Monday, November 21, 2011

அவ்யாஜ பக்தி.....

இன்றைக்கு நமக்கெல்லாம் பக்தி என்பது என்பது கோவில்களுக்குச் செல்வது, பகவானுக்கு மலர் மாலைகள், வஸ்த்ரங்கள் சாற்றுவது, அபிஷேகத்திற்குக் கொடுப்பது அல்லது வைதீகர்களை அழைத்து ருத்ர பாராயணம் செய்வது, ஹோமாதிகள் செய்வது என்று இருக்கிறது. வீட்டில் ஹோமம் செய்து சில-பல வருஷங்கள் ஆயிற்று, ஏதும் செய்யவில்லை, ஆகவே வைதீகரைக் கூப்பிட்டு ஒரு கணபதியும், சுதர்சனமும் பண்ணச் சொன்னேன் என்று கூறுபவர்களைப் பார்க்கிறோம். நல்லதுதான், வேதம், மற்றும் ப்ரயோகம் தெரிந்த வைதீகர்களை அழைத்து அவர்களால் சில ஜப,ஹோமங்கள் செய்வது நன்றே.இவற்றை நாம் அனைவரும் செய்கிறோம், இவையெல்லாம் நன்மையே. ஆனால் இவற்றைச் செய்யும் போது நமது சிந்தனை எப்படி இருக்க வேண்டும் என்பதே இந்த இடுகையின் சாரம்.



பக்தர்களுக்கு இறைவனிடத்தில் ப்ரீதி என்பதே ஆத்மானுபவத்தின் முதல்படி என்கிறார்கள் பெரியோர். இதைச் சொல்லுகையில், கோபிகைகளின் பக்தி பற்றிய ஒரு ஸ்லோகம் சொல்லப்படுவது நினைவுக்கு வந்தது. அந்த ஸ்லோகம்,


விரேது காமாசில கோபபாலா

முராரி பாதார்பித சித்த வ்ருத்தி:

தத்யாதிகம் மோக வசாதவோசது

கோவிந்த தாமோதர மாதவேதி.


கோபிகைகள் தங்கள் தலையில் பால், தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றினைச் சுமந்து கொண்டு சென்று வியாபாரம் செய்வார்களாம். அப்போது அவர்கள் தங்களிடத்து இருக்கும் பொருட்களின் பெயர்களைக் கூவி விற்பதை விட்டுவிட்டு, "கோவிந்த, தாமோதர, மாதவ" என்று கூறிக்கொண்டு சென்றார்களாம். அதாவது தாம் செய்ய வேண்டிய வியாபாரத்தில் அவர்களது நாட்டம் இல்லை என்று பொருளல்ல. ஆனால் அவர்களையும் மீறி அவர்களிடத்தான க்ருஷ்ணனிடத்தான ப்ரேமை, பக்தி அவர்களை வியாபாரம் செய்யும் பொருட்களை விடுத்து கடவுள் பெயரைச் சொல்லுவதில் செலுத்தியிருக்கிறது. அன்றாட கார்யங்கள் அனைத்திலும் பரம்பொருளது நினைவும், செயலும் இருப்பது என்பது இது அவ்வளவு எளிதான செயல் அல்ல. இவ்வகையான நிலையை எய்தவே கர்மானுஷ்டானங்கள், ஜப-ஹோமங்கள், பூஜைகள் எல்லாம் என்பதை நாமெல்லாம் உணரவேண்டும்.


"பத்ரம் புஷ்பம், பலம் தோயம் யோமே பக்த்யா ப்ரயச்சதி", பக்தன் மிகுந்த பக்தி-சிரத்தையுடன் ஒரு சிறு இலை, பூ, பழம் போன்றவற்றைத் தந்தாலும் அதை நான் ஸ்வீகரிப்பேன் என்கிறான். நமது பக்தி, வழிபாடு போன்றவை இவ்வாறாக இருக்கிறதா என்பதை நாம் அவ்வப்போது சோதித்துக் கொள்ள வேண்டும். டாம்பீகமான பூஜைகளும், ஹோமங்களும் நமக்காக என்று இல்லாது லோகஷேமார்த்தமாக, ஈஸ்வரார்த்தமாக இருக்குமானால் அவற்றை பகவான் ஏற்றுக் கொண்டு எல்லோருக்கும் நன்மை செய்வான், ஆத்மானுபவமும் கிட்டும்.



ஆதி சங்கரரது பால்யத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இங்கே நினைவுக்கு வருகிறது. சிறுவயதில் தந்தை பூஜித்து வந்த பகவதி அம்மனுக்கு ஆசார்யார் ஒருமுறை பால் சமர்ப்பித்துப் ப்ரார்த்தனை செய்கிறார். அப்போது அம்பிகை அந்தப் பாலை ஸ்வீகரிக்கவில்லை. இதனால் ஆசார்யாளது மனது க்லேசம் அடைகிறது, அழவும் தொடங்கிவிடுகிறார். இது கண்ட பகவதி அவளுக்கேயான மாத்ரு வாத்ஸல்யத்துடன் பாலை ஸ்வீகரித்துக் கொள்ளுகிறாள். அம்பிகைக்குத் தான் செய்த நிவேதனத்தை அவள் ஏற்க வேண்டும் என்பது மட்டுமே அந்த சங்கரக் குழந்தையின் எதிர்பார்ப்பு. இந்த சந்தவேசத்தில் அவருடைய பக்தி மற்றும் சிரத்தை மட்டுமே இருக்கிறது. மேற் சொன்ன இரண்டு உதாரணங்கள் பிரதிபலனற்ற [அவ்யாஜ] பக்திக்கு உதாரணம்.

எத்தனையோ ஜன்மாக்கள் எடுத்து,எத்தனையோ கர்மாக்களைச் செய்து,அத்தனை பூர்வ வாசனைகளாலும் நாம் உண்மை ஸ்வரூபமான ஆத்மானந்தத்தை மூடிக் கொண்டிருக்கிறோம். ஸத்கருமம் செய்வதும்,ஸத் வாஸனைகளைப் பெருக்கிக்கொண்டும்தான் பழைய துஷ்கர்மங்களையும், துர்வாஸனைகளையும் போக்கிக் கொள்ள வேண்டும்.பிறகு கர்மா தானே நின்று போகும். ஆத்ம விசாரத்தில் இறங்கலாம். அதுவரையில் 'வெறும்' சடங்கு என்று சொல்கிற கர்மாகள், பூஜை எல்லாம் நமக்குரொம்பவும் அவசியமானவையே" என்கிறார் பரமாசார்யார்.

ஆகவே நான் இந்த பூஜை செய்கிறேன், இந்த ஜபம் செய்கிறேன், இத்தனை கோவில்களுக்குச் சென்றிருக்கிறேன். இவ்வளவு கோவில்களுக்குச் செய்திருக்கிறேன் என்று எண்ணவும் செய்யாது அனுஷ்டானங்களை, பக்தியைச் செய்யத் தலைப்படுவோம்.

11 comments:

Kavinaya said...

ரொம்ப பிடிச்ச பதிவு.

அத்தகைய பக்தியை அவள்தான் அருள வேண்டும்.

தி. ரா. ச.(T.R.C.) said...

ாதாரண பக்தியில் ஆரம்பித்து அவ்யாஜபக்தி நிலையை அடைய அந்த அவ்யாஜ கருணாமூர்த்தி ஆபாலகோபவினுதா சர்வாலங்கியாண சுந்தரியான திருபுர சுந்தரிதான் அருளவேண்டும்.நல்ல ஆரய்ந்து எடுட்து அளித்த பதிவு நன்றி மௌளி

தி. ரா. ச.(T.R.C.) said...

ாதாரண பக்தியில் ஆரம்பித்து அவ்யாஜபக்தி நிலையை அடைய அந்த அவ்யாஜ கருணாமூர்த்தி ஆபாலகோபவினுதா சர்வாலங்கியாண சுந்தரியான திருபுர சுந்தரிதான் அருளவேண்டும்.நல்ல ஆரய்ந்து எடுட்து அளித்த பதிவு நன்றி மௌளி

தக்குடு said...

நம்ப கவினயாக்கா சொன்ன மாதிரி அவள் தான் தரணும் அந்த மாதிரியான நல்ல பாவத்தை! நிறையாவே யோசிக்கவச்ச பதிவு! வணக்கங்கள்!

ஷைலஜா said...

//ஆகவே நான் இந்த பூஜை செய்கிறேன், இந்த ஜபம் செய்கிறேன், இத்தனை கோவில்களுக்குச் சென்றிருக்கிறேன். இவ்வளவு கோவில்களுக்குச் செய்திருக்கிறேன் என்று எண்ணவும் செய்யாது அனுஷ்டானங்களை, பக்தியைச் செய்யத் தலைப்படுவோம்////

அப்படித்தான் செய்ய நினைக்கும்போதெல்லாம் மனக்குரங்கு சும்மா இருப்பதில்லை ...! வறட்டுப்பெருமைக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு வேண்டாத கிளைகளில் தாவிவிடுகிறது.. இறைவனுக்கு நல்லமனசையே காணிக்கையாக்குவதை தவிர அவன் விரும்புவதும் வேறில்லைதான்...அற்புதப்பதிவு மௌலி இதனை இவ்வளவு சிரத்தையாய் பணிவாய் சொல்ல உங்களால்தான் முடியும் ஏன்னா உங்க பக்தில அவைகள் உண்டு என எனக்குத்தெரியும்.

மதுரையம்பதி said...

வ்ருகைக்கு நன்றிக்ள் ஷைல்ஸக்கா. ஏதோ ரொம்ப நாட்கள் கழித்து வந்திருக்கீங்க, அதுக்காக என்னை இப்படி வாரணுமா? :)

மதுரையம்பதி said...

வாங்க கவிக்கோ கவிக்கா :). உண்மைதான் அவளருளால் அவள் தாள் பணிந்து

மதுரையம்பதி said...

வாங்க திராச சார். திரிபுர சுந்தரியையும் கூட்டிண்டு வந்ததுக்கு மிக்க நன்றி.

மதுரையம்பதி said...

வாங்க தக்குடு, ஏது அதிசயமா இந்தப்பக்கம் :)

rajamelaiyur said...

அருமை
அன்புடன் :
ராஜா

அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்

Lalitha Mittal said...

பரமாச்சார்யார் பக்தியைப்பற்றி கூறும்போது பக்திமுற்ற முற்ற கருமம் தானாகவே நசிக்கிறதைப்பற்றிய 'கிருஷ்ணா கர்ணாமிருத சுலோகம்' பற்றி

கூறுகிறார்;கிருஷ்ணபக்தி அதிகமாக ஆக லீலாசுகரால் ஸந்தி,பித்ரு தர்ப்பணம்

ஆகியவற்றை அனுஷ்டிக்கமுடியாமல்போகவே அவற்றிடமிருந்து பிரியாவிடைபெறுகிறாராம்!

ஆரம்ப நிலையில் 'ஏன்?எதற்கு?"என்றெல்லாம் கேட்காமல் சாஸ்திரப்படி அவரவருக்கான கர்மத்தை அனுஷ்டிக்க வேண்டும்;இதனால் மனத்தில் விருப்பு வெறுப்பு குறைவதுடன் சித்தசுத்தி ஏற்படும்!

அழுக்கு நீங்கிய மனத்தில் ஈஸ்வரன் மீது அதிக ஈடுபாடு உண்டாகி மனம் ஒருமுகப்படும் நிலையை அடைகிறது;இதுதான் பக்தி என்ற இரண்டாம் நிலை!

பக்திமுற்றும்போது ஞானம் சித்திக்கிறது ;இது இறுதிநிலை!

முக்திக்கு முயற்சிபண்ணனும் என்பதே இல்லை; பக்தி பண்ணிக்கொண்டிருந்தாலே போதும் ;தானே அதுவாக முக்திக்கு அழைத்துக்கொண்டு போகும் ;எனவே முக்திக்காக பிரார்த்திக்காமல்

பக்தி வேண்டும் என்று வேண்டிக்கொண்டால் போதும் !


மேலுள்ளவாறு பரமாச்சர்யார் அருளுரையில் கூறியதை எல்லா அன்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று தோன்றியது.