்ரிணியின் ரதத்தின் பெயர் 'கேயசக்ர ரதம். இவள் தனது பரிவாரங்களுடன் அன்னையை பணிகிறாள் என்பது தான் 'கேயசக்ர ரதாரூட மந்த்ரிணி பரிசேவிதா'.//
இரண்டு முறை படிச்சேன், இந்த மந்திரிணி தான் மதுரை மீனாக்ஷி என்பதில் தான் கொஞ்சம் புரியலை, அதான் பின்னூட்டம் போடாமலே போனேன், ம்ம்ம்ம்ம்ம்ம்ம்????? விளக்கம்?????
//ஸ்ரீசக்ர ரூபமான ரதமாம். அன்னை இருக்கும் நகரமே ஸ்ரீ நகரம். அந்த நகரத்தின் மத்தியில் சிந்தாமணி க்ருஹத்தில் இருப்பதாக பார்த்திருக்கிறோம். அந்த நகரத்தின் வடிவே ஸ்ரீசக்ரம். இப்போது அவளது ரதமும் ஸ்ரீசக்ர வடிவானது என்று தெரிகிறது//
ராமன் இருக்குமிடம் அயோத்தி மாதிரியா? அன்னை இருக்குமிடம் ஸ்ரீ நகரம்? அதனால அன்னையின் ரதம் ஸ்ரீ நகரம்?
வேறெப்போதோ அன்னை மீனாட்சி மந்த்ரிணி உருவம் என்று நீங்கள் சொல்லியிருந்தது நினைவில் இருந்தது. அதனால் முதல் பகுதியைப் படிக்கும் போதே அது நினைவில் முன் நின்றது. அன்னை அகிலாண்டேஸ்வரியும் அன்னை வாராஹியும் சேனாபதி உருவங்கள் என்பதை இன்று அறிந்தேன். நன்றி மௌலி.
வாங்க ஜீவா, பாடலுக்கு நன்றி.
வாங்க கீதாம்மா......நீங்க கேட்டிருக்கும் கேள்வி தனிப்பதிவா வரும்.....:)
//ராமன் இருக்குமிடம் அயோத்தி மாதிரியா? அன்னை இருக்குமிடம் ஸ்ரீ நகரம்? அதனால அன்னையின் ரதம் ஸ்ரீ நகரம்?//
அதுவும் சரிதான் திவாண்ணா...
உங்களது நினைவாற்றலுக்கு எனது வாழ்த்துக்கள் குமரனண்ணா....
// அன்னை அகிலாண்டேஸ்வரியும் அன்னை வாராஹியும் சேனாபதி உருவங்கள்//
இது பற்றியும் தனியாக பதிவெழுத எண்ணம்...நேரம் கிடைக்கட்டும்...
Post a Comment