Thursday, May 7, 2009

நரஸிம்ஹ ஜெயந்தி - சிறப்புப் பதிவு-2

இந்தப் பதிவின் தொடர்ச்சி இது. ஸ்வாதி நக்ஷத்திரத்தினை ஜெயந்தி தினமாகக் கொண்டால் நாளையும், சதுர்தசியைக் கொண்டால் ப்ரதோஷ காலத்தில் இன்றுமாகக் கொண்டாடப்படும் ஸ்ரீ நரஸிம்ஹரது அருளை வேண்டுவோம்.

இங்குள்ள படங்கள் பலவும் திரு. கைலாஷி ஐயா அவர்கள் தமது பதிவில் இட்டவை. அவருக்கு எனது நன்றிகளை இங்கே கூறிக் கொள்ளுகிறேன்.




ஸம்ஸார-ஸாகர விஸால கரால கால
நக்ரக்ரஹ-க்-ரஸந நிக்ரஹ விக்ரஹஸ்ய
வ்யக்ரஸ்ய ராக நிசயோர்மி-நிபீடிதஸ்ய
லக்ஷ்மி நரஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

வாழ்க்கை என்னும் கடலில் பரந்த அச்சுறுத்திம் காலமென்னும் முதலைகளால் பிடிக்கப்பட்டு விழுங்கப்படும் உடலை உடையவனும், பலவிதமான கவலை உள்ளவனும், ஆசைகள் என்னும் அலைகளால் அலைக்கழிக்கப்படுபவனுமான எனக்கு லக்ஷ்மியுடன் கூடிய நரஸிம்ஹனே!, நீயே கை கொடுத்து அருள வேண்டும்.


ஸம்ஸார ஸாகர நிமஜ்ஜந முஹ்யமானம்
தீநம் விலோகய விபோ! கருணாநிதே! மாம்
ப்ரஹ்லாத கேத பரிஹார க்ருதாவதார!
லக்ஷ்மி நரஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

மிக்க வலிமை உள்ளவரே!, கருணையுள்ளவரே!, பிரஹலாதனின் கஷ்டத்தைப் போக்க அவதரித்தவரே!, வாழ்க்கை என்னும் கடலில் மூழ்கி மயக்கமுறும் என்னை தங்கள் கடைக்கண் பார்வையால் அருள வேண்டும். லக்ஷ்மி நரஸிம்ஹரே!, எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.


ஸம்ஸார-கோர கஹநே சரதோ முராரே!
மரோக்ர-பீகர-ம்ருக ப்ரவரார்தி தஸ்ய
ஆர்த்தஸ்ய மத்ஸர நிதாக-நிபீடிதஸ்ய
லக்ஷ்மி நரஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

வாழ்க்கையெனும் அச்சுறுத்தும் காட்டில் திரிகின்றவனும், விலங்குகளில் சிறந்த சிங்கம் போன்ற பயம் தரும் காமனால் பீடிக்கப்பட்டு துன்பம் கொண்டிருப்பவனும், பொறாமை என்ற கோடையால்வருந்துபவனுமான எனக்கு, முரனை வென்ற லக்ஷ்மியுடன் கூடிய நரஸிம்ஹா, நீயே கை கொடுத்து அருளவேண்டும்.

பத்வாக லே யமபடா பஹு தர்ஜயந்த:
கர்ஷ்ந்தி யத்ர பவ பாச சதையுதம் மாம்
ஏகாகிநம் பர வஸம் சகிதம் தயாளோ!
லக்ஷ்மி நரஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

இரக்கமுடையவனே!, வாழ்க்கையில் நூற்றுக்கணக்கான பாசங்களால் சூழப்பட்ட என்னை யமனின் சேவகர்கள் கழுத்தில் பாசக்கயிற்றைக் கட்டி மிகவும் அதட்டி எங்கோ இழுத்துச் செல்கிறார்கள். நான் தனியாக, அவர்களது வயப்பட்டவனாக இருக்கிறேன். ல்க்ஷ்மி நரஸிம்ஹா, நீயே எனக்கு கை தந்தருள வேண்டும்.


லக்ஷ்மிபதே! கமலநாப! ஸுரேச! விஷ்ணோ!
வைகுண்ட! க்ருஷ்ண! மதுஸுதன!புஷ்கராக்ஷ!
ப்ரஹ்மண்ய! கேசவ! ஜனார்தந! வாஸுதேவ!
தேவேச! தேஹி க்ருபணஸ்ய கராவலம்பம்.

லக்ஷ்மியின் நாயகனே!, தொப்புளில் தாமரையைக் கொண்டவனே!, தேவர்களின் தலைவனே!, எங்கும் வியாபித்திருப்பவனே!, வைகுண்ட வாசா!, க்ருஷ்ணா!, மது என்ற அரக்கனைக் கொன்றவனே!,தாமரைக் க்ண்ணனே!, பிரம்மனே!, கேசி என்ற அரக்கனைக் கொன்றவனே!, துஷ்டர்களைக் களைந்து ஜனங்களைக் காப்பவரே!, வஸுதேவர் மைந்தனே!, தேவர்களின் தலைவா!, கருணையுடன் எனக்கு கைகளைத் தந்தருளுவாயாக.

ஏகேந சக்ரமபரேண கரேண ஸங்கம்
அன்யென ஸிந்து-தனயா மவலம்ப்ய திஷ்ட்டன்
வாமேதரேண வாதாபய பத்ம-சிஹ்ணம்
லக்ஷ்மி நரஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

ஒரு கையில் சக்ரத்தையும், மறுகையில் சங்கத்தையும், இன்னொரு கையில் மஹாலக்ஷ்மியை அணைத்துக் கொண்டும், வலது கையால் வரமளித்துக் கொண்டும் இருக்கும் லக்ஷ்மியுடன் கூடிய நரஸிம்ஹப் பெருமாளேஎனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.


அந்தஸ்ய மே ஹ்ருத விவேகமஹாத நஸ்ய
சோரை:ப்ரபோ பலிபிரிந்தரிய நாமதேயை:
மோஹாந்த கூப குஹரே விநிபாதிதஸ்ய
லக்ஷ்மி நரஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

புலன்கள் என்னும் பெயரிலிருக்கும் வலிமையான திருடர்களால், குருடாகியிருக்கும் எனது அறிவு என்னும் செல்வம் கவரப்பட்டு, மோஹம் என்னும் பாழும் கிணற்றில் தள்ளப்பட்ட எனக்கு கருணையுடன் கை கொடுத்தருள்வாய் லக்ஷ்மி நரஸிம்ஹா.


ப்ரஹ்லாத-நாரத-பராசர புண்டரீக
வ்யாஸாதி பாகவத புங்கவ ஹ்ருந்நிவாஸ
பக்தாநுரக்த பரிபாலந பாரிஜாத!
லக்ஷ்மி நரஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

பிரஹலாதர், நாரதர், பராசரர், புண்டரீகர், வியாஸர் போன்ற சிறந்த பக்தர்களது இதயத்தில் வாசம் செய்பவரே!, பாரிஜாத மரம் போன்று பக்தர்களைப் பரிவுடன் காப்பவரே!, லக்ஷ்மியுடன் கூடிய நரஸிம்மா!, எனக்குக் கை கொடுத்து அருளவேண்டும்.



லக்ஷ்மி-ந்ருஸிம்ஹ-சரணாப்ஜ மதுவ்ரதேந
ஸ்தோத்ரம் க்ருதம் ஸுபகரம் புவி ஸங்கரேண
யே தத் படந்தி மநுஜா: ஹரிபக்தியுக்தா:
தே யாந்தி தத்பத ஸரோஜமகண்ட ரூபம்.

லக்ஷ்மியுடன் கூடிய நரஸிம்ஹப் பெருமானின் திருவடித்தாமரையில் அமர்ந்த தேனீ போன்ற சங்கரரால், இப்புவியில் நன்மை தரும் இந்த ஸ்தோத்ரம் அருளப்பட்டது. யாரெல்லாம் மஹாவிஷ்ணுவிடத்து பக்தி உடையவர்களாக, இந்த ஸ்தோத்ரத்தைப் படிக்கின்றனரோ, அவர்கள் இன்பமயமான அந்தத் திருவடித் தாமரையை அடைவார்கள்.

பூமி, நீளா சமேத ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹ பரப்ரம்மணே நம:

------------லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்பம் ஸம்பூர்ணம்--------------


7 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//லக்ஷ்மியுடன் கூடிய நரஸிம்ஹப் பெருமானின் திருவடித்தாமரையில் அமர்ந்த தேனீ போன்ற சங்கரரால்//

அருமையான காட்சி!
அந்தத் தேனீயின் காலிலும் எம்பெருமான் மகரந்தம் ஒட்டி இருக்கும் அல்லவா?
அந்தத் தேனீயின் திருவடித் தாமரையில் இந்தச் சங்கரனும் அமர்கின்றேன்!
லக்ஷ்மி நரஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்!

//ப்ரஹ்மண்ய! கேசவ! ஜனார்தந! வாஸுதேவ!//
//வஸுதேவர் மைந்தனே!//

இது "வாசு"தேவன்! வசுதேவர் மைந்தன் என்று வராது-ன்னு நினைக்கிறேன்! கொஞ்சம் சரி பாருங்க-ண்ணா!

Raghav said...

புலன்கள் என்னும் பெயரிலிருக்கும் வலிமையான திருடர்களால், குருடாகியிருக்கும் எனது அறிவு என்னும் செல்வம் கவரப்பட்டு, மோஹம் என்னும் பாழும் கிணற்றில் தள்ளப்பட்ட எனக்கு கருணையுடன் கை கொடுத்தருள்வாய் லக்ஷ்மி நரஸிம்ஹா.

Raghav said...

இன்று 46 வது பட்டம் அழகியசிங்கர் ஆஸ்ரம ஸ்வீகாரம் எடுத்துக் கொள்கிறார்.

மாலோல நரசிம்மன் அருளை வேண்டுகிறேன்.

S.Muruganandam said...

பொருளுடன் கராவலம்பம் அருமை. நன்றி மதுரையம்பதி ஐயா.

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருவடிகளே சரணம்.

தி. ரா. ச.(T.R.C.) said...

ராஜ்யலக்ஷ்மி நிவாசாய ராகத்துவிஷே நிவாரிணே
மட்டபல்லி நிவாசாய ந்ருசிம்ஹாய மங்களம்.
நன்றி மௌளி நல்ல பதிவு.

குமரன் (Kumaran) said...

எல்லா சுலோகங்களும் அருமை. அதிலும் இந்த சுலோகம் ரொம்ப அருமை.

லக்ஷ்மிபதே! கமலநாப! ஸுரேச! விஷ்ணோ!
வைகுண்ட! க்ருஷ்ண! மதுஸுதன!புஷ்கராக்ஷ!
ப்ரஹ்மண்ய! கேசவ! ஜனார்தந! வாஸுதேவ!
தேவேச! தேஹி க்ருபணஸ்ய கராவலம்பம்.

கபீரன்பன் said...

சம்சார துக்கங்களை பட்டியலிட்டு -மீண்டும் மீண்டும் நினைவுறுத்தும் வகையில்- இறைவனிடம் விண்ணப்பம் என்ற பெயரில் தோத்திரங்களாக்கி நிலையாமையை போதிக்கும் ஆசாரியரின் கருணை வியக்க வைக்கிறது. யாவருக்கும் நரசிம்மஹரின் அருள் பெருகட்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

நல்லதொரு பதிவுக்கு மிக்க நன்றி