Wednesday, January 13, 2010

மார்கழி மஹோத்ஸவம் - 7 (கோதாஸ்துதி கடைசிப் பகுதி)



ரங்கே தடித்குணவதோ ரமயைவ கோதே
க்ருஷ்ணாம்புதஸ்ய கடிதாம் க்ருபையா ஸுவ்ருஷ்ட்யா
தெளர்கத்ய துர்விஷ விநாச ஸுதாநதீம் த்வாம்
ஸந்த: ப்ரபத்ய சமயந்த்யசிரேண தாபாந்

கோதே!, ஸ்ரீரங்கத்திலிருக்கும் பெருமாளே கார்முகிலோன், தாயார் ரங்கநாயகியோ மின்னல்கொடி போன்றவள். இவ்விருவரின் கருணை மழையில் தோன்றும் நதியாக நீ இருந்து, ஸம்ஸாரமென்னும் கொடிய விஷத்தை அழிக்கிறாய். இதனால்தான் ஸாதுக்கள் உன்னைச் சரணடைந்து தங்களது ஸம்ஸார தாபங்களைப் போக்கிக் கொள்கிறார்கள்.

ஜாதாபராதமபி மாமநுகம்ப்ய கோதே
கோப்த்ரீ யதி த்வமஸி யுக்தமிதம் பவத்யா:
வாத்ஸல்ய நிர்ப்பரதயா ஜநநீ குமாரம்
ஸ்தந்யேந வர்த்தயதி தஷ்ட பயோதராபி

குழந்தைக்கு பாலுட்டும் போது குழந்தை தாயின் கொங்கையைக் கடித்தாலும், சினம் கொள்ளாது பால் கொடுப்பது இயற்கை. அதுபோல, நான் பலவிதமான அபராதங்களைச் செய்திருந்தாலும், நீ அருள் சுரந்து எனது அபராதங்களைப் பொருட்படுத்தாது காத்தருள்கிறாய் ஆகவே நீ எனக்குத் தாயே!.


சதமக மணிநீலா சாரு கல்ஹர ஹஸ்தா
ஸ்தநபர நமிதாங்கீ ஸாந்த்ர வாத்ஸல்ய ஸிந்து:
அளகவிநிஹிதாபி: ஸ்ரக்பி ராக்ருஷ்ட நாதா
விலஸது ஹ்ருதி கோதா விஷ்ணுசித்தாத்மஜா ந:


இந்திர நீலமணிபோல நீல நிறமுடையவளாக, அழகிய செங்கழுநீர்ப்பூவை கையில் தரித்தவளாய், கொங்கைகளின் சுமையால் வளைந்த திருமேனியுடன், மிகுந்த அன்பினைக் கடலாகக் கொண்டு, தனது கூந்தலில் சூடிய திருமாலைகளால் நாயகனை வசப்படுத்திய விஷ்ணுசித்தரின் புதல்வியான கோதை நமது உள்ளத்தில் விளங்க வேண்டும்.



இதி விகஸித பக்தேருத்திதாம் வேங்கடாசாத்
பஹுகுண ரமணீயாம் வக்தி கோதாஸ்துதிம் ய:
ஸ பவதி பஹுமாந்ய: ஸ்ரீமதோ ரங்கபர்த்து:
சரண கமல ஸேவாம் சாச்வதீ மப்யுபைஷ்யந்

மலர்ந்த பக்தியையுடைய வேங்கடேச கவியிடமிருந்து தோன்றிய பலவிதங்களிலும் அழகியதான இந்த கோதா ஸ்துதியை யார் சொல்லுகிறார்களோ அவர்களுக்கு மஹாலக்ஷ்மியைப் பிரியாத ஸ்ரீரங்க ராஜனுடைய நித்யமான திருவடித் தாமரைகளின் கைங்கர்யத்தை பெறும் மதிப்புக்கு உரியவனாகிறான்.

இத்துடன் கோதா ஸ்துதி முடிவுக்கு வருகிறது. மார்கழியும் தான். எல்லோருக்கும் மகர சங்கராந்தி நல்வாழ்த்துக்கள்.

6 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கோதா ஸ்துதியை இட்டமைக்கு நன்றி-ண்ணா!

//சரண கமல ஸேவாம் சாச்வதீ மப்யுபைஷ்யந்//

மலர்ந்த பக்தியையுடைய வேங்கடேச கவியிடமிருந்து தோன்றிய பலவிதங்களிலும் அழகியதான இந்த கோதா ஸ்துதியை யார் சொல்லுகிறார்களோ

//அவர்களுக்கு மஹாலக்ஷ்மியைப் பிரியாத ஸ்ரீரங்க ராஜனுடைய நித்யமான திருவடித் தாமரைகளின் கைங்கர்யத்தை பெறும் மதிப்புக்கு உரியவனாகிறான்//

அப்படியே ஆகட்டும்! அப்படியே ஆகட்டும்!
நித்யமான கைங்கர்ய பாக்கியம் கூடட்டும்! கூடட்டும்!

பல்லாண்டும் பரமனைச் சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கும், தொடர்ந்து படித்தமைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி கே.ஆர்.எஸ்.

உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

குமரன் (Kumaran) said...

கோதா ஸ்துதியைப் பொருளுடன் சொன்னதற்கு நன்றி மௌலி.

தக்குடு said...

அண்ணா, அடுத்த போஸ்டு எப்ப போடப்போரேள்??...

அண்ணாமலையான் said...

நல்ல நிதானமா அழகா சொல்லிட்டேள் போங்கோ... ரொம்ப சந்தோஷம்...