பெங்களூர் அல்லாத மற்ற இடங்களில் வசிக்கும் சில நண்பர்கள், சுண்டல்தான் இல்லை, கொலு படங்களையாவது காண்பிக்கக்கூடாதா என்று கேட்டதன் விளைவாக, இந்த வருஷத்தைய கொலுவிலிருந்து சில படங்கள் கிழே!.
[நேரமின்மையின் காரணமாகவும், சரியான ஸ்டில் காமரா இல்லாத காரணத்தாலும் செல் போனில் எடுத்த படங்கள்.....அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க.]
[நேரமின்மையின் காரணமாகவும், சரியான ஸ்டில் காமரா இல்லாத காரணத்தாலும் செல் போனில் எடுத்த படங்கள்.....அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க.]
பித்தளை சாமான்கள் வயது 110க்கும் மேலே!.
20 comments:
இனிய நவராத்திரி வாழ்த்துகள். படங்களுக்கு நன்றி மௌலி.
சுண்டல் இல்லாத கொலுப்படமும் ஒரு படமா!
செல்லாது செல்லாது!
வைணவம் தான் Top Mostஆ இருக்கு, Top Most படி-ல!:)))
இனிய கொலு வாழ்த்துக்கள்...இதுக்கு ஓயாது உழைத்த அண்ணிக்கும், மகளுக்கும்!
வெறுமனே ஃபோட்டோ புடிச்ச உங்களுக்கு ஏமி லேது!:)
சமயக் குரவர்கள் நால்வர்
சங்கீத மும்மூர்த்திகள் மூவர்
அருமை! வித்தியாசமனதும் கூட!
கஜேந்திர மோட்சம் புதுமையா இருக்கு! எங்கூரு வாழைப்பந்தல், ஆனைக்கருளிய அருளாளப் பெருமாள் (கஜேந்திர வரதராஜப் பெருமாள்) நினைவுக்கு வந்துட்டாரு!:)
அப்பறம் நிறைய மனிதக் காதல் ஜோடிகள் தென்படறாங்க போல! ஐ லைக் இட்:)
கருப்பு இராகவன் ஜோடி அருமை!:)
திருவேங்கடமுடையான் திருக்கல்யாணம் சூப்பரு...ஆகாச ராஜன் தாரை வார்த்துக் குடுக்குறாரா?
பொதுவா மீனாட்சி கல்யாணம் தான் அதிகம் கிடைக்கும்! இந்த செட் எங்கே பிடிச்சீங்க-ண்ணா?
கொஞ்சம் பலகாரம் ஃபோட்டோவும் போட்டு பசி ஆத்தி இருக்கலாம்! உம்ம்ம்ம்..
அப்பறம்....அப்பறம்....என்னவனை எண்ணிட்டேன்!
= மொத்தம் எட்டு முருகன்! எட்டுக்குடி :)
தசாவதார வரிசைக்கு இந்தப் பக்கம்...ஒரு முருகன் ஜோடி, அது தேவானையா? வள்ளியா?
தந்தைக்குப் பொருள் சொல்லும் கோலமும் சூப்பர்!
சிவனார் மனங்குளிர உபதேச மந்திரம், "இரு செவி மீதிலும்" பகர்!
ஓய்...எட்டு முருகன் இல்ல...ஒன்பது முருகன்...
கருப்பு இராகவன் கீழே ஒருத்தன் குட்டியா இருக்கானா...சட்-ன்னு தெரியல! ஆனாலும் எம்புட்டு சிறுசா ஒளிஞ்சாலும் எனுக்குச் சிக்காமப் போயிருவானா என் முருகன்?:))
வாங்க குமரன்...ரொம்பநாட்கள் கழித்து இந்தப்பக்கம் வந்திருக்கீங்க... நல்வரவு.
வாங்க கீதாம்மா...சுண்டல் நேரில் வந்தால் மட்டுமே. :)
வாங்க கேஆரெஸ்....இரண்டாவது படியில் ஆதிசங்கரர் இருக்காரே பார்த்தீங்களா?. :-)
சமயக்குரவர்கள் 2 வருஷம் முன்னரும், போனவருஷம் சங்கீத மும்மூர்த்திகளும் வந்து சேர்ந்தனர். :-)
ஒரு ஜோடி, அரிச்சந்திரன் - சந்த்ரமதி - காட்டுக்குக் காவலனாக இருந்த காலத்தினைச் சுட்டுவதாக இருப்பதால் அரிச்சந்திரன் கையில் கோலுடன் இருக்கிறார்.
இன்னொரு குறவன் - குற்த்தி ஜோடி...
ஆமாம், ஸ்ரீநிவாச கல்யாணத்தில் ஆகாசராஜன் தாரை வார்க்கிறார்...மற்ற தேவாதி தேவர்கள் முனிவர்கள் முன்னிலையில்....மதுரையருகில் விளாச்சேரி என்று ஒரு இடம், அங்கே மண் பொம்மை செய்து வியாபாரம் செய்கிறார்கள்...அங்கு வாங்கியது.
அறுபடை முருகன் செட் - இதில் முதலில் இருப்பது திருப்பரங்குன்றம் - தெய்வானை மணக்கோலம்... மயில் மீதமர்ந்த முருகன் + பழனியப்பன் ஆகியவை அம்மாவுக்கு மாமா 1958-ல் வாங்கிக் கொடுத்தது.
கொலு படங்கள் எல்லாம் பிரமாதமா இருக்கு! பெங்களூர்ல இருந்துருந்தா அக்கா & அம்மா கையால சுண்டலும் சாப்பிட்டு இருக்கலாம் :))
இனிய நவராத்திரி வாழ்த்துகள்
நேர்ல வாங்க தக்குடு.....சுண்டல் சாப்பிடலாம் :-)
வாங்க விழியன் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆயுத பூஜை-விஜய தசமி நல்வாழ்த்துக்கள்.
romba azhakaa irukku
அழகான கொலு. வயசெல்லாம் சொல்லாதீங்க. கண்ணு பட்டுடப் போகுது! :)
வா.........வ்
வாங்க லலிதா மேடம்...முதல் வருகைக்கு நன்றி.
வாங்க கவிக்கா...வருகைக்கு நன்றி....இன்னொருவரும் இதே கருத்தை போனில் சொன்னார்...:-)
வாங்க ஜெயஸ்ரீ மா...வருகைக்கு நன்றிகள் பல.
Post a Comment