Saturday, February 13, 2010

சிவானந்த லஹரி...சிவராத்ரி -3


ஜோதி வடிவான ஈசனை நிஷ்களம், சகள நிஷ்களம், சகளம் என்று மூன்று வகையாகச் சொல்கின்றனர். சிவன் என்றாலே சாதாரணமாக நமக்கு மனதில் தோன்றும் உருவம் லிங்க உருவத்தை நிஷ்களம் என்றும், முகத்துடன் கூடிய லிங்கத்தை சகள நிஷ்களம் என்றும், நடராஜர், தக்ஷிணாமூர்த்தி போன்ற வடிவங்களை சகளம் என்றும் கூறுகின்றனர். லிங்கங்கள் பலவகையில் காண்கிறோம். அவற்றையும் ஆறு வகையாகப் பிரித்திருக்கின்றனர் நமது ஆன்றோர். அவை, கருங்கற்களால் ஆனதை சைலஜம் என்றும், மாணிக்கம், வைடூர்யம், பவழம், மரகதம் போன்றவற்றால் ஆனவற்றை ரத்னஜம் என்றும், தங்கம், வெள்ளி, ரசம் போன்றவற்றால் ஆனதை லோஹஜம் என்றும், சந்தனம் போன்ற மரங்களில் செதுக்கப்பட்டதை தாருஜம் என்றும், மண்ணால் செய்த லிங்கத்தை ம்ருண்மய லிங்கம் என்றும் மணல், அரிசி, விபூதி, பசுஞ்சாணம், வெண்ணை, மாவு, கூர்ச்சம் வெல்லம் போன்றவற்றில் செய்ததை க்ஷணிகம் என்றும் சொல்கின்றனர்.


இந்தபு இடுகையில் பகவத்பாதர் ஸ்ரீ சங்கரர் அருளிய சிவானந்த லஹரியில் இருந்து சில ஸ்லோகங்களைப் பொருளுடன் சொல்லி சர்வேசன்,சதாசிவன், நம் சுந்தரேசனை பணிவோம்.

த்ரயீவேத்யம் ஹ்ருத்யம் த்ரிபுரஹர மாத்யம் த்ரிநயனம்
ஜடாபாரோதாரம் சல துரகஹாரம் ம்ருகதரம்
மஹாதேவம் தேவம் மயி ஸதய பாவம் பசுபதிம்
சிதாலம்பம் ஸாம்பம் சிவ மதி விடம்பம் ஹ்ருதி பஜே!

மூன்று வேதங்களால் அறியத் தக்கவர், மனதிற்கினியவர், முப்புரங்களை அழித்தவர், அனைத்துக்கும் முதல்வர், மூன்று கண்களை உடையவர், சடைகளைத் தாங்குவதால் கம்பீர தோற்றம் உடையவர். பாம்பை மாலையாக உடையவர், மானைக் கையில் ஏந்தியவர். தேவர்களிற் சிறந்தவர், பிரகாசமானவர், தயை உடையவர், சகல உயிர்களுக்கும் நாயகர். அறிவிற்கு இருப்பிடம், அம்பிகையுடன் கூடியிருப்பவரான சிவபெருமானை என் உள்ளத்தில் தியானம் செய்கிறேன்.

ஸஹஸ்ரம் வர்த்தந்தே ஜகதி விபுதா: க்ஷீத்ர பலதா
நமன்யே ஸ்வப்னே வா ததனு ஸரணம் தத்க்ருதபலம்
ஹரி-ப்ரஹ்மாதீனாமபி நிகடபாஜா மஸீலபம்
சிரம் யாசே சம்போ சிவதவ பதாம்போஜ பஜனம்.

இவ்வுலகில் பலவகையான பலன்களைக் கொடுக்கும் தேவர்கள் ஆயிரமாயிரம் இருக்கிறார்கள். கனவிலும்கூட அவர்களை வழிபட்டு அதன் மூலம் பெறும் பயன்கள் எனக்கு வேண்டாம். சம்போ!, விஷ்ணு, பிரம்மா ஆகியோர் அடைய முடியாத உம்முடைய திருவடித் தாமரையை தொழுவதே எனக்கு வேண்டியது.

மனஸ்தே பாதாப்ஜே நிவஸது வச: ஸ்தோத்ர பணிதெள
கரெள சாப்யர்ச்சாயாம் ச்ருதிரபி கதாகர்ணன விதெள்
தவ த்யானே புத்திர் நயனயுகளம் மூர்த்தி விபவே
பரக்ரந்தான் கைர்வா பரமசிவ ஜானே பரமத:

பரமசிவனே!, மனது உம்முடைய திருவடித் தாமரையிலும், வாக்கு உமது புகழைப் பேசுவதிலும், இரு கைகளும் உமது அர்ச்சனையிலும், காது உமது பெருமைகளை கேட்பதிலும், புத்தியானது உம்முடைய தியானத்திலும், இரு கண்களும் உமது திருமேனி அழகிலும் நிலைபெறட்டும்.

ஸாரூப்யம் தவ பூஜனே சிவ மஹாதேவேதி ஸங்கீர்த்தனே
ஸாமீப்யம் சிவபக்தி-துர்ய-ஜனதா ஸாங்கத்ய ஸம்பாஷணே!
ஸாலோக்யஞ்ச சராசராத்மகதனு த்யானே பவானீபதே
ஸாயுஜ்யம் மம-ஸித்த மத்ர-பவதி ஸ்வாமின் க்ருதார்த்தோஸ்ம்யஹம்

ஸாரூப்யம் என்னும் முக்திநிலை உன்னுடைய பூஜை முறையிலும், ஸாமீப்யம் என்னும் முக்திநிலையானது 'சிவா' என்னும் உன்னுடைய நாம சங்கீர்த்தனத்தாலும், ஸாலோக்யம் என்னும் முக்திநிலை சிவனடியார்களுடன் கூடியிருத்தலாலும், ஸாயுஜ்யம் என்னும் முக்திநிலை உமது திருமேனியின் தியானத்தாலும் இப்பிறவியிலேயே கிடைத்துவிடுகிறது. இறைவா!, இதைவிட நான் அடையவேண்டியது என்ன?.


த்வத் பாதாம்புஜ மர்ச்சயாமி பரமம் த்வாம்சிந்தயாம்-யன்வஹம்
த்வாமீசம் சரணம் வ்ரஜாமி வசஸாத்வாமேவ யாசே விபோ
வீக்ஷாம் மே திச சாக்ஷீஷீம் ஸகருணாம் திவ்யைச்சிரம் ப்ரார்த்திதாம்
சம்போ லொககுரோ மதீய மன்ஸஸ் ஸெளக்யோ பதேசம் குரு!!

எங்கும் நிறைந்தவரே, உமது திருவடியை பூஜிக்கிறேன். சிறந்தவரான உம்மை எப்போதும் தியானிக்கிறேன். இறைவனான உம்மை சரணடைகிறேன். இன்பம் அளிப்பவரே!, தேவலோக வாசிகள் நெடுங்காலமாக விரும்புகின்ற உமது கருணையுடன் கூடிய கண்பார்வைத் தீக்ஷையை எனக்கு தருவீர்களாக. ஜகத்- குருவே எனக்கு இன்பமளிக்கும் உபதேசத்தை செய்வீராக.


ஹர ஹர மஹாதேவ சம்போ!

14 comments:

Sridhar Narayanan said...

அருமையாக விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி மௌலி :)

Geetha Sambasivam said...

//ஸாரூப்யம் என்னும் முக்திநிலை உன்னுடைய பூஜை முறையிலும், ஸாமீப்யம் என்னும் முக்திநிலையானது 'சிவா' என்னும் உன்னுடைய நாம சங்கீர்த்தனத்தாலும், ஸாலோக்யம் என்னும் முக்திநிலை சிவனடியார்களுடன் கூடியிருத்தலாலும், ஸாயுஜ்யம் என்னும் முக்திநிலை உமது திருமேனியின் தியானத்தாலும் இப்பிறவியிலேயே கிடைத்துவிடுகிறது.//

விளக்கி இருக்கலாமோ??? என் போன்றவர்களுக்குப் புரியுமே!

குமரன் (Kumaran) said...

ஒவ்வொரு சுலோகமும் மிகவும் அருமை. அதிலும் நான்கு வித முக்திகளைச் சொன்ன சுலோகம் மிகவும் அருமை.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க ஸ்ரீதர்....அதிசயமா இந்த பக்கம் தலைகாட்டியிருக்கீங்க...நன்றிங்கண்ணா.:)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கீர்ர்ர்ர்ர்ர் கீதாம்மா. விளக்கியிருக்கலாம், ஆனா இந்த பதிவு அதற்கான இடமில்லையே!.....மொழிமாற்றம் மட்டுந்தான் போட்டிருக்கிறேன். எந்த ஸ்லோகத்துக்கும் விளக்கம் அளிக்கல்லை....அளித்தால் இவற்றுக்கும் விளக்கம் வந்திருக்கும்.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி குமரன்.

S.Muruganandam said...

சிவராத்திரியை முன்னிட்டு அருமையான மூன்று பதிவுகள். அதுவும் இந்த மூன்றாம் பதிவில் ஆச்சாரியரின் அருமையான சிவானந்த ஸ்லோகங்கள். மிக்க நன்றி மௌலி ஐயா.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி கைலாஷி ஐயா.

Jayashree said...

சரியைநிலை நான்கும்ஒரு கிரியைநிலை நான்கும்
தனியோக நிலைநான்கும் தனித்தனி கண்டறிந்தேன்
உரியசிவ ஞானநிலை நான்கும் அருள் ஒளியால்
ஒன்றொன்றா அறிந்தேன் மேல் உண்மைநிலை பெற்றேன்
அரிய சிவ சித்தாந்த வேதாந்த முதலாம்
ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால் நின்றோங்கும்
பெரிய சிவ அனுபவத்தால் சமரச சன்மார்க்கம்
பெற்றேன் இங்கிறவாமை உற்றேன் காண் தோழி.

நினைந்துநினைந் துணர்ந்துதுணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந்து ஊற்றெழுங்ககண் ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்தும்நாம் வம்மினுல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்திய்ஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.

திரு அருட்பா படித்துக்கோண்டிருந்தேன். இந்த அருட்பா இரண்டிலும் "ஸாரூப்யம் தவ பூஜினே சிவ" ஸ்லோகம் என்னத்தை சொல்லறதோ அதை பத்திதான் வள்ளலாரும் சொல்லறாறோ அதுவும் எப்படி செய்யணும்னு சொல்லறாறோனு நினைக்க வைத்தது . MAY BE WRONG. அர்த்தம் வரிக்கு வரி SIMILAR இல்லை. ஆனா சாராம்சம் ஒண்ணுனு தோனித்து.தெளிவா அர்த்தம் உங்களுக்கு தெரிந்திருந்தால் எழுதுவீர்களா?

Anonymous said...

Hats of To Your Work & Devotion.Pls Tell More About Lord Shiva & Mother Parvathi.

TADE ANANDH said...

Hats of to Your Devotion.Please Tell more about Lord Shiva And Mother Parvathi.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க ஜெயஸ்ரீ மேடம். நீங்க சொல்லியிருப்பது போல எழுத முயற்சிக்கிறேன்...சரியாக வந்தால் பதிவாக்குகிறேன்.. சரியா :). நீங்கள் முன்பே கேட்ட ஸ்ரீ ஸ்துதி வேறு பாக்கியிருக்கிறது...ஆனால் நேரம் தான் இல்லையம்மா.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க ஆறுமுகம் சார். முதல் வரவுக்கு நன்றி.

தக்குடு said...

அப்பாடி ஒரு வழியா வந்து படிச்சாச்சுப்பா!!!!...:)