நவகைலாயப் பதிவுத் தொடரில் சேரன்மாதேவிக்கு அடுத்து பார்க்க இருப்பது கோடக நல்லூர். நவகிரஹங்களில் ஐந்தாவது இடமான செவ்வாய் கிரஹத்திற்கான திருத்தலம் கோடகநல்லூர். செவ்வாய் திசை என்பது 7 ஆண்டுகள் என்பர் ஜோதிஷ சாஸ்திரத்தில். நமக்கு மிகப் பரிச்சயமான செவ்வாய் தோஷம் போன்றவற்றிற்கு இத்தலமே பரிகாரத் தலம். இது மட்டுமல்லாது, தேசத்தின் வளர்ச்சி, போர்களில் வெற்றி, கடன் தொல்லை போன்ற விஷயங்களுக்கும் செவ்வாய் அதிபதி என்று கூறக்கேட்டிருக்கிறேன்.
இத்தலம் சேரன்மாதேவி-முக்கூடல் போகும் வழியில் தெற்கே அமைந்திருக்கிறது என்று கேள்வி. இதன் பழைய பெயர் கார்கோடக நல்லூர், மறுவி கோடகநல்லூராகி முடிவாக கோடனூர் விட்டதாம். பரிஷித் மஹாராஜாவை தீண்டி உயிர் நீக்கிய கார்கோடகன் என்னும் சர்பம் தனது சாபம் தீர தபஸ் செய்த இடம் என்பதால் இந்த ஊருக்கு கார்கோடக நல்லூர் என்று பெயராம். இப்போதும் இவ்வூரில் நீண்ட கரு-நாகங்கள் அடிக்கடி தென்படுவதாக பெரியவர்கள் கூறுகின்றனர்.
இக்கோவிலும் தாமிரபரணிக் கரையில் அமைந்த கோவிலே. இங்கே தாமிரபரணி தீர்த்தத்தின் பெயர் மார்க்கண்டேய தீர்த்தம் என்பதாம். மார்க்கண்டேய மஹரிஷி இங்கு வந்து தவமிருந்ததால் இப்பெயர் பெற்றதாகத் தெரிகிறது. இக்கோவிலில் இருக்கும் கல்வெட்டில் இவ்வூருக்கு குலசேகர சதுர்வேதி மங்கலம் என்று பெயர் இருப்பதாகச் சொல்கிறார்கள். மருத மரங்கள் நிறைந்த சோலையாக இருப்பதால் கோடை வாச ஸ்தலம் போன்று குளிர்ச்சியான ஊர் என்று கூறுகிறார் எனக்குச் செய்திகள் அளித்த மூதாட்டி.
இங்குள்ள ஈசனது திருநாமம் கைலாசநாதர், அம்பிகை சிவகாமியம்மன். இவ்வூரில் இக்கோவிலைத் தவிர அபிமுக்தீஸ்வரர் என்ற சிவன் கோவிலும், பிரஹன்மாதவர் என்னும் பெருமாள் பூமி தேவி, நீளாதேவியுடன் காக்ஷி கொடுக்கும் திருக்கோவிலும் இருப்பதாகச் சொல்கிறார். இந்த பெருமாள் கோவிலே பெரிய பிரான் கோவில் என்று அழைக்கப்படுகிறதாம். பல நூறு வருடங்களாக சைவ-வைஷ்ண சமயங்கள் இணைந்து தழைத்தோங்கும் திருத்தலம் என்று தெரிகிறது. சிருங்கேரி, மற்றும் ஆண்டவன், அகோபில மடங்கள் இங்கு பல காலமாக இருக்கிறதாம்.
இக்கோவிலில் விநாயகர், வள்ளி தேவ சேனாபதி, நந்தி போன்ற தேவதைகளுடன் கைலாசநாதர் கிழக்கு நோக்கியும், சிவகாமியம்மை தெற்கு நோக்கியும் எழுந்தருளி அருள்கின்றனர். கோவிலுக்கு கொடிமரம் ஏதும் கிடையாதாம். தற்போது ஒரு நேர பூஜை மட்டுமே நடந்து வருவதாகவும், சிவராத்திரி, பிரதோஷம், திருவாதிரை போன்ற விசேஷங்கள் நடப்பதாகவும் தெரிகிறது. நான்கு வேதங்கள் முழங்க இருந்த இவ்வூர் இன்று ஈசனது ஒருகால பூஜையுடன் இருப்பது வருந்த தக்க செய்திதான். திருநெல்வேலியில் இருந்து மிக அருகில் இருக்கும் இந்த சிறப்பான தலத்திற்கு செல்ல முயல்வோம், ஈசனருள் பெறுவோம்.
தென்னாடுடைய சிவனே போற்றி!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!.
பி.கு: கோடகநல்லூர் சிவன் கோவில் மற்றும் பெருமாள் கோவில் படங்கள் கூகிளாண்டவர் அருளியது. இப்படங்களை இணையத்திற்கு அளித்த நல்லுள்ளங்களுக்கு நன்றி.
18 comments:
இது என்ன புது பக்கமா இருக்கேன்னு பார்த்தேன்!
டெம்ப்ளேட் மாற்றி இருக்கீங்க!
வாழ்த்துக்கள்!
இப்போ எல்லாம் அவ்வளவா நேரம் கிடைப்பதில்லை, அதனால படிப்பதும் நிறைய பின் தங்கி விட்டது. மறுமொழி இடுவதும் குறைந்து விட்டது, பொறுத்தருளவும்!
வாங்க ஜீவா. புது டெம்ப்ளெட் பிடிச்சுருக்கா?...நன்றி.
//இப்போ எல்லாம் அவ்வளவா நேரம் கிடைப்பதில்லை, அதனால படிப்பதும் நிறைய பின் தங்கி விட்டது. மறுமொழி இடுவதும் குறைந்து விட்டது, பொறுத்தருளவும்!//
புரிகிறது ஜீவா. நேரம் கிடைக்கறப்போ வாங்க....நானும் மறுமொழி இடுவதை குறைத்துவிட்டேன். :-).
//நானும் மறுமொழி இடுவதை குறைத்துவிட்டேன். :-).//
:) :-
அடியேனும் தான். :) :-
பதிவு, புகைப்படம் , செய்திகள் நல்லா இருக்கு
வாங்க பரவஸ்து அண்ணா.
//பதிவு, புகைப்படம் , செய்திகள் நல்லா இருக்கு//
நன்றி.
////நானும் மறுமொழி இடுவதை குறைத்துவிட்டேன். :-).//
:) :-
அடியேனும் தான். :) :-//
அடக் கடவுளே, இதற்கும் சாயம் பூசப்படலாம். :(
மறுமொழி என்பது மறுத்து அளிக்கும் மொழியாக இல்லாமல் மாறுபடாமல் கருத்தைச் சொல்லலாம் என்று நினைத்து நான் மறுமொழிகிறேன்.
ரொம்ப நாள் கழிச்சு வரேன் இங்க. எல்லாம் ஊர் பாசம் தான் இழுத்துட்டு வருது. டெம்ப்ளேட் ரொம்ப நல்லா இருக்கு. :))
//நானும் மறுமொழி இடுவதை குறைத்துவிட்டேன்//
ஹஹா, நான் படிக்கற பழக்கத்தையே நிறுத்திட்டேனாக்கும். வேலை பளு தான், வேற என்ன? :))
ஒரு கால பூஜை தானா? சரி, இந்த கோவிலும், தமிழ் நாட்டின் அற நிலைய துறையின் செம்மையான, மேன்மையான, நியாயமான செயல்பாட்டின் கீழ் தான் உள்ளதா?
அப்படின்னா நோ கொஸ்டின்ஸ் யுவர் ஆனர். :))
//அவன் தனது ஒழுக்கத்தில், ஆசாரத்தில் இருந்து வழுவினால் அவனது ஜென்மாவே கெட்டு, விணாகும் என்கிறார் திருவள்ளுவர்//
எனக்கு திருவள்ளுவரை நினச்சா பாவமா இருக்கு. இதுக்கு வேற வெர்ஷன்ல ஏதும் விளக்கம் இன்னும் வரலையா? இது பரிமேலழகர் உரை தானே? :))
விணா = வீணா
வாங்க திராச சார்...
//மறுமொழி என்பது மறுத்து அளிக்கும் மொழியாக இல்லாமல் மாறுபடாமல் கருத்தைச் சொல்லலாம் என்று நினைத்து நான் மறுமொழிகிறேன்.//
புதசெவி...வேறு எங்கும் போட இருந்த பின்னூட்டத்தை இங்கு போட்டுட்டீங்களா?
வாங்க அம்பி சார்...(அட இது ஏதோ சீரியல்ல வரும் காரக்டர் மாதிரி தொனிக்குதே!) :-)
//ரொம்ப நாள் கழிச்சு வரேன் இங்க. //
வாங்க...வாங்க...
//எல்லாம் ஊர் பாசம் தான் இழுத்துட்டு வருது.//
புரியுது, இந்த இடுகையை இடும்போதே நினைத்தேன் :-)
// டெம்ப்ளேட் ரொம்ப நல்லா இருக்கு.//
நன்ஸ்...
//ஹஹா, நான் படிக்கற பழக்கத்தையே நிறுத்திட்டேனாக்கும். வேலை பளு தான், வேற என்ன? :))//
நம்பிட்டோமில்ல :-)
//இந்த கோவிலும், தமிழ் நாட்டின் அற நிலைய துறையின் செம்மையான, மேன்மையான, நியாயமான செயல்பாட்டின் கீழ் தான் உள்ளதா? //
அப்படித்தான் நினைக்கிறேன் யுவர் ஆனர்.. :-)
//எனக்கு திருவள்ளுவரை நினச்சா பாவமா இருக்கு. இதுக்கு வேற வெர்ஷன்ல ஏதும் விளக்கம் இன்னும் வரலையா? இது பரிமேலழகர் உரை தானே? :))//
தெரியல்லை
//விணா = வீணா//
நன்றி...மாத்திடறேன்...
//இப்போ எல்லாம் அவ்வளவா நேரம் கிடைப்பதில்லை, அதனால படிப்பதும் நிறைய பின் தங்கி விட்டது. மறுமொழி இடுவதும் குறைந்து விட்டது, பொறுத்தருளவும்!//
நான் மட்டும்தான்னு நினைச்சேன் :)
மௌலி, நீங்க வரவர கதையே சொல்றதில்லை :(
வாங்க கவிக்கா..
//மௌலி, நீங்க வரவர கதையே சொல்றதில்லை :(//
கதை எல்லாம் எனக்கு எழுதத் தெரியாதே?....புதசெவி.
எல்லாம் ஊர் பாசம் தான் இழுத்துட்டு வருது. :))
Thambi
மிகவும் பயனுள்ள தகவல்கள். அவசியம் தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.
Post a Comment