Tuesday, July 7, 2009

வியாஸ பூஜையும் சாதுர்-மாஸ்யமும்


வேத வ்யாஸர் என்றவுடன் நமக்கு முதலில் தோன்றுவது மஹாபாரதம் தான். சதுர் வேதங்களில் நாம் எந்த வேதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அதை நமக்களித்தவர் வேத வ்யாஸர் தான். இவை மட்டுமல்லாது 18 புராணங்களும் எழுதி அவற்றின் மூலமாக வேதத்தை எளிமையாக்கி எல்லோருக்கும் தந்தவர் ஸ்ரீ வேத வ்யாஸர். வேதாந்த சாஸ்திரத்தின் சிகரமான பிரம்ம சூத்திரத்தை அளித்தவரும் இவரே!. ஒவ்வொரு வருஷமும் ஆஷாட பெளர்ணமி தினத்தில் வேத மார்க்கத்தை அனுசரிக்கும் ஸ்மார்த்த, வைஷ்ணவ, மாத்வ பிரிவுகளைச் சார்ந்த எல்லா ஸன்யாசிகளும் இவருக்குப் பூஜை செய்கின்றனர்.

வேதங்களை பிரித்து ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களாக அளித்தமையால் ஸ்ரீ வேத வ்யாஸர் என்று அழைக்கப்பட்டாலும், இவருக்கு இன்னும் சில பெயர்கள் உண்டு. கங்கையின் நடுவில் இருந்த த்வீபத்தில் பிறந்ததால் "த்வைபாயனர்" என்றும், இவரது உடல் ஸ்ரீக்ருஷ்ணனது நிறமாக இருந்ததால் "க்ருஷ்ண-த்வைபாயனர்" என்றும், பதரீவனம் எனப்படும் இலந்தைக் காட்டினருகில் வசித்ததால் "பாதராயணர்" என்றும் கூறக்காணலாம்.

ச்ரவண பெளர்ணமியில் உபாகர்மா செய்யும் போது பிரம்மச்சாரியும், கிருஹஸ்தனும் வ்யாசரை வழிபடுவது போல சன்யாஸிகள் ஆஷாட பெளர்ணமி நாளில் வேத வ்யாஸரை குறித்து பூஜை செய்து சாதுர் மாஸ்ய விரதம் இருக்கிறார்கள். இந்நாளில் கிருஹஸ்தர்களும் தமது குலாசார்யர்கள் செய்யும் பூஜையில் கலந்து கொண்டு அவர்களது அனுக்ரஹத்திற்குப் பாத்திரமாதல் வேண்டும். ஆஷாட பூர்ணிமையே குரு பூர்ணிமா என்று வட தேசங்களில் கொண்டாடப்படுகிறது.

இந்தப் பூஜையில் இருந்து சன்யாஸிகள் சாதுர்மாஸ்ய விரதத்தை ஆரம்பிக்கிறார்கள். சன்யாஸிகள் அஹிம்சையை ஆதாரமாகக் கொண்டவர்கள். அவர்கள் தங்களால் எந்த உயிருக்கும் ஹிம்ஸை/உபத்திரவம் வரக்கூடாது என்று மழைக் காலமான ஆடியில் இருந்து கார்த்திகைவரையில் பிரயாணத்தைத் தவிர்த்து ஒரே இடத்தில் இருந்து வேதாந்த விசாரம் செய்ய வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தனியாகச் செய்ய இயலாத சன்யாஸிகள் தங்களது குருவுடன் இருந்து இந்த பூஜையில் கலந்து கொள்ளவேண்டும் என்று கூறுகிறார்கள். 4 மாதங்கள் இல்லாவிடினும் 4 பக்ஷங்களாவது இவ்விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று சாஸ்திரம் கட்டளையிட்டிருக்கிறதாகத் தெரிகிறது. இதே போல சன்யாஸிகள் இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் போது அவர்களுக்கு பிக்ஷை, பாத பூஜை போன்றவற்றைச் செய்து அவர்களது விரதத்தை ஆதரித்து, அவர்களிடத்தே வேதாந்தக் கருத்துக்களை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று க்ருஹஸ்தர்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள்.

ஹேமாத்ரி என்ற தர்ம சாஸ்திர கிரந்தத்திலும், பவிஷ்ய புராணத்திலும் இந்த நான்கு மாதங்களில் குரு வந்தனம் செய்தல் பற்றி கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. குரு பூர்ணிமை தினத்தில் வ்யாஸ பூஜை செய்தாலும், இந்த விரதமானது ஸயன ஏகாதசி தினத்தன்று ஆரம்பிக்கப்படுவதாக ஹேமாத்ரியில்கூறப்பட்டுள்ளது. அதாவது ஆஷாட சுக்ல ஏகாதசியில் ஆரம்பித்து, பிரபோத துவாதசி எனப்படும் கார்த்திகை சுக்ல துவாதசியில் (உத்தான ஏகாதசிக்கு அடுத்த நாள்) முடிவடையும் என்று சொல்லியிருக்கிறது. அதாவது மஹாவிஷ்ணு உறங்க ஆரம்பித்தது முதல் அவர் எழுந்திருக்கும் வரையில் என்பதாகவும் சொல்கிறார்கள்.

இவ்விரதம் சன்யாஸிகள் மட்டுமல்லாது பல குடும்பங்களிலும் பெரியவர்கள் கடைப்பிடிப்பதைக் கண்டிருக்கிறேன். சாதுர்மாஸ்ய விரத்திற்கு என்று ஆகார நியமங்கள் தனியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதன்படி முதல் மாதத்தில் காய்கறி, கிழங்கு வகைகளைத் தவிர்க்க வேண்டும், இரண்டாம் மாதம் ததி/தயிர் சாப்பிடக் கூடாது. மூன்றாம் மாதம் பாலும், நான்காம் மாதம் பருப்புக்கள் போன்ற இரண்டாகப் பிளக்கக் கூடிய தான்ய வகைகளும் உணவில் இருந்து விலக்கப்பட வேண்டியது.

ஸ்ரீ மடங்களில், குறிப்பாக காமகோடி மடத்தில் இந்த பூஜைக்கென்றே தனியாக ஒரு மடம் அமைக்கப்பட்டு, அதில் அக்ஷதையைப் பரப்பி நடுவில் பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் "முநீநா மப்யஹம் வ்யாஸ:" என்பதாக கீதையில் சொல்லியிருப்பதற்கேற்ப ஸ்ரீக்ருஷ்ணரை ஆவாஹனம் செய்து, சுற்றிலும் தேவதைகளையும், ரிஷிகளையும், குரு பரம்பரையில் வந்த ஆசார்யர்களையும் ருத்ராக்ஷங்களிலோ அல்லது எலுமிச்சம் பழங்களிலோ ஆவாஹனம் செய்து பூஜிக்கின்றனர். இந்த அமைப்பிற்கு பஞ்சக பூஜை என்று பெயர். ஐந்தைந்து பேர்களைக் கொண்ட ஆறு பஞ்சகங்கள் அமைத்து அதில் ஆசார்ய பரம்பரையினரை பூஜை செய்வர். அவையாவன;



1. மண்டப நடுவில் க்ருஷ்ண பஞ்சகம் - க்ருஷ்ணனை நடுவிலும், நான்கு மூலைகளில் வாசுதேவர், பிரத்யும்னர், அனிருத்தர் மற்றும் சங்கர்ஷணர் ஆவாஹனம்

2. வ்யாஸ பஞ்சகம் - நடுவில் வ்யாஸர், சுற்றிலும் பைலர், வைசம்பாய்னர், ஜைமினி மற்றும் ஸுமந்து

3. பகவத்பாத பஞ்சகம் - நடுவில் ஆதி சங்கரர், சுற்றிலும் பத்மபாதர், சுரேஸ்வரர், ஹஸ்தாமலகர் மற்றும் தோடகர்

4. ஸனக பஞ்சகம் - நடுவில் ஸனகர், சுற்றிலும் ஸநந்தனர், ஸ்நாதனர், ஸநத்குமாரர் மற்றும் ஸநத்ஸுஜாதர்

5. த்ராவிட பஞ்சகம் - நடுவில் த்ராவிடாச்சார்யார், சுற்றிலும் கெளட பாதர்,கோவிந்த பகவத்பாதர், ஸங்க்ஷோபாசார்யர், மற்றும் விவரணாசார்யர்

6. குரு பஞ்சகம் - பூஜை செய்பவரின் குரு நடுவிலும், சுற்றிலும் நான்கு பக்கங்களில் பரம குரு, பரமேஷ்டிகுரு, பராபர குரு, மற்றும் ப்ரம்ம வித்யா சம்பிரதாயத்தை ஏற்படுத்திய மற்ற பெரியோர்கள் அடங்கிய மண்டலம்.

ஆகக்கூடி இந்த 5x6 = 30 பேர்களுக்கும் பூஜை ஆன பிறகு சுகர், நாரதர், துர்க்கை, கணபதி, க்ஷேத்ர பாலர், சரஸ்வதி மற்றும் திக்பாலகர்கள் ஆகியவர்களுக்கும் பூஜை செய்து முடிவில் குணம், உருவம் அற்ற பரபிரம்மத்திற்கும் தனித்தனியாக பூஜைகள் செய்து, பின்னர் சமஷ்டியாகவும் பூஜைகளும் உபசாரங்களும் செய்யப்படுகிறது. இந்த பூஜைக்குப் பின்னர் ஆசார்யாளது பாஷ்ய க்ரந்தங்கள் படிக்கப்பட்டும், சாந்தி மந்திரங்கள் சொல்லப்படும். பின்னர் தக்ஷிணா மூர்த்தி அஷ்டகத்தில் ஆரம்பித்து, நாராயணன் முதலாக குரு-பரம்பரைக்கு வந்தனம் செய்யப்படும்.

வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் சக்தே: பெளத்ர மகல்மஷம்
பராசராத்மஜம் வந்தே சுக தாதம் தபோநிதிம்

[வசிஷ்டரின் கொள்ளுப் பேரரும், சக்தியின் பேரரும், கல்மஷம்/பாபம் அற்றவரும், பராசரரின் புதல்வரும், சுகப்பிரம்ம ரிஷியின் தந்தையும், சிறந்த தபோ-வலிமை பெற்றவருமான ஸ்ரீ வ்யாஸரை வணங்குகிறேன்]

இன்று வ்யாஸ பூஜை, நாமும் வேத வ்யாஸரை துதித்து குரு மண்டலத்தில் இருக்கும் ஆசார்யார்களை நமஸ்கரிப்போம்

20 comments:

Raghav said...

அருமையான விளக்கங்கள் அண்ணா.. எங்களது ஆசார்யர் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள் இம்முறை சாதுர்மாஸ்ய விரதத்திற்கு பெங்களூர் வந்துள்ளார்.. இரண்டு தினம் முன்பு தான் சுந்தர் அண்ணாவிடம் இவ்விரதத்தைப் பற்றி கேட்டேன்.. அவர் சுருங்கச் சொன்னதை தாங்கள் விளக்கமாக சொல்லி விட்டீர்கள். நன்றி.. கட்டாயம் எனது ஆசார்யரை சேவிக்கச் செல்கிறேன்.

Raghav said...

பரமாச்சார்யார் படம் மிக அருமைண்ணா..

ஸனகர் மற்றும் ஜனகர் இருவரும் ஒருவரா அல்லது வேறு வேறா ?

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க ராகவ். சுந்தரண்ணா இன்னும் விசேஷமாகச் சில செய்திகளும் தந்திருப்பாரே?....அதையும் சொல்லுங்களேன் :-)


ஆமாம் ராகவ், ஆண்டவன் ஸ்வாமிகள் இங்கு விரதமிருப்பதாக நானும் படித்தேன்...எங்கே என்று தெரியுமா?....நீங்க போகும் போது என்னையும் அழைத்துச் செல்லுங்களேன்?.

தக்ஷிணாமூர்த்தியைச் சுற்றி அமர்ந்த நிலையில் இருக்கும் நால்வரில் ஒருவர் ஸனகர்.

மிதிலாபுரி மன்னர்களில் பலருக்கு ஜனகர் என்று பெயர் இருந்ததாகத் தெரிகிறது. அவர்களில் ஒருவரே சீதாப்பிராட்டியின் தந்தை.

சுக ப்ரம்மரிஷி தனது தந்தையை விட்டு விலகிச் செல்ல முடிவெடுக்கும் போது, முதலில் ஜனகரைச் சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது. ஜனகர் அரசராயினும், ப்ரம்ம ஞானி என்று கூறப்படுகிறது..

Geetha Sambasivam said...

அப்போவே படிச்சாச்சு, ஆனால் பின்னூட்டம் லேட்.
பூஜை முறை மடங்களில் செய்வது இது வரை அறியாத ஒரு விஷயம்.

ஸனகாதி முனிவர்களில் ஒருவர் ஸனகர். ஜனகர் ராஜரிஷி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மிக விளக்கமான கட்டுரை! நன்றி மெளலி அண்ணா!

//இன்று வ்யாஸ பூஜை, நாமும் வேத வ்யாஸரை துதித்து குரு மண்டலத்தில் இருக்கும் ஆசார்யார்களை நமஸ்கரிப்போம்//

அப்படியே!
அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம்
வந்தே குரு பரம்பராம்!

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி கே.ஆர்.எஸ்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கீதாம்மா, உங்களுக்குத் தெரியாதா?, ஆச்சர்யமாக இருக்கிறதே?.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இந்த நான்கு மாதங்களும் ஒரே இடத்தில் இருக்கணும்-ன்னு ஏன் சொல்லப்பட்டிருக்கு?
மழைக்காலம் அல்லாத பிற காலங்களிலும் நடந்து செல்லும் போது அறியாமல் ஜீவ ஹிம்சை ஏற்பட வாய்ப்புண்டு அல்லவா? இது மட்டுமே காரணமாக இல்லாமல், வேறேனும் உயர்ந்த காரணம் ஏதாச்சும் இருக்கா-ண்ணா?

//ஸ்ரீ மடங்களில், குறிப்பாக காமகோடி மடத்தில் இந்த பூஜைக்கென்றே தனியாக ஒரு மடம் அமைக்கப்பட்டு, அதில் அக்ஷதையைப் பரப்பி நடுவில் பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் "முநீநா மப்யஹம் வ்யாஸ:" என்பதாக கீதையில் சொல்லியிருப்பதற்கேற்ப ஸ்ரீக்ருஷ்ணரை ஆவாஹனம் செய்து//

இவ்வளவு விரிவாக காமகோடி மடத்தில் மட்டுமே பார்த்து இருக்கேன்! புகைப்படங்கள் இருந்தால் இனி வரும் பதிவுகளில், பகிர்ந்து கொள்ளுங்கள் அண்ணா.

வியாசருக்கு திருவரங்கத்தில் தனிச் சன்னிதி உண்டு.
அங்கும் வியாச பூஜை சிறப்பாக நடக்கும்!

sury siva said...

சாதுர்மாஸ்ய விரதம் பற்றிய விவரங்கள் முழுமையாக இருக்கின்றன.

குரு பெளர்ணிமா தினமன்று இப்பதிவைப்படிப்பதும் பாக்யந்தான்.

சுப்பு ரத்தினம்.
http://pureaanmeekam.blogspot.com

Geetha Sambasivam said...

//ஸ்ரீ மடங்களில், குறிப்பாக காமகோடி மடத்தில் இந்த பூஜைக்கென்றே தனியாக ஒரு மடம் அமைக்கப்பட்டு, அதில் அக்ஷதையைப் பரப்பி நடுவில் பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் "முநீநா மப்யஹம் வ்யாஸ:" என்பதாக கீதையில் சொல்லியிருப்பதற்கேற்ப ஸ்ரீக்ருஷ்ணரை ஆவாஹனம் செய்து, சுற்றிலும் தேவதைகளையும், ரிச்கிகளையும், குரு பரம்பரையில் வந்த ஆசார்யர்களையும் ருத்ராக்ஷங்களிலோ அல்லது எலுமிச்சம் பழங்களிலோ ஆவாஹனம் செய்து பூஜிக்கின்றனர். இந்த அமைப்பிற்கு பஞ்சக பூஜை என்று பெயர். ஐந்தைந்து பேர்களைக் கொண்ட ஆறு பஞ்சகங்கள் அமைத்து அதில் ஆசார்ய பரம்பரையினரை பூஜை செய்வர்//

ஆமாம், இம்முறையில் பூஜை நடக்கும் என்பதை அறிந்திருக்கவில்லை. அறியத் தந்ததுக்கு நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சூரி சார்.

கபீரன்பன் said...

சுப்பு ரத்தினம் ஐயா அவர்களின் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன். :)

மிக்க நன்றி

வல்லிசிம்ஹன் said...

மனம் நிறைய வைத்த பதிவு மௌலி. எங்கள் இரு அழகியசிங்கர்களும் பங்களூருவுக்கே ஏளுகிறார்கள்.

இவ்வளவு புனிதமான நன்னாளும் சாதுர்மாஸ்ய பூஜையைப் பற்றி விளக்கமாக எடுத்துரைத்திருப்பதும்

சந்தோஷமாக இருக்கிறது. ஸ்ரீ பெரியவாளின் படம் சாந்தி கொடுக்கிறது.
குரு சங்கர தேசிகமே சரணம்.

Anonymous said...

//மனம் நிறைய வைத்த பதிவு மௌலி.// me too.
/shruthi smruthi purananaam aalayam karunaalayam, namami bhagavath paatham sankaram looga sankaram/

Thambhi

ஸ்வாமி ஓம்கார் said...

வியாஸாய விஷ்ணு ரூபாய: வியாஸ ரூபாய விஷ்ணுவே


மீண்டும் ஒருமுறை குரு பூர்ணிமா அனுக்கிரஹத்தை உணர்ந்தேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி தம்பியாரே!

நீங்க மனசு வெச்சா, சிருங்ககிரி வியாச பூஜை பற்றியும் எழுதலாம் :)

மெளலி (மதுரையம்பதி) said...

வாருங்கள் ஸ்வாமிகளே!

தங்களது முதல் வருகைக்கு நன்றி.
சரியாக இந்த பதிவுக்கு நீங்கள் வந்தது எத்தனை பொருத்தம். யதிஸ்வரர் உங்களது ஆசிகள் என்றும் வேண்டும்.

குமரன் (Kumaran) said...

திராவிட பஞ்சகத்தில் இருக்கும் ஆசாரியர்களைப் பற்றிய மேல் விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் மௌலி. கௌடபாதரும் கோவிந்த பகவத்பாதரும் ஆதிசங்கரரின் குரு பரம்பரையில் வருகிறார்கள் என்று தெரிகிறது. மற்றவர்களைப் பற்றி தெரியவில்லை.

சீமாச்சு.. said...

நல்லதொரு பதிவைக் கண்டேன்.. உங்கள் பிறந்தநாள் வாழத்தைப் பிடித்து நேரே இங்கே வந்தேன்..

நன்றாக எழுதுகிறீர்கள்.. தொடர்ந்து உங்களைப் படிக்க ஆசை..

மெளலி (மதுரையம்பதி) said...

முதல் வருகைக்கு நன்றி சீமாச்சு சார்.


குமரன் நேரம் கிடைக்கையில் த்ராவிடாசார்யார்கள் பற்றி ஒரு தொடர் எழுதறேன். கொஞ்சம் தகவல்கள் திரட்ட வேண்டும்.