Wednesday, March 11, 2009

ஸ்ரீ பாஸ்கர ராயர்.... பகுதி-2


முந்தைய பகுதி இங்கே!

பாஸ்கர ராயர் காலத்தில் கர்னாடகத்தில் பாலகீ என்ற ஊரின் சிற்றரசனாக இருந்தவர் சந்த்ரஸேன ஜாதவ் என்பவர். இவர் பாஸ்கர ராயரிடத்து மிகுந்த மரியாதையும், பக்தியும் கொண்டிருந்தார். தமக்கு மழலைச் செல்வம் இல்லை என்று வருந்திய அவர், ஒரு சமயம் ராயரிடத்தில் தனது மனக் குறையினைக் கூறி வருந்துகிறார். ராயரும் தமது பூஜையை முடித்த பின்னர் சிற்றரசனுக்குப் அன்னையின் பிரசாதத்தை அளித்து, அவனுக்கு புத்திரன் பிறப்பான் என்று அனுக்கிரஹம் செய்து அனுப்புகிறார். சில காலத்தில் அவனது மனைவியும் கருவுற்று இருக்கையில் பாஸ்கர ராயரது சிஷ்யர்களில் ஒருவரான நாராயண தேவர் என்னும் உபாசகர் பாலகீக்கு வருகிறார். அவரை வரவேற்று, உபசரித்த அரசன், அவரிடத்து தனக்கு என்ன குழந்தை பிறக்கும் என்று கேட்கிறான். நாராயண தேவர் பெண் குழந்தை பிறக்கும் என்று கூற, அரசன் ராயர் மகன் பிறப்பான் என்று கூறினாரே என்று புலம்புகிறான்.
அரசனது புலம்பலைக் கேட்ட ராயரது சிஷ்யரான நாராயண தேவர் அரசன் தனது குருவின் மேல் ஏற்பட்ட சந்தேகத்தையும், அதனை தன்னிடமே சோதனை செய்ததையும் கண்டு கோபம் கொள்கிறார். அதன் காரணமான அரசனை சபித்து அவனுக்கு ஆணும் இல்லாது, பெண்ணுமில்லாது நபும்ஸகனாக குழந்தை பிறக்கும் என்று சபித்து விடுகிறார். அச்சாபத்திற்கு ஏற்ப அவனுக்குப் பிறக்கும் குழந்தையும் நபும்ஸகத் தன்மையுடனேயே பிறக்கிறது.

பல வருடங்களுக்குப் பின்னர் அவ்வரசன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பாஸ்கர ராயரை தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறான். அப்போது அவன் நடந்ததைக் கூறி வருந்தி தன்னை மன்னிக்கும்படியும் தனது குமாரனுக்கு நபும்ஸகத்தன்மை விலக அருளுமாறும் வேண்டுகிறான். ராயர் அக்குழந்தைக்கு புருஷத்தன்மை வருவதற்காக பிரார்த்தனை செய்யத் தலைப்படுகிறார். ஒரு மண்டலம் இதற்காக கிருஷ்ணா நதிக்கரையில் முளிமடு என்ற்ற ஊரில் ஆஸ்ரமம் அமைத்து "த்ருசார்க்யப்ரதானம்" என்னும் விரதத்தை ஆரம்பிக்கிறார். இந்த விரதமானது சூர்யனை நோக்கிச் செய்யப்படுவது. தினமும் நதிக்கரைக்கு வந்து அனுஷ்டானங்களை முடித்துப் பின்னர் ஆஸ்ரமத்திற்குச் செல்வதால் பாஸ்கர ராயருக்கு கால்களில் கொப்புளங்கள் ஏற்பட்டது கண்டு சிஷ்யர்கள் வருந்துகின்றனர். அவர்கள் தமது குருவிடம் நதிக்கு அருகிலேயே ஆஸ்ரமத்தை அமைத்துக் கொண்டு விடலாம் என்று யோஜனை கூறுகின்றனர். அதற்கு குருவோ, நதியை ஆஸ்ரமத்திற்கு பக்கத்தில் கொண்டுவந்திவிடலாம் என்று கூறி, சூரியனை நோக்கி தியானிக்க, ஸூர்யனும் அவர் முன் தோன்றுகிறான். பாஸ்கர ராயர் ஸுர்யனிடத்து தமது விரதத்தைக் கூறி, அவ்விரதம் பங்கம் ஏதுமின்றி முடிவதற்கு ஏதுவாக நதியை ஆஸ்ரமத்திற்கு அருகில் பிரவாஹிக்க வேண்டுகிறார்.

ஸுர்யன் குழந்தைக்கு நபும்ஸகத் தன்மை நீங்க நேரடியாக வரத்தைக் கேளாமல், ஏன் இயற்கையை மீறி இவ்வாறு நதியின் பிரவாஹத்தை மாற்றக் கோருகிறீர்கள்?. இவ்வாறான கோரிக்கை சரியல்லவே என்று வினவுகிறான். தமது பிரார்த்தனையை நடத்திக் கொடுக்காது கேள்விகள் கேட்ட ஸுர்யன் மீதே கோபம் கொண்டு ஸுர்யனிடம், 'குழ்ந்தைக்கு ஆண்மைக் குறைவு தீர்வது உன்னை வணங்குவதாலும், த்ருச பாஸ்கர வழிபாட்டாலும் நடக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் உன்னால் நதியின் பாதையை மாற்ற இயலாவிட்டால் பரவாயில்லை' என்று கூறிவிடுகிறார். ஸுர்யனும் ராயரது கோரிக்கையினை செயல்படுத்தும் விதமாக நதியின் பாதையை மாற்றிக் கொடுக்கிறார். ராயர் தமது விரதத்தை பக்குவமாக நடத்தி அக்குழந்தையை பும்ஸுவனாக/ஆண்மையுள்ளவனாக மாற்றுகிறார். முளிமடு என்னும் அவ்விடத்தில் இன்றும் கிருஷ்ணா நதி முன்பு சென்ற பாதை மற்றும் தற்போதைய பாதை என்று இரண்டு வழிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ராயர் பிற்காலத்தில் "த்ருச பாஸ்கரம்" என்னும் நூலை எழுதி, அதில் ஸுர்யனை வழிபடும் முறையினைக் கூறியிருக்கிறார்.

இவர் ஒரு சமயம் கடனால் தவித்து வந்தாராம். அப்போது அன்னையை நோக்கி, 'அபர்ணா' என்றால் பிறரது கடன்களைப் போக்குபவள் என்றும் பொருள், ஆனால் உன்னையே வணங்கும் எனது கடனை போக்க வழி காண்பிக்காது இருக்கிறாயே?' என்று வருந்தியிருக்கிறார். அன்று லலிதாம்பிகையே ராயரது மனைவி உருவில் கடன் கொடுத்தவர் வீட்டிற்குச் சென்று ராயரது கடனை அடைத்தாளாம்.

பிற்காலத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய அரசரது வேண்டுகோளுக்கு இணங்க திருவிடைமருதூர் மஹாதானத் தெருவில் வசித்து வந்துள்ளார். இவர் மாலை வேளையில் தமது இல்லத்தின் முன் இருக்கும் திண்ணையில் சாய்ந்து காலை தூண்களில் தூக்கி வைத்தவாறு சாய்ந்து அமர்ந்திருப்பாராம். அவ்வேளையில் தினம் தெருவில் ஒரு சன்யாசி மஹாலிங்க தரிசனத்திற்கு கோவிலுக்குச் செல்வது வழக்கம். தெருவில் இருக்கும் எல்லோரும் அந்த சன்யாசிக்கு மரியாதை செய்து வணங்குவர். ஆனால் ராயர் கவனியாது இருப்பது கண்டு விரோதம் ஏற்படுகிறது.

ஒருமுறை பலர் முன்னிலையில் பாஸ்கர ராயரது செயலை கண்டித்திருக்கிறார். அப்போது ராயர், தாம் மற்றவர்கள் போல சன்யாசிக்கு மரியாதை செய்வதற்காக தமது சிரம் தாழ்த்தி வணங்கியிருந்தால் சன்யாசியது தலை வெடித்துச் சிதறியிருக்கும் ஆகவே தாம் வணங்கவில்லை என்று கூறியிருக்கிறார். அதனை நம்பாத சன்யாசிக்கு தான் சொல்வதை நிருபிக்கும் விதமாக சன்யாசியின் கமண்டலம் மற்றும் தண்டத்தை ஓர் இடத்தில் வைக்கச் செய்து அதற்கு தலை தாழ்த்தி வணக்கம் செய்கிறார் பாஸ்கர ராயர். தண்டமும், கமண்டலமும் வெடித்துச் சிதறிவிடுகிறது. இதனைக் கண்ட சன்யாசி மற்றும் பொது மக்கள் ராயரது சிறப்பினை உணர்கின்றனர். இவ்வாறு நடக்க காரணம், ராயர் மஹா ஷோடசி என்னும் மந்திர ஜபமே என்று பிற்காலத்தில் தமது சிஷ்யர்களிடத்து சொல்லியிருக்கிறார். மஹா ஷோடசி நியாஸம் செய்பவர்கள் தாமே அர்த்தநாரிச்வர வடிவாகிவிடுவர் என்பது சாக்த சித்தாந்தம்.

இவர் மீமாம்ஸா, வேதாந்தம், மந்த்ரசாஸ்த்ரம் முதலிய பல்வேறு துறைகளிலுமாக நாற்பதுக்கும் மேலான நூல்களை எழுதியிருக்கிறார். பல திருக் கோவில்களை நிர்மாணித்தும், புனருத்தாரணம் செய்தும் இருப்பதாக தெரிகிறது. இவர் எழுதிய லலிதா சஹஸ்ரநாம பாஷ்யத்திற்கு 'செளபாக்ய பாஸ்கரம்' என்றே பெயர். பாஸ்கராநந்தர் என்னும் இம்மஹான் தனது 95ஆம் வயதில் ஸ்ரீபுரம் அடைந்தார் என்று கூறப்படுகிறது,


அத்ருஷ்டோ நாஸ்தி பூ மண்டலாம் சோ,
யஸ்யா: தாஸோ வித்யதே ந க்ஷிதீச:
யஸ்ய அஸாத்யா நாஸ்தி வித்யா கிமன்யைர்
யஸ்ய ஆகார: ஸா பராசக்திரேவ

[இந்த பூ மண்டலத்தில் அவரால் பார்க்கப்படாத இடமே இல்லை, அவருக்கு சிஷ்யனாகாத அரசனே இல்லை, அவரால் அறியப்படாத வித்யை இல்லை, அவரே பராசக்தி வடிவானவர்]
என்பதாக பாஸ்கர ராயரது பதம் பணிவோம். அவரருளால் திருவருள் பெறுவோம்.

19 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

நிறைவாக இருந்தது.

Kavinaya said...

உடனே இட்டதுக்கு நன்றி. நானும் உடனே படிச்சிட்டேனே!

பக்தனுடைய குழந்தைக்காக கடும் விரதம் மேற்கொள்வதற்கு எப்பேர்ப்பட்ட அன்பு வேண்டும். மகான்களுக்குதான் இத்தகைய அன்பு வாய்க்கிறது.

பாஸ்கர ராயருடைய திருவடிகளை வணங்கிக் கொள்கிறேன்.

Geetha Sambasivam said...

சூரியனுக்கு பூஜை நடத்தி, நதியின் போக்கை மாற்றியது பற்றிய செய்தி புதுசு. கேட்டதில்லை, மற்றவை தெரிந்தவையே. கொஞ்சம் எ.பி.யையும் கவனிங்களேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி கிருஷ்ணமூர்த்தி சார்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கவிக்கா...நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க தலைவி.

எ.பியை கவனிக்கிறேன்...2-3 திருத்திவிட்டேன்...இன்னும் ஏதும் இருக்கோ?....இரவில் யோசித்து-யோசித்து டைப் பண்ணினேன்...திரும்பவும் படிக்காது பதிவிட்டதால் வருகிறது இது. திருத்திடறேன். :-)

Geetha Sambasivam said...

//வாங்க தலைவி.//

ஹிஹிஹி, நன்னி, நன்னி, ஜோதியிலே ஐக்கியமாய்ட்டீங்க நீங்களும், உங்களுக்கான மொக்கை, சீச்சீ, பொறுப்பு சீக்கிரத்தில் தெரிவிக்கப் படும்.

ambi said...

ம்ம், எல்லமே புதிய செய்தி. அதான் எனக்கு தெரியுமே!னு எல்லாம் சொல்ல மாட்டேன். :))

தலைவி = தலைவலி
(இதுவும் எ.பி தானே அண்ணா? :))

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க அம்பி...

//தலைவி = தலைவலி
(இதுவும் எ.பி தானே அண்ணா? :))//

உஷ்!, இப்படியெல்லாம் தலைவியை பேசக்கூடாது...அப்பறம் எலக்ஷன்ல சீட் கிடைக்காது ஆமாம்... :-)

Raghav said...

இப்பகுதி நன்றாக இருந்தது அண்ணா.. சன்யாசியின் கதை கேள்விப்பட்டதுண்டு.. ஆனால் பாஸ்கரராயர் கதை என்று தெரியாது.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க ராகவ். முந்தைய இடுகையைப் படிக்காது கமெண்ட் போட்டு தாக்குறீங்களே, நியாயமா? :-)


பாஸ்கர ராயர் 2 பெண்களை மணந்தவர்.... :-)

Geetha Sambasivam said...

//தலைவி = தலைவலி
(இதுவும் எ.பி தானே அண்ணா? :))//

!@அம்பி, என்ன ரொம்பவே ஆட்டம் அதிகமா இருக்கு போல???? த.ம. கிட்டே பூரிக்கட்டை வாங்கி நாளாச்சு போலிருக்கே!

மெளலி (மதுரையம்பதி) said...

//அம்பி, என்ன ரொம்பவே ஆட்டம் அதிகமா இருக்கு போல???? த.ம. கிட்டே பூரிக்கட்டை வாங்கி நாளாச்சு போலிருக்கே!//

நல்லா கேளுங்க....:-)

Geetha Sambasivam said...

//அப்பறம் எலக்ஷன்ல சீட் கிடைக்காது ஆமாம்... :-)//

இதை எப்படியோ கவனிக்காம விட்டிருக்கேன்,

மெளலி, ராகுல் காந்தியும், லாலுவுமே வந்து நேரில் என்னைப் பார்த்து கூட்டணி பற்றி முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தி இருக்காங்க, என்னமோ பேசறீங்களே! அப்புறம் நிஜமாவே எலக்ஷனிலே சீட் கிடைக்காதுங்கோ! :P:P:P:P:P:P:P

Anonymous said...

me present......:)

Regards,
Thambi

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

லீலாவதியைப் பற்றி விபரங்கள் பெற விரும்புகின்றேன்.

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

லீலாவதியைப் பற்றி விபரங்கள் அறிய விரும்புகின்றேன்.

Rajesh Kumar C said...

பாஸ்கர ராயரின் லலிதாஸ்கஸ்ரநாம பாஷ்யம் இப்போதும் கிடைக்கிறதா?

Rajesh Kumar C said...

பாஸ்கர ராயரின் லலிதாஸ்கஸ்ரநாம பாஷ்யம் இப்போதும் கிடைக்கிறதா?