ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி தர்மத்தின் ப்ரத்யக்ஷ ஸ்வருபீ என்கிறார் வால்மிகி. மனிதன் எப்படி தார்மீக முறையில் வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தது ராமாவதாரம். பகவான் ஸ்ரீ விஷ்ணு தனது உயர்ந்த தெய்விக நிலையிலிருந்து கீழ் இறங்கி வந்து ஸ்ரீ ராமராகவும், ஸ்ரீகிருஷ்ணராகவும் அவதாரம் செய்ததே மனிதர்களான நம் அனைவரையும் ரக்ஷிப்பதற்கே என்று பாகவதத்தில் சுகமுனியும் கூறியிருப்பதாக தெரிகிறது.
இந்த பூமியில் வாழும் மனிதன் அதர்மச் செயல்களை விலக்கி, தர்மச் செயல்கள் மட்டுமே செய்து நல்லவனாக, வல்லவனாக வாழ முடியும் என்பதை தானே வாழ்ந்து காட்டிய அவதாரமே ராமாவதாரம்.தார்மீக வாழ்வில் மனிதனுக்கு ஆசை கூடாது, எதை செய்ய வேண்டுமோ, அல்லது எதை செய்ய தனக்கு ஆணையிடப்பட்டிருக்கிறதோ அதனை தயங்காது செய்ய வேண்டும். பிறருக்கு தானம் செய்வதை தலையாயதாகக் கொள்ள வேண்டும். இந்த குணங்கள் எல்லாம் ராமனிடத்தில் தலைதாழ்ந்து வெட்க்கப்படும் அளவிற்கு சிறந்தவன். இதுமட்டுமா, பித்ருதேவோ பவ: என்பதற்கேற்ப, தந்தையின் விருப்பத்தை தயக்கமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று 14 வருடங்கள் வனவாசம் புரிந்து கடமையுணர்ச்சியுடைய புத்ரனாக, (பித்ரு வாக்ய பரிபாலனனாக) வாழ்ந்து காட்டியுள்ளார். இதனால்தான் பெரியவர்கள், இராமர் செய்ததை செய்யவேணும், கிருஷ்ணர் கூறியதை செய்யவேணும் என்று சொல்கிறார்கள்.
ஒரு சமயம், அஷ்டமி-நவமி திதிகள் பகவானிடம் சென்று, 'விவாஹம், க்ருஹப்ரவேசம், பிரயாணம் போன்றவைகளுக்கு அஷ்டமி-நவமி கூடாது என்று எல்லா மங்கள காரியங்களிலும் தங்களை அனைவரும் பஹிஷ்கரிப்பதாக முறையிட்டனர். திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்பதாக பகவானும், ' நீங்கள் கவலைப்பட வேண்டாம், உங்களையும் உலகமே கொண்டாடும்படியான நிலை வரும் என்று அனுக்ரஹித்து அனுப்புகிறார். இதன் காரணமாகவே அஷ்டமியில் க்ருஷ்ணராகவும், நவமியில் ராமனாகவும் அவதரித்து அந்த திதிகளுக்கு சிறப்பினை ஈந்தார். ஆகவேதான் புனர்வசு நக்ஷத்திரத்தில் பிறந்தாலும் நாம் சைத்ர மாத, சுக்லபஷ நவமியினை ராம நவமியாக கொண்டாடுகிறோம். இந்த நாளில், நடுப்பகலில், கடகலக்னத்தில் 5 கிரகங்கள் உச்சமாக இருக்கும் நேரத்தில், அயோத்தியில் இராமர் அவதரித்ததார். இந்த திருநாளை உலகம் முழுதும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகின்றனர். ராம நவமிக்கு முன்பான ஒன்பது நாட்களை கர்ம்போத்ஸவம் என்றும், ராம நவமிக்கு பின்வரும் ஒன்பது நாட்களை ஜனனோத்ஸவம் என்றும் கொண்டாடுகின்றோம். ந்த 18 நாட்களில் ராமாயண பாராயணம், உபன்யாசம் போன்றவை மிகச் சிறப்பாக செய்வர். இன்றைய தினம் ராம ஜனனம் படித்தல் மிகவும் சிலாக்கியம்.
இணையத்திலும் திருமதி வல்லியம்மா அருளச் செய்த சித்ர ராமாயணம் இருக்கிறது, திருமதி கீதாம்மா நடத்தும் ப்ரவசனமொத்த இராமாயண காதைகள் இருக்கிறது. இவற்றை மீண்டும் ஒருமுறை படித்து இராமனருள் வேண்டுவோம்.
சீதா லக்ஷ்மண, பரத சத்ருக்ன ஹனுமத் சமேத ஸ்ரீராமச்சந்த்ர பரபிரும்மணே நம:
11 comments:
அஷ்டமி, நவமி என்று திதிகளை முன்னிட்டு கோகுலாஷ்டமியும் இராமநவமியும் கொண்டாடப்பட்டாலும் ரோகிணியும் புனர்பூசமும் ஒரு நாள் முன்பின்னாக வருவதைக் காணலாமே மௌலி. இந்த வருடம் புனர்பூச நட்சத்திரம் நவமி திதியிலேயே வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.
எங்கள் வீட்டிற்கு எதிரில் இருக்கும் ஒரு பஜனை மடத்தில் இராமநவமிக்கு முன்னர் பத்து நாட்களும் அடுத்து பத்து நாட்களும் தினம் இரவு பஜனைகள் நடக்கும். சீதா கல்யாணம் நிறைவு பெற்ற பின்னர் தெற்கு வாசலைல் இருக்கும் சி.எஸ்.ஆர். திருமண மண்டபத்தில் திருமண விருந்து நடைபெறும். தனியாக அழைப்பு இல்லை. யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். நீங்கள் சொல்லியிருப்பதைப் படித்தவுடன் அது நினைவிற்கு வந்துவிட்டது. :-)
மஹால் ஐந்தாவது தெருவின் முனையில் இருக்கும் இராமபிரான் கோவிலிலும் நீங்கள் எழுதியிருப்பதைப் போன்றே எழுதியிருப்பார்கள். நானும் உங்களோடு சேர்ந்து அதனைச் சொல்லிக் கொள்கிறேன்.
சீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன ஹனுமத் சமேத ஸ்ரீராமச்சந்த்ர பரபிரும்மணே நம:
வாங்க குமரன்.
ஆமாம், வைஷ்ணவர்கள் ஜென்மாஷ்டமி கொண்டாடுவதில்லை, அவர்கள் மறுநாள் வரும் ரோகிணியில் க்ருஷ்ண ஜெயந்திதான் கொண்டாடுவர். :))
ஆனால், அவர்களும் புனர்வசுவன்று ராமஜெயந்தி என்று ஏதும் கொண்டாடுவதில்லை, ராம நவமிதான் :))
// சீதா கல்யாணம் நிறைவு பெற்ற பின்னர் தெற்கு வாசலைல் இருக்கும் சி.எஸ்.ஆர். திருமண மண்டபத்தில் திருமண விருந்து நடைபெறும். தனியாக அழைப்பு இல்லை. யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்//
நல்ல சமய நல்லிணக்கம் :))
அட, அருமையான படங்கள், எனக்குக் கிடைக்கவில்லையே? க்ர்ர்ர்ர்ர்ர்
சுட்டுட்டுப் போய்ப் போட்டுக்கிறேன். நோ நன்னி! :P
/அட, அருமையான படங்கள், எனக்குக் கிடைக்கவில்லையே? க்ர்ர்ர்ர்ர்ர்
சுட்டுட்டுப் போய்ப் போட்டுக்கிறேன். நோ நன்னி! :P//
என்ன தொண்டை-ல கிச்-கிச் ஆ? விக்ஸ் சாப்பிடுங்க..:))
நோ நீட் ஆப் நன்னி....யார் முதல்ல அப்லோட் பண்ணினாங்களோ, அவங்களுக்குத்தான் நன்னி சொல்லனும்...எனக்கெதற்கு? :))
இது என்ன, காலம்பரத் தான் பின்னூட்டம் கொடுத்தேன், ஆனால் நேத்துத் தேதியிலே வந்திருக்கு? இந்தியாவில் இருக்கேனா? அமெரிக்காவிலா? குழப்பமோ குழப்பம்! :P
அட, உங்க படம் உங்களை விட்டு வர மாட்டேங்குதே? :P
வைணவர்கள் கிட்ட அந்த வேறுபாடு இருக்கான்னு தெரியலை மௌலி. அங்கேயும் வடகலை ஒரு நாள் தென்கலை ஒரு நாள்ன்னு வேறுபாடு இருக்கலாம். எங்க குடும்பம் சிருங்கேரி மடத்தோட சீடர்கள் ஆனாலும் கோகுலாஷ்டமிக்குச் சிறப்பா ஒரு கொண்டாட்டமும் வீட்டுல இல்லை. கோவிலுக்குப் போவோம் அவ்வளவு தான். :-)
வாங்க குமரன்....
//வைணவர்கள் கிட்ட அந்த வேறுபாடு இருக்கான்னு தெரியலை மௌலி. அங்கேயும் வடகலை ஒரு நாள் தென்கலை ஒரு நாள்ன்னு வேறுபாடு இருக்கலாம்.//
இந்த விழாக்கள் கொண்டாடுவதில் எல்லாம் வடகலை-தென்கலை வித்தியாசம் இல்லை, மொத்தமா ஸ்மார்த்த-வைஷ்ணவ வித்தியாசம் மட்டுமே..:))
சாதாரணமா கோகுலாஷ்டமி என்று அஷ்டமியை பேஸிஸா வைத்து ஸ்மார்த்தர் கொண்டாடினால், வைஷ்ணவர் ரோகிணியை வைத்து (அடுத்த நாள் வரும்) கொண்டாடுவர். ஆனால், ராமநவமி மட்டும் ஸ்மார்த்தரைப் போலவே...புனர்வசுவுக்காக வெயிட்டிங் கிடையாது. :))
// எங்க குடும்பம் சிருங்கேரி மடத்தோட சீடர்கள் ஆனாலும் கோகுலாஷ்டமிக்குச் சிறப்பா ஒரு கொண்டாட்டமும் வீட்டுல இல்லை. கோவிலுக்குப் போவோம் அவ்வளவு தான். :-)//
எங்க வீட்டுல விரதமிருந்து, பலவகையான பக்ஷணங்கள், வீட்டு வாசலில் இருந்து க்ருஷ்ணனின் கால் வரைவதுன்னு படுபிஸியா இருப்பாங்க. ஆண்களும் விரதமிருந்து மாலையில் பூஜை, விரதானம், அர்க்ய ப்ரதானம் என்று நடக்கும். :))
குமரன் உங்க பின்னூட்டத்தை பார்த்தேன், ஆனா பப்ளிஷ் பண்ணல்லை. :-) உங்களுக்கு சாட்ல பதில் சொல்கிறேன். அதுவும் கே.ஆர்.எஸும் இருக்கையில் சொல்கிறேன் :)
Hi,
Just wanted to say hello ;)
i'm new to this board.
Hi,
Just wanted to say hello ;)
i'm new to this board.
Post a Comment