அபிவாதனம் செய்யும் சமயத்தில் தாத்தா-கொள்ளுத்தாதா எல்லாம் வருவதில்லை. வேதகாலத்து ரிஷிகள், அதுவும் குறிப்பிட்ட கோத்திரத்தின் மூல புருஷர்கள் எனப்படும் ரிஷிகளது பெயர் மட்டுமே சொல்லப்படுகிறது. அவரவர் குல முதல்வர்கள் என்னும்படியான ரிஷிகளைச் சொல்லி அவர்களது வழியில், இந்த கோத்திரம்-ஸூத்ரம் சார்ந்த நான் வணங்குகிறேன் அப்படின்னு சொல்லுகிறோம்.
அபிவாதனம் செய்வதன் மூலம் நாம் நமஸ்காரம் செய்பவருக்கு நம்மைப் பற்றிய ஒருவித வைதீக அறிமுகம் செய்துகொள்கிறோம். இதைச் சொன்னால் இன்றைய தலைமுறை எதற்கு சந்தியாவந்தனத்திலும், நமது கோத்ரம்-ஸூத்ரம் தெரிந்தவர்களுக்கும் இதைச் சொல்லவேண்டும் என்று இன்றைய சிறுவர்கள் கேள்வி கேட்பார்கள்.
சாதாரணமாக கோவிலில் ஒரு அர்ச்சனை செய்தாலேயே அதில் நமது கோத்ரம், பெயர் சொல்லிச் செய்கிறோம். அதாவது கோத்ரம்+பெயர் ஒரு யூனிக் ஐடண்டிட்டி [ஓட்டர் ஐடி, பான் கார்ட் போல] தந்து அதனைச் சொல்லுவதன் மூலமாக கர்மாவினது/அர்ச்சனையின் பலன் நம்மை அடையச் செய்கிறது. இது போன்றே இந்த கோத்ரம்+ஸூத்ரத்தை சார்ந்த நான் உன்னை வணங்குகிறேன் என்று சந்த்யா தேவதை-சூர்யனை வணங்குகிறோம்.
நம்பிக்கை என்பது இருக்குமானால் அது மந்திரத்தின் மீது மட்டுமல்லாது, முழுச் சடங்கின் மீதும் இருக்க வேண்டும். மந்திரத்தை நம்புவோமானால், அதைத் தந்த நமது ரிஷிகள் பெயரைச் சொல்ல யோசனை ஏன் என்று கேட்க வேண்டும். மற்ற செயல்களின்றி மூல மந்திரத்தை மட்டும் நான் ஜபம் செய்கிறேன் என்பது தவறு என்று குழந்தைகளுக்குப் புரியச் செய்ய வேண்டும். அபிவாதனத்தில் ரிஷிகளது பெயரைச் சொல்லுவதன் மூலமாக குல முதல்வர்களான ரிஷிகளை அவ்வப்போது நினைவில் கொண்டு வந்து, அவர்களது அளப்பரிய செயல்களை நமது மனதில் கொண்டு வருவதன் மூலம் நாமும் நமது செயல்களை நல்வழிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் ஒரு காரணம். இவ்வாறு மூல ரிஷிகளது வரலாற்றை நாம் முதலில் தெரிந்து கொண்டு உபநயன காலத்தில் சிறுவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும்.
"ரிஷி" என்ற சொல்லுக்கு 'பார்ப்பவர்' என்ற பொருளுண்டு. சாதாரணமாக நம்மால் பார்க்க முடியாதவற்றையும் தமது தபோ-பலத்தால் ப்ரத்யக்ஷமாகவும், தமது அனுபவத்தாலும் அறிந்து அதனடிப்படையில் தமது கர்மாக்களை வகுத்துக்கொண்டு அதனடிப்படையிலேயே வாழ்ந்தவர்கள். அவர்களது வழி வருபவனான நான் உங்களை நமஸ்கரிக்கிறேன் என்று சொல்லுவதே அபிவாதனம்.
அபிவாதனம் செய்கையில் சொல்லும் மந்திரத்தில் சொல்லுவது நமது கோத்ரம், ப்ரவர ரிஷிகள், நமது ஸூத்ரம் மற்றும் நமது சர்மா நாமா ஆகியவை மட்டுமே. இவற்றில் கோத்ரம் என்பது என்ன?, ப்ரவரம் என்பது என்ன என்று பார்க்கலாம்.
ஆபஸ்தம்பர், போதாயனர் போன்ற மஹரிஷிகள், கோத்ரம் என்ற பதத்திற்கு வம்சம், சந்ததி, குலம், பரம்பரை ஆகியவற்றையே பொருளாகச் சொல்லியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. கோடிக்கணக்கான கோத்ரங்கள் இருப்பதாக ஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறதாம். அவற்றில் தற்போது இருப்பவை என்பதாக 49ஐ போதாயனர் வரிசைப்படுத்தியிருக்கிறார்.
'அபிவாதயே' என்று ஆரம்பித்தவுடன் அவரவர் கோத்ரத்திற்கான மூல ரிஷிகளின் பெயரைச் சொல்லுகிறோம், அவர்கள் அந்த கோத்ரத்தின் ரிஷிகள். யாரெல்லாம் கோத்ர ரிஷிகள் என்றால், மொத்தம் பத்து பெயர்களை கோத்ர ரிஷிகளாக ஸ்மிருதியில் சொல்லியிருக்கிறார்கள். சில ஸ்மிருதிகளில் எட்டு (8) என்றும், சிலவற்றில் பத்து (10) என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாக தெரிகிறது.
ப்ரும்மாவின் புத்ரகளான,ப்ருகு, அங்கிரஸ், மரீசி, அத்ரி ஆகிய நால்வர் மற்றும் இவர்களில்,ப்ருகுவின் புத்ரரான ஜமதக்னி, அங்கிரஸரின் புத்ரகளான கெளதமர், பரத்வாஜர், மரீசியின் புத்ரரான கஸ்யபர், வஸிஷ்டர், அகஸ்தியர் மற்றும் அத்ரியின் புத்ரரான விஸ்வாமித்ரரும் கோத்ர ரிஷிகளில் வரும் மூலவர்கள்.
கோத்ர ரிஷிகள் 8 என்று சொல்லும் ஸ்மிருதிகள், மேற்சொன்ன புத்ரர்களான 7 நபர்களையும், அத்ரியையும் சேர்த்து 8 ரிஷிகளாக குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லுகிறார்கள். ப்ருகு மற்றும் அங்கிரஸ் ஆகிய இருவர்கள் பற்றி ஸ்மிருதிகளில் அதிகம் சொல்லப்பட்டிருக்கிறதால் அவர்களையும் சேர்த்து 10 ரிஷிகள் என்பதாக சில ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆக யார் எந்த கோத்ரத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இந்த 10 ரிஷிகளில் ஒருவராவது அபிவாதனத்தில் வரும் ரிஷிகளாக இருப்பார்கள். இவ்வாறு இருப்பதால் இவர்கள் கோத்ர ரிஷிகள் என்றும் பெயர் வந்தது.
திருமணம் மற்றும் மஹா யாக, யஞ்யாதிகள் செய்யும் சமயத்தில் ஹோதாவும், அத்வர்யுவும் அக்னியிடத்தில் ப்ரார்த்தனை செய்கையில் 'இந்த ரிஷியின் வம்சத்தைச் சார்ந்தவர் யாகம் செய்கிறார் என்று கூறி விசேஷமாகப் பிரார்த்தனை செய்கிறார்கள். இன்றும் திருமணங்களில் கன்னிகா தானத்திற்கு முன்பாக இந்த கோத்ரம், ஸூத்ரத்தைச் சார்ந்த, இந்த ரிஷிகள் வழிவந்த இன்னாருடைய பெளத்ரன்/பெளத்ரி, இன்னாருடைய புத்ரன்/புத்ரிக்கு என்று கூறுவதைக் காண்கிறோம். இவ்வாறாக அறிவித்தலே ப்ரவரம் சொல்லுதல் என்பது. ஆக, அபிவாதனம் என்பதே ப்ரவரம். அபிவாதனம் செய்கையில் ரிஷிகளது பெயரும் கர்மா செய்பவர் பெயரும் வரும், ஆனால் ப்ரவரத்தில் கர்மா செய்பவரது பாட்டனார் , முப்பாட்டனார் (பிதா, பிதாமஹன், நப்தா) பெயரும் வரும். அபிவாதனம் செய்பவரே சொல்லுவது; ப்ரவரம் என்பது செய்து வைக்கும் ஆச்சார்யார் சொல்லுவது.
இவ்வாறு சொல்லப்படும் ப்ரவரத்தில் வரும் ரிஷிகள் அவரவர் கோத்ர ரிஷிகளே!, அக்னியிடத்து ப்ரார்த்தனை செய்கையில், மூல ரிஷிகளான மந்த்ர த்ருஷ்டாகளது வம்சத்தவர் என்று கூறுவதால் அக்னி மகிழ்வடைவதாக தர்ம சாஸ்த்ரம் சொல்லுகிறது. ஏன் இப்படி கோத்ரங்களை/ப்ரவரங்களைச் சொல்லுகிறோம் என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சில;
1. ஸகோத்ரத்தில் பெண் எடுக்க/கொடுக்கக் கூடாது - திருமணங்கள் இன்று நடப்பது போல முன்பில்லை. சிறு வயதில் உபநயனம் செய்வித்து பால்ய விவாஹம் செய்வது அக்காலத்தைய வழக்கம். அதனால் ஒரு பிரம்மச்சாரி அபிவாதனம் செய்கையிலேயே அவனது கோத்ரம் தெரிந்து கொண்டு பெரியவர்கள் அவனுக்கு தகுந்த வரனை நிச்சயிக்க உதவியிருக்கிறது. இது தவிர திருமணங்களில் ஸபையில் இருப்பவர்கள் வது-வரன் ஆகியோரது கோத்ரங்களை அறியச் செய்ய ப்ரவரம் உதவுகிறது.
2. குறிப்பிட்ட சில கோத்ரத்தைச் சார்ந்தவர்களுக்கு அவர்களது கர்மாகளில் சிற்சில வேறுபாடுகள் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறான வேறுபாடுகளை அறிந்து செய்து கொள்ள, செய்து வைக்க கோத்ரம்-ப்ரவரம் உதவுகிறது
3. வயதில் பெரியவர்கள், அத்யயனம் செய்தவர்கள் முன்னிருக்கும் போது சிறியவர்களது ஜீவன் நிலையில்லாது இருக்குமாம், அவ்வாறு இருப்பதைத் தவிர்க்கவே பெரியவர்களைக் கண்டதும் அவர்களுக்கு நமஸ்காரம்.
4. பெரியவர்களுக்கு அபிவாதனம் செய்வதால் ஒருவனுக்கு ஆயுசும், ஞாபக சக்தியும், கீர்த்தியும், நல்ல மனோபலமும் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது.
5. தனக்கு முந்தைய 3 தலைமுறைகள் பற்றித் தெரியாதவனுக்கு பெண் கொடுப்பது, ஸ்ராத்தத்தில் வரிப்பது போன்றவை கூடாது, ஆகவே அபிவாதனம்-ப்ரவரம் போன்றவை முக்கியம்.
எங்கே, யாருக்கு அபிவாதனம் செய்யக்கூடாது என்பதும் ஸ்மிருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அவை;
1. தீர்த்த பாத்திரம், புஷ்பம், ஜபம், ஹோமம் போன்றவை செய்யும் போதும் அபிவாதனம் செய்யக்கூடாது. ப்ரேத்/பித்ரு கர்மாகள் செய்கையில் பூணூலை வலம் மாற்றிக் கொண்டே அபிவாதனம் செய்ய வேண்டும்
2. ப்ரத்யபிவாதனம் செய்யத் தெரியாதவர்களுக்கு (ஸ்மிருதியில் சொல்லியபடி ஆசிர்வாதம் செய்யத் தெரியாதவர்களுக்கு) அபிவாதனம் தேவையில்லை, வெறும் நமஸ்காரம் மட்டும்.
3. ஸன்யாசிகளுக்கு அபிவாதனம் கூடாது.
4. தம்பதிகளில் பெண்க்ளுக்கு மட்டும் நமஸ்காரம் செய்கையில் அபிவாதனம் கிடையாது.
5. ஆசாரமில்லாதவனுக்கு அபிவாதனம் கூடாது, ஆச்சாரமில்லாத காலத்தில் அபிவாதனம் இல்லாது நமஸ்கரிக்கலாம்.
30 comments:
அண்ணா
சௌக்கியமா? ரொம்ப நாள் ஆச்சு! எல்லாம் நல்லபடியா இருக்குதானே...
ஹையா! மதுரையம்பதி திரும்பி வந்தாச்சு.
அப்புறம் இ.கொ வும்தான்! இ.கொ, எங்கே போனீங்க இவ்வளோ நாள்?
மீள்-நல்வரவு-ண்ணா!:)
போன ஆடி மாசம் கடைசிப் பதிவு போட்டதா?:)
பதிவு நல்லா இருக்கு! பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது!
எந்த அளவுக்கு UniqueID என்று தெரியவில்லை!
அதே கோத்திரம்-பெயரில் நிறைய பேர் இருப்பார்களே! பாரத்வாஜ கோத்ரம்-ராஜேஷ்-ன்னு கூப்பிட்டா பல பேர் எழும் வாய்ப்புண்டு அல்லவா?
ஆனால், நீங்கள் அடுத்து சொன்ன காரணம் மிகவும் கச்சிதம்!
//அபிவாதனத்தில் ரிஷிகளது பெயரைச் சொல்லுவதன் மூலமாக குல முதல்வர்களான ரிஷிகளை அவ்வப்போது நினைவில் கொண்டு வந்து, அவர்களது அளப்பரிய செயல்களை நமது மனதில் அவ்வப்போது கொண்டு//
இதுவே அதன் ஆத்மார்த்தமான தாத்பர்யம் என்றே தோன்றுகிறது! நீத்தார் பெருமை நினைக்கவும் பெரிதே!
வாழ்த்துகள். எங்க மழலைகளுக்குக்காகக் கொஞ்சம் திருடிட்டுப் போறேன். உங்க பெயரைப் போட்டுத் தான் அறிவிப்பேன். நன்றி. வணக்கம்.
வாங்க இ.கொ.
நல்ல செளக்கியம்...இப்பத்தான் கொஞ்சம் மூச்சு விட முடிகிறது....சாரி, பதிவிட முடிகிறது. :)
ஆமாம், நீங்களும் ரொம்ப நாளா காணல்லை போல?, திவாண்ணா சொல்றாரே? :)
திவாண்ணா, அங்கு பார்த்தாலும், இங்கும் வந்தமைக்கு நன்றிகள் பல :)
வாஙக கே.ஆர்.எஸ், இதுதான் ஆடிக்கு ஒருமுறை, அம்மாவாசைக்கு ஒருமுறைன்னு சொல்லறது :)
வருகைக்கு நன்றிகள் பல.
வாங்க கீதாம்மா.....மழலைகளுக்கு இவை தாராளமாக போகட்டும். 1-2 குழந்தைகள் தெரிந்து கொண்டாலும் அதுவரையில் மிக்க நலமே!
அபிவாதயே சொல்லும்பொழுது நான் ஸாத்ய, ஸாங்க்ருத்ய, கௌரவீத த்ரயாரிஷீய என
மூன்று ரிஷிகளின் பெயர் சொல்லுகிறேன். இந்த மூன்று பெயர்களில் நடுவில் வரும்
ஸாங்க்ருத்ய என்னும் சொல், எனது கோத்ரமான ஸங்க்ருதி கோத்ரததைச் சேர்ந்தவன் நான்
எனச்சொல்லுகிறது.
ஒரே கோத்ரத்தைச் சார்ந்தவர்களுக்கு பெண் கொடுப்பதும் எடுப்பதும் இல்லை. இதற்கு காரணம்
நியர் ரிலேடிவிஸ் என்னும் சொற்தொடரில், பிறக்க இருக்கும் சந்ததியர்கள் எந்த ஒரு குறைபாடும்
அற்று இருக்கவேண்டும் என்ற காரணத்தினால், தந்தை வழி தொடர்புடையவர் அனைவரையுமே
உள்ளடக்குவது தான்.
இருப்பினும், இந்த விதியை சாமர்த்தியமாக ( ! ) தளர்த்துவதையும் கண்டிருக்கிறேன். ஒரே கோத்திரமாக
இருக்கும் பட்சத்தில், பெண்ணையோ அல்லது பையனையோ இன்னொரு கோத்ரத்தைச் சார்ந்தவர்
ஸ்வீகாரம் எடுத்துக்கொண்டு, பின் வேறு கோத்ரமாக்கிக்கொண்டு, திருமணம் செய்விக்கின்றனர். ஆனால்,
காதல் திருமணங்கள் மலிந்துவிட்ட தற்காலத்தில், கோத்ரத்தை விட காத்ரம் தான் முன்னிலை வகிக்கிறது.
சுப்பு ரத்தினம்.
வாங்க சூரி சார். வணக்கம் பல.
//ஒரே கோத்ரத்தைச் சார்ந்தவர்களுக்கு பெண் கொடுப்பதும் எடுப்பதும் இல்லை. இதற்கு காரணம்
நியர் ரிலேடிவிஸ் என்னும் சொற்தொடரில், பிறக்க இருக்கும் சந்ததியர்கள் எந்த ஒரு குறைபாடும்
அற்று இருக்கவேண்டும் என்ற காரணத்தினால்,//
மிகச் சரியான பாயிண்ட். நான் எழுத மறந்த பாயிண்டும் கூட. நன்றிகள்.
//ஸாத்ய, ஸாங்க்ருத்ய, கௌரவீத த்ரயாரிஷீய என
மூன்று ரிஷிகளின் பெயர் சொல்லுகிறேன். இந்த மூன்று பெயர்களில் நடுவில் வரும்
ஸாங்க்ருத்ய என்னும் சொல், எனது கோத்ரமான ஸங்க்ருதி கோத்ரததைச் சேர்ந்தவன்//
ஸாங்க்ருத்யர் என்று மஹரிஷியும் இருந்திருக்கிறார். எங்கு இவரைப் பற்றிக் குறிப்பிருக்கிறது என்று விசாரித்துச் சொல்லுகிறேன் சார்.
சாதாரணமாக ரிஷிகளின் பெயரே கோத்திரத்தின் பெயராக இருப்பதை பல எடுத்துக்காட்டுக்கள் சொல்லுகின்றன. உ.ம். கெளண்டின்யர்-கெள்ண்டின்ய கோத்ரம், பாரத்வாஜர் - பாரத்வாஜ கோத்ரம், வசிஷ்ட்டர் - வசிஷ்ட்ட கோத்ரம், கெளசிகர் - கெளசிக கோத்ரம், விஸ்வாமித்ர கோத்ரம் போன்றவை...........
//ஒரே கோத்திரமாக
இருக்கும் பட்சத்தில், பெண்ணையோ அல்லது பையனையோ இன்னொரு கோத்ரத்தைச் சார்ந்தவர்
ஸ்வீகாரம் எடுத்துக்கொண்டு, பின் வேறு கோத்ரமாக்கிக்கொண்டு, திருமணம் செய்விக்கின்றனர். //
தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டு, தர்ம சாஸ்திரத்தையும் மீறி, அவ்வாறு மீறியதை சப்பைக்கட்டும் கட்டுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். 'காலம் கலிகாலம் ஆகிப் போச்சுடா' என்று பாடவேண்டியது தான்.
நல்ல முறையில் வைதீகமாகச் செய்த காதல் கல்யாணத்தில் ப்ரவரத்தின் போது இரு வீட்டாரும் ஒரே கோத்ரம் என்பதை உணந்த திருமணத்தையும் பார்த்திருக்கிறேன்...:(
ஒரு ரிஷியின் வம்சத்தில் வருகிறார் எனறால் அவரின் மாணாக்கர், அவரிடம் வேதம் படித்தவர் என்று தானே பொருள். ஒரு சில ரிஷிகளின் பிள்ளைகள் தந்து தந்தையிடமே படித்திருக்கலாம். ஆகையினால் தற்சமயம் நாம் இந்த ரிஷிகளின் வம்சத்தினன் என்ற சொல் இந்த ரிஷிகளிடம் வேதம் கறறவர்கள் வம்சத்தில் வருகிறேன் என்றே பொருள் கொள்ள வேண்டும். அந்த ரிஷிகளுடன் இரத்த சம்பந்தம் இருந்திக்க முடியாது
சுந்தர ராஜன்
சுந்தர் வேறு இடத்துக்கு அனுப்பி படிக்கச்செய்வது பின் காலத்தில் வந்ததே. மேல் படிப்புக்கு வேண்டுமானால் வேறிடம் அனுப்புவார்கள். வழக்கம் தந்தை மகனுக்கு சொல்லித்தருவதே.
எந்த ரிஷியின் ஆஸ்ரமத்தில் மாடு மேய்த்து (கோ ரக்ஷனை) வேதம் கற்றார்களோ அவர் கோத்ர ரிஷி. ப்ரவர ரிஷிகள் ரத்த சம்பந்தம் உள்ளவர்கள்.
இதெல்லாம் எழுதர்துக்கு எங்களுக்கு மதுரையம்பதி அண்ணாவை விட்டா வேற யாரு இருக்கா!! :))
அடியேனுக்கு ஒரு சந்தேகம் அண்ணா, கன்னிகா தானத்துக்கு முன்னாடியே பொண்ணோட கோத்ரத்தை மாத்தி புள்ளையோட பக்கம் சேர்த்தாகர்து, அதுக்கு அப்புறம் ஒரே கோத்ரத்ல உள்ள பொண்ணை கல்யாணம் பண்ணிக்கர மாதிரி ஆகாதோ?? ரொம்ப நாளா இந்த சந்தேகம் இருக்கு, திவா அண்ணா சொன்னாலும் அடியேனுக்கு சந்தோஷம் தான்!
கண்ணபிரான் ஸார் ( கே.ஆர்.எஸ்) சொல்கிறார்:
//எந்த அளவுக்கு UniqueID என்று தெரியவில்லை!
அதே கோத்திரம்-பெயரில் நிறைய பேர் இருப்பார்களே! பாரத்வாஜ கோத்ரம்-ராஜேஷ்-ன்னு கூப்பிட்டா பல பேர் எழும் வாய்ப்புண்டு அல்லவா?//
வாஸ்தவம் தான். அந்தக் காலத்துலெ இருந்து பாட்டனார் பேரை பேரனுக்கும் பாட்டி பெயரை பேத்திக்கும் வைத்து மகிழ்வது நம்ப ஸம்ப்ரதாயத்துலே வழக்கம்தான். அதுவும் ஒரு குடும்பத்துலேயே சித்தப்பா பையன், பெரியப்பா பையனுக்கு ஒரே பெயர் தான். அப்படி இருக்கும்பொழுது சங்க்ருதி கோத்ராத்யாய சுப்பு ரத்ன ஸர்மா நாமாஹம் என்று சொன்னா இவன் எந்த ஆத்து சுப்பு ரத்னம் அப்படின்னு பகவானுக்கு ஒரு சின்ன ஸந்தேஹம் வந்துடுத்துன்னா என்ன பண்ரது ! அப்ப இது யுனிக் ஐ டி இல்லைன்னு தெரியரது. என்ன செய்யரது ? தக்குடு அப்படின்னு புத்திசாலித்தனமா ஒரு பெயர் வைச்சுக்கலாம். ஃபர்ஸ்டு ஃபர்ஸ்டு வச்சுக்கறதுனாலே ஸ்வாமி சீக்கிரம் புரிஞ்சுப்பார் !!
சுப்பு ரத்தினம்.
நான் பாருங்கோ . எதுக்கும் இருக்கட்டும் அப்படின்னு, அந்தக்காலத்துலே காலேஜ் படிக்கும்பொழுது, பரிட்சைக்கு முன்னாடி , புள்ளையாருக்கு அர்ச்சனை செய்யும்போது, கோத்ரம், சர்மா பெயர் சொல்லும்பொழுது, 103, ஆண்டார் தெரு, திருச்சி 2 அப்படின்னும் சொல்லிண்ட்ருவேன். மனசுக்கு ஒரு த்ருப்தி, புள்ளையார் சரியார் என்னுடைய யுனிக் ஐ டி புரிஞ்சுப்பார். !!! அதுல்லேயும் ஒரு ச்ரமம் இருக்கு. அந்த அட்ரஸ் மாத்திட்டு, இன்னொரு இடத்துக்கு போனா, கன்டினுடி விட்டுப்போயிடுமே !!
ஒன்லி இன் லைட்டர் வீன்.
சுப்பு ரத்தினம்.
அண்ணா,
இதையும் கொஞ்சம் பாருங்க.
/Swami omkar - உண்மையில் கோத்திரம் என்பது வம்சாவழி அல்ல. குலம் என்பதே வம்சாவழி.
கோத்ரம் என்றால் யாரிடம் குருகுலம் கற்ற குடும்பத்தார் என்பதை காட்டும்.
மாதா, பிதா குரு தெய்வம் என்பது போல அபிவாத மந்திரம் சொல்லும் பொழுது மூன்றாவதாக கோத்திரம் சொல்லப்படும்.
ஒரே கோத்திரம் என்றால் ஒரே குருவின் கீழே ஸ்கூலில் படிப்பது போன்றது. முன்பு ஒருவருக்கு ஒருவர் கற்ற கல்வியை பிறருக்கு பகிர்ந்து கொடுப்பார்கள். அதனால் ஒரே குருவிடம் கற்றால் புதிய கருத்துக்கள் தெரிந்துகொள்ள முடியாது. (சந்ததியினர் தெரிந்து கொள்ள முடியாது). அதனால் ஒரே கோத்திரம் தவிர்க்கப்பட்டு வந்தது.
தற்சமயம் பிரிட்டீஷ் கல்வியும் முறையற்ற கல்வியும் படித்துவிட்டு கோத்திரம் சொல்லுவது மிகவும் வேடிக்கையானது./
இங்க இருந்தது - https://plus.google.com/113539681523551495306/posts/UfwMsKw6Yr4#113539681523551495306/posts/UfwMsKw6Yr4
கோத்ரம் என்றால் யாரிடம் குருகுலம் கற்ற குடும்பத்தார் என்பதை காட்டும்.//
@திவா, இதானே மாடு மேய்ச்சது??? :)))))
கீதா அக்கா, ஆமாம். இதான் மாடு மேச்சது.
கோத்திரங்கள் அனேகம் (ஸஹஸ்ராணி) என்பது ஸ்ம்ருதி. ஆனால் ப்ரவர ரிஷிகள் லிமிடெட் என்கிறது. அதனால என் ஊகம் ப்ரவரம் என்பது ஜெனடிக். கோத்திரம் என்பது அந்த வம்சத்தில வந்தவங்க, ஆனால் குருகுலம் வேறு ரிஷியிடம் என்பது.
வேறு வழியில் ஸ்ம்ருதி வசனத்தை எக்ஸ்ப்லெய்ன் பண்ண முடியாது.
My gothram is Kapi. Abivathanam is as follows: Kapi, Kamukayena, Babruvama thrayarishaya. I am trying to find out from many a blog to lineage of this particular gothram "KAPI" (nothing to do with the monkeys. At times it is pronounced as Kabhi also.
இதுபோன்ற சாஸ்திர விவாதங்கள் இணையத்தில் குறைவாகவே உள்ளது.இந்த ப்ளாக் எனக்கு தென்பட்டது ஆச்சர்யமே.
நல்ல பல கருத்துக்கள் உள்ளன.மேலும் தொடர்ந்து எழுதுங்கள்.
அப்படியே வாதூல கோத்ரம் பற்றியும் வாதூல ரிஷி பற்றி தகவல்களை கூறமுடியுமா?
For the information of Thiru Aadhisaivar:
vaathu gothra rishis:
bhargava -- vaidhahavya --saavedhasa
subbu rathnam
very useful dhanyan aanen
ரிஷிகள் இது போன்ற விளக்கங்கள் எழுதுங்கள் நன்றி பல jaiAnand
ரிஷிகள் இது போன்ற விளக்கங்கள் எழுதுங்கள் நன்றி பல
நமஸ்காரம்.
இங்கு உள்ள பதிவு மற்றும் பின்னூட்டத்தால் சற்று குழப்பமே ஏற்படுகிறது.
காரணம் பதிவாளர் கூறியிருப்பதும் ஸ்வாமி ஓம்கார் கூறியிருப்பதும் அக்னிஹோத்ரம் தாதாசாரியார் கூறியிருப்பதும் கருத்து வேறுபாடு காணப்படுகிறதே?
மேலும் சிந்திக்கவும்
கௌசிக கோத்ரம் என்று சொன்னால் அதில் குருக்கள் என்ற பிரிவினரும் உள்ளார்கள் வைதீகர்களான பிராம்மணர்களும் உள்ளார்கள் வைஸ்யர்களும் உள்ளார்கள். கோத்ரம் என்பது குலம் வம்சாவழி சந்ததியை குறித்தால் இது சாத்தியமா?
கோத்ரம் என்பது பற்றி ஒரு தெளிவான பதிலை பெற விரும்புகிறேன்.
தயவு செய்து உதவவும்.
ஜோதிட பித்தன் அவர்கள் சொல்லும் ஐயம் பலரிடத்தும் உள்ளது.
முதலிலே ஒன்று சொல்லவேண்டும்.
ப்ரவர ரிஷிகள் பெயர்களைச் சொல்கிறோமே, அவர்கள் ப்ராம்மணர்கள் என்று நினைக்கவேண்டாம்.
வேத காலத்துலே உதித்த மக்கள் அவரவர் தொழில் கொண்டு தான் த்ன்னை நான்கு வர்ணங்களுக்கு உட்படுத்திக்கொண்டார்கள்.
சொல்லப்போனால், விஸ்வாமித்ரர் பிறந்தது. க்ஷத்ரிய குலம். யாக்யவல்க்யர் தவ்ர மற்றவர்கள் பிராம்மண குலத்தில் பிறக்கவில்லை.
பிரும்மவித் ப்ராம்மணோ இதி என்பது ஸ்ருதி. பிரும்மத்தை அறிந்தவன் பிராம்மணன். அந்த பிரும்மனை அறியும் முயற்சியில் எல்லா
வர்ணத்தவரும் அக்காலத்தே ஈடுபட்டு இருந்தனர்.
இந்த ஸ்மார்த்தன் ( சைவன் ) வைஷ்ணவன் என்பதெல்லாம் ஒரு வகையில் பார்த்தால் வேதகாலத்தில் இருந்தது அல்ல. வேதகாலத்தில்
இது போன்ற வகுப்புகள் சாதிகள் இல்லை. வர்ணங்கள் தான் சொல்லப்படுகின்றன. வர்ணங்கள் என்பது உலகில் பிறந்த ஒருவன்
தான் என்ன தொழில் செய்ய வேண்டும் என தனக்குத்தானே தன் திறனில் அடிப்படையில் நிர்ணயித்துக்கொண்டு அதற்கேற்ப தனது நடவடிக்கைகளை செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதே. ஒரே பெற்றோருக்கு பிறந்த பலரில் ஒருவர் க்ஷத்திரியனாகவும், ஒருவன் வைசியனாக அதாவது வியாபாரியாக,
மற்றொருவன் அந்தணனாக, மற்றொருவன் இதர தொழில் செய்பவனாகவும் அவரவருக்கு ஏற்ற தொழில்தனை அவரவரே ஏற்று செய்து
இருக்கிறார்கள்.
இதைத்தவிர இன்னமுமே ஒரே குடும்பங்களில் ஒருவர் சைவராகவும் இன்னொருவர் வைஷ்னவராகவும் இருக்கிறார்கள். இதெல்லாம்
அவரவர் எடுத்துக்கொண்ட நிலை. இதற்கும் பிரவர ரிஷிகளுக்கும் சம்பந்தம் இல்லை. பிரவர ரிஷிகளின் வழித்தோன்றலாகத்தான்
நாம் எல்லோருமே இருக்கிறோம். ( பலர் திடீரென பிற மதங்களையும் தழுவுகிறார்கள். அப்பொழுது அவர்கள் தங்களது மூதாதையர்களிடமிருந்து பிரிந்தா செல்கிறார்கள் ? ) ஒரு லௌகீக உதாரணம். தாத்தாக்கு பத்து ஏக்கர் நிலம் இருந்தது. அப்ப நெல் மட்டும் தான் சாகுபடி. தாத்தா காலம் ஆனப்பரம் அப்பா, சித்தப்பா,எல்லோரும் தனித்தனியே வேளான்மை செய்தார்கள். ஒருவர் நெல், இன்னொருவர் கரும்பு, இன்னொருவர் வாழை, தென்னை. நாளடைவில், நிலங்களும் பயிர்களுக்கேற்ப தன்மை மாறிப்போயின. அது போலத்தான்.
ஸ ஏகஹ . அவன் ஒருவனே. இந்த ஒரு வாக்கியத்தை ஒப்புக்கொண்டால், போதுமே.. அவன் ஒருவனிடமிருந்து தான் எல்லாமே தோன்றின. உலகத்துலே, புவியிலே ஏன் அண்டத்துலே எல்லாமே வந்தது.
அந்த விராட புருஷனை வர்ணிக்கும்பொழுது யார் யார் எதை எதை செய்கிறார்கள் என்பதை நாராயண சூக்தம் சொல்கிறது.
இன்னும் சீரியஸ்ஸா டௌட் இருந்துச்சுன்னா ஒரு நாள் சாவகாசமா பேசலாம். நோ எழுதலாம்.
சுப்பு தாத்தா.
திரு சூரி சிவா அவர்களின் கருத்துக்கு நன்றி.
தாங்கள் கூறியது போல சாவகாசமாக ஒரு கருத்து தொகுப்பை பதிவிடவும் நன்றி.
ஸ்ரீ வித்யா கோத்ரம் உள்ளவர்களுக்கு உரிய ரிஷி யார்?
மௌத்கல்ய ரிஷிகள் ஸ்வாமி
Post a Comment