சைவத்தை ஸ்தாபித்த வரலாறு என்று ஒரு திருவிளையாடல் உண்டு. அந்த விளையாடலின் அங்கமாக 6ஆம் நாள் உற்சவத்தில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆகிய இருவரும் ரிஷப வாகனத்தில்.
ஏழாம் நாளில் அன்னை யாழி வாகனத்திலும் அப்பன் நந்திகேஸ்வர வாகனத்திலும்.
மதுரையின் ஆட்சி ஆறு மாதங்கள் அன்னையாலும், ஆறு மாதங்கள் அப்பனாலும் செய்யப்படுவதாக ஐதிகம். அன்னைக்கு முடி சூடுதல் எட்டாம் நாள் திருநாள். இன்று அன்னை பாண்டியனுக்கு உரிய வேப்பம் பூ மாலை அணிந்து மலையத்வஜ பாண்டிய ராஜ கன்னியாக பட்டாபிஷேகம். (இது போன்றே ஈசன் பாண்டிய ராஜனாக பட்டம் சூட்டிக்கொள்வது ஆவணி மூல உற்சவத்தில் நடக்கும்.)
4 comments:
லைவ் கவரேஜ் பண்ணின மாதிரி இருக்கு.
அது என்ன சைவம் ஸ்தாபிதம் பண்ணின விழா?னு கேஆரெஸ் அண்ணா கேட்க போறாரு பாருங்க. :))
நல்லா இருக்கு மெளலி! அம்பியைப் போல் நானும் கேட்கிறேன், அது என்ன சைவம் ஸ்தாபிதம் பண்ணினது? தெரியலையே? புதுசா இருக்கு?
வாங்க அம்பி சார். :)
கே.ஆர்.எஸ் கேட்கல்லன்னா கூட நீங்க எடுத்து கொடுக்கறமாதிரியிருக்கு?....நடத்துங்க அம்பி, நடத்துங்க.. :))
வாங்க கீதாம்மா...
//நல்லா இருக்கு மெளலி! அம்பியைப் போல் நானும் கேட்கிறேன், அது என்ன சைவம் ஸ்தாபிதம் பண்ணினது? தெரியலையே? புதுசா இருக்கு?//
என்னது, மதுரையின் மைந்தி (மைந்தனுக்கு பெண்பால், சரிதானே):)), உங்களுக்கு தெரியாதா?
திருவிளையாடல் புராணத்தை எடுத்து படிச்சுட்டு சொல்லுங்க...:))
Post a Comment