காலத்தை முடிவு செய்பவள் என்பதாகவும், காலனான ம்ருத்யுவுக்கும் முடிவு ஏற்படச் செய்பவள் என்பதால் காளீ என்ற பெயர் அம்பாளுக்கு. உஜ்ஜயினீ பீடத்தில் இருக்கும் சிவனது பெயர் மஹாகாளர், அவருடைய பத்னி "மஹாகாளீ". இவள் எப்படிப்பட்டவளென்றால், ப்ரபஞ்சத்தையெல்லாம் தன்னுள் அடக்கி இருப்பவள் என்பதாக "மஹாக்ராஸா" என்று உடனேயே சொல்கிறார்கள். க்ராஸா என்றால் பிடி என்று பொருள். அதாவது ப்ரபஞ்சத்திற்கு மிகப்பெரிய பிடிப்பாக இருப்பவள். அந்தர்முகமாக இருக்கும் போது ப்ரபஞ்சம் முழுவதையும் தன்னுள் அடக்கியிருக்கும் அவளது ஆஹாரமும் மிகப் பெரியதாகத்தானே இருக்க முடியும்?. அதைச் சொல்லுவதாக "மஹாசனா". மஹாசனா என்பது இங்கே ப்ரபஞ்சத்தையே ஒரு கவளம் ஆகாரமாகக் கொள்பவள் என்ற பொருளில் சொல்லியிருக்கிறார்கள்.
இதே மஹாசனா என்னும் நாமத்திற்கு மிகப் பெரிய ஆசனத்தை உடையவள் என்றும் பொருள் உண்டு. யாரை தெரிந்துவிட்டால்/உணர்ந்துவிட்டால் தெரியவேண்டியது வேறு ஏதும் இருக்காதோ, அவருக்கு மஹதீ என்று பெயர். அப்படியான மஹத்தான புத்தியைத் தரும் அம்பிகையை " மஹாபுத்தி:" என்று சொல்லி, இப்படிப்பட்ட மஹத்தான புத்தியை அருள்பவளே மஹத்தான ஸித்தியையும் அருளும் அவளே "மஹாஸித்தி".
ஸித்திகள் என்பவை நாம் அறிந்த அணிமா, மஹிமா, லகிமா, கரிமா, ப்ராப்தி, ப்ராகாம்யம், ஈசித்வம், வசித்வம், என்ற அஷ்டமாசித்திகள் தாம். இவற்றையெல்லாம் தனது ப்ரசாதமாக அருள்கிறாளாம். இந்த சக்திகளைப் பெற்றவர்கள் யோகேச்வரர்கள் என்று அழைப்போம். அவ்வாறான கேச்வரர்களுக்கெல்லாம் தலைவியாக ஈச்வரியாக இருக்கிறாள் அம்பிகை, அதைச் சொல்வதே "மஹாயோகேச்வரேச்வரீ" என்னும் நாமம்.
இவளது தந்திர சாஸ்திரங்களையும், யந்திரத்தையும் மஹத்தானதாகவே இருப்பதாகச் சொல்லி, அவற்றை உடையவள் என்பதே முறையே "மஹா தந்த்ரா", "மஹா யந்திரா" என்று கூறுகிறார்கள். இவளது மந்திரமும் மஹத்தானது, அந்த சிறப்பான மந்திரத்தை உடையவள் "மஹா மந்த்ரா" எனப்படுகிறாள்.
3 comments:
//அதாவது ப்ரபஞ்சத்திற்கு மிகப்பெரிய பிடிப்பாக இருப்பவள். // true . nice to read ur article anna.
Energy. Universal Life force Energy. இதைத் தான் நான் புரிந்து கொண்டேன். அருமை.
/* இவள் எப்படிப்பட்டவளென்றால், ப்ரபஞ்சத்தையெல்லாம் தன்னுள் அடக்கி இருப்பவள் என்பதாக "மஹாக்ராஸா" என்று உடனேயே சொல்கிறார்கள். க்ராஸா என்றால் பிடி என்று பொருள். அதாவது ப்ரபஞ்சத்திற்கு மிகப்பெரிய பிடிப்பாக இருப்பவள். */
'க்ராஸா' - Grasp
பிரபஞ்சத்தின் existence ஆக இருப்பது தானே மகா மாயா !! காலம் என்பது ஒரு அழகிய concept. முடிந்தால் நேரம் வளைவது பற்றி கூகிள் செய்து பாருங்கள். நம்முடைய நேரம் என்பது சூரியன் பிறந்ததில் இருந்து தான். அப்போ அதுக்கு முன்னர்? நாமே இல்லை அதனால் நேரம் இல்லை. அதனால் தான் மாயா... அதை உருவாக்குபவள் என்பதனால், அவள் மஹா மாயா :)
"குழந்தை விஜயராகவா... நீ சொல்லுறது எல்லாம் சரியாக இருக்கனும்னு அவசியம் இல்லைப்பா ஏனென்றால் அதுவும் மாயை தான்" - மகா காளி!!
Post a Comment