Monday, August 1, 2011

ஸ்ரீவத்ஸம் -1 [ப்ருகு / பார்கவர்]


கோத்ரம் ப்ரவரம் ஓர் அறிமுகம் என்னும் பதிவின் தொடர்ச்சியாக இந்த இடுகையில் ஸ்ரீவத்ஸ கோத்ரத்தின் மூல ரிஷிகள் பற்றி ஒவ்வொருவராகப் பார்க்கலாம். முதலில் பார்கவர் எனப்படும் ப்ருகு.

'மஹரிஷீணாம் ப்ருகுரஹம்' [மஹரிஷிகளில் நான் ப்ருகுவாக இருக்கிறேன்] என்று பகவான் ஸ்ரீக்ருஷ்ணரால் பகவத் கீதையில் சொல்லப்பட்ட ப்ருகு [பார்கவர்] மஹரிஷிகள் ஸ்ரீவத்ஸ கோத்ரத்து ரிஷிகளில் முதலானவர்.இவரது பிறப்பு பற்றி வேதத்தில் இருவிதமாகச் சொல்லப்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது. அவை:

1. இவர் பிரபஞ்ச ஸ்ருஷ்டியின் போது பிரம்மாவின் தோலில் இருந்து வந்தவர்
2. ஹோமத்தில் அக்னி ஜ்வாலையில் இருந்து தோன்றியவர். [ஹோமத்தின் போது ஜ்வாலை தணிந்த பின்னர் இருக்கும் நெருப்புத் தணல் அங்கீரஸ மஹரிஷி; தணல் சாந்தமான போது அத்ரி மஹரிஷி]

அக்னியிலிருந்து பிறந்ததால் இவர் அக்னிக்குச் சகோதரன் என்றும் கூறப்பட்டிருக்கிறார். வேத காலத்தில் அக்னி நீரினுள் ஒளிந்திருந்த்தாகவும், மஹரிஷி ப்ருகு அக்னியை நீரின் வெளியே கொண்டுவந்ததாகவும் சொல்லியிருக்கிதாகத் தெரிகிறது.

ப்ருகுவிற்கு பல மனைவிகள், அவற்றில் ஒருவரான க்யாதி என்னும் ரிஷி பத்னிக்கு மகளாகப் பிறந்த காரணத்தால் மஹாலக்ஷ்மிக்கு 'பார்கவி' அதாவது பார்கவரின் புத்ரி என்ற பெயர் என்று சொல்லுகிறார்கள். ஸ்ரீய: பதி என்று மஹாவிஷ்ணுவைக் குறிப்பிடுவது இந்த பார்கவியானவள் மார்பினில் இருப்பதாலேயே. ப்ருகுவின் மகளாகப் பிறந்து பரந்தாமனை மணாளனாக அடைந்த்த காரணத்தால் அந்த லோக நாயகனுக்கே மாமனாராகிறார் ப்ருகு.

மஹரிஷி ப்ருகுவின் இன்னொரு மனையாள் பெயர் 'புலோமா' என்று கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஒரு சமயம் இவளை கவர்வதற்க்காக ஒரு ராக்ஷஸன் முயல்கிறான். இதனை அறிந்த மஹரிஷி அக்னியை தனது மனயாளான புலோமாவுக்குக் காவல் வைத்துவிட்டு நதிக்கரையோரம் அனுஷ்டானத்திற்குச் செல்லுகிறார். அச்சமயத்தில் ராக்ஷஸன் புலோமையை கவர, அக்னி தடுக்கிறான். அந்த ராக்ஷஸனோ, தானே புலோமையின் கணவனாக இருந்திருக்க வேண்டும் என்றும், சிறுவயதில் புலோமையின் பெற்றோர் ராக்ஷஸனை காட்டியே வளர்த்தனர் என்றும், தனது மனையாளாக வேண்டிய புலோமையை ப்ருகு கவர்ந்திருக்கிறார் என்று கூறி அக்னியிடத்திருந்து புலோத்தமையை கவர்ந்து செல்கிறான். இவ்வாறு கவர்ந்து செல்கையில் பத்து மாத கர்பிணியான புலோத்தமை பரசவமாகி பிரசவத்தில் தேஜஸ் மிகுந்த குழந்தை பிறக்கிறது. அந்த குழ்ந்தையின் தேஜஸே அந்த அசுரனை எரித்து விடுகிறது. அனுஷ்ட்டானம் முடிந்து வந்த மஹரிஷி நடந்ததை அறிந்து அக்னியின் மேல் கோபம் கொள்ளூகிறார். தான் இட்ட பணியைச் சரிவரச் செய்யாத காரணத்தால் அக்னியை ஸர்வ பக்ஷகனாகச் சபித்துவிட்டார். இந்த சாபத்தின் காரணமாகவே அக்னி எல்லாவற்றையும் எரிக்க முற்படுகிறதாகச் சொல்லுகிறார்கள்.


ப்ருகு என்பதற்கும் காயத்ரி மந்த்ரத்தில் வரும் "பர்க:" என்பதற்கும் ஒப்புமை உண்டு. சூர்யன் தனது தேஜஸால் ப்ரகாசத்தை தருபவன், ப்ருகு ப்ரம்ம தேஜஸால் ப்ரகாசிப்பவர். இவரால் பல நூல்கள் எழுதப்பட்டிருப்பதாகவும், ஆயுர் வேதத்திலும் இவர் சிறந்தவர் என்று கூறப்படுகிறது. பொருட்களை நீரால் சுத்தி செய்கிறோம். அந்த நீரைச் சுத்தி செய்வது மந்திரத்தால் சுத்தி செய்கிறோம். இவ்வாறு நீரை சுத்தி செய்யும் மந்த்ர த்ருஷ்ட்டாக்களில் ப்ருகுவும் ஒருவர். ஸ்ரீவத்ஸத்தைப் போலவே, இன்னும் 6 கோத்ரக்காரர்களுக்கு இவர் ரிஷி, ஆக இந்த 7 கோத்ரக்காரர்களுக்குமாக 'பார்க்கவகணத்தினர்' என்று ஒரு பெயர் உண்டு. அடுத்த பதிவில் நாம் ச்யவனரைப் பார்க்கலாம்.

14 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மெளலி அண்ணா! Happy Bday :)

தி. ரா. ச.(T.R.C.) said...

நல்ல விஷயங்களை எழுதுபவர்கள் குறைவாக இருக்கும் நாளில் அப்படியே எழுதினாலும் அதைப்படிப் பவர்களும் குறைவாக இருக்கும் நாளில் இது போன்ற நல்விஷயங்களை விடாமல் எழுதும் சந்திரமௌளிக்கு இன்று பிறந்தநாள். அவர் நீடூழி காலம் நோய் நொடியில்லாமல் குடும்பத்தினருடன் குறையொன்றுமில்லாமல் வாழந்து இது போன்றே எழுதும்வண்ணம் ராஜமதங்கியான மீனாக்ஷி அம்மனை இறஞ்சி வணங்குகிறேன்

geethasmbsvm6 said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

ஸ்ரீவத்ஸ கோத்ரம் என்னும் பெயர் ஏன் வந்தது என்றும் சொல்லி இருக்கலாமோ?

geethasmbsvm6 said...

தொடர

குமரன் (Kumaran) said...

வேங்கடேச மஹாத்மியத்தில் மும்மூர்த்திகளில் யார் சத்வ ரூபி என்று சோதிப்பதற்காகச் செல்பவர் இந்த பிருகு முனிவர் தானே?!

பிருகுவின் வம்சத்தார் (மகன், பேரன், பின் தோன்றல்கள்) பார்க்கவர் எனப்படுவர் என்று நினைக்கிறேன். அதனால் பிருகு, பார்க்கவர் என்ற சொற்கள் ஒரே ரிஷியைக் குறிக்காமல் பார்க்கவர் என்பவர்கள் பிருகுவின் வம்சத்தில் வந்தவர்கள், பிருகுவின் சீடக்குலத்தினர் என்று அனைவருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

பிறந்த நாள் வாழ்த்துகள் மௌலி.

திருவாடிப்பூரத்து செகத்துதித்தான் வாழியே! :-)

மதுரையம்பதி said...

வாங்க குமரன்....எனக்குப் பூர நக்ஷத்திரம் இல்லை...அப்படியே இருந்தாலும், அந்த வரிகள் அவளைத் தவிர வேறு யாருக்கும் சொல்லப்படக் கூடாது என்றே நினைக்கிறேன்....

மெளலி (மதுரையம்பதி) said...

நன்றிகள் கே.ஆர்.எஸ்

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கும் ஆசிகளுக்கும் நன்றி திராச சார்.....ஏதோ எனக்குத் தெரிந்ததை, சொல்லித் தந்ததை எழுதறேன்....

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கீதாம்மா. நீங்களே அந்த காரணத்தைச் சொல்லிடுங்களேன்....

நான் இந்தத் தொடரில் ஸ்ரீ வத்ஸத்தின் சாரம் என்பதை விட ரிஷிகளின் சிறப்பு என்பதாக எழுதுவதால் காரணம் சொல்லலை.

மெளலி (மதுரையம்பதி) said...

வேங்கடேச மஹாத்மீயம் நான் படித்ததில்லையே குமரன்.

கவிநயா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மெளலி!

Kailashi said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மெளலி

Anonymous said...

There is a slight difference in the narration as told by Mahabharata..

It was Agni who confirmed the identity of Puloma to the Rakshasha. It was for this reason that Brighu cursed Agni.

Source:
http://vyasamahabharata.com/2010/06/07/brighus-curse-on-agni/

Mahabharata Adi Parva, Chapters 5 to 7