நேற்று ராஜ்யபாரம் ஏற்ற அன்னை, இன்று திக்விஜயம் செய்கிறாள். ஈசனை எதிர்க்கையில் தனதுடலில் ஏற்படும் மாற்றத்தை அறிந்து மாலையிட தயாராகும் தினம் இதுவே...சப்பரத்தில் அன்னை-ஈசன் இருவரும் கையில் வில்-அம்புகளுடன் இருப்பர்.
மீனாக்ஷி கல்யாண வைபோகமே, சுந்தரேஸ்வர கல்யாண வைபோகமே.... பத்தாம் நாள் காலை கல்யாணம். மதுரை மாநகர ஆத்திக அன்பர்கள் எல்லோரும் தமது இல்லத்துப் பெண்ணுக்கே திருமணம் நடந்தது போல மகிழ்வுடன் இருக்கும் நாள். கோவிலுக்கு வரும் எல்லா பக்தர்களுக்கும் தாலிச்சரடு, மஞ்சள் கிழங்கு, குங்குமம் பிரசாதமாக அளிக்கப்படும். மாலை 5 மணிவரை கல்யாணக் கோலத்தில் காட்சி அளிப்பர். கோவில் இன்று மட்டும் மதியம் மூடப்பட மாட்டாது. மாலையில் அன்னைக்கு புஷ்பப் பல்லாக்கு, ஈசன் பிரியாவிடையுடன் யானை வாகனத்தில் பவனி.
பதினோராம் நாள் காலையில் அம்மையும், அப்பனும் திருத்தேரில் எழுந்தருளி பவனி. காலை 10-11 மணிக்குள் தேர் நிலை திரும்பிய உடனேயே தேர் சென்ற பாதையில் பல்லக்கில் 'தேர் தடம்' பார்க்க பவனி கிளம்பிவிடுகிறார்கள்.
திருவிழாவின் எல்லா நாட்களும் ஈசன் தனியாக் ஒரு வாகனத்தில் ப்ரியாவிடையுடன் வருவார், அன்னை தனி வாகனத்தில் வருவார். ஆனால் பதினோராம் நாள் இரவு மிக விசேஷமான சப்தாவரணம். இதில் அன்னையும் ஈசனும் ஏக ஆசனத்தில் சப்பரத்தில் வருவர். இதனை வருடத்தில் இந்த ஒருநாள் மட்டுமே காண முடியும். மற்ற எல்லா திருவிழாவிலும் அன்னையின் வழி தனி வழிதான். இந்த சப்தாவரண ஸ்வாமி தரிசனம் எல்லா பாபங்களையும் தீர்க்கக் கூடியதாம்.
சித்திரை திருவிழாவின் கடைசி நாள், பன்னிரண்டாம் நாள். காலையில் அம்மை-அப்பர் வைகையாற்றில் எழுந்தருளி தீர்த்தவாரி. மாலையில் தேவேந்திரனுக்கு (முதன் முதலில் தேவேந்திரனால் ஏற்படுத்தப்பட்டதே பிரம்மோற்சவம்) ரிஷப வாகனத்தில் காட்சி அளிப்பதுடன் மீனாக்ஷி கோவில் சித்திரை உற்சவம் முடிவுக்கு வருகிறது.
சப்தாவரணத்தன்று (11ஆம் நாள் மாலை) அழகருக்கு எதிர்சேவை ஆரம்பித்துவிடும். அது பற்றி தனியாக பிறகு பதிவிடலாம்.
3 comments:
சூப்பர் கவரேஜ், அழகர் உலாவுக்கு வெய்டீஸ். :)
//மற்ற எல்லா திருவிழாவிலும் அன்னையின் வழி தனி வழிதான்.//
ஆமா! அது என்னவோ உண்மை தான்! அதான் மதுரைகாரங்க அம்பத்தூர் வந்தாலும் தனி வழியில நடக்கறாங்க. :P
//(முதன் முதலில் தேவேந்திரனால் ஏற்படுத்தப்பட்டதே பிரம்மோற்சவம்//
இந்த தகவலை அளித்தவர் 'ஆன்மீக சூராவளி' அண்ணன் கேஆரெஸ் தானே? :p
//ஆமா! அது என்னவோ உண்மை தான்! அதான் மதுரைகாரங்க அம்பத்தூர் வந்தாலும் தனி வழியில நடக்கறாங்க. :P//
@ambi, இது என்ன எங்கே போனாலும், என்னையே குறி வச்சுத் தாக்கறீங்க? அவ்வளவு பயம்?
என்னங்க மெளலி, ஆசார்ய ஹ்ருதயம் பக்கம் திறக்கவே மாட்டேனு ஒரே அடம்???????????
Post a Comment