Monday, October 17, 2011

ஸ்ரீ சந்திர சேகர பாரதீ ஸ்வாமிகள்....



இரு வருஷங்கள் முன்னர் ஒரு பிரதோஷகாலத்தில், நண்பர் ஒருவரிடத்தில் நான் கேட்டிருந்த ஸ்ரீ சந்திர சேகர பாரதீ ஸ்வாமிகளது வரலாறு புத்தகவடிவில் கிடைத்தது. இந்த புஸ்தகம் முழுவதுமே திகட்டாத விருந்து என்றால் மிகையல்ல. புஸ்தகம் முழுவதிலும் ஸ்ரீ சந்திர சேகர பாரதீ ஸ்வாமிகளது திருஷ்ட, ஸுக்ஷ்ம விசேஷங்களை ஆசார்ய பக்தியில் சிறந்த ஸ்ரீ ஆர்.கிருஷ்ணஸ்வாமி என்பவர் எழுதியிருக்கிறார். இவ்வாசிரியர் பிற்காலத்தில் சிருங்கேரி ஆசார்யர்களிடம் ஸன்யாசம் பெற்று ஸ்ரீ ஞானாநந்த பாரதீ என்ற தீக்ஷா நாமத்துடன் விளங்கியவர் என்று தெரிகிறது.


இந்த இடுகை ஸ்ரீ ஞானாநந்த பாரதீ ஸ்வாமிகள் எழுதிய ஸ்ரீ குருகிருபா விலாஸம் என்னும் நூலில் இருந்து படித்த ஒரு விஷயமே இங்கு நமது சிந்தனைக்காக. புஸ்தகத்தைப் படிக்கத் தந்த நண்பருக்கும், இந்த புஸ்தக வெளியீட்டாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


ஒரு சமயம், ஸ்ரீ சந்திர சேகர பாரதீ அவர்களின் தரிசனத்திற்கு வந்த பக்தர், தமது லோகாயதமான கர்மாக்கள் எல்லாம் முடிந்துவிட்டதாகவும், நிறைய நேரம் இருப்பதாகவும் அதை நல்ல வழியில் செலுத்த, தமக்குத் தோன்றும் பல வழிகளைக் கூறி போது ஜனங்களுக்கிடையே அவற்றைச் செயல்படுத்த பெரியவாளது ஆசிகள் வேண்டும் என்று விஞ்ஞாபிக்கிறார். ஆசாரியார் பல வித கேள்விகள் கேட்ட பின்னர், 'உங்களுக்கோ குடும்ப விஷயமான கவலையில்லை என்று தெரிகிறது. நமது சமயத்தில் தீவிரமான சிரத்தையும், அவகாசமும் இருக்கிறது என்றும் தெரிகிறது. இந்த காலத்தை உபயோகித்துக் கொண்டு நீங்கள் மேன்மேலும் பலவித கர்மானுஷ்ட்டானங்களைச் செய்து கொண்டு, இன்னும் உங்களை மேம்படுத்திக் கொள்ளலாமே?. அதில் அக்கறை செலுத்தாமல் ஊரார் விஷயமாகப் பிரவிருத்தி செய்வதில் என்ன அர்த்தம்?'. என்று கூறுகிறார். மேலும், ஜன சமுதாயம் என்பது தனித் தனி ஜனங்களின் சேர்க்கையே. அவை ஒவ்வொரு மனுஷனும் தமது ஸ்வதர்மத்தை அனுஷ்டித்துத் தனக்கு இருக்கிற அக்ஞானத்தைப் போக்கடிக்க பிரயத்தனப்பட்டானேயானால் அதுவே சமுதாயத்தின் உன்னத கதிக்கு காரணமாகும். இதை விட்டு ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உபதேசம் செய்யத் தலைப்பட்டால் அவை பிரயோஜனம் இன்றி வீண் வியவஹாரங்களையும், மனஸ்தாபத்தையுமே ஏற்படுத்தும். நம்மை உத்தாரணம் செய்து கொள்வதற்கே எத்தனையோ ஜன்மங்கள் தேவையாக இருக்கிறது, இதில் மற்றவர்களை உத்தாரணம் செய்ய நினைப்பது கொஞ்சமேனும் நியாயமும் இல்லை, ஸாத்தியமும் இல்லை.


"நாப்ருஷ்ட: கஸ்யசித் ப்ரூயாத்" என்பதாக 'கேட்காமல் இருக்கும்போது யாருக்கும் சொல்லாதே' என்று சொல்லப்பட்டிருக்கிறது. கேட்கிற விதமும் வெறும் குதுகலத்தினால் இல்லாமல் அத்யாத்மப் பசியாக இருந்தால் மட்டுமே சொல்லப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 'தத்வித்தி ப்ணிபாதேன பரிப்ரச்னேன ஸேவயா:" என்பதாக நன்கு நமஸ்கரித்து சேவை செய்து, திரும்பத் திரும்ப கேட்டு அதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்தால் மட்டுமே உபதேசம் செய்யப்பட வேண்டும் என்று கீதையில் கூறப்பட்டுள்ளது.


ஆகவே பசிப்பவன் தானே உணவினை தேடிக்கண்டு பிடிப்பான் என்று கூறுகிறார். ஆகவே, நாமும் நல்ல குரு கிடைக்கவும், குரு கிடைத்துவிட்டால் அவரிடத்தில் முழுமையாக சரணாகதி செய்து உய்யத் தலைப்படுவோம்.


[ஸ்ரீ சந்திர சேகர பாரதீ ஸ்வாமிகளது பீடாதிபத்யத்தின் ஆரம்ப காலத்திலேயே ஸ்ரீ பரமாசாரியார் காம கோடி மடத்தின் பீடாதிபத்யம் ஏற்றவர். ஸ்ரீ சந்திர சேகர பாரதி ஸ்வாமிகள் பீடாரோஹணம் 1912 முதல் 1954 வரையில். பரமாசாரியார் தனது பால்ய காலத்தில், சில விஷயங்களை சந்திர சேகர பாரதி ஸ்வாமிகளிடம் தமது சிஷ்யர்களை அனுப்பி தெளிவு செய்துகொண்டதாகச் சொல்வார்கள். இவர் துங்க பத்ராவில் ஜல சமாதியானவர். நரசிம்ஹ வனத்தில் துங்கா நதிக்கரையில் இவர் நீரில் அமிழ்ந்த இடத்தில் ஓர் மண்டபமும், அவரது பூத உடல் நரசிம்ஹ வனத்தில் அவரது குருவின் அதிஷ்ட்டானத்தருகிலேயே வைத்து பிருந்தாவனம் கட்டப்பட்டு இருக்கிறது]

12 comments:

Lalitha Mittal said...

ஸ்ரீ சந்திரசேகர பாரதி சுவாமிகளைப் பற்றிய பதிவு அருமை!பின்னுரையில்
உள்ள பரமாச்சார்யாரைப்பற்றிய தகவலை நானும் எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது.

சுவாமிகளைப் பற்றிய ஒரே ஒரு நிகழ்ச்சியைக் கூறி எங்கள் ஆவலைத்தூண்டி விட்டாச்சு;வரலாற்றுச்சுருக்கமாவது

கொடுத்திருக்கலாமே!?

Jayashree said...

Would love to read this book . can you please let us know the title of the book? Is it available in Giri Traders

மதுரையம்பதி said...

வாங்க லலிதா மேடம்.....வரலாற்றுச் சுருக்கம் இண்டர்னெட்-ல இருக்குங்க....விக்கியிலேயே வருது....பலருக்கும் தெரியாத, நாம் அன்றாடம் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்பதால் இந்தப் பகுதியை பதிவிட்டேன்.

மதுரையம்பதி said...

வாங்க ஜெயஸ்ரீ மா....."குரு கிருபா விலாஸம்" என்பது புத்தகத்தின் பெயர். கிரி டிரேடர்ஸ்ல கிடைக்குமான்னு தெரியல்லை....ஆனால் சிருங்கேரி மடத்து பிராஞ்ச்களில் இருக்கும். விசாரித்துப் பாருங்கள்.

Anonymous said...

Hi Sir
very good post thanks for the same. ive read both gurus have immense respect to each other. ive also read that ஸ்ரீ சந்திரசேகர பாரதி சுவாமி was always in dhyanam and was very contended to realisee ஸ்ரீ பரமாச்சார்யாள் doing punya digvijayam across the length and breadth of the country propagating sri sankara bhagavadpadal's doctrines. i read that he was always believing that ஸ்ரீ பரமாச்சார்யாள் was also acting on His behalf for protecing our sanatana dharma.
what a wonder for me!!!!when i typed maduraiyampathi blog in the browser, i was thinking of the image of our mahaperiyavaa and while doing so i also get the fortune to be blessed with the darisanam of "ஸ்ரீ சந்திர சேகர பாரதீ ஸ்வாமிகள்". also i can relate this mahaan's advice to one of the upanyasams of mahaperiyavaa wher HE says "parobagaramthaala unnoda aatmakku tavira yaarukkum upagaraam illa. mattavalukku advice panradukku munaadi nee epdi irukkannu yosicchu paru. appa teriyum nambakitta nalla gunaththoda ketta gunam malaiya kuvinjirukku". one incident i heard from my paati is this. my paati's dayaadhi is Sri Rama Sastrigal from Polagam who taught some saastiram to Mahaperiyavaal. Sri Rama Sastrigal had immense bhakti and affiliation to Sri Kamakoti Matam. When there were strains and legal wars between Shringeri and Kamakoti Matam, there were analysis from both the sides establishing authenticity of their respective matams. Sri Rama Sastrigal did extensive research to refute the allegations of an article from one of the Shringeri devotees on authenticity of Sri Kamakoti Matam. It seems that for every point Sri Rama Sastrigal had come out with fitting answer that has proofs through historical evidence. Sri Rama Sastrigal went to Maha Periyavaa to show this and get his blessings before publishing the article. Our Mahaperiyavaa had lot of respect to Sri Rama Sastrigal and didnt want to hurt him. So this paramporul told Sri Rama Sastrigal, "indha prativaadam romba nalla ezhudirkel. romba santhosham. idha naane vechundudatta?" Sri Rama Sastrigal understood the jagadguru's desires and was beaming with pride to have got blessed by such a Jagadguru. Jaya Jaya Sankara Hara Hara Sankara

மதுரையம்பதி said...

வாங்க Dayaardhara, முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. உங்க புரோபெயில் பெயரை எப்படி உச்சரிக்கவேண்டும் என்று தெரியவில்லை....ஆகவே அப்படியே ஆங்கிலத்தில் டைப் செய்திட்டேன். :)

Anonymous said...

Mowli Sir, ennoda per Maheshwaran Ganapati. neenga mahesh nne koopadalam:-) dinamum ungaloda blog appuram diva siroda blog paartuttu thaan office vela ;-)

Anonymous said...

Mowli sir, also forgot to mention the name dayaardhra. daya + ardhra - mahaperiyavaa says this is ambal's gunam of always showering dayai on Her kids, refering to the same while educating us on Sri Appaiya Deekshidar's song "Mowlow Ganga Shashankow...." on Thillaikoothandavan. Thanks, Mahesh (dayaardhra.wordpress.com)

Kavinaya said...

இப்போதான் தக்குடு வலையிலும் ஸ்ரீ சந்திரசேகர பாரதி சுவாமிகளைப் பற்றி வாசிச்சேன். (உங்க பதிவு முன்னாடியே வந்துடுச்சு, ஆனா இப்பதான் வாசிக்க முடிஞ்சது. ஸாரி மௌலி!) நல்ல கருத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

தக்குடு said...

ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா! யாரோட கைல அந்த புக்கை குடுத்தா சத்விஷயம் விரும்பக்கூடியவா எல்லாருக்கும் போய் சேரும்னு புக்கை உங்க கிட்ட குடுத்தவருக்கு தெரிஞ்சுருக்கு, அந்த நம்பிக்கை வீண்போகலை! :))

//'கேட்காமல் இருக்கும்போது யாருக்கும் சொல்லாதே' என்று சொல்லப்பட்டிருக்கிறது. கேட்கிற விதமும் வெறும் குதுகலத்தினால் இல்லாமல் அத்யாத்மப் பசியாக இருந்தால் மட்டுமே சொல்லப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நன்கு நமஸ்கரித்து சேவை செய்து, திரும்பத் திரும்ப கேட்டு அதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்தால் மட்டுமே உபதேசம் செய்யப்பட வேண்டும் என்று கீதையில் கூறப்பட்டுள்ளது// சத்தியமான வார்த்தைகள். வெறும் குதுகலத்துக்கும் பெருமைக்காகவும் செய்யப்படும் விசாரம் ஆத்மவிசாரத்துக்கு ஒரு நாளும் கூட்டிண்டு போகாது!

தக்குடு said...

கவினயாக்கா, சந்திரசேகர பாரதி ஸ்வாமிகளோட பேரையும் ஸ்லோகத்தையும் போட்டாலும் என்னையும் அறியாம அவரோட குருனாதரான நரசிம்மபாரதி ஸ்வாமிகள் படத்தை போட்டுட்டேன். ஆக இப்போ படம் குருவோடது ஸ்லோகம் அவரோட சிஷ்யரோடது :)

Kavinaya said...

//கவினயாக்கா, சந்திரசேகர பாரதி ஸ்வாமிகளோட பேரையும் ஸ்லோகத்தையும் போட்டாலும் என்னையும் அறியாம அவரோட குருனாதரான நரசிம்மபாரதி ஸ்வாமிகள் படத்தை போட்டுட்டேன். ஆக இப்போ படம் குருவோடது ஸ்லோகம் அவரோட சிஷ்யரோடது :)//

பின்னூட்டங்களிலிருந்து புரிஞ்சது, தக்குடு. அதனால என்ன, நீங்க 'குரு க்ருபா' வேணும்னு கேட்டதால, க்ருபை பண்ண ஸ்வாமிகளின் குருவே வந்துட்டார் போலருக்கு :)

ஸ்வாமிகளையும், குரு ஸ்வாமிகளையும் வணங்கிக்கிறேன்.