ரங்கேச்வரஸ்ய தவ ச் ப்ரணயாநுபந்தாத்
அந்யோந்ய மால்ய பரிவ்ருத்தி மபிஷ்டுவந்த:
வாசாலயந்தி வஸுதே ரஸிகாஸ் த்ரிலோகீம்
ந்யூநாதிகத்வ ஸமதா விஷயைர் விவாதை:
பூமிதேவியின் அம்சமான கோதே!, ரங்கேஸ்வரனுக்கும் உனக்கும் இருந்த காதலின் தொடர்ச்சியாக உங்களது திருமணத்தின் போது மாலை மாற்றிக் கொண்டிருப்பீர்கள். இன்றும் அந்த வைபவத்தை பேசும் போது சிலர் உன்னை உயர்த்தியும், சிலர் உன் மணாளனை உயர்த்தியும், சிலர் நடுநிலையாகவும் பேசுகின்றனர். இவ்வாறு அவர்கள் ஆர்வத்துடன் பேசுவது மூவுலகிலும் ஒலிக்கச் செய்கிறது.
தூர்வாதள ப்ரதிமயா தவ தேஹ காந்த்யா
கோரோசநா ருசிரயா ச ருசேந்திராயா:
ஆஸீதநுஜ்ஜித சிகாவள கண்ட்ட சோபம்
மாங்கள்யதம் ப்ரணமதாம் மதுவைரிகாத்ரம்
அருகம்புல் போன்ற உனது திருமேனியின் காந்தி/ஒளியும், கோரோசனை போன்ற அழகிய திருமேனியொளி கொண்ட மஹாலக்ஷ்மியின் ஒளியும், அடிபணிபவர்களுக்கு என்றும் நன்மை தரவல்ல பெருமாளுடைய திருமேனியை மயில் கழுத்தின் காந்தியை உடையாதாக ஆகியிருக்கிறது. பெருமாளது கருமுகில் போன்ற ஒளிமிகுந்த திருமேனியைக் கண்ணால் கண்டு அவனடி பணிபவர்களுக்கு அத்திருமேனி எல்லா நலன்களையும் தரும். கோதையின் நிறத்தை அருகம்புல் நிறமாகவும், பெருமாளது வக்ஷஸ்தலத்தில் உறையும் அன்னையின் திருமேனியின் நிறத்தை கோரோசனைக்கு ஒப்பாகவும் கூறி, இவ்வாறாக திருமகளும், கோதையும் பெருமாளைச் சூழ்ந்திருக்கையில் அவரது கருமுகில் வண்ணம் மயில் கழுத்தின் நிறத்தை அடைவதாகச் சொல்லியிருக்கிறார் ஸ்ரீதேசிகர்.
அர்ச்ச்யம் ஸமர்ச்ச்ய நியமைர் நிகம ப்ரஸுநை:
நாதம் த்வயா கமலாய ச ஸமேயிவாம்ஸம்
மாதச் சிரம் நிரவிசந் நிஜ மாதிராஜ்யம்
மாந்யா மநு ப்ரப்ருதய: மஹீக்ஷிதஸ் தே
தாயே!, மதிப்புக்கு உரிய மநு போன்ற அரசர்கள், உன்னோடும் மஹாலக்ஷ்மியுடனும் கூடி நின்றவாறு இருக்கும் உனது நாயகனை நியமங்களான ஆகமங்களில் கூறப்பட்டிருக்கும் புஷ்பங்களால் நன்கு ஆராதித்து
தங்களுடைய அரசாக்ஷியை நீண்டகாலம் அனுபவித்தனர்.
ஆர்த்ராபராதிநி ஜநேப்யபிரக்ஷணார்த்தம்
ரங்கேச்வரஸ்ய ரமயா விநிவேத்யமாநே
பார்ச்வே பரத்ர பவதீ யதி தத்ர நாஸீத்
ப்ராயெண தேவி வதநம் பரிவர்த்திதம் ஸ்யாத்
தேவி, ஜனங்கள் தொடர்ந்து பாபங்களைச் செய்துவந்தாலும், அவர்களைக் காக்கும் பொருட்டு மஹாலக்ஷ்மியானவள் திருவரங்கனிடத்து எப்போதும் விண்ணப்பம் செய்தவாறு இருக்கிறார். அப்போது அவ்விண்ணப்பத்தை தவிர்க்க பெருமாள் இன்னொருபக்கம் திரும்புவானாகில் அப்பக்கத்தில் மஹாலக்ஷ்மியைவிட கருணை நிறம்பிய நீ இருப்பதால், பாபம் செய்த ஜனங்களையும் காப்பதைத் தவிர பெருமாளுக்கு வேறு வழியேது?.
கோதே குணைரபநயந் ப்ரணதாபராதாந்
ப்ருக்ஷேப ஏவ தவ போக ரஸாநுகூல:
கர்மாநுபந்தி பல தாந ரதஸ்ய பர்த்து:
ஸ்வாதந்தர்ய துர்வ்யஸந மர்மபிதா நிதாநம்
ஜனங்கள் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ற பலனை அளிப்பவன் உனது நாயகன். நீயோ, பாபங்கள் பல செய்தவரையும் காப்பதில் உறுதியாக இருக்கிறாய். பாபங்கள் செய்தவர்களஒ தண்டனையிலிருந்து காக்கும் பொருட்டு உனது நாயகனை நோக்கி உனது புருவங்களை போகச் சுவையுடன் நெறிப்பதன் மூலமாக பெருமாள் தனது சுதந்திரமான உயிர்நிலைச் செயலையும் மறந்து எல்லோரையும் (பாப கர்மங்கள் செய்தவரையும்) ரக்ஷித்துவிடுகிறார்.
9 comments:
//அப்போது அவ்விண்ணப்பத்தை தவிர்க்க பெருமாள் இன்னொருபக்கம் திரும்புவானாகில் அப்பக்கத்தில் மஹாலக்ஷ்மியைவிட கருணை நிறம்பிய நீ இருப்பதால்,//
ஹா ஹா ஹா
பாவம் பெருமாள்! திரும்பக் கூட சுதந்திரம் இல்லை போல! :)
இப்படி எல்லாப் பக்கமும் அவரைச் சூழ்ந்து கிட்டா எப்படி?
//அப்பக்கத்தில் மஹாலக்ஷ்மியைவிட கருணை நிறம்பிய நீ இருப்பதால்//
கோதை பூமி தேவியின் அம்சம்! அதனால் பொறுமைக்கு இலக்கணமாகச் சொல்வதுண்டு!
மகாலக்ஷ்மியை விட கூடுதல் கருணை என்பதெல்லாம் தனியாக இல்லை! ஒரு நயத்துக்கு அப்படி!
மற்றபடி அவளே அவள்! பூமிப் பிராட்டியே மகாலஷ்மி! மகாலஷ்மியே பூமிப் பிராட்டி! (பிரகருதியாக மகாலஷ்மியைச் சொல்வதும் இதனால் தான்)
திருமகள் = அறம் = தர்மம்
மண்மகள் = பொருள் = அர்த்தம்
ஆய்மகள் = இன்பம் = காமம்
பெருமாள் = வீடு = மோட்சம்
இப்படி மகாலஷ்மி ஒருத்தியே தான் அறம் பொருள் இன்பமாக வெவ்வேறு விதமாகக் காட்சி அளித்து, தர்ம-அர்த்த-காம ரூபிணியாய், பகவானிடத்தில் மோட்சத்துக்குச் சேர்பிக்கிறாள் என்பது ஒழுகு/சாஸ்திரம்!
//இன்றும் அந்த வைபவத்தை பேசும் போது சிலர் உன்னை உயர்த்தியும், சிலர் உன் மணாளனை உயர்த்தியும், சிலர் நடுநிலையாகவும் பேசுகின்றனர்//
ஹா ஹா ஹா
என்னை முதலில் குறிப்பிட்டுச் சொன்னமைக்கு நன்றி-ண்ணா! :)
//திருமகளும், கோதையும் பெருமாளைச் சூழ்ந்திருக்கையில் அவரது கருமுகில் வண்ணம் மயில் கழுத்தின் நிறத்தை அடைவதாகச்//
சூப்பரோ சூப்பர்! எங்க மயிலார்-ன்னா சும்மாவா?
//பாபங்கள் செய்தவர்களஒ தண்டனையிலிருந்து காக்கும் பொருட்டு உனது நாயகனை நோக்கி உனது புருவங்களை போகச் சுவையுடன் நெறிப்பதன் மூலமாக//
அடா அடா அடா...
என்னவொரு காட்சி! அதுவும் அந்தக் காட்சியைக் காட்டுவது வேதாந்தத்தைப் பேரில் கொண்ட எங்கள் வேதாந்த தேசிகர்!
Read the previous posts too.
Desikar is amazing. :)
வருகைக்கும், அனுபவித்துப் படித்தமைக்கும் நன்றி கே.ஆர்.எஸ்.
வாங்க ராதா. இதனை முடிக்கையில் ஸ்ரீ ஸ்துதியையும் எழுதத் தொன்றுகிறது. :)
அருமை!! பெரியாழ்வாரோட தாய் பாசம் பக்தி நம்பிக்கை 3 எவ்வளவு துல்லியமா தெரியறது!!
"மின்னனைய நுண்ணிடையார் விரிகுழல் மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய் உன்னைக் கண்டார் என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவளைப் பெற்ற வயிறுடையாள் என்னும் வார்த்தை எய்து வித்த இருடீ கேசா முலையுணாயே "
வில்லிப்புத்தூருக்கு அவரோட மங்கள சாசனம்!!!. ஸ்ரீ ஸ்துதியும் எழுதுங்கோ.
வாங்க ஜெயஸ்ரீ மேடம். ஸ்ரீ ஸ்துதி எழுதத்தான் தோன்றுகிறது. வரும் தை வெள்ளியிலிருந்து எழுதறேன் மேடம்.
Post a Comment