Thursday, April 10, 2008

இந்தாங்க அழைப்பிதழ், மதுரைக்கு போகலாம் வாங்க

மக்களே!

அன்னை மீனாக்ஷி-சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வருடத்தின் 12 மாதங்களிலும் (10 நாள்) உற்சவங்கள் உண்டு. இந்த உற்சவங்களில் முதன்மையானதும் , தமிழகம் முழுவதும் அறிந்ததுமான சித்திரைத் திருவிழாவிற்கான இந்த வருட அழைப்பிதழ் இங்கே!!!






தினமும் இந்திய நேரப்படி மாலை 7 மணியளவில் மறுநாள் நிகழ்ச்சிகள் படத்துடன் தெரிவிக்கப்படும். :-)

9 comments:

குமரன் (Kumaran) said...

சென்ற வருடம் சிவமுருகன் செய்தார். இந்த வருடம் நீங்களா? மிக்க மகிழ்ச்சி & நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

குமரன்,

சிவமுருகன் மாதிரி என்னால் செய்ய முடியாது. அத்தனை அழகான படங்கள்....நான் செய்வது ஜெஸ்ட் பதிவிண்ணிக்கையினை அதிகப்படுத்தும் கயமைத்தனம்... :-)

சிவமுருகன் said...

அண்ணா,

இதே படங்களை நானும் பதிவாக்கி இட்டேன், இதை கண்டவுடன் அதை "save as draft" செய்து திரும்ப பெற்றுவிட்டேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

அச்சச்சோ, சிவமுருகன்...ஏன் உங்க பதிவை எடுத்தீங்க...அது இருந்திருக்கலாமே?

ambi said...

அடடா! சூப்பர்.

*ahem, அப்ப புட்டு திருவிழாவுக்கு உங்க வீட்டுக்கு வந்தா புட்டு தருவீங்களா? :))

Geetha Sambasivam said...

//ahem, அப்ப புட்டு திருவிழாவுக்கு உங்க வீட்டுக்கு வந்தா புட்டு தருவீங்களா? :))//
@அம்பி, எங்கே போனாலும் இப்படியா அல்பத் தனமா அலையறது? :P

படங்களும், அழைப்பும் நல்லாவே இருக்கு மெளலி, முதலிலே என்னமோனு நினைச்சுட்டேன், தலைப்பைப் பார்த்ததும், ம்ம்ம்ம்ம்ம்ம்., ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே, கல்யாணத்துக்கு ஓடி, ஓடிப் போய்ப் பார்த்தது, எதிர் சேவைக்குப் போனது, பொங்கல், புளியோதரை, அழகர் திருநாளில் நாட்டுச்சர்க்கரை போட்ட மாவிளக்கில் கற்பூரம் காட்டியதும் அந்த மணம் மாறாமலேயே சாப்பிட்டது, தண்ணீர் பீய்ச்சி அடித்தது, எல்லாம் நினைவில் வந்து மோதுகின்றது. நன்றி மெளலி,

மெளலி (மதுரையம்பதி) said...

@ அம்பி,

புட்டுத்தானே, ஆடிமாசம் (அன்னை மீனாட்சிக்கு) ஒரு முறையும் ஆவணிமாதம் (புட்டுக்கு மண்சுமந்தது) ஒருமுறையும் பண்ணுவோம்....அப்ப வாங்க....:))

மெளலி (மதுரையம்பதி) said...

@கீதாம்மா,

வாங்க, வாங்க....எல்லாம் ஒரு கொசுவர்த்திதான்...:))

சிவமுருகன் said...

//அச்சச்சோ, சிவமுருகன்...ஏன் உங்க பதிவை எடுத்தீங்க...அது இருந்திருக்கலாமே?//

திரும்பவும் பதித்து விட்டேன்