யத் கரோஷி யதச்னாஸி யஜ்ஜுஹோ-ஷிததாஸியத்யத்
தபஸ்யஸி கெளந்தேய தத்குருஷ்வ மதர்ப்பணம்
என்று கீதையில் பார்த்தனிடம் சொல்கிறான் க்ருஷ்ண பரமாத்மா. இதன் கருத்து என்ன என்று பார்க்கலாம். 'எதைச் செய்கிறாயோ, எதை உண்கிறாயோ, எதை ஹோமம் செய்கிறாயோ, எதை தானம் செய்கிறாயோ, எதைத் தவம் செய்கிறாயோ அதை எனக்கே அர்ப்பணம் செய்' என்று பொருள். இதற்கடுத்த வரிகளின் பொருளைப் பார்த்தால்,'இவ்வாறு செய்வதால் நல்ல மற்றும் தீய பலன்களைத் தருகின்ற கர்ம பந்தங்களில் இருந்து நீ விடுபடுகிறாய் என்றும், இவ்வாறு செய்வதன் பலனாக முக்தியடைந்து என்னை வந்து சேர்வாய் என்ற் கூறுகிறார். இன்றைய கால கட்டத்தில்இதெல்லாம் சாத்யமா?, எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று கடவுளிடம் மனுக் கொடுக்கும் ஹோமங்களும், பாராயணங்களும், வேண்டுதல்களும் எல்லாத் திசையிலும் கேட்கிற காலத்தில் அல்லவா இருக்கிறோம்?. அத்யந்த பக்தி என்பதும் அறிதாக அல்லவா இருக்கிறது என்றெல்லாம்நினைத்ததால் தானோ என்னமோ ஆதிசங்கரர் நமக்கு சில வழிகளின் மூலமாக நமது செயல்களில் எல்லாவற்றையும் இறைவனுக்கே அர்ப்பணிக்க சொல்லியுள்ளார். அவற்றைப் பார்க்கலாமா?.
கர்மாக்களைச் செய்ய ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போதும் இரு முக்கியமான செயல்கள் இருக்கின்றன. அவற்றில் ஆரம்பத்தில் வருவது சங்கல்பம். சாதாரண நித்ய கர்மாவில் ஆரம்பித்து எல்லாவற்றுக்கும் சங்கல்ப மந்த்ரம் என்று ஒன்று சொல்லியே ஆரம்பிக்கிறோம். இதில் முக்யமாகப் பார்க்க வேண்டியது "ஸ்ரீ பரமேஸ்வரப் ப்ரீத்யர்த்தம்"என்பது. இதன் தாத்பர்யம் என்னவென்றால், நாம் செய்யத் துவங்கும் அந்தக் கர்மாக்கள் எல்லாம் பரமேஸ்வரனுக்காகவே என்று அர்பணித்தல். இது எப்போது ஆரம்பித்தது என்று பார்க்கலாம்.
ஆதி சங்கரர் பரமேஸ்வரரின் மறு அவதாரம் என்றும், அவரது சிஷ்யர் குமரில பட்டர் சுப்ரமண்யஸ்வாமியின் ஸ்வரூபம் என்பதையும் பாகுபாடின்றி எல்லா சங்கர விஜயங்களும் கொண்டாடுகின்றன. ஆதிசங்கரர் ஞான மார்க்கத்தில் அதுவும் குறிப்பாக அத்வைதத்தை பரப்பியவர். கர்மா மட்டுமே ஒருவனுக்கு ஞானத்தை அளித்திடாது என்று சொல்பவர். சரி, அதற்காக கர்மாக்களை பண்ண வேண்டாம் என்றா சொன்னார்?. இல்லை பண்ணும் கர்மாக்கள் எல்லாம் இறை சித்தத்தில் செய்யப்படுவது, அந்த கர்மபலன்கள் எல்லாம் இறைவனைச் சார்ந்தது என்பதை மனத்தில் இருத்திக் கர்மாக்களைச் செய்யச் சொன்னார்.
குமரில பட்டரோ கர்ம யோகத்தைச் சார்ந்தவர், இன்னும் சொல்லப் போனால் கர்ம யோகத்தைப் ப்ரசாரம் செய்து வந்தவர். தமது வாதத் திறமையால் பெளத்த மதத்தவரை வாதம் செய்து கர்ம யோகத்தை நிலை நிறுத்த எண்ணி அதற்கு முன்பு பெளத்தம் பற்றிய முழுமையான அறிவு பெறுவதற்காக தம்மை பெளத்தர் என்று கூறிக் கொண்டு பெளத்த மடாலயத்தில் சேர்ந்து பாடங்களைப் படித்தார் என்று நாம் அறிவோம். பிற்காலத்தில், தாம் பொய்யுரைத்து பெளத்தம் கற்றது தவறு, அது குருத் த்ரோகம் என்று உணர்ந்து சாஸ்திரங்களில் இதற்குத் தண்டனையாகக் கூறியிருக்கும் தூஷாக்னியில் வெந்து போக முடிவெடுக்கிறார். அப்போது அங்கு வந்து ஞானோபதேசம் செய்த சங்கரரை வணங்கி கர்மாக்களை இறைவனுக்கு அற்பணிப்பதே சிறப்பு என்று உணர்ந்ததாகவும், பகவத் பாதர் மேற்கோள் காட்டிய ஸ்ருதி வாக்கியங்களை தாம் புரிந்து கொண்டதாகவும் கூறி இனி தனது சிஷ்யர்களுக்கு சங்கரரே குருவாக இருக்க வேண்டும் என்று வேண்டி தன் சரீரத்தைப் பரித்யாகம் செய்கிறார். அப்போதிலிருந்துதான் நமது ஆசார்யார் சங்கல்பத்தின் இறுதியில் பரமேஸ்வரப் ப்ரீத்யர்த்தம் என்று செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தினார் என்கின்றனர்.
இவ்வாறு ஆரம்பத்தில் பரமேஸ்வரப் ப்ரீத்யர்த்தம் என்று தொடங்குவதுடன், கர்மாவின் முடிவிலும் அக்கர்மாவின் பலன்களை நாராயணனுக்கு ஸமர்பணம் செய்துவிடுகிறோம். சந்தியாவந்தனம் முதலான எல்லா கர்ம கார்யங்களின் முடிவாக,
காயேனவாசா மனஸேந்த்ரியைர்வா
புத்த்யாத்மனாத்வா ப்ருக்ருதே ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
ஸ்ரீமந்நாராயணாயேதி ஸமர்ப்பயாமி
என்று கூறி அர்க்யம் அளித்து முடிக்கிறோம். இதன் பொருளாவது,"நான் என் சரீரத்தாலோ, வாக்கினாலோ, மனத்தினாலோ, கர்ம-இந்திரியங்களாலோ, ஞானேந்திரியங்களாலோ, இயற்கையின் இயக்கங்களாலோ எதையெல்லாம் செய்கிறேனோ அவையெல்லாம் உயர்ந்த புருஷனாகிய ஸ்ரீநாராயணனுக்கே ஸமர்பிக்கிறேன்" என்பது.
ஸமர்ப்பணம் என்னும் பதத்திற்கு கொடுத்தல், காணிக்கை என்று பொருள். கர்மாவின் ஆரம்பத்தில் ஈஸ்வரப் ப்ரீத்யர்த்தமும், முடிவில் பலன்களை நராயணனுக்கும் ஸமர்ப்பணம் செய்வதன் மூலமாக, எனக்கென்று ஏதும் செய்யவில்லை, செய்யும் கார்யங்களின் பலனும் இறைவனுக்கே என்று கர்மாவிலிருந்து நம்மை நாம் விலக்கிய நிலைக்குச் செல்கிறோம்.
ஆகவே நல்ல கர்மாக்களை வழுவின்றி, வேதவிதிகளை மீறாது செய்வோம், பலா-பலன்களை ஈஸ்வரார்ப்பணம் செய்திடுவோம்.
ஜெய ஜெய சங்கர!
ஹர ஹர சங்கர!
நேற்று திரு தி.ரா.ச என்று நாம் அன்புடன் அழைக்கும் T.R. Chandra sekaran அவர்களுடைய பிறந்த நாள், ஆனால் எனக்கு இன்றுதான் தெரியும். அவர் நல்ல ஆரோக்யத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்து நம்மை எல்லாம் வழிகாட்ட பராம்பிகையை வேண்டி, இந்தப் பதிவை அவருக்குப் பிறந்த நாள் பரிசாக்குகிறேன்.
18 comments:
இவ்வாறு ஆரம்பத்தில் பரமேஸ்வரப் ப்ரீத்யர்த்தம் என்று தொடங்குவதுடன், கர்மாவின் முடிவிலும் அக்கர்மாவின் பலன்களை நாராயணனுக்கு ஸமர்பணம் செய்துவிடுகிறோம். சந்தியாவந்தனம் முதலான எல்லா கர்ம கார்யங்களின் முடிவாக
இதைத்தான் கண்ணன் கீதையில் கர்மன்யேவா அதிகாரஸ்ய மாபலேது கதசன என்று கூறினாரோ" என்னையும் ஒரு பொருட்டாக மதித்து பிறந்த நாள் அன்று நல்ல பரிசு அளித்ததற்கு மனமார்ந்த நன்றி. என் ஆசிகள் மௌளிக்கும் அவர்தம்குடும்பத்துக்கும்.
திரசா அண்ணா, பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
நல்லது மௌலி சார்!
//இந்தப் பதிவை அவருக்குப் பிறந்த நாள் பரிசாக்குகிறேன்//
ஸ்ரீ சந்திரசேகர ப்ரீத்யரஸ்து !
நல்ல பரிசு. எல்லோருக்கும் கேக்-ல ஒரு பங்கும் கெடச்சுது.
அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.சொல்லிய தம்பிக்கு ஆசியும் நன்றியும்.
தற்செயலாக நேற்றுதான் தங்கள் வலைப்பூவைக் கண்டேன். அடியேனது வலையில் "சரணாகதி மாலை" என்னும் பழைய நூலை இட்டு வருகிறேன். அது தொடர்பாகத் தேடும்போது "மதுரையம்பதி"க்குள் நுழைந்தேன். பிரமித்தேன். இவ்வளவு எளிமையாகச் சொல்லி விஷயங்களில் ஆர்வமூட்ட முடியும் என்பது வியக்க வைத்தது. இங்கு தினமும் வருவேன்.
http://thiruppul.blogspot.com
http://rajamragu.spaces.live.com
வாங்க திருதிரு. முதல் வருகைக்கு நன்றி. உங்களுக்குப் பிடித்திருப்பது அறிந்து மகிழ்ச்சி.
வாங்க கபீரண்ணா....என்னைத் தம்பியாக ஏற்றமைக்கும், ஆசிகளுக்கும் மிக்க நன்றி.
வாங்க ஜீவா சார்.....:)
திவாண்ணா, இந்த போஸ்ட் பற்றி ஒண்ணுமே சொல்லலையே?....ஏதும் குறைகள் இருப்பின் தயங்காது சுட்டுங்கள்.
வாங்க திராச. இந்த போஸ்ட் ரெடியாகும் போது தான் உங்கள் பிறந்தநாள் என்று தெரிந்தது...உங்களுக்கு இது பிடிக்கும் என்று தோன்றியதால் இதையே பரிசாக்கினேன்.
தங்களது ஆசிகளுக்கு நன்றி...என்றும் வேண்டும் உமது ஆசிகள்.
நல்ல கட்டுரை மௌலி. பொருத்தமான சுலோகங்களைச் சொல்லியிருக்கிறீர்கள்.
இங்கேயும் ஒரு முறை பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொல்கிறேன் திராச. வணக்கங்களுடன் வாழ்த்துகள்.
எனக்கு "திருமொழி" வழியாக அறிமுகம் ஆன கண்ணன் தானா நீங்கள்?
வாங்க திருதிரு....நீங்கள் சொல்லும் நபர் யாரென்று தெரியவில்லை....ஆனால் அது நான் இல்லை.
திராச ஐயாவிற்கு இங்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அடியேன் பேசும் போதும் பரமேஸ்வரப் ப்ரீத்தயர்த்தமான ஒரு விதேயமான கர்மா நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டு இருந்தார்!
//திவாண்ணா, இந்த போஸ்ட் பற்றி ஒண்ணுமே சொல்லலையே?....ஏதும் குறைகள் இருப்பின் தயங்காது சுட்டுங்கள்.//
:)
//இன்றைய கால கட்டத்தில்இதெல்லாம் சாத்யமா?, எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று கடவுளிடம் மனுக் கொடுக்கும் ஹோமங்களும், பாராயணங்களும், வேண்டுதல்களும் எல்லாத் திசையிலும் கேட்கிற காலத்தில்//
சர்வ நிச்சயமான உண்மை!
//என்று கூறி அர்க்யம் அளித்து முடிக்கிறோம்//
அர்க்யம் என்றால் என்ன? அதை ஏன் அளிக்கிறோம் என்று சுருக்கமாய் சொல்லுங்களேன்!
கோயிலில் சில சமயம் அர்ச்சனை செய்யும் போது சாமி பேருக்கே செய்யுங்க-ன்னு சொல்றாங்க-ல்ல? அதுக்கும் பரமேச்வரப் ப்ரீத்தயர்த்தத்துக்கும் சம்பந்தம் உண்டா-ண்ணா?
நல்ல பதிவுக்கு நன்றி மௌலி. தி.ரா.ச. அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை பிறந்த நாள் வாழ்த்துகள் :)
ஈச்வர, பரமேச்வர சப்தங்களை
ஆதி சங்கரர் நாராயண பரமாகவே
கீதா பாஷ்யத்தில் கூறியுள்ளார்.
ஈச்வர:, ஈசநசீல:, நாராயணாக்ய:
என்னும் வரிகளை நோக்குக.
தேவ்
வருகைக்கு நன்றி தேவராஜன் சார், கவிக்கா & கே.ஆர்.எஸ்..
தி.ர.ச அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
மறக்காமல் பதிவிட்ட மௌலி ஐயாவிற்கு நன்றி.
ஸகலம் கிருஷ்ணார்ப்பண மஸ்து.
Post a Comment