மார்கழி மாதம் பற்றி 2007ல் 4 பதிவுகள் இட்டேன். அதன் தொடர்ச்சியாக இன்னும் 3 பதிவுகள் இட நினைத்திருந்தேன், ஆனால் சில தவிர்க்க இயலாத காரணங்களால் அதனை அப்போது தொடர இயலவில்லை. தற்போது அதனை தொடர எண்ணம் இருக்கிறது, பார்க்கலாம்.
மார்கழி பற்றிய முந்தைய இடுகைகளின் லிங்க் கிழே!
"ஸ்ரீ தேசிக ஸ்தோத்ரமாலா" என்னும் ஸ்ரீ தேசிகரால் செய்யப்பட்ட ஸ்தோத்ரங்கள் பற்றிய திரட்டு ஒன்றினை நண்பர் ராகவ் உதவியால் படிக்கக் கிடைத்தது. மார்கழியில் கோதையை வழிபடுதல் சிறப்பல்லவா?, அதிலும் ஸ்ரீ தேசிகர் அருளிய ஸ்தோத்ரங்களால் நாச்சியாரை வணங்குதல் விசேஷம் என்று தோன்றுகிறது. ஆகவே "கோதாஸ்துதி" என்ற பெயரில் ஸ்ரீதேசிகர் அருளிய 29 ஸ்லோகங்களைப் ப்ளாக்கில் போடலாம் என்றிருக்கிறேன்.
செளந்தர்ய லஹரி போல விளக்கங்கள் சொல்லுமளவுக்கு எனக்கு இதில் பரிச்சயம் இல்லை. புத்தகத்தில் இருப்பதை மட்டும் தட்டச்சு செய்து சற்றே விளக்கங்களுடன் போடப் போகிறேன். மார்கழி 30 நாட்களில் ஒருமுறையானும் இந்த ஸ்லோகங்களை படித்து இறையருளை வேண்டுவோம்.
ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தக யோக த்ருச்யாம்!
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாமநந்யசரண: சரணம் ப்ரபத்யே!!
சாதாரணமாக இல்லங்களில் பிறக்கும் குழந்தையை வம்சம் தழைக்க வந்த குலக்கொடி, குலக்கொழுந்து என்றெல்லாம் இன்றும் பெரியவர்கள் சொல்லக் கேட்கிறோம். இங்கு ஸ்ரீதேசிகரும் அதே வார்த்தையைச் சொல்கிறார். பெரியாழ்வார் என்று போற்றப்படும் ஸ்ரீவிஷ்ணு சித்தரது குலக்கொடியாம் கோதை. அதிலும் நந்தன கல்பவல்லி என்று இந்திரனது உத்தியான-வனமாகிய நந்தவனத்தில் உதித்த, கேட்பவற்றையெல்லாம் கொடுக்கும் கற்பகவல்லிக் கொடி என்று நாச்சியாரை விளிக்கிறார். ஸ்ரீரங்க ராஜனையும் அடியாருக்கு எல்லாந்தரும் சந்தனமரம் போன்றவன் என்று கூறி, ஆண்டாள் என்னும் கற்பகவல்லிக் கொடி தவழும் ஹரிசந்தன மரமானது பார்க்கத் திகட்டாத பரிபூரணமாக இருக்கிறது என்று சொல்கிறார். பொறுமைக்கு உதாரணமாக பூமிதேவியைச் சொல்வது வழக்கம். அதையே ஸ்ரீ தேசிகரும், பூமிதேவியே கோதை நாச்சியாராக வந்தாளோ அல்லது ஸ்ரீமஹா லக்ஷ்மியே மற்றொரு திருவுருக்கொண்டு வந்தாளோ என்று நினைக்கத் தோன்றுகிறது என்று கூறி, வேறு கதியற்ற நான் கோதை நாச்சியாரைச் சரணடைகின்றேன் என்று கூறுகிறார்.
வைதேசிக: ச்ருதிகிராமபி பூயஸீநாம்
வர்ணேஷு மாதி மஹிமா ந ஹி மாத்ருசாம் தே!
இத்தம் விதந்தமபி மாம் ஸஹஸைவ கோதே
மெளநத்ருஹோ முகரயந்தி குணாஸ் த்வதீயா:!!
கோதே!, வேதங்களும் உனது பெருமையைக் கூறத்தொடங்கி வெற்றியடைய முடியாத அளவு பெருமையுடையவள் நீ. அப்படியான உன் பெருமைகள என் போன்ற சிற்றறிவினர்களது தோத்திரத்தில் கூறயிலாதென்பதை அறிவேன். ஆனாலும் உனது குணாதிசயங்கள் எனது மெளனத்தைக் கலைத்து பேசவைக்கும் ஆற்றலைக் கொடுக்கிறது. உனது கல்யாண குணங்கள் எனக்கு வலிமையளித்து உன் புகழைப் பேசவைப்பதால் உன்னைத் துதிக்க முயல்கிறேன்.
த்வத் ப்ரேயஸ: ச்ரவணயோ ரம்ருதாயமாநாம்
துல்யாம் த்வதீய மணிநூபுர சிஞ்ஜிதாநாம்!
கோதே த்வமேவ ஜநநி த்வதபிஷ்டவார்ஹாம்
வாசம் ப்ரஸந்ந மதுராம் மம ஸம்விதேஹி!!
கோதையம்பா!, உன்னைப் போற்றிப்பாடும் திறத்தையும் எனக்கு நீயே அருளவேண்டும். நீ நடந்து வருகையில் உன்கால் சிலம்பு ஏற்படுத்தும் ஒலியினால் மகிழும் பெருமாளுக்கு, நீயருளும் அந்த வாக்குத்திறனால் உன்னை நான் பாடுவது திருவமுதாய் இருக்கும். நீயெனக்கு அருளும் வாக்கு கேட்பவர்களுக்கு தெளிவாய், செவிக்கு இனிதாய் இருக்கும்படியாக அருள்வாய்.
க்ருஷ்ணாந்வயேந தததீம் யமுனா நுபாவம்
தீர்த்தைர் யதாவதவ்காஹ்ய ஸரஸ்வதீம் தே!
கோதே விகஸ்வர தியாம் பவதீ கடாக்ஷாத்
வாச: ஸ்ப்புரந்தி மகரந்தமுசள் கவீநாம்!!
கோதைப் பிராட்டியே!, க்ருஷ்ணனுடைய திருவிளயாடல்களால் பெயர் பெற்றது யமுனை நதி. அந்த கண்ணனின் புகழைப்பாடிய உனது பாடல்கள் (திருப்பாவை, நாச்சியார் திருமொழி), அதே கண்ணனின் சம்பந்தத்தால் பெருமை பெற்று விளங்குகின்றது. உனது பாடல்களின் மூலமாக ஆசார்யர்கள் தத்துவார்த்தங்களை உணர்ந்து அநுபவித்து ஞானம் பெறுகின்றனர். நாவன்மை பெற்ற உனது கடாக்ஷத்தால் ஆசார்யார்கள் சொல்வதில் தேன்-மழை போன்ற கருத்துக்கள் பிறந்து உலகை காக்கின்றன.
**ஸ்துதி தொடரும்**
31 comments:
மார்கழிக் குளிரிலுமே , குள்ளக் குடைந்து நீராடி 'அவனைப் பாடிப் பெறும் புண்ணியம் யாமுடையோம்!'
கோஷ்டியை ஆரம்பித்ததற்கு வந்தனங்கள், மௌலி!
வாங்க கிருஷ்ணமூர்த்தி சார். இங்கே பெரிய கோஷ்டி எல்லாம் இருக்காது, ஏதோ 4-5 பேர் வருவார்கள் அவ்வளவே! :)
சரி, நாம வந்த காரியத்தைப் பார்க்கலாம், கோஷ்டியில் என்ன பிரசாதம்?? வடக்குக் கிருஷ்ணன் கோயில் வெண்பொங்கல், தயிர்சாதம் வேணும் எனக்கு! :P:P:P
//, ஏதோ 4-5 பேர் வருவார்கள் அவ்வளவே! :)//
அட??? யாருமே வராட்டியும் நாங்க எழுதுவோமில்ல???? :))))))) இதுக்குப் போய் வருத்தப் படலாமா?????
மார்கழியை அருமையா ஆரம்பிச்சுட்டீங்களேண்ணா..
சில நாட்கள் முன்புதான் கோதாஸ்துதி சேவாகாலத்தில் அன்வயிக்கும் பாக்யம் கிடைச்சது.. இப்போ அர்த்தம் உங்க மூலமா தெரிந்து கொள்வது கோதையின் அருளன்றி வேறென்ன..
//கோதாஸ்துதி" என்ற பெயரில் ஸ்ரீதேசிகர் அருளிய 29 ஸ்லோகங்களைப் //
கோதையின் திருப்பாவை 30 பாடல்கள் என்பதால் அதைவிட ஒன்று குறைத்து 29 பாடல்கள் இயற்றியதாக சொல்வர்.. இன்றும் வசந்தோற்சவத்தின் போது தினமும் கோதை கோதாஸ்துதியை செவி குளிரக் கேட்ட வண்ணம் வலம் வருகிறாள்.
எளிமையா இருக்கு படிக்க! தொடரவும்.
அப்புறம் நான் தயிர் சாதம் சாப்பிடறதில்லை. மூக்குக்கு ஒத்துக்காது. சக்கரைபொங்கல் போதும்!
:-))
வாங்க கீதா-மாமி...வடக்குமாசி வீதி க்ருஷ்ணன் கோவில் பிரசாதம் 5ம் தேதிக்கு மேலே கிடைக்கும், அதுவரை கிடையாது.. :)
//அட??? யாருமே வராட்டியும் நாங்க எழுதுவோமில்ல???? :))))))) இதுக்குப் போய் வருத்தப் படலாமா????//
வருத்தமெல்லாம் ஒண்ணுமில்லை....எல்லோருக்கும் பிடித்த விஷயமா எழுதி அப்பவும் படிக்க ஆளில்லைன்னா வருந்தலாம்...நாம எழுதறதெல்லாம் அப்படியில்லையே..:)
வாங்க ராகவ். நீங்க கொடுத்த புத்தகத்தால்தான் இந்த இடுகைகள்...அதிலேயே அர்த்தமும் இருக்குண்ணா, நான் கொஞ்சம் எனது விதத்தில் எழுதிட்டு அதில் இருப்பதை வைத்து சரிபார்த்துக்கறேன்....
//கோதையின் திருப்பாவை 30 பாடல்கள் என்பதால் அதைவிட ஒன்று குறைத்து 29 பாடல்கள் இயற்றியதாக சொல்வர்.. இன்றும் வசந்தோற்சவத்தின் போது தினமும் கோதை கோதாஸ்துதியை செவி குளிரக் கேட்ட வண்ணம் வலம் வருகிறாள்//
பகிர்ந்தமைக்கு நன்றி ராகவ்.
வாங்க திவாண்ணா....பெங்களூர் வாங்கோ, எல்லாவிதமான பிரசாதங்களும் கிடைக்கும் :)
//வாங்க திவாண்ணா....//
grrrrrrrrrrrrr
//பெங்களூர் வாங்கோ, எல்லாவிதமான பிரசாதங்களும் கிடைக்கும் :)//
அநியாயமா இல்லை??? நான் கேட்டால் 5 தேதிக்கு அப்புறம்னீங்க, இப்போ அவருக்கு மட்டும் கொடுக்கறேனு சொல்றீங்க. நான் வரலை பெண்களூருக்கு! :P
//அநியாயமா இல்லை??? நான் கேட்டால் 5 தேதிக்கு அப்புறம்னீங்க, இப்போ அவருக்கு மட்டும் கொடுக்கறேனு சொல்றீங்க. நான் வரலை பெண்களூருக்கு! ://
வாங்க கீ.மாமி, நீங்க கேட்டது க்ருஷ்ணன் கோவில் பிரசாதம், அது நான் மதுரை போகையில்தான் தரமுடியும்....:)
ஆனால் திவாண்ணா அதான் வேண்டுமென்று சொல்லலை...ஆகவே வீட்டு பிரசாதம் அவருக்கு எப்போது வேண்டுமானாலும் கிடைக்குமுன்னேன் :)
கோஷ்டி என்பது எண்ணிக்கை மட்டுமே இல்லையே மௌலி! அவனைப் பாடும் மனம் தான் இங்கே கோஷ்டியாகப் பெருகுகிறது!
//வேறு கதியற்ற நான் கோதை நாச்சியாரைச் சரணடைகின்றேன் என்று கூறுகிறார். //
"மாம் ஏகம் சரணம் வ்ரஜ" என்ற கண்ணனின் வார்த்தைகளை வைத்துக் கொண்டு ஒரு அன்பர் என்னுடன் விடாக் கண்டன் கொடாக் கண்டனாக சண்டை இட்டுக் கொண்டு இருந்தார். கண்ணனையே சரணம் அடைய வேண்டும் என்றும் வேறு தெய்வங்களை(ஹரன், அம்பாள், முருகன்..) சரணம் அடையக் கூடாது என்றும் அவர் வாதம். அவரிடம் இருந்து விட்டால் போதும் என்று தப்பி பிழைத்து வந்தேன். :)
பெரியாழ்வார் திருமகளை நானும் சரணம் அடைகிறேன். Happy Margazhi ! :)
வருகைக்கு நன்றிகள் ராதா.
//கோஷ்டி என்பது எண்ணிக்கை மட்டுமே இல்லையே மௌலி//
உண்மைதான் சார். :)
இப்போ தான் முழுவதும் படித்து முடித்தேன். யமுனை நதி என்று படித்த உடனே இந்தப் பாடல் நினைவிற்கு வந்தது.
யமுனா தீர விஹாரி !
பிருந்தாவன சஞ்சாரி !
கோவர்த்தன கிரிதாரி !
கோபால கிருஷ்ண முராரி !!
ராதா சேதோ ஹாரி !
ப்ரேம ஹ்ருதய சஞ்சாரி !
கோவர்த்தன கிரிதாரி !
கோபால கிருஷ்ண முராரி !!
~
Radha
மீள்வருகைக்கு நன்றி ராதா....அந்த ஸ்லோகத்தில் யமுனை மட்டுமல்ல, க்ருஷ்ணா மற்றும் சரஸ்வதின்னு 3 ஆறுகளின் பெயர்களும் வருகிறது.. :)
பலநாட்கள் கழித்து 'யமுனா தீர விஹாரி' பாடலை நினைவுபடுத்தியமைக்கும் நன்றிகள். :)
ரொம்ப மகிழ்ச்சி மௌலி. கோதாஸ்துதியின் முதல் சுலோகத்தை மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவில் ஆண்டாள் சன்னிதியில் கல்வெட்டாக இட்டிருப்பார்கள்; அதனால் சிறு வயதில் இருந்து அதைப் பார்த்துப் படித்து அந்த சுலோகம் மட்டுமே தெரியும். மற்ற சுலோகங்களையும் பொருளுடன் இப்போது படிக்கும் வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்று எண்ணி மகிழ்கிறேன். நன்றி.
கருணையில் கமலையான மகாலக்ஷ்மியை மிஞ்சும் பூமிப்பிராட்டியே ஆன கோதை நாச்சியாரைத் தவிர வேறு கதியில்லாத அடியேன் அவள் திருவடிகளையே கதியாக அடைகிறேன். அடையுங்கள்! அடையுங்கள்! ஆண்டாள் திருவடி அடையுங்கள்! நம் ஆண்டாள் திருவடி அடையுங்கள்!
உன்னைப் போற்றிப் பாட நீயே அருள வேண்டும் என்று வேண்டுவது எவ்வளவு நன்றாக இருக்கிறது!
வருகைக்கு நன்றி குமரன். ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க....:)
ரொம்ப நாள் கழிச்சு தானே நீங்களும் எழுதியிருக்கீங்க? அதனால தான். :-)
உங்க எல்லா POSTS மே ரொம்ப SCHOLARLY யா இருக்கு. சௌந்தர்யலஹரியை ரசித்து படித்தேன்.இப்போ தந்தை போற்றிய ஆண்டவனை ஆண்ட ரங்கமன்னார் நாச்சியாரைப் பற்றியா!! GOOD!
" பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை - ஒருநாளைக்
குண்டோ மனமே யுணர்ந்துபார் ஆண்டாளுக்
குண்டாகி லொப்பிதற்கு முண்டு ?!!
அப்பேர்ப்பட்ட பட்டர்பிரான் கோதைக்கு என் நமஸ்காரம் .
மீள்வருகைக்கு நன்றி குமரன்...ஏனோ எழுத விருப்பமின்றி இருந்தேன்...ஆனால் 'ஆடியபாதம்' நிற்காதல்லவா? :)
வாங்க ஜெயஸ்ரீ மேடம். முதல் வருகைக்கு நன்றி. :)
ஸ்காலர் எல்லாம் ஏதுமில்லை...தெரிஞ்சுக்கணுமுன்னு படிக்கறேன், அதை அப்படியே எழுத முயற்சிக்கிறேன்....அந்த முயற்சியிலும் பல தவறுகள், இருப்பினும் நேரம் கிடைக்கையில் எழுத முயற்சிக்கிறேன்.
செளந்தர்யலஹரி முடிந்துவிட்டது, நீங்கள் அவ்விடுகைகளைப் படித்தீர்கள் என்றறிந்ததில் மகிழ்ச்சி.
கீதாம்மா. நீங்க என்ன எழுதுனாலும் பின்னூட்டம் போடாம நாங்க படிப்போமில்ல?! :-)
சந்தன மரமும்,கற்பகவல்லிக் கொடியும் வெகு பொருத்தம். ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம். நன்றி மௌலி.
தோழி கோதைக்கு இனிய வாழ்த்துக்கள்! :)
கோதைத் தமிழுக்கு வடக்கிலும் சிறப்பு செய்ய எண்ணி,
வேதாந்த தேசிகர் கோதா ஸ்துதியை வடமொழியில் அருளினார்!
கிருஷ்ண தேவராயர் ஆமுக்த மால்யதாவை தெலுங்கிலே அருளினார்!
இப்படி கோதைத் தமிழ், பல இடங்களிலும் பட்டொளி வீசிப் பறக்கிறது! இன்று மதுரையம்பதியிலும் பட்டொளி வீசிப் பறப்பது கண்டு மட்டிலா மகிழ்ச்சி! :)
//ஆகவே "கோதாஸ்துதி" என்ற பெயரில் ஸ்ரீதேசிகர் அருளிய 29 ஸ்லோகங்களைப் ப்ளாக்கில் போடலாம்//
கோதையை விட ஒரு படி குறைந்தே இருக்க வேண்டி தேசிகர் 30சுலோகங்களாகச் செய்யாமல், 29 சுலோகங்கள் செய்ததாகச் சொல்லுவர்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!
//ஸ்ரீவிஷ்ணு சித்த குலநந்தந கல்பவல்லீம்//
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய்
//ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தக யோக த்ருச்யாம்!//
உயர் அரங்கர்க்கே கன்னி உகந்தளித்து
//ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்//
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாது
//கோதாம் அநந்ய சரண: சரணம் ப்ரபத்யே!!//
யம்மாடி கோதே! வேறு சரணங்கள் இன்றி, புகல் ஒன்று இன்றி, உன்னையே பற்றி வந்துள்ளேன்!
***ஸ்ரீ-மன்*** நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே
***ஸ்ரீ-மதே*** நாராயணாய நமஹ!
அன்பு மௌலி, தாமதமாக வருவதற்கு மன்னிக்கணும். கோதானுபவம் கிடைக்க எனக்கு இன்றுதான்
கொடுத்துவைத்திருக்கிறது.பெரியாழ்வார் பெற்று எடுத்த பெண். ஸ்ரீரங்கனின் அன்பு மணவாட்டி. நீளா தேவியின் அவதாரம் என்றும் சொல்வார்கள். அவளைச் சேவிப்பதற்கு வாய்ப்புக் கொடுத்து இருக்கிறீர்கள்.
இனிமையான ஆண்டாளின் அருமையை அனுபவிக்கிறேன். நன்றிம்மா.
Post a Comment